கிருஷ்ணர் தன் சொந்த மாமாவான கம்சனை எப்படி கொன்றார்... அந்த தந்திரம் என்னன்னு தெரியுமா?

கம்ச வதத்தில் கடவுள் கிருஷ்ணர் தன் சொந்த மாமாவான கம்சனை எப்படி கொன்றார் என்பது பற்றி இங்கே விளக்கமாகப் பார்க்கலாம். அந்த சுவாரஸ்யமான கதையைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

பகவான் விஷ்ணுவின் ஒவ்வொரு அவதாரத்திற்கும் ஒரு நோக்கம் இருந்தது. அந்த விதத்தில் கிருஷ்ணா அவதாரமும் சில நோக்கங்களைக் கொண்டு உண்டானது. அந்த நோக்கத்தில் ஒன்று கம்சன் என்னும் அரக்கனைக் கொல்வது. உறவாக இருந்தாலும் தவறு செய்தால் தண்டனை நிச்சயம் என்பது இந்த வதத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய செய்தியாகும். தர்மத்திற்கு கெடுதல் வரும் நேரம் இறைவனின் அவதாரம் இந்த மண்ணில் தோன்றும். அந்த விதத்தில் கம்சனின் வதம் கிருஷ்ணா அவதாரத்தின் முக்கிய நோக்கமாகும்.

kamsa vadha

கிருஷ்ண அவதாரத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தான் ஏற்றுக் கொண்ட எல்லா கதாபாத்திரத்திலும் சரியாக பொருந்தியிருந்தார். ஒரு குழந்தையாக, ஒரு காதலனாக, ஒரு அரசாளராக, ஒரு ஆலோசகராக, ஒரு போர்வீரனாக எல்லா நிலையிலும் பொருத்தமாக இருந்தார். அவருக்கு அரசாளக் கூடிய எல்லா தகுதிகள் இருந்தும், பல அரசர்களும் அவர்களுடைய அரசை இவருக்கு கொடுக்க விழைந்த போதும் , அதனை ஏற்க மறுத்து ஒரு நடுவராகவே நீண்ட காலம் இருந்தார். அந்த நேரங்களில் தர்மத்தின் காவலனாக அவர் விளங்கினார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மல்யுத்த வீரர்கள் சானுரா மற்றும் முஷ்டிகா

மல்யுத்த வீரர்கள் சானுரா மற்றும் முஷ்டிகா

கம்சன் கிருஷ்ணரின் தாய்மாமன். கிருஷ்ணரின் உண்மையான தாயான தேவகியின் அண்ணன் கம்சன். கம்சனின் விதி கிருஷ்ணரால் முடியும் என்ற தீர்க்கதரிசனம் காரணமாக கிருஷ்ணரைக் கொல்ல பல வழிகளில் முயற்சித்தான் கம்சன். கம்சனின் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் முடிய, இறுதியாக சானுரா மற்றும் முஷ்டிகா என்னும் மல்யுத்த வீரர்களைக் கொண்டு கிருஷ்ணரைக் கொல்லத் திட்டமிட்டான் கம்சன். சானுரா மற்றும் முஷ்டிகா ஆகிய இருவரும் பிரபல மல்யுத்த வீரர்கள் ஆவர்.

கம்சன் தனது ஆலோசகர்களை அழைத்து, சானுராவுடன் கிருஷ்ணர் மல்யுத்த போட்டிக்கு வரும்படி ஒரு திட்டம் அமைக்குமாறு கூறினான். சானுராவின் மல்யுத்தம் மீது நம்பிக்கைக் கொண்ட கம்சன், அவனால் நிச்சயம் கிருஷ்ணரைக் கொல்ல முடியும் என்று முழுவதும் நம்பினான். சானுரா அதிக சதையுடன் மிகவும் குண்டாக தோற்றமளிப்பவன். பொதுவாக மல்யுத்த போட்டிகளில் அவனுடன் மோதுபவரை அவன் முழு உடல் எடையைக் கொண்டு நசுக்கி வெல்வது அவனுடைய பழக்கம். இந்த வகையில் அவன் ஒரு வெற்றியாளனாக விளங்கி வந்தான்.

ஸ்ரீ கிருஷ்ணருக்கு சானுராவின் சவால்

ஸ்ரீ கிருஷ்ணருக்கு சானுராவின் சவால்

போட்டி ஏற்பாடுகள் இறுதியாக செய்யப்பட்டவுடன், பார்வையாளர்கள் அனைவரையும் பார்த்து சானுரா சவால் விடுத்தான். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் அவர் அண்ணன் பலராமரும் அந்தக் கூட்டத்தில் நின்று கொண்டிருந்தனர். சானுரா அவர்களைக் கண்டவுடன், கிருஷ்ணரின் மல்யுத்த அசைவுகள் மிகவும் பிரபலம் என்று கூறி , கிருஷ்ணரை மல்யுத்த போட்டிக்கு வருமாறு அழைப்பு விடுத்தான். இருப்பினும், கூட்டத்தில் உள்ளவர்கள் இந்த யோசனையை ஏற்றுக் கொள்ளவில்லை.

கிருஷ்ணர் மிகவும் சிறிய பிள்ளை என்றும் அவருக்கு 16 வயது மட்டுமே ஆவதால் மிகப் பெரிய பலவானாகிய சானுராவிற்கு இணையாக அவரால் போட்டி போட முடியாது என்றும் கூறினர். ஆனால் சானுரா, கிருஷ்ணரை பல விதத்தில் சீண்டி, அவர் கோபத்தை அதிகரித்து போட்டிக்கு வரச்சொல்லித் தூண்டினான். சானுராவின் திட்டம் குறித்து அறிந்த கிருஷ்ணர், சிரித்தபடியே அவனுக்கு சரியான பதிலடி கொடுத்து வந்தார்.

"உண்மையிலேயே நீ ஒரு மனிதனாக இருந்தால் போட்டிக்கு வந்தாக வேண்டும்" என்று சானுரா சவால் விடுத்தான். இதற்கு கிருஷ்ணர், தன்னுடைய தந்தையின் அனுமதி இல்லாமல் தன்னால் போட்டிக்கு வர இயலாது என்று பதிலுரைத்தார். பிறகு தனது தந்தையிடம் அனுமதி பெற்று போட்டி நடக்கும் அரங்கில் நுழைந்தார் கிருஷ்ணர்.

முஷ்டிகாவுடன் நடந்த போட்டியில் பலராமர் வென்றார்

முஷ்டிகாவுடன் நடந்த போட்டியில் பலராமர் வென்றார்

இதற்கிடையில் முஷ்டிகாவால் பலராமருக்கு மல்யுத்தம் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டது. கிருஷ்ணர் சானுராவின் சவாலை ஏற்றுக் கொண்டு அரங்கிற்குள் சென்றதைக் குறியீடாகக் கொண்டு, பலராமரும் முஷ்டிகாவின் சவாலை ஏற்று அரங்கத்திற்குள் சென்றார். அடுத்த சில நிமிடங்களில் பலராமர் முஷ்டிகாவின் கழுத்தை உடைத்து போட்டியில் வெற்றி பெற்றார்.

சானுராவைக் கொல்வதில் கிருஷ்ணரின் புத்திக் கூர்மை

சானுராவைக் கொல்வதில் கிருஷ்ணரின் புத்திக் கூர்மை

இந்தப் பக்கம், சானுராவுடனான போட்டியில் கிருஷ்ணர் அந்தப் பக்கமும் இந்த பக்கமும் நடனமாடிக் கொண்டிருந்தார். சானுராவால் கிருஷ்ணரைப் பிடிக்க முடியவில்லை. இப்படி சில நிமிடங்கள் தொடர்ந்தது. சானுராவின் பலமே அவன் உடல் எடை தான் என்பது கிருஷ்ணருக்கு நன்றாகத் தெரியும். ஆகவே சானுரா ஓடி ஓடி களைத்து விட்டால் அவன் உடல் எடையை அவனால் தாங்க முடியாது , அந்த நேரத்தில் அவன் மேல் குதித்து அவன் கழுத்தை உடைத்து விடலாம் என்று திட்டம் தீட்டியிருந்தார் கிருஷ்ணர்.

கம்சனின் படைக்கும் யாதவர்களுக்கும் இடையில் போர்

கம்சனின் படைக்கும் யாதவர்களுக்கும் இடையில் போர்

கம்சனின் கடைசி ஆயுதமான இந்த மல்யுத்த வீரர்கள் போட்டியில் மடிந்தால், கிருஷ்ணரின் அடுத்த இலக்கு தான் தான் என்பது கம்சனுக்கு நன்றாகத் தெரியும். ஆகவே, இந்த நிச்சயமற்ற சூழலில் தன்னைத் தற்காத்துக் கொள்ள ஒரு சிறு படையை திரட்டி வைத்திருந்தான் கம்சன். ஆகவே இரண்டு மல்யுத்த வீர்களும் மடிந்தவுடன் , யாதவர்களைத் தாக்க படைகளுக்கு உத்தரவிட்டான் கம்சன். உடனடியாக, யாதவர்களுக்கும் கம்சனின் படைகளுக்கும் போர் மூண்டது.

கிருஷ்ணரின் கைகளால் கம்சன் மடிந்தான்

கிருஷ்ணரின் கைகளால் கம்சன் மடிந்தான்

இதனை அறிந்த கிருஷ்ணர், ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணினார். மறுபக்கம், கிருஷ்ணரைக் கொல்வதற்காக கம்சன் கையில் ஒரு வாளோடு கிருஷ்ணரை நோக்கி வந்துக் கொண்டிருந்தான். அந்த நேரம் பார்த்து, கிருஷ்ணர் சற்று குனிந்து, கம்சன் மீது குதித்து அவர் முடியை பற்றி இழுத்து பின்புறம் இழுத்தார். இதனால் கம்சன் கையில் இருந்த வாள் கீழே விழுந்தது. கிருஷ்ணர் உடனே அந்த வாளைப் பற்றி, தாமதிக்காமல் கம்சனின் தலையை கொய்தார். கம்சனைக் கொன்றவுடன், அவன் கழுத்தில் இருந்த சங்கை பற்றி இழுத்து, எடுத்து ஊதி, அவர் வெற்றியை அறிவித்தார்.

இதனால் கூட்டம் போரைக் கைவிட்டது. அன்று கூறப்பட்ட தீர்க்க தரிசனம் உண்மையானது. தேவகி மைந்தன், 16 வயது கிருஷ்ணர், தனது தாய்மாமன் கம்சனைக் கொன்றார். ஒரு அரக்கன் அழிந்ததையொட்டி, மக்கள் ஆடிப் பாடி கிருஷ்ணரைப் போற்றினர். ஆனால் மக்கள் கூட்டத்தின் ஆரவாரத்தை நிறுத்தி, அந்த நேரம் என்ன செய்ய வேண்டுமோ அதையே அவர் செய்ததாகக் கூறினார். என்ன இருந்தாலும் , கம்சன் அவர்களின் அரசன் என்பதால் அவன் அழிவைக் கொண்டாடுவது சரியல்ல என்று அவர் கூறினார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion