Latest Updates
-
சப்பாத்திக்கு ஒருடைம் இந்த க்ரீமி பாலக் பன்னீர் கிரேவி செய்யுங்க.. டேஸ்ட் அல்ட்டிமேட்டா இருக்கும்... -
பிளாஸ்டிக் நாற்காலிகளின் நடுவில் ஏன் ஒரு துளை உள்ளது தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், 1 கப் மைதா மாவும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
பூர நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியனால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ரக்ஷா பந்தன் நாளில் உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
Dengue: அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
கொங்கணி ஸ்டைல் காராமணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குடிமகன் ஒவ்வொருவரும் 9 கோடி சம்பாதிக்கும் உலகின் பணக்கார நாடு எது தெரியுமா? அமெரிக்கா இல்லை -
செப்டம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்வில் பிரகாசத்தை கொண்டு வரப்போகுது! -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
காலையில் எழுந்ததும் 'இந்த' டைம்குள்ள சிகரெட் பிடிக்கிறீங்களா? அப்ப ரொம்ப சீக்கிரமா புற்றுநோய் வந்துடுமாம்!
சிகரெட் பிடிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கானது என்பதை நாம் அனைவரும் அறிந்திருந்தாலும், நீங்கள் புகைபிடிக்கத் தேர்ந்தெடுக்கும் நாளின் நேரம் அதை இன்னும் மோசமாக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
பெரும்பலான மக்கள் காலையில் தூங்கி எழுந்ததும் சிகரெட் பிடிக்கிறார்கள். இதை தினசரி பழக்கமாக பலர் கொண்டிருக்கிறார்கள். ஆனால், காலையில் புகைபிடிப்பது வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.

காலையில் புகைபிடிப்பதும் கடுமையான போதைக்கான அறிகுறியாகும். பலர் எழுந்தவுடன் அல்லது காலை உணவை சாப்பிட்டவுடன் அல்லது அலுவலக வேலையைத் தொடங்கும் முன் உடனடியாக புகைபிடிக்கிறார்கள். இந்த பழக்கம் மிகவும் ஆபத்தானது என்று, தெரிந்தே பலர் இதை செய்கிறார்கள்.
குறிப்பாக புகைப்பிடிக்கும் இளைஞர்களின் உயிருக்கே இது ஆபத்தை ஏற்படுத்துமாம். காலையில் சிகரெட் பிடிப்பது ஏன் மிகவும் ஆபத்தானது என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
சிகரெட் எவ்வளவு சீக்கிரம் புற்றுநோயை உருவாக்கும்?
நீங்கள் தூங்கி எழுந்த 30 நிமிடங்களுக்குள் புகைபிடித்தால், வாய் மற்றும் நுரையீரலில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
விழித்தெழுந்தவுடனே சிகரெட் அல்லது புகைப்பிடிப்பவர்களின் இரத்தத்தில் NNAL -- புகையிலை சார்ந்த புற்றுநோயான NNK-யின் மெட்டாபொலிட்டானது அதிகரிக்கிறது. தூங்கி எழுந்த அரை மணி நேரத்திற்குள் புகைபிடிப்பவர்கள், அதற்கு மேல் புகைபிடிப்பவர்களுடன் ஒப்பிடும்போது, இரத்தத்தில் புற்றுநோய்க்கான செல்கள் அதிகமாக இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் புற்றுநோய், தொற்றுநோயியல், பயோமார்க்ஸ் மற்றும் தடுப்பு இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
காலையில் புகைபிடிப்பதற்கான தூண்டுதலை எது தருகிறது?
அதிக போதைக்கு அடிமையான நிறைய புகைப்பிடிப்பவர்கள் ஒரு இரவு முழுவதும் அவை இல்லாமல் இருந்துவிட்டு, காலையில் எழுந்ததும் அதை திரும்ப பெற உடனே புகைபிடிக்கிறார்கள். காலையில் எழுந்ததும், அவர்களின் இரத்தத்தில் உள்ள நிகோடின் அளவு கணிசமாகக் குறைந்திருக்கும். அவர்களின் நரம்பியல் ஏற்பிகள் இதை ஏற்க மறந்து, உடனே சிகரெட் பிடிக்க அவர்களைத் தூண்டுகின்றன.
புகைபிடிப்பதை முழுவதுமாக கைவிட முயற்சி செய்யுங்கள். ஏனெனில், இதில் எந்த நன்மைகளும் இல்லை மற்றும் நிறைய ஆபத்துகளை உங்களுக்கு ஏற்படுத்தும். நீங்கள் காலையில் புகைபிடிப்பவராக இருந்தால், இந்தப் பழக்கத்திலிருந்து முதலில் வெளியே வாருங்கள். புகைபிடிப்பதை முற்றிலும் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். புகைபிடிப்பதை நிறுவதற்கு உதவும் பல வழிகள் உள்ளன.
பொருளை அகற்றவும்
நீங்கள் வீட்டில் புகைபிடிப்பதில்லை என்பதை உறுதிப்படுத்த உங்கள் அறை அல்லது வீட்டிலிருந்து சிகரெட்டை அகற்ற வேண்டும். அடுத்து நீங்கள் வேலைக்குச் செல்லும்போது, உங்கள் கார், பைக், பாக்கெட் அல்லது பையில் சிகரெட் அல்லது லைட்டர்கள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்களுக்குத் தெரிந்த ஒருவருடன் பயணம் செய்ய முயற்சிக்கவும், உங்கள் செயல்களைக் கண்காணிக்கவும், சிகரெட்டை வாங்குவதையும் பற்றவைப்பதையும் தடுக்க அவர்கள் உங்களுக்கு உதவலாம். புகைபிடிக்கும் நபர்களுடன் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். உங்களின் சிகரெட் பழக்கத்தை நிறுத்த முயற்சி செய்கிறீர்கள் என்று அவர்களிடம் சொல்லி, அவர்களையும் புகைபிடிக்க விடாமல் தடுக்கலாம்.
ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும்
காலையில் எழுந்ததும் செய்யும் முதல் பழக்கமாக சிகரெட் பிடிப்பது இருந்தால், அதை ஒரு கிளாஸ் தண்ணீருடன் மாற்ற வேண்டும். இது உங்கள் உடலை ஹைட்ரேட் செய்யும் மற்றும் புதிய பழக்கம் முந்தைய ஆரோக்கியமற்ற பழக்கத்திலிருந்து விடுபட உதவும். காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பது, உங்கள் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்கும்.
உடற்பயிற்சி
தினமும் காலையில், நீங்கள் சிகரெட் பிடிப்பதை மாற்றுவதற்கான மற்றொரு ஆரோக்கியமான பழக்கம் உடற்பயிற்சி ஆகும். காலையில் உடற்பயிற்சி செய்வது, நாள் முழுவதும் ஆரோக்கியமான தேர்வுகளைச் செய்ய உங்கள் மனதை ஊக்குவிக்கும். உடல் செயல்பாடு உங்கள் மூளையின் எண்டோர்பின்கள் எனப்படும் உணர்வு-நல்ல நரம்பியக்கடத்திகளின் உற்பத்தியை அதிகரிக்க உதவும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
