Latest Updates
-
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்...
எச்சரிக்கை! நீங்க 'இங்க' வேலை பாக்குறீங்களா? அப்ப உங்க உயிருக்கு ஆபத்தான இதய நோய் வர வாய்ப்பிருக்காம்!
இன்றைய நாளில் பெரும்பலான மக்கள் கார்ப்பரேட் வேலையில் இருக்கிறார்கள். கார்ப்பரேட் என்பது ஓர் தனி உலகமாக கருத்தப்படுகிறது. இதில், மக்கள் நல்ல சம்பளத்தை பெறுகிறார்கள். ஆனால், ஆரோக்கிய ரீதியாக அவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?
உலக அளவில் பெரும்பலான மக்களின் இறப்புக்கு முக்கிய காரணியாக இருப்பது இதய நோய். இது கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு அதிகம் வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. பிஸியான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது மற்றும் மனஅழுத்தம் போன்றவை இதய நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணிகளாக இருக்கின்றன.

பெரும்பாலும், 31-60 வயதுடைய இளம் வயதினருக்கும், உற்பத்தித் திறனுள்ளவர்களுக்கும் ஏற்கனவே உயர் இரத்த அழுத்தம், டிஸ்லிபிடெமியா மற்றும் உடல் பருமன் போன்ற குறிப்பிடத்தக்க ஆபத்து காரணிகள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்காலத்தில், நமது ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித்திறனில் குறிப்பிடத்தக்க சரிவைக் காண வாய்ப்புள்ளதாகவும் ஆய்வு எச்சரிக்கிறது.
கார்ப்பரேட் இந்தியாவைப் பற்றிய அதிர்ச்சியூட்டும் உண்மைகளை பற்றியும், அந்த ஆய்வு சொல்லும் ஆபத்தான சுகாதார நிலை பற்றியும் இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
ஆய்வு
ஓர் ஆய்வில் சுமார் 1.5 லட்சம் கார்ப்பரேட் ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட தடுப்புச் சுகாதாரப் பரிசோதனைகளின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதன் முடிவுகள் 50% நீரிழிவு நோயாளிகள், உயர் இரத்த அழுத்த நோயாளிகள் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் நோயாளிகள் 45 வயதுக்குட்பட்டவர்கள் என்பதைத் தெரிவிக்கிறது.
அதிலும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களில் 75% பேருக்கு தங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பது தெரியவில்லை என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதேபோல், மூன்றில் 2 நீரிழிவு நோயாளிகள் தங்களுக்கு இரத்த சர்க்கரை பிரச்சனை இருப்பதைப் பற்றியும் அறிந்திருக்கவில்லை.
கூடுதலாக, இந்த ஊழியர்களிடையே உடல் பருமன் மற்றும் உட்கார்ந்த வாழ்க்கை முறை அதிகமாக உள்ளது. உடல் பருமன் அல்லது 70% அதிக எடை கொண்ட நபர்களிடம் ஒன்று அல்லது மற்ற ஆபத்து காரணிகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
பணியிடத்தின் பங்கு
நீங்கள் வேலை செய்யும் பணியிடம் உங்கள் உடல் ஆரோக்கியத்தோடு சம்பந்தப்பட்டுள்ளது என்று தெரியுமா? பணியிடமானது நமது அன்றாட வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாகும். மேலும், இது நமது வாழ்க்கை முறை மற்றும் தேர்வுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, நிறுவனங்களுக்கு முழுமையான அணுகுமுறையை உருவாக்குவது அவசியம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
உடல், மன மற்றும் உணர்ச்சி நல்வாழ்வைக் கொண்டிருக்கும் இடமாக உங்கள் பணியிடத்தை அமைக்க வேண்டும். ஏனெனில், பணியிடங்கள் கட்டமைக்கப்பட்டுள்ள விதம், இதய ஆரோக்கியம் உட்பட, நமது ஆரோக்கியத்தில் நீண்ட கால மாற்றங்களைக் கொண்ட சில வாழ்க்கை முறை தேர்வுகளைச் செய்வதற்கு நம்மைத் தள்ளுகிறது.
உட்கார்ந்திருக்கும் வாழ்க்கை முறை
நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கும் வாழ்க்கை முறை உங்கள் ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது இரத்த அழுத்தம், உயர் இரத்த சர்க்கரை, இடுப்பைச் சுற்றி அதிகப்படியான கொழுப்பு மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்பு அளவுகளை அதிகரிக்க உதவும்.
தொடர் மீட்டிங்கில் கலந்து கொள்வது முதல் இறுக்கமான காலக்கெடு வரை வேலை அழுத்தம் என்பது நம் நாளுக்கு நாள் தவிர்க்க முடியாத பகுதியாகிவிட்டது. மன அழுத்தம் சந்தேகத்திற்கு இடமின்றி உயர் இரத்த அழுத்தத்திற்கு ஒரு முக்கிய பங்களிப்பாக இருக்கிறது. மேலும் நம் வாழ்வில் மன அழுத்தத்தை இயல்பாக்குவதன் மூலம், நீண்ட காலத்திற்கு இருதய நோய்களை உருவாக்கும் பாதையில் நாம் மாறாமல் இருக்கிறோம்.
மோசமான உணவு
கார்ப்பரேட் கம்பெனியில் வேலை செய்யும் பெரும்பலான மக்கள் அதிகமாக ஜங்க் புட் உணவுகளை எடுத்துக்கொள்கிறார்கள். ஜங்க் ஃபுட் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக சாப்பிடுவது, கட்டமைக்கப்படாத உணவு நேரங்களுடன் இணைந்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். அத்துடன் உங்களை எப்போதும் நீரேற்றமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
ஆரோக்கியத்தை எவ்வாறு கவனித்துக் கொள்ள வேண்டும்?
ஒரு வலுவான பணியிட சுகாதார புத்துணர்ச்சி தேவை. நிற்கும் மேசைகள், ஊக்கமளிக்கும் இடைவேளைகள், ஊட்டச்சத்து உணவு கிடைப்பது மற்றும் மன அழுத்தத்தை நிர்வகித்தல் ஆகியவற்றிலிருந்து, இவை நிச்சயமாக ஊழியர் நல்வாழ்வு, உற்பத்தித்திறன் மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றில் நீண்டகால நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
புகைபிடிப்பதை நிறுத்துதல், வழக்கமான உடல் செயல்பாடு, உடல்நல அபாயங்களை நெருக்கமாகக் கண்காணித்தல் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். பணியாளர்களுக்கு உரிய வெகுமதி அளிக்கப்பட வேண்டும். நிறுவனங்கள் ஒரு படி மேலே சென்று, முழுமையான ஊழியர்களின் ஈடுபாட்டை ஊக்குவிக்கும் வகையில், ஊழியர்களின் குடும்பங்களுக்கு தடுப்பு சுகாதார நலன்களை வழங்க வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications












