Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
ஆண்களே! 40 வயதாகிவிட்டதா? அப்ப இந்த உணவுகளுக்கு உடனே குட்-பை சொல்லுங்க.. இல்ல ஆபத்தாயிடும்..!
Mens Health Tips In Tamil: வயது அதிகரிக்கும் போது நாம் நமது ஆரோக்கியத்தில் சற்று கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். குறிப்பாக உண்ணும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதுவும் 40 வயதை ஒருவர் அடைந்துவிட்டால், ஒருசில உணவுகளை உண்பதை அறவே தவிர்க்க வேண்டும்.
ஏனெனில் வயது அதிகரிக்கும் போது, நமது செரிமான மண்டலத்தின் செயல்பாடு சற்று பலவீனமாக இருக்கும். எனவே ஜீரணிக்க கடினமாக இருக்கும் உணவுகளை அதிகம் உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

முக்கியமாக தற்போது 40 வயதுடைய ஆண்கள் பலர் மாரடைப்பால் இறக்கிறார்கள். மாரடைப்பு வருவதற்கு உயர் இரத்த அழுத்தம், அதிகப்படியான கொலஸ்ட்ரால் போன்றவை முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
எனவே மாரடைப்பின் அபாயத்தைத் தடுக்க வேண்டுமானால், கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். இது தவிர ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் சில உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
இப்போது 40 வயதை எட்டிய ஆண்கள் எந்த வகையான உணவுகளை உண்ணக்கூடாது என்பதைக் காண்போம். அந்த உணவுகளை அறிந்து, அவற்றை உங்களின் உணவில் இருந்து அகற்றி, ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
செயற்கை சுவையூட்டிகள்
செயற்கை சுவையூட்டிகள் சர்க்கரையை விட மிகவும் ஆபத்தானவை என்பது தெரியுமா? ஆய்வுகளில் கூட அஸ்பார்டேம், சுக்ரோலோஸ் மற்றும் ஸ்டீவியா ஆகியவை உடல் பருமனை அதிகரிப்பதோடு, பல்வேறு வாழ்க்கை முறை நோய்களுக்கும் வழிவகுப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளன. மேலும் செயற்கை சுவையூட்டிகளானது சர்க்கரை உணவுகளின் மீதான ஆவலை அதிகரித்துவிடும். எனவே 40 வயதை அடைந்துவிட்டால், சர்க்கரைக்கு பதிலாக நாட்டுச்சர்க்கரை மற்றும் தேனை உணவில் சேர்க்க முயற்சி செய்யுங்கள்.
காக்டெயில்
20 மற்றும் 30-களில் காக்டெயில் அருந்துவது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் 40-களில் காக்டெயிலை உட்கொண்டால், அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். ஏனெனல் காக்டெயிலை அருந்தும் போது, அதன் அதிகப்படியான சர்க்கரை, ஃபுட் கலரிங் மற்றும் செயற்கை சுவையூட்டிகள் போன்றவற்றை உட்கொள்கிறோம். அதோடு, அதிகப்படியான ஆல்கஹாலையும் உட்கொள்ள வேண்டியிருக்கும். எனவே உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டுமானால், ரெட் ஒயினை வாரத்திற்கு 3 முறை குடிக்கலாம்.
செயற்கை புரோட்டீன்
புரோட்டீன் பவுடர்கள் ஆரோக்கியமானவை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அவற்றில் கொழுப்பு மற்றும் செயற்கை சுவையூட்டிகள், ஹைட்ரோஜினேட்டட் எண்ணெய்கள், ஃப்ளேவர்கள் போன்றவை அதிகம் நிறைந்துள்ளதால், 40 வயதிற்கு மேலானவர்கள் இவற்றை உட்கொள்ளும் போது, அவை கல்லீரல் மற்றும் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே இப்படி புரோட்டீன் பவுடரை எடுப்பதற்கு பதிலாக, புரோட்டீன் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்.
