Latest Updates
-
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க..
India–UK FTA: பிரிட்டன் சந்தையில் வரி இல்லாமல் போட்டியிடப் போகும் இந்திய உணவுகள்!
India-UK FTA: இந்தியாவிற்கும் பிரிட்டனுக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி 2025 ஜூலை 24 ஆம் தேதி கையெழுத்திட்டுள்ளார். இப்படியான ஒப்பந்தம் இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு மிகப்பெரிய வகையில் ஊக்கம் தருவதாக உள்ளது.
இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 95 சதவீதத்திற்கும் அதிகமான பொருட்களுக்கு எந்த வரியும் இல்லை. அதாவது எந்த வரியும் இல்லாமல் குறிப்பிட்ட இந்திய பொருட்களானது வரி ஏதும் இல்லாமல் நேரடியாக பிரிட்டன் சந்தையில் நுழைய முடியும்.

இந்த ஒப்பந்தத்தால் இந்திய விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கப் போகிறது என்றே கூறலாம். முக்கியமாக கேரளா, தமிழ்நாடு, அசாம், குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு வங்க மாநில விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள் பயனடைய போகிறார்கள்.
ஏனெனில் இந்தியாவில் இருந்து ஏராளமான உணவுப் பொருட்கள் பிரிட்டன் சந்தையில் வரி ஏதும் இல்லாமல் விற்கப்படவுள்ளன. இப்போது இந்தியாவில் இருந்து எந்த உணவுப் பொருட்கள் பிரிட்டன் சந்தையில் போட்டியிடப் போகின்றன என்பதையும், அந்த பொருட்களில் நிறைந்துள்ள சத்துக்கள் பற்றியும் காண்போம்.
1. மக்கானா
பிரிட்டன் சந்தையில் வரி இல்லாமல் இறக்குமதி செய்யப்படும் ஒரு இந்திய உணவுப் பொருள் தான் மக்கானா. இது வேறொன்றும் இல்லை தாமரை விதை. இந்த மக்கானாவில் அத்தியாவசிய சத்துக்களான புரோட்டீன், நார்ச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை அதிகம் உள்ளது. அதோடு இந்த மக்கானாவின் பாலுணர்வைத் தூண்டும் பண்புகளும் உள்ளன. எனவே இதை உட்கொள்ளும் போது பாலுணர்ச்சி அதிகரிக்கும், விந்தணுக்களின் அளவு மேம்படும் மற்றும் பெண்களின் கருவுறும் திறனும் அதிகரிக்கும்.
2. ஷாஹி லிச்சி
பிரிட்டன் சந்தையில் வரி இல்லாமல் இறக்குமதி செய்யப்படும் ஒரு இந்திய பழம் தான் ஷாஹி லிச்சி. இந்த பழம் சாதாரண லிச்சி பழத்தை விட பெரியதாக இருக்கும். இது பீகாரில் அதிகம் விளைகிறது. இது தனித்துவமான சுவை மற்றும் நறுமணத்திற்கு பிரபலமானது. இந்த ஷாஹி லிச்சி பழத்தில் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் சக்தி வாய்ந்த பிற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் அதிகம் உள்ளன.
மேலும் இந்த பழத்தில் பொட்டாசியம், காப்பர் போன்ற அத்தியாவசிய கனிமச்சத்துக்களும் உள்ளன. இந்த பழத்தை உட்கொண்டால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், இதய ஆரோக்கியம் மேம்படும், குடலியக்கம் சீராகி மலச்சிக்கல் தடுக்கப்படும். முக்கியமாக இரத்த அழுத்தம் சீராகி, உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும். அதோடு இந்த பழத்தை உட்கொண்டு வந்தால், அது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நீண்ட காலம் இளமையான தோற்றத்தை பெற உதவும்.
3. பாசுமதி அரிசி
பிரிட்டன் சந்தைக்கு செல்லவுள்ள மற்றொரு இந்திய உணவுப் பொருள் தான் பாசுமதி அரிசி. இந்த பாசுமதி அரிசியில் கார்போஹைட்ரேட்டுகள், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து மட்டுமின்றி, பி வைட்டமின்கள், இரும்புச்சத்து, மக்னீசியம் போன்றவையும் அதிகம் உள்ளன. மற்ற அரிசி வகைகளுடன் ஒப்பிடும் போது, பாஸ்மதி அரிசியில் ஆர்சனிக் குறைவாக உள்ளது. ஆர்சனிக் என்பது நீரிழிவு, இதய பிரச்சினைகள் மற்றும் சில புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் ஒரு பொருளாகும்.
