Latest Updates
-
1 கப் ரவையும், 1 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. அள்ளும்.. -
கழிப்பறையில் ஐஸ் கட்டிகளை கொட்டுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தமாம்.. எச்சரிக்கும் எய்ம்ஸ் டாக்டர்! -
இட்லி அரிசியும், அப்பளமும் இருந்தா இந்த கேரளா ஸ்டைல் அப்பள வடையை செய்யுங்க - வேற லெவலில் இருக்கும் -
சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 5 ராசிகளின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
10 கிராம் 1 கோடிக்கு விற்கப்படும் உலகின் விலையுயர்ந்த மரம் எது தெரியுமா? இதுல அப்படி என்னதான் இருக்கு? -
இட்லி, தோசைக்கு இப்படி வெங்காய சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறாக இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வெற்றியின் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன?
இனிமே மாம்பழ தோலை தூக்கி எறியாம.. இப்படி டீ செஞ்சு குடிங்க.. இருமடங்கு நன்மை கிடைக்கும்...
Mango Peel Tea Benefits In Tamil: கோடைக்காலம் என்பதால் மாம்பழ சீசன் தொடங்கிவிட்டது. மார்கெட்டுகளில் பலவிதமான வெரைட்டிகளில் மாம்பழங்கள் குவிந்திருப்பதைக் காணலாம். பழங்களின் ராஜாவான மாம்பழமானது, பழமே பிடிக்காதவர்களையும் விரும்பி சாப்பிட வைக்கும். அந்த அளவில் அதன் மணமும், சுவையும் ஒருவரை மயக்கிவிடும்.
அப்படிப்பட்ட மாம்பழம் வெறும் சுவையான பழம் மட்டுமின்றி, பாலிஃபீனால்கள், ப்ளேவோனாய்டுகள் மற்றும் வைட்டமின் சி அதிகம் நிறைந்த பழமும் கூட. பொதுவாக சாப்பிடும் போது பெரும்பாலானோர் அதன் தோலை தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் மாம்பழத்தைப் போன்றே, அதன் தோலிலும் ஏராளமான அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன.

முக்கியமாக மாம்பழத்தின் தோல் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. எனவே இனிமேல் மாம்பழத்தை சாப்பிடும் போது, அதன் தோலை தூக்கி எறியாமல், அதை சேகரித்து வைத்து, டீ தயாரித்து குடியுங்கள். இதனால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இப்போது மாம்பழ தோல் கொண்டு டீ தயாரித்து குடித்தால் பெறும் நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்.
மாம்பழ தோல் டீ என்றால் என்ன?
மாம்பழ தோல் டீ என்பது மாம்பழத்தின் தோலை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அதை வடிகட்டினால் கிடைப்பதாகும். இந்த டீ லேசாக கசப்புச்சுவையுடன் இருக்கும் என்பதால் குடிக்கும் போது அத்துடன் சிறிது தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
மாம்பழ தோல் டீ ஏன் நல்லது?
மாம்பழ தோல் கொண்டு தயாரிக்கப்படும் டீயில் பாலிஃபீனால்கள், ப்ளேவோனாய்டுகள் மற்றும் வைட்டமின் சி போன்ற பல்வேறு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும், உடலில் உள்ள வீக்கத்தையும் குறைக்க உதவுகின்றன. மேலும் இந்த டீயில் மேக்னிபெரின் என்னும் கலவை உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகின்றன. இப்போது மாம்பழ தோல் டீயை ஏன் குடிக்க வேண்டும், அப்படி குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
மலச்சிக்கல் நீங்கும்
மாம்பழத் தோலில் பெக்டின் போன்ற கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமாக உள்ளன. நார்ச்சத்தானது குடலியக்கத்தையும், செரிமான செயல்பாட்டையும் சீராக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கும். மேலும் நார்ச்சத்தானது இரத்த ஓட்டத்தில் சர்க்கரை மெதுவாக வெளியிடச் செய்து, இரத்த சர்க்கரை அளவை சீராக்கி, இரத்த சர்க்கரை அதிகரிப்பதைத் தடுக்க உதவுகிறது.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம்
மாம்பழத் தோலில் பாலிஃபீனால்கள், ப்ளேவோனாய்டுகள் மற்றும் வைட்டமின் சி போன்ற சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை சர்க்கரை நோய் மற்றும் அத்துடன் தொடர்புடைய ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும், வீக்கத்தையும் குறைக்க உதவுகின்றன.
கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவு
மாம்பழ தோல் டீயில் கிளைசீமிக் இன்டெக்ஸானது மற்ற பானங்களை விட குறைவு. அதாவது இதை குடித்த பின் மெதுவாக இரத்தத்தில் சர்க்கரையானது வெளியிடும். இதனால் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த டீயானது மிகவும் நல்லது.
இரத்த சர்க்கரை சீராகும்
பல்வேறு ஆய்வுகளின் படி, மாம்பழ தோலில் காணப்படும் மேக்னிபெரின் என்னும் கலவை இன்சுலின் உணர்திறன் மற்றும் செல்கள் க்ளுக்கோஸ் உறிஞ்சுதலை மேம்படுத்துவதன் மூலம், இரத்த சர்க்கரையைக் குறைக்கும். இதன் விளைவாக இரத்த சர்க்கரையை சீராக பராமரிக்க உதவுகிறது.
நீரேற்றம்
மாம்பழ தோல் கொண்டு தயாரிக்கப்படும் டீயை சர்க்கரை நோயாளிகள் குடித்து வந்தால், அது உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கும். மேலும் மற்ற பானங்களில் இருக்கும் சர்க்கரை மற்றும் கலோரிகளைப் போல், இதில் கலோரிகள் மற்றும் சர்க்கரை குறைவு என்பதால் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது.
என்ன தான் மாம்பழ தோல் டீ ஏராளமான சத்துக்களைக் கொண்டிருந்தாலும், இந்த டீயை ஒருவர் தங்கள் தினசரி உணவில் சேர்க்கும் முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும். அதுவும் சர்க்கரை நோயாளிகள் இந்த டீயை தினமும் குடிக்க நினைத்தால், மருத்துவரிடம் ஒருமுறை கேட்டுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications