Latest Updates
-
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா?
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்க கல்லீரலில் அழுக்கு அதிகமா இருக்கு-ன்னு அர்த்தம்...
Liver Problem Symptoms In Tamil: தற்போதைய காலகட்டத்தில் ஆரோக்கியமாக இருப்பது சற்று சவாலாக உள்ளது. ஏனெனில் பரபரப்பான வாழ்க்கை முறை, மோசமான உணவுப் பழக்கம், மன அழுத்தம் போன்றவற்றால் ஒருவரது உடல் மற்றும் மன ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக இப்படியான விஷயங்களால் முதலில் பாதிக்கப்படுவது நமது உடலில் உள்ள மிகப்பெரிய உறுப்பான கல்லீரல் தான்.
இந்த கல்லீரல் நமது உடலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்யவும், செரிமானத்திற்கு உதவவும், உடலில் இருந்து நச்சுக்களை அகற்றவும் உதவுகிறது. ஆனால் கல்லீரலின் செயல்பாடு பாதிக்கப்படும் போது, அதன் விளைவாக கல்லீரலில் நச்சுக்கள் அதிகம் தேங்க ஆரம்பிக்கும். இந்த நச்சுக்களை அகற்றாமல் விட்டுவிட்டால், அதன் விளைவாக கல்லீரலில் பெரிய பிரச்சனைகள் வரத் தொடங்கிவிடும். சரி, கல்லீரலில் நச்சுக்கள் அதிகம் உள்ளது என்பதை எப்படி அறிவது என்று நீங்கள் கேட்கலாம்.

நமது கல்லீரலில் நச்சுக்கள் அதிகம் தேங்க தொடங்கினால், நமது உடலில் ஒருசில அறிகுறிகள் தெரியத் தொடங்கும். அந்த அறிகுறிகளை கவனித்து, உடனே கல்லீரலை சுத்தப்படுத்தும் உணவுகள், பானங்கள் போன்றவற்றை உட்கொண்டு வந்தால், நிலைமை தீவிரமாவதைத் தடுக்கலாம். இப்போது கல்லீரலில் அழுக்குகள் அதிகம் தேங்கியிருந்தால் தெரியும் அறிகுறிகள் என்னவென்பதைக் காண்போம். இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகிக் கொள்ளுங்கள்.
1. உப்புசம், வாயு பிரச்சனைகள்
கல்லீரலில் அழுக்குகள் அதிகம் தேங்கத் தொடங்கினால், அதன் விளைவாக வயிற்று உப்புசம், வாயு பிரச்சனைகள் போன்றவற்றை அதிகம் சந்திக்க நேரிடும். இப்படியான அறிகுறிகள் கல்லீரலின் செயல்பாட்டில் உள்ள இடையூறுகளைத் தான் குறிக்கின்றன. எப்போது கல்லீரலால் பித்தத்தை சரியாக உற்பத்தி செய்ய முடியாமல் போகிறதோ, அப்போது செரிமான செயல்முறை பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக வயிற்று உப்புசம், வாயு தொல்லை போன்றவற்றை சந்திக்க நேரிடுகிறது.
2. உடல் சோர்வு மற்றும் பலவீனம்
நமது உடலில் இருந்து நச்சுக்களை அகற்றுவதில் கல்லீரலும் முக்கிய பங்கை வகிக்கிறது. இப்படிப்பட்ட கல்லீரல் சரியாக செயல்படாத போது, நச்சுக்கள் கல்லீரலில் தேங்க தொடங்குகின்றன. இதனால் உடலின் ஆற்றல் மட்டம் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக ஒருவர் எந்த கடின வேலையையும் செய்யாமலேயே மிகுந்த உடல் சோர்வையும், உடல் பலவீனத்தையும் அனுபவிக்க நேரிடும். எனவே இப்படியான அறிகுறியை சந்தித்தால் உடனே உஷாராகிக் கொள்ளுங்கள்.
3. முகப்பரு மற்றும் சரும அரிப்பு
கல்லீரலில் அதிகம் அழுக்கு தேங்கினால், அதன் விளைவாக முதலில் சருமத்தில் தான் தாக்கம் தெரியும். அதுவும் முகத்தில் தான் பருக்கள் அதிகம் வரும் மற்றும் சருமத்தில் அரிப்புக்கள் ஏற்படும், சரும வறட்சியை சந்திக்க நேரிடும். ஆகவே இப்படியான அறிகுறிகளை திடீரென்று சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே கல்லீரல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
4. வாய் துர்நாற்றம்
உங்கள் வாய் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக துர்நாற்றம் வீசுகிறதா? அப்படியானால் உங்கள் கல்லீரல் ஆரோக்கியமாக இல்லை என்று அர்த்தம். அதுவும் கல்லீரலின் செயல்பாடு குறையும் போது, கல்லீரலில் நச்சுக்கள் அதிகம் தேங்கி, செரிமானம் பாதிக்கப்பட்டு, வாயு தொல்லை மற்றும் அமிலத்தன்மையை அதிகரிக்கும். இப்படி அமிலத்தன்மை அதிகரிக்கும் போது, வாய் துர்நாற்றம் ஏற்படும்.
5. வெளிரிய சருமம் மற்றும் கண்கள்
கல்லீரலில் அழுக்குகள் அதிகம் தேங்கியிருந்தால், அதனால் இரத்தத்தை சரியாக சுத்தம் செய்ய முடியாமல் போகும். இதன் விளைவாக சருமத்திலும், கண்களிலும் மஞ்சள் நிறம் தெரியத் தொடங்கும். இப்படி மஞ்சள் நிறத்தில் சருமத்திலும், கண்களிலும் தெரிய தொடங்கினால், அதை மஞ்சள் காமாலை என்பர். இது ஹெபடைடிஸ் அல்லது சிரோசிஸ் போன்ற கடுமையான கல்லீரல் நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications