Latest Updates
-
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா?
தொப்பையை குறைக்கணுமா? அப்ப நைட் தூங்கும் முன் இந்த 5 யோகாசனங்களை செய்யுங்க போதும்..
International Yoga Day 2025: யோகா என்பது இந்தியாவின் மிகவும் பழமையான கலைகளுள் ஒன்றாகும். இந்த யோகா உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி, மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றன. இப்படிப்பட்ட யோகாவை போற்றும் வகையிலும், அதன் நன்மைகளை உணர்த்தும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.
இப்படிப்பட்ட யோகாவைக் கொண்டு நிறைய ஆரோக்கிய பிரச்சனைகளை தடுப்பதோடு, சரிசெய்யவும் முடியும். தற்போது நிறைய பேர் அவதிப்படும் ஒரு பிரச்சனை தான் உடல் பருமன் மற்றும் தொப்பை. இப்படி உடல் எடை அதிகரிக்கவும், தொப்பை வருவதற்கும் நமது உணவுப் பழக்கங்களும், வாழ்க்கை முறையும் தான் முக்கிய காரணம்.

இப்படி அதிகரிக்கும் உடல் எடையை, தொப்பையை ஒருவர் குறைக்க முயற்சிக்காவிட்டால், அதன் விளைவாக உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் போன்ற பல பிரச்சனைகள் வரத் தொடங்கி, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் நோய்களின் அபாயமும் அதிகரிக்கும். ஆனால் இந்த தொப்பையை யோகாசனங்களை செய்வதன் மூலம் குறைக்கலாம்.
அதுவும் உங்களுக்கு யோகா செய்ய காலையில் நேரம் இல்லாவிட்டால், இரவு தூங்கும் முன் ஒருசில யோகாசனங்களை செய்தால் குறைக்கலாம். இப்போது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தொப்பையைக் குறைக்க இரவு தூங்கும் முன் செய்ய வேண்டிய சில யோகாசனங்களைக் காண்போம்.
1. பத்த கோனாசனம்
தொப்பையைக் குறைக்க வேண்டுமானால், இரவு தூங்கும் முன் யோகாசனத்தில் உள்ள பட்டாம்பூச்சி நிலை அல்லது பத்த கோனாசனாவை செய்யுங்கள். இந்த ஆசனத்திற்கு தரையில் அமர்ந்து கொண்டு, கால்களை நீட்டி விரித்து, பின் பாதங்கள் இரண்டும் ஒன்றையொன்று தொடும் வகையில் மடித்து அமர்ந்து, கைகளால் பாதங்களை பிடித்துக் கொண்டு, மெதுவாக பட்டாம்பூச்சி போன்று மேலும் கீழும் அசைக்க வேண்டும். இப்படி வேலை முடித்து வீட்டிற்கு வந்து சிறிது நேரம் டிவி பார்க்கும் போது தரையில் அமர்ந்து செய்து வந்தால், அடிவயிற்றுக் கொழுப்பைக் கரைக்கலாம்.
2. மர்ஜார்யாசனம்
தொப்பை பெரியதாக இருந்து, அதை சிரமப்படாமல் எளிய வழியில் குறைக்க விரும்பினால், மர்ஜார்யாசனத்தை செய்யுங்கள். இந்த ஆசனம் தொப்பையை குறைப்பது மட்டுமின்றி, முதுகு வலியை போக்கி, உடலுக்கு நல்ல நெகிழ்வுத்தன்மையைத் தரும். இந்த ஆசனம் செய்வதற்கு,
முதலில் 2 கைகள் மற்றும் முட்டிகளை பயன்படுத்தி 4 கால்களில் நின்று கொள்ள வேண்டும். உள்ளங்கைகளானது, தோள்பட்டைக்கு நேராக நீட்டியபடி, தரையில் பதிய வேண்டும். முட்டிகள் இரண்டும் இடுப்பிற்கு நேராக இருக்க வேண்டும். பாதங்கள் வெளிபுறமாக பார்த்த படி வைக்கவும். இப்போது மூச்சை உள்ளே இழுக்கும் போது, வயிற்று பகுதியை கீழ் நோக்கி உள்ளிழுக்கவும்.
அப்போது தலையை தூக்கி மேலே பார்க்கவும். இந்நிலையில் 2 முதல் 3 வினாடிகளுக்கு அப்படியே இருக்கவும். அதன் பின், மூச்சை வெளியே விடும் போது, அதற்கு அப்படியே தலைகீழாக, வயிற்று பகுதியை மேல்நோக்கி வளைத்து, தலையை குனிந்து நெஞ்சு பகுதியை பார்க்கவும். இந்த ஆசனத்தை இரவு தூங்கும் போது செய்தால், நல்ல பலனைப் பெறலாம்.
3. அர்த மட்சயேந்திராசனம்
உடல் எடையை மற்றும் தொப்பையைக் குறைக்க நினைப்போருக்கு ஏற்ற யோகாசனம் தான் அர்த மட்சயேந்திராசனம். இந்த ஆசனம் செய்வதற்கு, முதலில் தரையில் நேராக அமா்ந்து கொண்டு, நமக்கு முன் பக்கமாக கால்களை விாித்து நீட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இடது காலை வளைத்து, அதன் பாதத்தைக் கொண்டு நமது வலது பக்க புட்டத்தைத் தொட முயற்சிக்க வேண்டும்.
வலது பாதத்தை, இடது முட்டிக்கு வெளியே கொண்டு வந்து, தரையைத் தொட வேண்டும். தண்டுவடத்தை வளைக்காமல் நேராக வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது மூச்சை வெளியில் விட்டு, உடலின் மேல் பகுதியை வலது பக்கமாகத் திருப்ப வேண்டும். இடது கையால் வலது பாதத்தை பிடித்துக் கொண்டு, தண்டுவடப் பகுதியில் வலது கையை வைத்துக் கொள்ள வேண்டும். இந்த ஆசனம் நமது தண்டுவடத்திற்கு அதிக நெகிழ்வு தன்மையை வழங்குவதோடு, வயிற்று தசைகளை வலுப்படுத்தும்.
4. சேது பந்தாசனம்
வயிற்றுப் பகுதியில் தேங்கியுள்ள கொழுப்பைக் கரைப்பதில் சேது பந்தாசனம் பெரிதும் உதவி புரியும். இந்த ஆசனத்தைச் செய்ய முதலில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். பின் கால்களை பின்புறமாக மடக்கி இடுப்புக்கு இரண்டு பகுதிகளிலும் தரையில் ஊன்றிக் கொள்ள வேண்டும்.
பாதங்களைத் தரையில் நன்றாக அழுத்தி, இடுப்பை மேலே உயா்த்த வேண்டும். கைகளால் கணுக்கால்களைப் பிடித்துக் கொள்ள வேண்டும். இதே பயிற்சி நிலையில் இருந்து கொண்டு சில முறை மூச்சை உள்ளிழுத்து வெளிவிட வேண்டும். இதே பயிற்சியை மீண்டும் செய்ய வேண்டும்.
5. பாலாசனம்
பாலாசனம் வயிற்றுக் கொழுப்பை கரைக்க உதவுவதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் முதுகு வலியைக் குறைக்கிறது. இந்த பாலாசனத்தை இரவு தூங்கும் முன் தினமும் செய்து வந்தால், தொப்பையில் நல்ல மாற்றத்தைக் காணலாம். இந்த ஆசனம் செய்வதற்கு, முதலில் தரையில் இரண்டு கால்களையும் மடக்கி பிட்டத்தின் மீது உட்கார வேண்டும். அப்போது கால் பெருவிரல்கள் இரண்டும் ஒன்றின் மீது ஒன்று இணைந்து இருக்க வேண்டும்.
பின் மூச்சை உள்ளிழுத்தவாறு இரண்டு கைகளையும் தலைக்கு மேலே தூக்க வேண்டும். பின்பு மூச்சை வெளிவிட்டுக் கொண்டே முன்னோக்கி குனிய வேண்டும். அப்போது நெற்றியானது தரையைத் தொட வேண்டும். முக்கியமாக பிட்டத்தை தூக்கக் கூடாது. இந்நிலையில் சாதாரணமாக சுவாசித்துக் கொண்டே 2-3 நிமிடங்கள் இருக்க வேண்டும். பின் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். இப்படி 5-10 முறை செய்யலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications