Latest Updates
-
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
ரேசன் கடை பாமாயில் நல்லதா? கெட்டதா? டாக்டர் என்ன சொல்றாரு-ன்னு பாருங்க...
Palm Oil Safe For Cooking: நமது தினசரி சமையலில் அவசியம் பயன்படுத்தும் ஒரு பொருள் தான் எண்ணெய். இந்த எண்ணெயில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு நன்மைகளை கொண்டுள்ளன. இருப்பினும் தினசரி சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்களுள் சிறந்தது எது என்பது குறித்த கேள்வி நிறைய பேருக்கு இருக்கும். அதில் ஒரு தரப்பினர் செக்கு எண்ணெய் தான் சிறந்தது என்றும், இன்னும் சிலர் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் நல்லது என்றும் கூறுவார்கள்.
ஆனால் இப்படியான எண்ணெய்கள் ஒவ்வொன்றின் விலையும் அதிகமாக இருப்பதால், அனைவராலும் நல்ல உயர்தரமான எண்ணெய்களை வாங்கி பயன்படுத்த முடியாது. முக்கியமாக ஏழை மக்கள் தங்களின் தினசரி சமையலில் பயன்படுத்துவது ரேசன் கடைகளில் விலைக் குறைவில் கொடுக்கும் பாமாயில் என்று அழைக்கப்படும் பாமாலின் எண்ணெயாகவே இருக்கும். ஆனால் இந்த பாமாயிலைத் தான் நிறைய ஹோட்டல்களில் பொரிப்பதற்காகவும், பெரிய பெரிய உணவு கம்பெனிகளில் உணவுப் பொருட்களை தயாரிப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர் என்பது தெரியுமா?

சரி, உண்மையில் பாமாயில் நல்லதா கெட்டதா என்ற கேள்வி நிறைய பேருக்கு இருக்கும். இப்படி பலரது மனதில் உள்ள கேள்விக்கு உணவு ஆலோசகர் டாக்டர் அருண்குமார் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அது பாமாயிலை சமையலுக்கு பயன்படுத்துவது ஆரோக்கியமானதா? பாமாயில் கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்குமா என்பதாகும். வாருங்கள், டாக்டர் அருண்குமார் என்ன சொல்கிறார் என்பதைக் காண்போம்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, "பாமாயில் என்றாலே அது ஆரோக்கியமில்லாத எண்ணெய் என்றும், பாமாயிலில் சமைத்த உணவுகளை சாப்பிட நிறைய பேர் யோசிப்பார்கள். அந்த அளவில் பாமாயில் மோசமானதா என்ன? பொதுவாக உலகில் கிட்டத்தட்ட மொத்த எண்ணெய் உற்பத்தியில் 40% பாமாயில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த பாமாயில் ஒரு சிவப்பு நிற பழத்தில் இருந்து இரண்டு விதமான எண்ணெய் பெறப்படுகிறது.
அதில் அந்த பழத்தின் தசைப் பகுதியில் இருந்து கிடைக்கக்கூடிய எண்ணெய் தான் நமக்கு சுத்திகரிக்கப்பட்டு பல செயல்முறைகளுக்குட்பட்டு தற்போது கிடைக்கிறது. அதில் நமக்கு கிடைக்கும் பாமாயிலில் 45 சதவீதம் பால்மெடிக் அமிலம் என்று கூறப்படும் நிறை/சாச்சுரேட்டட் கொழுப்பும், 40 சதவீதம் ஒலியிக் அமிலம் என்னும் நிறைவுறா/அன்சாச்சுரேட்டட் கொழுப்பும் கலந்து இருக்கும். இது தவிர இதில் லினோலிக் அமிலம், ஸ்டெரிக் அமிலம் போன்றவையும் உள்ளன.
