Latest Updates
-
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை!
நீங்க தினமும் குடிக்கிற டீ-யில இந்த பொருட்கள சேர்த்தா போதுமாம்...நோயெதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்குமாம்!
Boost Immunity In Tamil: தற்போது மழைக்காலம் தொடங்கி நடந்துகொண்டிருக்கிறது. மழை நாளில் சூடான தேநீர் கோப்பையை அருந்துவதை விட ஆறுதல் எதுவும் இருக்காது. அமைதியான மழை மற்றும் குளிர் காலநிலையை நாம் எவ்வளவு விரும்புகிறோமோ, அதே அளவு விரும்பத்தகாத வியாதிகள் மற்றும் ஒவ்வாமைகளை இந்த பருவம் கொண்டு வருகிறது.
பெரும்பாலும் காற்றில் மற்றும் நீரில் பரவும் நோய்க்கிருமிகள் மற்றும் ஒவ்வாமைகளால் மழைக்காலத்தில் நோய் கிருமிகள் அதிகம் பரவுவதற்கு காரணமாகிறது. சுவாரஸ்யமாக, உங்கள் வழக்கமான தேநீரில் சில இந்திய மசாலா மற்றும் மூலிகைகளை சேர்ப்பது, உங்கள் உடலின் பருவகால நோய்களை எதிர்த்துப் போராடவும் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் உதவும்.

உங்கள் தேநீரில் சேர்க்க வேண்டிய சில எளிய மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் உள்ளன. அவை உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, உடலுக்கும் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. வழக்கமான தேநீரில் எந்த இந்திய மூலிகைகள் மற்றும் மசாலாக்களை சேர்ப்பது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
மஞ்சள்
மஞ்சளில் இயற்கையாகவே குர்குமின் என்ற செயலில் உள்ள சேர்மம் நிறைந்துள்ளது. இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். வழக்கமான கிரீன் டீயில் ஒரு சிறிய சிட்டிகை மஞ்சள் அல்லது மசாலா அல்லது மசாலா சாயின் எளிய கலவையைச் சேர்ப்பது சுவாசக் குழாயில் வீக்கம் மற்றும் செரிமானத்தைக் குறைக்க உதவுகிறது.
உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் மஞ்சள், சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் குறைக்கவும் உதவுகிறது.
கருப்பு மிளகு
கருப்பு மிளகில் பைபரின் உள்ளது, இது மஞ்சளில் இருந்து குர்குமின் உறிஞ்சுதலை மேம்படுத்தும். மஞ்சள் தேநீரில் ஒரு சிட்டிகை கருப்பு மிளகு சேர்த்து அதன் நன்மைகளை நீங்கள் பெறலாம். வேறு மூலிகை தேநீர் அல்லது சூப்களிலும் கருப்பு மிளகை சேர்த்து நீங்கள் அருந்தலாம். இது உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை கிருமிகளிடம் இருந்து பாதுகாக்க உதவுகிறது.
இலவங்கப்பட்டை
உங்கள் வழக்கமான தேநீரில் ஒரு துளி இலவங்கப்பட்டையைச் சேர்ப்பது அல்லது உங்கள் எளிய கிரீன் டீயுடன் இலவங்கப்பட்டையை சேர்த்து தயாரிப்பது, இயற்கையாகவே சளி, இருமல், காய்ச்சல் மற்றும் தொண்டை புண் ஆகியவற்றைக் குணப்படுத்த உதவும். உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு பங்களிக்கும் ஆக்ஸிஜனேற்றிகள் இலவங்கப்பட்டையில் இருப்பதால், இது உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
இஞ்சி
வழக்கமான பிளாக் டீ, பால் சார்ந்த மசாலா சாய் அல்லது கிரீன் டீ ஆகியவற்றில் துருவிய இஞ்சியைச் சேர்த்து நீங்கள் அருந்தலாம். இது நெரிசல், சளி இருமல் மற்றும் காய்ச்சலைக் குணப்படுத்த உதவும். இதற்கு இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் முக்கிய காரணமாக இருக்கின்றன.
இஞ்சி சுவாச அசௌகரியத்தை ஆற்றவும், நாசி பாதையை குணப்படுத்தவும் உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், உணவுக்குப் பிறகு இஞ்சி டீயை பருகுவது வளர்சிதை மாற்றம் மற்றும் செரிமானத்தை மேம்படுத்த உதவும்.
துளசி
புனித துளசி என்று அழைக்கப்படும் துளசி பலவற்றில் பயன்படுத்தப்படும் ஒரு சக்திவாய்ந்த மூலிகையாகும் இந்த சக்திவாய்ந்த மூலிகை அதன் நோயெதிர்ப்பு-மேம்படுத்தும் மற்றும் அடாப்டோஜெனிக் பண்புகளுக்கு அறியப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் துளிசி பிரபலமாக அறியப்படும் ஓர் மூலிகையாகும். இது சுவாச பிரச்சனை, நெஞ்செரிச்சல், சளி, இருமல் மற்றும் காய்ச்சலை குணப்படுத்த உதவுகிறது.
தேநீர் காய்ச்சும் போது புதிய இலைகளைச் சேர்த்து அல்லது துளசி டீ தயாரிக்க சூடான நீரில் அவற்றை ஊறவைப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். தினமும் நீங்கள் துளிசியை எடுத்துக்கொள்வது உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்க உதவும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
