Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
உண்மையில் வெல்லம் சர்க்கரையை விட ஆரோக்கியமானதா? உண்மையை புட்டுபுட்டு வைக்கும் இதய நிபுணர்!
Is Jaggery Healthier Than Sugar: நாம் சமைத்து சாப்பிடும் உணவின் சுவையை அதிகரிப்பதில் உப்பு மற்றும் சர்க்கரை ஆகிய இரண்டும் முக்கிய பங்கை வகிக்கின்றன. என்ன தான் சுவைக்கு உப்பும், சர்க்கரையும் அத்தியாவசியமான ஒன்றாக இருந்தாலும், இவை உடலுக்கு தீங்கை விளைவிக்கும் மிகவும் மோசமான உணவுப் பொருட்களுள் முக்கியமானவை. அதுவும் சர்க்கரையை எடுத்துக் கொண்டால், அது ஒரு 'ஸ்லோ பாய்சன்'. இந்த சர்க்கரையே உடலில் நிறைய நோய்களை வரவழைத்துவிடும். எனவே பலர் அந்த சர்க்கரைக்கு சிறந்த மாற்று எதுவாக இருக்கும் என்று தேடி அதை பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக சர்க்கரைக்கு பலர் வெல்லத்தை ஒரு சிறந்த மாற்றாகவும், ஆரோக்கியமானதாகவும் கருதி, தங்களின் தினசரி உணவில் வெல்லத்தை சேர்த்து வருகின்றனர். ஆனால் உண்மையிலேயே வெல்லமும் ஆரோக்கியமானதா என்று கேட்டால், இன்னமும் பலருக்கு அதற்கான சரியான விடை தெரிய வாய்ப்பில்லை. இதுக்குறித்து இதய நோய் நிபுணரான டாக்டர் அரவிந்த் துருவாசல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெளிவாக விளக்கியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, "சர்க்கரையானது நமது உடலில் ஏற்படும் பல தொற்றுநோய் அல்லாத நோய்களுக்கு மிகவும் முக்கியமான காரணமாகும். தொற்றுநோய் அல்லாத நோய் என்றால் உடல் பருமன், சர்க்கரை நோய், ஹைப்பர் டென்சன், கொழுப்பு கல்லீரல் நோய், பிசிஓடி போன்றவை. இவை அனைத்துக்கும் அதிக சர்க்கரையை உட்கொள்வது முக்கிய காரணமாக உள்ளது.
இதனால் இந்த சர்க்கரையை அனைவரும் தற்போது ஒரு வில்லனாக பார்க்கிறோம். அதோடு இதற்கு மாற்றாக நாட்டுச் சர்க்கரை, வெல்லம் போன்றவை சிறந்ததாக, ஒரு ஹீரோவாக இருக்கும் என்று நினைக்கிறோம். ஆனால் இதில் முக்கியமான ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இவற்றில் ஹீரோ நாட்டுச்சர்க்கரையோ அல்லது வெல்லமோ அல்ல. இதில் உண்மையான ஹீரோ 'நோ சுகர் அல்லது லோ சுகர்' தான்" என்று கூறினார்.
மேலும் "இந்த 'நோ சுகர் அல்லது லோ சுகர்' என்பது சர்க்கரையாகவோ, வெல்லமாவோ அல்லது நாட்டுச்சர்க்கரையாகவோ கூட இருக்கலாம். நாம் எவ்வளவு குறைவாக எடுக்கிறோமோ, அது தான் ஹீரோவே தவிர, சர்க்கரைக்கு வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை தான் சிறந்த மாற்றாக கருதி, அதிகமாக உணவில் சேர்த்து வந்தால், மோசமான விளைவையே சந்திக்க நேரிடும்" என்று கூறினார்.
எனவே நண்பர்களே! நீங்கள் இதுவரை சர்க்கரையை வில்லனாக கருதி தவிர்த்து, நாட்டுச்சர்க்கரை அல்லது வெல்லத்தை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், உடனே தவிர்த்திடுங்கள். முடிந்தவரை எவ்வளவு குறைவாக எடுக்க முடியுமோ, அவ்வளவு குறைவாக எதையும் எடுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