பொதுவாக சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் மிகவும் ஆபத்தானது என்ற கருத்து உள்ளது. ஆனால் இந்த சாச்சுரேட்டட் கொழுப்பு தேங்காய் எண்ணெயில் 90% உள்ளது. அதனால் தான் குளிர்காலங்களில் தேங்காய் எண்ணெய் கெட்டியாகிறது. இந்த எண்ணெயுடன் ஒப்பிடும் போது, இந்த சாச்சுரேட்டட் கொழுப்பு நமது பாமாயிலில் சற்று குறைவு. பொதுவாக எந்த எண்ணெயில் சாச்சுரேட்ட கொழுப்பு அதிகமாக உள்ளதோ, அந்த எண்ணெய் சற்று கெட்டியாக இருக்கும். அதேப் போல் எந்த எண்ணெயில் அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகம் உள்ளதோ, அந்த எண்ணெய் சற்று நீர்த்தன்மையுடன் இருக்கும்." என்று கூறினார்.
பாமாயில் ஆரோக்கியமானதா?
"பொதுவாக ஒரு எண்ணெய் ஆரோக்கியமானதா என்பதை மற்ற எண்ணெய்களுடன் ஒப்பிடும் போது தான் தெரியும். தேங்காய் எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் மக்களால் அதிகம் பயன்படுத்தக்கூடியது என்பதால், அத்துடன் ஒப்பிட்டு பார்ப்போம். அதில் முதலில் தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொண்டால், சாச்சுரேட்டட் கொழுப்பு 92% உள்ளது. ஆனால் இந்த சாச்சுரேட்டட் கொழுப்புக்களில் நிறைய ஆரோக்கியமான கொழுப்புக்கள் உள்ளன என்று பல ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
எனவே தேங்காய் எண்ணெயை சமையலில் தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். பாமாயிலை எடுத்துக் கொண்டால், அதில் 40 சதவீதம் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளன. கடலை எண்ணெயில் 15-20% சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளன. அடுத்து, மிகவும் ஆரோக்கியமான கொழுப்புக்களாக கருதப்படும் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் தேங்காய் எண்ணெயில் 5%, கடலை எண்ணெய் மற்றும் பாமாயில் ஆகிய இரண்டிலும் 40-45% உள்ளது.
பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் சற்று சிக்கலானது. இந்த வகை கொழுப்புக்களுக்கு கொலஸ்ட்ராலைக் குறைக்கும் தன்மை இருந்தாலும், அளவுக்கு அதிகமாக எடுத்தால், அது உள்காயங்களை அதிகமாக்கும். இந்த பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் தேங்காய் எண்ணெயில் 5%, கடலை எண்ணெயில் 30-40 சதவீதமும், பாமாயிலில் 10-15 சதவீதமும் உள்ளன.
எனவே மற்ற எண்ணெய்களுடன் ஒப்பிடுகையில் கடலை எண்ணெயை விடவும், பாமாயிலில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் 20 சதவீதம் மட்டுமே அதிகம். இந்த ஒரு காரணத்தினால் இந்த எண்ணெயை தவறாக பலரும் நினைக்கின்றனர். ஆனால் பெரிய ஆய்வுகளில், இந்த பாமாயில் இரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக அதிகப்படுத்துவதில்லை என்று தெரிய வந்துள்ளது." என்று கூறினார்.
எனவே பாமாயிலை உங்களின் தினசரி சமையலில் பயன்படுத்த அஞ்ச வேண்டாம். இதுவும் மற்ற எண்ணெய்களைப் போன்றே ஆரோக்கியமான எண்ணெய் தான் என்று டாக்டர் அருண்குமார் கூறியுள்ளார்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
பாமாயில் என்பது வெப்ப மண்டலப் பகுதிகளில் அதிகளவில் பயிரிடப்படும் பனை மரத்தின் சிவப்பு நிற பழத்திலிருந்து பெறப்படும் பரவலாகப் பயன்படுத்தப்படும் தாவர எண்ணெய் ஆகும்.
ஆம், நல்ல ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு பாமாயிலில் முக்கியமான வைட்டமின்களான ஏ மற்றும் ஈ அதிகம் உள்ளன. பல்வேறு ஆரோக்கியமான கொழுப்புக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களுடன் சேர்த்து மிதமாக உட்கொள்ளும் போது, சமச்சீரான உணவில் பாமாயிலை சேர்க்கலாம்.



Click it and Unblock the Notifications

