Latest Updates
-
தக்காளி தோசையும், உடுப்பி வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 18 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
செவ்வாய்-ராகுவால் உருவான அங்காரக யோகம்: செப்டம்பர் 02 வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
குருபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அக்டோபர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முகம் கருப்பா இருக்குதா? அப்ப மஞ்சளைக் கொண்டு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
ஆந்திரா புதினா தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - சாதம், தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
1/4 கப் கோதுமை மாவும், 2 வாழைப்பழமும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் வடை ட்ரை பண்ணுங்க.. -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதத்தில் துரதிர்ஷ்டத்தால் அவதிப்படப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
Avani Matha Rasipalan 2026: ஆவணி மாதம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும் தெரியுமா? -
அணுகுண்டு வெடித்து உலகமே அழிந்தாலும் இந்த உயிரினங்கள் அழியாதாம் - எந்தெந்த உயிரினங்கள் தெரியுமா?
முதுகு வலி அதிகமா இருக்கா? இந்த சிம்பிளான யோகாசனங்களை தினமும் 10 நிமிடம் செய்யுங்க போதும்...
International Yoga Day 2024: தற்போதைய காலகட்டத்தில் முதுகு வலி என்பது மக்களை பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். குறிப்பாக உட்கார்ந்து கொண்டு, நீண்ட நேரம் நின்று கொண்டு வேலை செய்யும் ஒவ்வொருவருமே முதுகு வலியால் அவதிப்படக்கூடும்.
நீங்களும் இந்த முதுகு வலியால் தினமும் அவதிப்பட்டு கொண்டிருக்கிறீர்களா? தினமும் இந்த முதுகு வலிக்காகவே வலியைப் போக்கும் ஸ்ப்ரேவை வாங்கி அடிப்பீர்களா? ஆனால் எத்தனை நாட்கள் இப்படி நிறைய பணத்தை செலவழித்து வலியில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். இதற்கு ஒரு முடிவு வேண்டாமா?

உங்கள் முதுகு வலிக்கு ஒரு நல்ல நிவாரணம் கிடைக்க வேண்டுமானால், யோகா பயிற்சியை மேற்கொள்ளுங்கள். யோகா செய்வதன் மூலம் வலியில் இருந்து நிவாரணம் கிடைப்பதோடு, உடல் மற்றும் மன ஆரோக்கியமும் மேம்படும். இந்த யோகாவின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்த ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த யோகா தினத்தை முன்னிட்டு, முதுகு வலியில் இருந்து விடுபட உதவும் சில ஈஸியான யோகாசனங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் இதுவரை யோகா செய்ததில்லையா? புதிதாக யோகா செய்பவரா? அப்படியானால் உங்களுக்காகவே தமிழ் போல்ட் ஸ்கை முதுகு வலியில் இருந்து நல்ல நிவாரணம் அளிக்கும் சில எளிய யோகாசனங்களை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றைப் பின்பற்றி நன்மை பெறுங்கள்.
1. புஜங்காசனம்
* புஜங்காசனம் செய்வதற்கு முதலில் தரையில் குப்புறப் படுத்து, கால்களை ஒன்றாக இணைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் இரண்டு கைகளின் உள்ளங்கைகளையும் தோள்பட்டைக்கு பக்கவாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு கைகளை ஊன்றி, மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு மேல் உடலை மேலே உயர்த்தி பின்னோக்கி வளைய வேண்டும். இந்நிலையில் கைகள் இரண்டும் மடக்காமல் நேராக இருக்க வேண்டும். அதே சமயம் அடிவயிறு தரையில் இருக்க வேண்டும். இப்படி 10-15 நொடிகள் இருக்க வேண்டும்.
* பிறகு மூச்சை வெளிவிட்டுக் கொண்டு மெதுவாக பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.
* இப்படி ஒரு 3-4 முறை இந்த ஆசனத்தை செய்ய வேண்டும்.
2. பாலாசனம்
* பாலாசனம் செய்வதற்கு முதலில் முழங்காலிட்டு பிட்டத்தின் மேல் அமர வேண்டும். அப்போது கால் பெருவிரல்கள் ஒன்றின் மீது ஒன்று இருக்க வேண்டும்.
* பின் மூச்சை உள்ளிழுத்தவாறு கைகள் இரண்டையும் மேல் நோக்கி நேராக உயர்த்த வேண்டும்.
* பின்பு மூச்சை வெளிவிட்டவாறு மெதுவாக முன்னோக்கி குனிந்து, நெற்றியால் தரையைத் தொட வேண்டும்.
* பின் 2 நிமிடம் கழித்து பழைய நிலைக்கு வர வேண்டும்.
* இந்த ஆசனத்தை சாதாரணமாக சுவாசித்துக் கொண்டே கூட செய்யலாம்.
* இந்த ஆசனத்தை தினமும் காலையில் 4-5 முறை செய்யலாம்.
3. மர்ஜாரியாசனம்
* மர்ஜாரியாசனம் செய்வதற்கு முதலில் தவழும் நிலையில் இருக்க வேண்டும்.
* முழங்கால்களானது இடுப்பிற்கு நேராகவும், கைகள் இரண்டும் தோள்பட்டைக்கு நேராகவும் இருக்க வேண்டும்.
* பின் மெதுவாக மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு முதுகை மேல் நோக்கி தள்ள வேண்டும். அப்போது தலையை கீழ் நோக்கி தள்ள வேண்டும்.
* இப்படி சில நொடிகள் இருந்து ஆழமாக சுவாசிக்க வேண்டும்.
* அதன் பின் மூச்சை வெளிவிட்டுக் கொண்டு, வயிற்றை கீழ் நோக்கி தள்ள வேண்டும். தலையை பின்புறமாக சாய்க்க வேண்டும். இப்படி சில நொடிகள் இருக்க வேண்டும்.
* இந்த ஆசனத்தை 5-6 முறை செய்யலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications