Latest Updates
-
இன்றைய ராசிபலன் 25 ஜூன் 2026: இன்றைய நாள் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களை பணக்கஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
10 நிமிசத்துல பருப்பே இல்லாம் இட்லி, தோசைக்கு ஈஸியான சாம்பாரை செய்யணுமா? இந்த மாதிரி செஞ்சு பாருங்க -
பாபா வங்காவின் ஆபத்தான கணிப்பு மீண்டும் பலித்துள்ளது? இன்னும் என்னென்ன கணிப்புகள் உள்ளது தெரியுமா? -
1 கப் புதினா இருந்தா இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியர்களே நுழைய முடியாத இந்தியாவிலுள்ள இடங்கள் - இதில் 3 இடங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்காம் தெரியுமா? -
சூரியன்-சந்திரனால் உருவாகும் வியாதிபாத யோகத்தால் ஜூலை மாதம் பணக்கஷ்டத்தில் சிக்கப்போகும் 4 ராசிகள் -
உருளைக்கிழங்கு இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பொடிமாஸ் பண்ணுங்க - டேஸ்ட் டக்கரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி பெண்களின் கழுத்தை பார்த்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லிரலாமாம் - கவனிச்சு பாருங்க -
வரகரிசி மசாலா தோசை - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க...
ஹோட்டல் ஸ்டைல் வெண் பொங்கலும், டிபன் சாம்பார், சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க...
Hotel Style Ven Pongal With Sambar And Coconut Chutney Recipe In Tamil: வெள்ளிக்கிழமை வந்தாலே பலவீடுகளில் காலையில் வெண் பொங்கலை செய்யும் வழக்கம் இருக்கும். உங்கள் வீட்டிலும் அப்படி வெண் பொங்கல் செய்வீர்களா? ஆனால் ஹோட்டலில் கொடுக்கப்படும் வெண் பொங்கல் போன்று ருசியாக இருக்காதா? அப்படியானால் ஹோட்டல் ஸ்டைல் வெண் பொங்கலை வீட்டிலேயே செய்யுங்கள். அதுவும் அந்த வெண் பொங்கலுக்கு டிபன் சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியை சைடு டிஷ்ஷாக செய்யுங்கள். இந்த டிபன் காம்போவை வெறும் 25 நிமிடத்தில் செய்துவிடலாம். அந்த அளவில் செய்வதற்கு சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு இந்த ஹோட்டல் ஸ்டைல் வெண் பொங்கலும், டிபன் சாம்பார், சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹோட்டல் ஸ்டைல் வெண் பொங்கல் மற்றும் அதற்கான டிபன் சாம்பார், சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வெண் பொங்கலுக்கு..
* மாவு பச்சரிசி - 3/4 டம்ளர்
* பாசிப்பருப்பு - 1/4 டம்ளர்
* தண்ணீர் - 3 1/3 டம்ளர்
* உப்பு - சுவைக்கேற்ப
சாம்பாருக்கு..
* பாசிப்பருப்பு - 3/4 கப்
* துவரம் பருப்பு - 1/4 கப்
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* உப்பு - சுவைக்கேற்ப
* குழம்பு மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* வெந்தயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
தேங்காய் சட்னிக்கு...
* தேங்காய் - 1/4 மூடி (நறுக்கியது)
* இஞ்சி - சிறிய துண்டு
* சின்ன வெங்காயம் - 1
* பச்சை மிளகாய் - 3
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
சட்னி தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
சாம்பார் தாளிப்பதற்கு...
* நெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
பொங்கல் தாளிப்பதற்கு...
* நெய் - 4 ஸ்பூன்
* மிளகு - 1 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* முந்திரி - 10 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் குக்கரில் 3/4 டம்ளர் பச்சரிசி மற்றும் 1/4 டம்ளர்
பாசிப்பருப்பை சேர்த்து நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 3 1/2 டம்ளர் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
கலந்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 5 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* அதேப் போல் மற்றொரு குக்கரில் பாசிப்பருப்பு மற்றும் துவரம் பருப்பை
எடுத்து நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்,
சுவைக்கேற்ப உப்பு, குழம்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், வெந்தய தூள்,
பெருங்காயத் தூள் சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து குக்கரை
மூடி அடுப்பில் வைத்து, 5 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும்
குக்கரைத் திறந்து பருப்பை மசித்து விட வேண்டும்.
* அதற்குள் சட்னி செய்து கொள்ளலாம். அதற்கு மிக்சர் ஜாரில் தேங்காய்,
இஞ்சி, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பொட்டுக்கடலை, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி கொரகொரவென்று அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு கிண்ணத்தில் அரைத்த சட்னியை எடுத்துக் கொண்டு, ஜாரில்
சிறிது நீரை ஊற்றி அலசி சட்னியுடன் சேர்த்து கலந்து கொள்ள
வேண்டும்.
* அடுத்து சட்னி தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை,
பெருங்காயத் தூள் மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன்
சேர்த்து கலந்தால், தேங்காய் சட்னி தயார்.
* அதன் பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, சாம்பாரை தாளிக்க நெய்
ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, குக்கரில் உள்ள சாம்பாருடன் சேர்த்து கலந்து, குக்கரை
மீண்டும் அடுப்பில் வைத்து, கொத்தமல்லியைத் தூவி, 5 நிமிடம் நன்கு
கொதிக்க வைத்து இறக்கினால், டிபன் சாம்பார் தயார்.
* இறுதியாக வெண் பொங்கலை தாளிக்க ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
நெய் ஊற்றி சூடானதும், மிளகு, சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை
மிளகாய் மற்றும் நறுக்கிய முந்திரி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, வெண் பொங்கலுடன் சேர்த்து கலந்து, குக்கரை மீண்டும்
அடுப்பில் வைத்து, 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து வேக வைத்து
இறக்கினால், ஹோட்டல் ஸ்டைல் வெண் பொங்கல் தயார்.



Click it and Unblock the Notifications