வெஜிடேபிள் ஆயில்
வெஜிடேபிள் ஆயிலானது பலமுறை சுத்திகரிக்கப்பட்டு, ப்ளீச்சிங் செயல்முறை மூலம் பெறப்படுகின்றன. சுருக்கமாக கூற வேண்டுமானால், இந்த எண்ணெயானது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் கொழுப்புகளின் சிதைந்த வடிவமாகும். சோயாபீன், சோளம் மற்றும் பாமாயில் போன்றவை மிகவும் ஆபத்தான எண்ணெய்களாகும்.
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டுமானால் கோல்ட் பிரஸ்டு கடுகு எண்ணெய், கடலை எண்ணெய், எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயில், வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட நெய் மற்றும் வெண்ணெய் போன்றவற்றை சமையலில் அளவாக சேர்க்கலாம்.
செயற்கை வெண்ணெய் (Margarine)
வெண்ணெய் போன்றே தோற்றத்தைக் கொண்ட செயற்கை வெண்ணெய் மிகவும் ஆபத்தானது. ஏனெனில் இந்த வகை வெண்ணெய் வெஜிடேபிள் ஆயில் மூலம் தயாரிக்கப்படுகிறது. இவற்றில் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், இதயத்திற்கு செல்லும் தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தக்கூடியவை. இந்த வகை வெண்ணெயை 40 வயதிற்கு மேற்பட்டோர் உட்கொண்டால், கொலஸ்ட்ரால் அளவு சட்டென்று அதிகரித்துவிடும். எனவே இந்த வகை வெண்ணெயை அறவே தவிர்க்க வேண்டும்.
சாலட் ட்ரஸ்ஸிங்
சாலட் சாப்பிடுவது நல்லது. ஆனால் அந்த ஆரோக்கியமான சாலட்டின் மேல் சாலட் ட்ரஸ்ஸிங்கை சேர்க்கும் போது, அது அமைதியாக உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். ஏனெனில் சாலட் ட்ரஸ்ஸிங்கில் ட்ரான்ஸ் கொழுப்பு, சர்க்கரை மற்றும் செயற்கை நிறம் மற்றும் ப்ளேவர்கள் நிறைந்திருக்கும். இவை இதயத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு, ஹார்மோன்களையும் பாதிக்கின்றன. எனவே கெமிக்கல் கலந்த சாலட் ட்ரஸ்ஸிங்கை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
கேன் உணவுகள்
கேன்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் எந்த ஒரு உணவுப் பொருட்களுமே ஆரோக்கியமானவை அல்ல. அவற்றில் செயற்கை சுவையூட்டிகள் மற்றும் பதப்படுத்தும் பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கும். இந்த வகையான உணவுகளை 40 வயதிற்கு மேல் உட்கொண்டால், அது ஆரோக்கியத்தை படுமோசமாக பாதிக்கும். எனவே ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டுமானால், எப்போதும் நற்பதமான உணவுகளை சாப்பிட முயற்சி செய்யுங்கள்.
சோடா பானங்கள்
சோடா பானங்கள் ஆரோக்கியமற்றவை என்பதை அனைவரும் அறிவோம். இருப்பினும் அவற்றை வாங்கி குடித்து வருகிறோம். ஆய்வு ஒன்றில், சர்க்கரையை அளவுக்கு அதிகமாக கொண்ட சோடா பானங்களை அருந்துவது, புற்றுநோயின் அபாயத்தை அதிகரிப்பது தெரிய வந்துள்ளது. அதோடு, இந்த வகை பானங்கள் பலவிதமான வாழ்க்கை முறை நோய்களுக்கு காரணமான உடல் பருமனை ஏற்படுத்தக்கூடியவை. எனவே இந்த பானங்களுக்கு 40 வயதிற்கு மேல் கட்டாயம் குட்-பை சொல்ல வேண்டும்.
பிட்சா, பர்கர்
பிட்சா, பர்கர் போன்றவற்றில் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் கொழுப்புக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இந்த வகையான உணவுகளை 40 வயதிற்கு மேல் உட்கொண்டு வந்தால், அது உடலில் கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, இதய நோய்களின் அபாயத்தை அதிகரித்துவிடும். எனவே இவற்றையும் தவிர்க்க வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications