For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நம்ம பாரிக்கர் வந்த கணைய புற்றுநோய்க்கு அறிகுறி என்ன? என்ன சிகிச்சை செஞ்சா தப்பிச்சிக்கலாம்?

கணைய புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள் பற்றி இந்த கட்டுரையில் மிக விளக்கமாக விவரிக்கப்படுகிறது. அது பற்றிய தொகுப்பு தான் இது.

|

நான்கு முறை கோவா முதலமைச்சராக இருந்த திரு.மனோகர் பாரிக்கர், கணையப் புற்று நோய் பாதிப்பால் கடந்த 17, மார்ச் 2019 அன்று உயிரிழந்தார். முன்னாள் பாதுகாப்புத் துறை மந்திரியாக இருந்த அவர் கடந்த ஓராண்டு காலமாக கணையப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு அவருடைய 63ம் அகவையில் உயிர் துறந்தார். கடந்த மார்ச் மாதம் திரு.மனோகர் பாரிக்கர் சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு பயணமானார்.

Pancreatic Cancer

16, மார்ச் 2019, சனிக்கிழமை முதல் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்த நிலையில் 17, மார்ச் 2019, ஞாயிற்றுக் கிழமை அன்று அவர் உயிர் பிரிந்தது. இந்திய மக்கள் பலருக்கும் அவர் மிகவும் பரிச்சயமானவர். அவருடைய இழப்பு நாட்டிற்கு தாங்க முடியாத ஒரு இழப்பாகும். அவருக்கு ஏற்பட்ட கணையப் புற்று நோய் பற்றி இந்த பதிவில் நாம் அறிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கணையப் புற்று நோய் என்றால் என்ன?

கணையப் புற்று நோய் என்றால் என்ன?

செரிமான மண்டலத்தின் ஒரு பகுதியாக, செரிமான சாறுகளையும், ஹார்மோன்களையும் உற்பத்தி செய்யும் ஒரு பகுதி கணையம். இந்த உறுப்பில் உண்டாகக்கூடிய ஒரு புற்று நோய் வகை கணையப் புற்றுநோய் ஆகும். இந்த கணையம், இன்சுலின் சுரப்பிற்கு காரணமாக உள்ளது. இன்சுலின் ஒரு மனிதனின் உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் புரதங்களை உடைக்க உதவும் நொதிகளை உற்பத்தி செய்து, செரிமானத்திற்கு உதவுகிறது.

MOST READ: தன்னை அழகுபடுத்திக்க பார்லருக்கு போன பெண் பரிதாபமாக உயிரிழந்த சோகம்... என்னதான் நடந்தது?

எப்படி வளர்கிறது?

எப்படி வளர்கிறது?

கணையத்தின் எந்த ஒரு பகுதியிலும் உள்ள அணுக்களில் அசாதாரண வளர்ச்சி புற்று நோய்க்கான வளர்ச்சிக்கு வழி வகுக்கும். பழைய அணுக்களை மாற்றி உடலின் தேவைக்கேற்ப, உடல் புதிய அணுக்களை உருவாக்குகிறது. ஆனால் இந்த செயல்முறை பாதிக்கப்பட்டு, புதிய அணுக்கள் பழைய அணுக்களை மாற்றுவதில் தோல்வி அடைந்து, தொடர்ந்து பழைய அணுக்கள் வளரத் தொடங்குவதால், புற்றுநோய் வளர்ச்சி தொடங்குகிறது. இந்த அணுக்கள் திசுக்களை உருவாக்குகின்றன. இவை கட்டியாக வளர்ச்சி பெறுகின்றன.

அறிகுறிகள் என்ன?

அறிகுறிகள் என்ன?

கணையப் புற்று நோயின் அறிகுறிகளை கவனிப்பது மிகவும் எளிதல்ல. மேலும் தொடக்க நிலையில் இதன் அறிகுறிகளை அறிந்து கொள்ள முடியாது. பல வழக்குகளில், புற்று நோயின் றுதி நிலையில் மட்டுமே இந்த புற்று நோயின் தாக்கம் தெரிய வருகிறது. புற்று நோய் கட்டியின் வளர்ச்சிக்கு பிறகு உண்டாகும் அறிகுறிகள் சில இதோ உங்களுக்காக..

. அடிவயிற்றின் மேல் பகுதியில் மற்றும் மத்திய பகுதியில் வலி

. குறிப்பிடமுடியாத எடை குறைப்பு

. பசியுணர்வு குறைவது

. மஞ்சள் காமாலை

. விவரிக்கமுடியாத வயிற்று வலி

. இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பு

. குமட்டல் மற்றும் வாந்தி

அபாயக் காரணிகள் யாவை?

அபாயக் காரணிகள் யாவை?

கணையப் புற்று நோய் தாக்குவதற்கு சில கட்டுப்படுத்த முடியாத காரணம் உண்டு. அவை, ஒரு நபரின் வயது, குடும்ப வரலாறு,, மரபணு போன்றவை ஆகும். ஆனால், இந்த புற்று நோய் வராமல் தடுக்கக் கூடிய சில காரணிகள் உண்டு. இவற்றைக் கட்டுப்படுத்துவதால் புற்று நோய் தாக்கும் அபாயம் குறைக்கப்படுகிறது. மாற்றக்கூடிய இந்த காரணிகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

. புகை பிடிப்பது

. கபைன் அதிகம் எடுத்துக் கொள்வது

. புகையிலை பயன்பாடு

. மது அருந்துவது

. நீண்ட கால நீரிழிவு

MOST READ: கிருஷ்ணர் தன் சொந்த மாமாவான கம்சனை எப்படி கொன்றார்... அந்த தந்திரம் என்னன்னு தெரியுமா?

சிகிச்சை

சிகிச்சை

கணையப் புற்று நோய்க்கான சிகிச்சை அந்த நோயாளியின் வயது, உடல் நிலை மற்றும் புற்று நோயின் நிலை ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். பல வழக்குகளில் அறுவை சிகிச்சை செய்து புற்று நோயை அகற்ற பரிந்துரைக்கப்படுகிறது. கீமோதெரபி மற்றும் ரேடியஷன் போன்றவற்றை ஒரே நேரத்தில் பயன்படுத்தி சிறந்த முறையில் இந்த நோய் தீர்க்கப்படுகிறது மற்றும் மறுமுறை உண்டாகாமல் தடுக்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Symptoms And Treatment Of Pancreatic Cancer

Pancreatic cancer begins in the tissues of your pancreas — an organ in your abdomen that lies horizontally behind the lower part of your stomach. Your pancreas releases enzymes that aid digestion and hormones that help manage your blood sugar.
Desktop Bottom Promotion