Latest Updates
-
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா? -
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
வாஸ்து படி உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களை செய்தால் சீக்கிரம் கோடீஸ்வரராகி விடலாம் - ட்ரை பண்ணுங்க -
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சாம்பார் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: சாம்பாரில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? -
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: மே மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் அபார வளர்ச்சியை காண்பாங்க..
உங்க கண்ணுக்கு வட்ட வட்டமா கலர் கலரா தெரியுதா? ஏன் இந்த கலைடாஸ்கோப் பார்வை ஏற்படுகிறது தெரியுமா?
Kaleidoscope Vision In Tamil: கலைடாஸ்கோப் பார்வை என்றால் என்ன என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா. கலைடாஸ்கோப் பார்வை என்பது பொதுவாக ஒற்றைத் தலைவலியின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. ஒரு நபர் கலைடாஸ்கோப் வழியாக பார்க்கும் போது எப்படி வட்ட வட்டமாக வண்ண வண்ணமாக டிசைன் டிசைனாக தெரியுமோ அதே மாதிரி இந்த பார்வையும் உங்களுக்கு தெரியும்.
நமது மூளையானது ஒரு மாய காட்சிப் பிம்பத்தை பிரதிபலிக்கிறது. நமக்கு ஏற்படும் ஒற்றைத் தலைவலி பல வழிகளில் பார்வையை பாதிக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். சிலருக்கு வெளிச்சம் இருப்பது போலவும், சிலருக்கு புள்ளி புள்ளியாகவும் தெரிய ஆரம்பிக்கும். ஒற்றைத் தலைவலி உள்ள நபர்களில் 20% பேர்கள் இந்த பிரச்சினைக்கு உள்ளாகின்றனர்.

இந்த பாதிப்பு சுமார் 20 நிமிடங்கள் வரை நீடிக்கும். சில சமயங்களில் 5 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் மூளை பாதிப்பு மற்றும் பக்கவாதம் காரணமாகவும் கலைடாஸ்கோப் பார்வையை அவர்கள் அனுபவிக்கின்றனர். சரி வாங்க கலைடாஸ்கோப் பார்வை என்றால் என்ன? அதை எப்படி சரி செய்யலாம் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
கலைடாஸ்கோப் பார்வை என்றால் என்ன?
ஒரு நபருக்கு கலைடாஸ்கோப் பார்வை இருக்கும் போது அவரது மூளை அவருக்கு பிரகாசமான படங்களை காண்பிக்கும். இந்த அறிகுறியானது ஒன்று அல்லது இரண்டு கண்களிலும் ஏற்படலாம். இப்படி உருவாகும் ஆராஸ் ஒரு நபரின் வாசனை, தொடுதல் மற்றும் கேட்கும் உணர்வையும் பாதிக்கலாம்.
காட்சி ஒளியில் உள்ள மூன்று வகைகள்
நேர்மறை ஒளி : நேர்மறை ஒளி என்பது ஒரு நபர் உண்மையில் இல்லாத ஒன்றைக் காணும்போது நிகழ்கிறது . இது பொதுவாக இருண்ட ஜிக் ஜாக் கோடுகள், புள்ளிகள் அல்லது ஒளிரும் பல்புகள் போன்ற பிம்பத்தை உண்டாக்குகிறது.
எதிர்மறை ஒளி : இந்த ஒளியானது ஒரு நபர் பார்வை இழப்பை அனுபவிக்கும் போது ஏற்படுகிறது. ஒன்று அல்லது இரண்டு கண்களிலும் பார்வை இழப்பு ஏற்படும், பார்வை இழப்பு புள்ளிகளாக தோன்றுதல் போன்றவை அடங்கும்.
மாற்றப்பட்ட ஒளி : இந்த மாறுபட்ட ஒளி என்பது ஒரு நபர் தன்னைச் சுற்றியுள்ள உலகத்தை பார்க்கும் விதத்தை மாற்றுகிறது. சிலருக்கு பொருட்கள் அசாதாரணமாகவோ அல்லது சிறியதாகவோ தோன்றலாம்.கலைடாஸ்கோப் பார்வை என்பது மாற்றப்பட்ட காட்சி ஒளியின் ஒரு வகை ஆகும்.
கலைடாஸ்கோப் பார்வை ஏற்படக் காரணங்கள்
கண் ஒற்றைத் தலைவலி : காட்சி அறிகுறிகளுடன் ஒற்றைத் தலைவலி ஏற்படுதல். ஒற்றைத் தலைவலி உடையவர்களில் 20% பேர் இந்த பாதிப்பை சந்திக்கின்றனர். தற்போதைய அறிவியல் சான்றுகள் படி, பார்வைப் புறணிப் பகுதியில் உள்ள கட்டமைப்பில் அசாதாரணங்கள் ஏற்படுவதால் கண் ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது.
விழித்திரை ஒற்றைத் தலைவலி : விழித்திரை ஒற்றைத் தலைவலியும் கண் ஒற்றைத் தலைவலி போன்ற அறிகுறிகளை உருவாக்குகிறது. கண்ணுக்கு இரத்த ஓட்டம் குறைவதால் விழித்திரை ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது. இது ஒரு கண்ணில் மட்டும் காட்சி ஒளி அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.
அறிகுறிகள்
* அளவில் அதிகரிக்கக் கூடிய வகையில் பார்வை இழப்பு புள்ளிகள் தோன்றுதல்
* ஒளிரும் விளக்குகள் போன்ற காட்சி தோன்றுதல்
* ஒரு கண்ணில் மட்டும் தற்காலிக பார்வை இழப்பு
* ஆராஸ் அமைப்பு 5-60 நிமிடங்கள் நீடிக்கும். துடிக்கும் அளவு தலைவலி ஏற்படுதல்.
நிலையற்ற இஸ்கிமிக் தாக்குதல் அல்லது பக்கவாதம் ஏற்படுதல்
மூளைக்கு போகும் இரத்த ஓட்டத்தை எதாவது குறுக்கிடும் போது அல்லது தடுக்கும் போது பக்கவாதம் ஏற்படுகிறது. பக்க வாத அறிகுறிகள் :
* இரத்த கட்டிகள் தோன்றுதல்
* பிளேக் அல்லது கொழுப்பு படிவு படிதல்
* சேதமடைந்த அல்லது சிதைந்த இரத்த நாளங்கள்
நிலையான இஸ்கிமிக் தாக்குதல் (TIA), அல்லது "மினி-ஸ்ட்ரோக்", தற்காலிக இரத்த ஓட்ட அடைப்பின் விளைவாக ஏற்படுகிறது. இந்த வகையான பக்கவாதம் சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும். ஒரு மணி நேரத்துக்குள் அறிகுறிகள் மறைய ஆரம்பித்து விடும். கீழ்க்கண்ட அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.
* உடலின் ஒரு பக்கத்தில் உணர்வின்மை அல்லது கூச்ச உணவு ஏற்படுதல்
* பேசுவதில் சிரமம் உண்டாதல்
* சமநிலை இழப்பு ஏற்படுதல்
* தலைசுற்றல்
கலைடாஸ்கோப் பார்வையில் இருந்து விடுபட வழிகள்
கலைடாஸ்கோப் பார்வை ஒற்றைத் தலைவலியுடன் ஆரம்பித்தால் ஒரு மணி நேரத்திற்குள் தானாகவே போய் விடும். தலைவலி அதிகமாக இருந்தால் வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். இருண்ட மற்றும் அமைதியான அறையில் உட்காரலாம் அல்லது படுத்துக் கொண்டு ஓய்வு எடுப்பதன் மூலம் நீங்கள் நிவாரணம் பெற முடியும்.
மருத்துவரின் பரிந்துரை பேரில் இப்யூபுரூஃபன் போன்ற வலி நிவாரணிகள், பீட்டா-தடுப்பான்கள் மற்றும் கால்சியம் சேனல் தடுப்பான்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். உச்சந்தலையில் மசாஜ் செய்யலாம் , நெற்றியில் ஈரத் துணியைப் பயன்படுத்தி வரலாம். இது ஒற்றைத் தலைவலியைப் போக்க உதவும்.
கவனத்தில் வைக்க வேண்டியவை
கலைடாஸ்கோப் பார்வை போகி இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்க வேண்டும். கலைடாஸ்கோப் பார்வை இருக்கும் சமயங்களில் வெளியே செல்வது, வண்டியை ஓட்டுவது மற்றும் இயந்திரங்களை இயக்குதல் போன்றவை கூடாது. கலைடாஸ்கோப் பார்வை ஒரு சில நிமிடங்களில் போய் விடும். எனவே இயல்பு நிலைக்கு பார்வை வரும் வரை எந்த செயலையும் செய்யாதீர்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











