Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
சர்க்கரை நோயாளிகளே! உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த ஒரு மூலிகை போதுமாம்!
இன்றைய நாளில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படாத குடும்பங்களே இல்லை எனலாம். ஏனெனில், குடும்பத்தில் ஒருவர் அல்லது இருவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது. சர்க்கரை நோய் சிகிச்சைக்கு நீங்கள் ஆயுர்வேத தீர்வை விரும்பினால், நித்திய கல்யாணி உங்களுக்கு உதவும்.
குறிப்பாக வகை 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1980 இல் 108 மில்லியனிலிருந்து 2014 இல் 420 மில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்திருந்ததாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவிக்கிறது.

இந்த அமைப்பின் கூற்றுப்படி, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 95 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் வகை 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள். நீரிழிவு நோயை கட்டுப்படுத்த ஆயுர்வேதம் மற்றும் மூலிகைகள் உதவுவதாக நம்பப்படுகிறது. அந்த வகையில், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் என்று பலர் நம்பும் மூலிகையாக நித்திய கல்யாணி உள்ளது.
நித்திய கல்யாணி நீண்ட காலமாக ஆயுர்வேதம் மற்றும் சீன மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இது நீரிழிவு நோய்க்கான மூலிகை தீர்வாகக் கூறப்படுகிறது என்று சர்வதேச மருந்தியல் மற்றும் வாழ்க்கை அறிவியல் இதழ் கூறுகிறது. மூலிகையின் எத்தனாலிக் சாற்றின் எத்தில் அசிடேட் பகுதியானது குளுக்கோஸ் அளவைக் குறைக்கும் சிறந்த விளைவைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சர்க்கரை நோய்க்கு நித்திய கல்யாணி
நித்திய கல்யாணி அதன் புற்றுநோய் எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற மற்றும் நீரிழிவு எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக பல ஆராய்ச்சி ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டது. இதில் ஒரு சில ஆல்கலாய்டுகள் பல புற்றுநோய் போன்ற நிலைமைகளுக்கு சிகிச்சையளிப்பதில் உதவியாக இருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது.
இதன் மற்ற இரசாயன கூறுகள் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறுகிறது. ஆனால், மருத்துவரின் ஆலோசனை பெயரிலே நித்திய கல்யாணியை பயன்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
வகை 1 அல்லது வகை 2 நீரிழிவு நோயாளிகளில் யாருக்கு நல்லது?
வகை 1 நீரிழிவு என்பது முழுமையான இன்சுலின் குறைபாட்டின் நிலை. ஆதலால், இந்த சிகிச்சையில் இன்சுலின் தவிர வேறு எதையும் பயன்படுத்த தேவையில்லை. ஆனால் வகை 2 நீரிழிவு அல்லது முன் நீரிழிவு நோயின் ஆரம்ப கட்டங்களில் நித்திய கல்யாணியை முயற்சிக்க முடியும். மருத்துவரின் ஆலோசனை பெயரில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
எப்படி பயன்படுத்துவது?
நித்திய கல்யாணி இலைகள் மற்றும் பூக்கள் நீரிழிவு மேலாண்மைக்கு பயன்படுத்தப்படுகின்றன. அதன் இலைகள், வேர்கள் அல்லது பூக்கள் கொண்டு தயாரிக்கப்படும் சாற்றை, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்குக் கொடுக்கலாம்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 5 முதல் 6 நித்திய கல்யாணி இலைகளை மென்று சாப்பிடட்டும். மேலும், நித்திய கல்யாணியின் உலர்ந்த இலைகளை அரைத்து, தூள் செய்தும் பயன்படுத்தலாம். 8 முதல் 10 பூக்களை தண்ணீருடன் கொதிக்க வைத்து டீ தயாரித்து நீரிழிவு நோயாளிகளுக்கு கொடுக்கலாம்.
நித்திய கல்யாணியை யார் தவிர்க்க வேண்டும்?
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நித்திய கல்யாணியை பயன்படுத்துவதற்கு முன்பு, எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக புண்கள் மற்றும் இரைப்பை அழற்சிக்கு ஆளாகக்கூடியவர்கள் கவனமாக இருக்க வேண்டும். மேலும், அதன் பல செயலில் உள்ள பண்புகள் காரணமாக, கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் இதை உட்கொள்ளக்கூடாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


