For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க வீட்டிலேயே செலவே இல்லாம சுத்தமான மினரல் வாட்டர் தயாரிக்கிறது எப்படினு தெரிஞ்சிக்கோங்க...!

நீங்கள் குடிக்கும் சாதாரண மினரல் வாட்டர் பல முக்கிய ஊட்டச்சத்துக்களால் நிரப்பப்பட்டிருப்பதை நீங்கள் ஒருபோதும் கற்பனை செய்திருக்க மாட்டீர்கள்.

|

இயற்கை நமக்கு அளித்துள்ள மிகப்பெரிய வரம் தண்ணீர் ஆகும். தண்ணீர்தான் மனித வாழ்க்கையை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். தண்ணீர் இயற்கையாக உருவாகும் ஒன்றாக இருந்தாலும் அதில் செயற்கையாக செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்துக்கள் சேர்க்கப்பட்டு மினரல் வாட்டராக உலகம் முழுவதும் விற்கப்படுகிறது. இன்று தண்ணீர் வியாபாரம் உலகின் மிகப்பெரிய வியாபாரமாக விஸ்வரூபமெடுத்துள்ளது.

How To Make Mineral Water At Home

நீங்கள் குடிக்கும் சாதாரண மினரல் வாட்டர் பல முக்கிய ஊட்டச்சத்துக்களால் நிரப்பப்பட்டிருப்பதை நீங்கள் ஒருபோதும் கற்பனை செய்திருக்க மாட்டீர்கள். மினரல் வாட்டரின் ஆரோக்கிய நன்மைகள் உடலுக்கும் மனதுக்கும் ஒரே மாதிரியாக பயனளிக்கின்றன. இதில் நல்ல செய்தி என்னவென்றால், உங்கள் வீட்டிலேயே நீங்ள் எளிதாக மினரல் வாட்டரை உருவாக்க முடியும். இந்த பதிவில் உங்கள் வீட்டிலேயே மினரல் வாட்டரை எப்படி உருவாக்கலாம் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 மினரல் வாட்டர் தயாரிப்பதற்கான 5 வழிமுறைகள்

மினரல் வாட்டர் தயாரிப்பதற்கான 5 வழிமுறைகள்

மினரல் வாட்டர் வடிகட்டப்பட்ட நீரிலிருந்து வேறுபட்டது என்பதை நீங்கள் புரிந்துகொள்வது முக்கியம். வடிகட்டப்பட்ட நீர் அழுக்கு மற்றும் பாக்டீரியாக்களில்லாமல் இருக்கும்போது, கனிம நீர் தூய்மையானது மற்றும் கால்சியம், மெக்னீசியம், சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளது. தினசரி அடிப்படையில் விலையுயர்ந்த மினரல் வாட்டர் கேன்களை வாங்குவது நடைமுறையில் சாத்தியமில்லை என்று நீங்கள் நினைக்கலாம். இருப்பினும், மினரல் வாட்டரை உங்கள் வீட்டிலேயே தயாரிக்கலாம். இந்த 5 எளிய வழிகள் என்னவென்பதை மேற்கொண்டு பார்க்கலாம்.

குழாய் நீரை வடிகட்டவும்

குழாய் நீரை வடிகட்டவும்

குழாய் நீரை வடிகட்டுவது வீட்டிலேயே மினரல் வாட்டர் தயாரிப்பதற்கான முதல் படியாகும். இதற்கு உங்கள் வழக்கமான நீர் சுத்திகரிப்பைப் பயன்படுத்தலாம். ஒரு குடுவையில் 1 அல்லது 2 லிட்டர் குழாய் நீரை எடுத்து உங்கள் நீர் வடிகட்டிக்கு மாற்றவும். தண்ணீர் முழுமையாக வடிகட்டடியவுடன் அதனை திறந்த பாத்திரத்திற்கு மாற்ற வேண்டும். பாத்திரம் சுத்தமாகவும், எந்த வாசனையுடனும் இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

MOST READ:இந்த சின்னம் கையில் இருப்பவர்கள் தங்களின் ஆணவத்தால் தோல்வியை சந்திப்பார்களாம் தெரியுமா?

பேக்கிங் சோடா சேர்க்கவும்

பேக்கிங் சோடா சேர்க்கவும்

வீட்டில் மினரல் வாட்டர் தயாரிப்பதற்கான அடுத்த கட்டமாக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் பேக்கிங் சோடா சேர்க்க வேண்டும். 1 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் 1/8 வது டீஸ்பூன் பேக்கிங் சோடாவைச் சேர்க்கவும். 2 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீருக்கு ஒரு டீஸ்பூன் 1/4 ஆக அளவை அதிகரிக்கவும். பேக்கிங் சோடா / சோடியம் பைகார்பனேட் அடிப்படையில் தண்ணீரில் சோடியத்தை சேர்க்கிறது. அஜீரணம், மலச்சிக்கல், வீக்கம், நெஞ்செரிச்சல் மற்றும் கீல்வாதம் போன்ற சில சுகாதார நிலைகளை இந்த தாது குணப்படுத்துகிறது. வடிகட்டப்பட்ட நீரை மினரல் வாட்டராக மாற்றுவதற்கான முதல் படி இது.

எப்சம் உப்பு சேர்க்கவும்

எப்சம் உப்பு சேர்க்கவும்

சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் பேக்கிங் சோடாவைச் சேர்த்தவுடன், பேக்கிங் சோடாவுடன் 1 லிட்டர் வடிகட்டிய நீரில் 1/8 வது டீஸ்பூன் எப்சம் உப்பு சேர்க்கவும். எப்சம் உப்பு ஒரு கிருமிநாசினியைப் போல செயல்படுகிறது மற்றும் பாக்டீரியா தாக்குதல்களில் இருந்து மனிதர்களைப் பாதுகாக்கிறது. இதனால், இது ஏற்கனவே வடிகட்டப்பட்ட நீரின் தூய்மையை அதிகரிக்கிறது.

பொட்டாசியம் பை கார்பனேட் சேர்க்கவும்

பொட்டாசியம் பை கார்பனேட் சேர்க்கவும்

அடுத்த கட்டமாக சோடியம் பை கார்பனேட் மற்றும் எப்சம் உப்புடன் சுத்திகரிக்கப்பட்ட நீரில் பொட்டாசியம் பைகார்பனேட் சேர்க்க வேண்டும். பொட்டாசியம் பை கார்பனேட் மனிதர்களின் இரத்த அழுத்தத்தை பராமரிக்கிறது. இது இதய ஆரோக்கியத்தை பராமரிக்கும் மற்றும் மாரடைப்பு அபாயத்தை பெரும்பாலும் குறைக்கும் ஒரு அத்தியாவசிய தாதுப்பொருள் ஆகும். 1/8 டீஸ்பூன் பொட்டாசியம் பை கார்பனேட்டை சுத்திகரிக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட நீரில் சேர்த்து கனிம நீரை உருவாக்குங்கள்.

MOST READ:பொய் சொல்றதுல இந்த ராசிக்காரங்கள மிஞ்ச ஆளே கிடையாதாம் தெரியுமா?

நன்றாக கலக்கவும்

நன்றாக கலக்கவும்

சுத்திகரிக்கப்பட்ட நீரில் சேர்க்கப்படும் பொருட்கள் நன்கு கலக்கப்படுவது முக்கியம். சுத்திகரிக்கப்பட்ட நீரில் அனைத்து தாதுக்களையும் நன்கு கலக்க நீங்கள் சோடா சிஃபோனைப் பயன்படுத்தலாம். சோடா சிஃபோன் என்பது ஒரு கேஜெட் ஆகும், இது கார்பனேற்றப்பட்ட பானங்களை கலக்க பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு கெட்டி மற்றும் கைப்பிடியுடன் வருகிறது. சிஃபோனுடன் கெட்டி இணைக்கவும். சிஃபோனின் மறுமுனையில் இருந்து நீங்கள் பெறுவது முற்றிலும் சுத்திகரிக்கப்பட்ட மினரல் வாட்டர் ஆகும். இவ்வாறு தயாரிக்கப்படும் இந்த மினரல் வாட்டரில் பொட்டாசியம் மற்றும் சோடியம் அதிகளவு இருக்கும். இது உங்களுக்கு பல நன்மைகளை வழங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Make Mineral Water At Home

Read to know how to make mineral water at home.
Story first published: Wednesday, October 30, 2019, 14:56 [IST]
Desktop Bottom Promotion