For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மழைக்காலம்... டெங்கு பரவாம இருக்கணும்னா இத படிச்சிட்டு அதேமாதிரி செய்ங்க...

By Mahibala
|

டெங்கு பரவுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அதற்கு மிக அடிப்படையான காரணங்களில் ஒன்றாக இருப்பது ரத்த சோகை. ரத்த சோகை இருப்பவர்களுக்கு மிக வேகமாக டெங்கு பரவுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

டெங்கு என்பது கொசுக்களினால் பரவக்கூடிய மிக ஆபத்தான ஒரு நோயாகும். இது ஆண்டுதோறும் உலக அளவில் பல ஆயிரக்கணக்கான மக்களை பாதிக்கவும் உயிரைக் காவு வாங்கவும் செய்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விழிப்புணர்வு

விழிப்புணர்வு

குறிப்பாக, மழைக்காலத்தின் இறுதிப்பகுதியில் இந்த டெங்கு பரவல் மிக அதிக அளவில் இருக்கும். தற்போது மழைக்காலம். ராத்திரி, பகலாக எல்லா இடங்களிலும் மழை பெய்து வரும் இந்த வேளையில், இதுகுறித்த விழிப்புணர்வோடு இருப்பது மிக அவசியமான ஒன்று.

MOST READ: குரு பெயர்ச்சி 2019 - 20: கடகம் லக்னகாரர்களுக்கு வருடம் முழுவதும் வருமானம்

மழைக்காலம்

மழைக்காலம்

மழைக்காலம் தொடங்கி விட்டாலே ஆங்காங்கே தேங்கும் மழைநீரில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்து, நம் மீது ஏவிவிடுகின்றன. இந்த மழைக்காலங்களில் கொசுக்களின் அதிகப்படியான உற்பத்தியால் ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கான மக்கள் மலேரியா மற்றும் டெங்குவால் பாதிக்கப்படுகிறார்கள்.

இரும்புச்சத்தும் நோய் எதிர்ப்பாற்றலும் குறைவாக உள்ளவர்களின் ரத்தத்தை கொசுக்கள் குடித்து டெங்கு வைரஸை பரப்புகிற பொழுது, மிக வேகமாகப் பரவுகிறது. அதுவே இரும்புச்சத்தும் நொயெதிர்ப்பு ஆற்றலும் அதிகமாக இருக்கின்ற நபருக்கு டெங்கு வைரஸ் அவ்வளவு எளிதாகப் பரவுவதில்லை.

ரத்த சோகை

ரத்த சோகை

நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிற பொழுது, நோய்த்தொற்று ஏதும் பாதிக்காத ஆரோக்கியமான நபராக இருந்தால் கூட, ரத்த சோகை ஏற்படும். உடலில் எளிதாக நோய்த்தொற்றுக்கள் பரவ ஆரம்பிக்கும்.

இரும்புச்சத்து

இரும்புச்சத்து

ரத்தத்தில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கின்ற பொழுது, கொசுக்களாால் ஏற்படும் கிருமித்தொற்று தடுக்கப்படுகிறது. இதனை பரிசோதித்துப் பார்ப்பதற்காக டெங்கு நோய்த்தொற்று பரவியவர்களின் ரத்த மாதிரிகளும் நோய்த்தொற்று இல்லாத ஆரோக்கியமான நபர்களுடைய ரத்த மாதிரியும் பரிசோதனை செய்யப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில், ரத்தத்தில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கும் நபர்களுக்கு அடங்கு பாதிப்பு மிகக் குறைவாக இருந்தது தெரிய வந்தது.

MOST READ: அட்ரீனல் பற்றாக்குறை நோய் எதனால் வருகிறது?... உங்களுக்கு வருவதற்கான அறிகுறிகள் என்னென்ன?

குறைந்த தாக்கம்

குறைந்த தாக்கம்

ரத்தத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு கொசுக்களால் பரவுகின்ற நோய்த் தொற்றுக்களின் பாதிப்பு குறைவாக இருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

சோதனை

சோதனை

மனித ரத்த மாதிரி மட்டுமல்லாது எலியை வைத்தும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதில் கொசுக்களால் தாக்கப்பட்ட எலிகளை பரிசோதித்துப் பார்த்த போதுதான் தெரிந்தது, இரும்புச்சத்து குறைவாக இருந்த எலிகளுக்கு டெங்கு பரவும் விகிதம் அதிகமாகவும் இரும்புச்சத்து அதிகமாக இருந்த எலிகளுக்கு பரவும் விகிதம் குறைவாகவும் இருந்ததாக அறியப்பட்டுள்ளது.

இதுவெறும் டெங்கு வைரல் தாக்குதலுக்கு மட்டுமல்ல, ஜிகா மற்றும் நைல் வைரஸ் தாக்குதலுக்கும் ரத்த சோகை மற்றும் இரும்புச்சத்து குறைபாட்டின் மீதான அக்கறை அதிகம் தேவை.

MOST READ: இப்படி ஒரு பாலியல் நோயா?... கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க மக்களே!

என்ன சாப்பிடலாம்?

என்ன சாப்பிடலாம்?

இரும்புச்சத்தை அதிகரிப்பது என்றாலே முதலில் நினைவுக்கு வருவது முருங்கைக்கீரையும் பேரிச்சம் பழமும் தான். முருங்கைக்கீரை எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அதைத்தாண்டி வேறு எந்த மாதிரியான உணவுகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் இரும்புச்சத்து அதிகரிக்கும் என்று பார்க்கலாம்.

ஸ்பின்னாச்

சோயா பீன்ஸ்

கொண்டைக்கடலை

ஈட்டிறைச்சி மற்றும் சிக்கன்

விதைகள் மற்றும் நட்ஸ் (பாதாம், அக்ரூட் கொட்டைகள்)

குறிப்பாக, இந்த 5 உணவுப் பொருள்களிலும் மிக அதிக அளவில் இரும்புச்சத்து நிறைந்திருக்கிறது என மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Anaemia causes to Spread Of Dengue: Eat These 5 Foods To Combat

Dengue is a mosquito-borne disease that affects a huge population every year. dengue is transmitted will help public health authorities and scientists develop new ways to control the disease, and hopefully similar viruses such as Zika and West Nile virus as well.
Story first published: Thursday, September 19, 2019, 16:38 [IST]