4. டார்ஜிலிங் டீ
பிரிட்டனில் உள்ள டீ பிரியர்களை தன்வசப்படுத்த இந்தியாவில் இருந்து செல்லக்கூடிய ஒரு இந்திய பானம் தான் டார்ஜிலிங் டீ. இது இந்தியாவின் டார்ஜிலிங் பகுதியில் வளர்க்கப்படும் ஒரு வகையான டீ ஆகும். இதில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இந்த டீயானது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், செரிமானத்தை சீராக்கவும், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், மன விழிப்புணர்வை அதிகரிக்கவும் உதவுகிறது. முக்கியமாக இது மன அழுத்தத்தில் இருந்து நிவாரணமளிக்க உதவும்.
5. அரக்கு காபி
பிரிட்டன் சந்தைக்கு செல்லும் மற்றொரு இந்திய தயாரிப்பு தான் அரக்கு காபி. இந்த அரக்கு காபி கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஆந்திராவின் அல்லூரி சீதாராம் ராஜு மாவட்டத்தில் உள்ள அரக்கு பள்ளத்தாக்கில் விளைகிறது. இந்த காபி ஒரு தனித்துவமான சுவையைக் கொண்டது. காபி பிரியர்களுக்கு, நிச்சயம் இந்த அரக்கு காபி ஃபேவரைட்டாக மாறும். இந்த காபியிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன மற்றும் இது உடலின் ஆற்றவையும் அதிகரிக்கும். மேலும் இந்த காபியில் சிறிய அளவில் பொட்டாசியம், மக்னீசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு, ஃபோலேட், கோலைன், சோடியம் போன்றவையும் நிறைந்துள்ளன.
6. மஞ்சள்
தினசரி சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு பொருள் தான் மஞ்சள். இந்த மஞ்சள் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் அதிகம் விளைகிறது. இப்படிப்பட்ட மஞ்சளும் பிரிட்டன் சந்தையில் வரி இல்லாமல் இறக்குமதி செய்யப்படவுள்ளது. மஞ்சள் ஏராளமான மருத்துவ பண்புகளைக் கொண்டது. அதுவும் இதில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான குர்குமின், அழற்சி எதிர்ப்பு பண்புகள், வைட்டமின் சி, வைட்டமின் பி6, இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்றவை உள்ளன. தினசரி சமையலில் மஞ்சள் சிறிது சேர்த்து வந்தால், அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக இருப்பதோடு, செரிமானத்தை சீராக வைத்துக் கொள்ளவும் உதவும்.
7. காஷ்மீரி குங்குமப்பூ
பிரிட்டனில் வரி இல்லாமல் இறக்குமதி செய்யும் மற்றொரு இந்திய உணவுப் பொருள் தான் காஷ்மீரி குங்குமப்பூ. இதை கேசர் என்றும் அழைப்பர். இது உணவிற்கு நல்ல நிறத்தையும், சுவையையும் தரக்கூடியது. அதுமட்டுமின்றி, இதில் வளமான அளவில் மாங்கனீசும், சிறிதளவில் வைட்டமின் சி-யும் உள்ளது. இது தவிர, இதில் குரோசின், குரோசெட்டின் மற்றும் சஃப்ரானல் போன்ற சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் உள்ளன. இவை அனைத்தும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி புரிகின்றன.
பிற உணவுகள்...
இதுவரை 4.2 சதவீதம் முதல் 8.5 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டு வந்த இறால், சூரை, மீன் உணவு மற்றும் தீவனங்கள் முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்படவுள்ளது. இது தவிர மகாராஷ்டிராவில் இருந்து திராட்சை, வெங்காயம், குஜராத்தில் இருந்து நிலக்கடலை, பருத்தி, கேரளாவில் இருந்து மசாலா பொருட்கள் போன்றவையும் பிரிட்டன் சந்தையில் வரி ஏதும் இல்லாமல் விற்கப்படவுள்ளன.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

