Latest Updates
-
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்..
உட்கார்ந்தா, நடந்தா முதுகு ரொம்ப வலிக்குதா? இந்த எண்ணெய தடவுங்க... வலி பறந்துடும்...
நமக்கு ஏற்படும் இந்த முதுகு வலியை எப்படி வெறும் எண்ணெய்யைக் கொண்டே சரி செய்வது, வாங்க தெரிஞ்சுக்கலாம். அது பற்றிய தொகுப்பு தான் இது.
வயதாக வயதாக முதுகுவலி என்பது எல்லோரையும் தொற்றிக் கொள்ள கூடிய பாதிப்பாகும். இந்த முதுகுவலி ஒரு சைலண்ட் கில்லர் மாதிரி செயல்படக் கூடியது. இதிலும் சந்தோஷப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் 95% முதுகு வலிக்கு எந்தவொரு அறுவை சிகிச்சையும் தேவையில்லை என்பது தான். இதை சில இயற்கை வழிகளைக் கொண்டே நாம் சரி செய்ய இயலும்.
இருந்தாலும் இதை நீங்கள் நீண்ட நாட்கள் கண்டுக்காமல் விட்டால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. யோகா, பிஸியோ தெரபி, வலி நிவாரணி மருந்துகள் மற்றும் அக்குபஞ்சர் போன்றவை நிலைமையை சரி செய்ய உதவலாம்.

கொஞ்ச நாளாக இருக்கும் முதுகுவலியை ஓய்வு மற்றும் மருந்துகள் மூலம் எளிதாக சரி செய்து விடலாம். நாள்பட்ட முதுகுவலியை போக்க வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளுங்கள்.

முதுகுவலியை தீர்க்கும் எண்ணெய்கள்
பெப்பர் மின்ட் ஆயில்
சுத்தமான பெப்பர் மின்ட் ஆயிலில் 44% மெந்தால் உள்ளது. இது தசைகளில் ஏற்பட்டுள்ள வலி மற்றும் புண்களை ஆற்றுகிறது. நல்ல குளிர்ச்சியான தன்மையை கொடுக்கும். சூடான குளியலின் போது இதை தேய்த்து குளிக்கலாம். அல்லது இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து வாருங்கள். கண்டிப்பாக உங்கள் முதுகுவலி எல்லாம் மாயமாய் மறைந்து போகும்.

வின்டர்க்ரீன் ஆயில்
இந்த ஆயில் வின்டர்க்ரீன் இலைகளை காய்ச்சி ஆவியாக்கி அதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இதில் அனலஜிக் பொருட்கள் உள்ளன. மேலும் இதில் அஸ்பிரினுக்கு நிகரான மெத்தில் சாலிசைலேட் என்ற பொருள் உள்ளது. இதை நீங்கள் முதுகில் தடவினாலே போதும் நல்ல ரீலிவ் கிடைக்கும். இதன் லைட் எரிச்சல் தன்மை தசைகளின் வலி மற்றும் வீக்கத்தை குறைக்கிறது. இந்த இலைகளின் சாறும் தசைகளுக்குள் ஊடுருவி உங்களுடைய அடி முதுகு வலியை போக்கி விடும்.

இஞ்சி எண்ணெய்
இஞ்சி எண்ணெய் சமையலுக்கு மட்டுமல்ல மருத்துவ துறையிலும் பெரிதும் பயன்படுகிறது. இதன் அழற்சி எதிர்ப்பு தன்மை நாள்பட்ட வலியைக் கூட போக்கி விடும். இதை உங்களுக்கு வலி உள்ள இடங்களில் அப்ளே செய்து காத்திருங்கள். 30 நிமிடங்களில் வலி மறந்து போய் விடும். இந்த எண்ணெய் கடைகளில் கிடைக்கிறது.

லெமன் கிராஸ் ஆயில்
இந்த தாவரத்தில் பூஞ்சை எதிர்ப்பு பொருள், ஆன்டி பாக்டீரியல் தன்மை மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மை உள்ளது. இது முதுகுவலியை நீக்குவதோடு அதற்கு காரணமான அழற்சியையும் நீக்குகிறது.

லாவண்டர் ஆயில்
இந்த ஆயில் நிறைய பயனளிக்க கூடிய ஒன்று. அரோமோதெரபிகளில் இதை பெரிதும் பயன்படுத்தி வருகிறார்கள். இதன் அழற்சி எதிர்ப்பு தன்மை அடி முதுகு வலியை போக்கி விடும்.மேலும் மன அழுத்தம், கிளர்ச்சி அடைந்த நரம்புகளை அமைதிப்படுத்த மற்றும் இன்ஸோமினியா நோய்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது.
MOST READ: ஸ்டீம் அயர்ன்பாக்ஸ் கறை போகவே மாட்டேங்குதா? இதோ இந்த சிம்பிள் ட்ரிக்ஸ்ஸ ட்ரை பண்ணுங்க...

யூகாப்லிப்டஸ் ஆயில்
தசைகளில் ஏற்படும் பிடிப்பு, வலி மற்றும் அழற்சிக்கு இதன் ஆன்டி பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மை உதவுகிறது. ஆன்டிபேஸ்மோடிக் ஆயில் தசைகளின் நீட்சியையும் அசெளகரியத்தையும் போக்கி ரிலாக்ஸ் செய்கிறது. இதை நீங்கள் 1:1 என்ற விகிதத்தில் கலந்து கொள்ளுங்கள்.

ரோஸ்மேரி ஆயில்
மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி மற்றும் நுமேட்டிக் டிஸ்ஆர்டர் போன்ற மூட்டு வலி பிரச்சனைகளை போக்குகிறது. இதில் ஆன்டிபேஸ்மோடிக் மற்றும் அனலெஸிக் பொருட்கள் அடங்கியுள்ளன.

சந்தன எண்ணெய்
இந்த ஆயில் ஆயுர்வேத மருத்துவ துறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதைக் கொண்டு மசாஜ் செய்து வரும் போது அழற்சியை போக்கிடும். அதிலும் இந்த எண்ணெய் குறிப்பாக சியாட்டிகா நோயை குணப்படுத்தவல்லது.

துளசி எண்ணெய்
தசைகளின் நீட்சியை சரி செய்து ரிலாக்ஸ் செய்கிறது. நரம்பு சம்பந்தமான வலிகளுக்கு இந்த ஆயில் சிறந்தது.

கெமோமில் எண்ணெய்
இந்த எண்ணெய் நரம்புகளை அமைதிப்படுத்த பயன்படுகிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருட்கள் உள்ளன. தசைகளில் ஏற்படும் வலி மற்றும் அழற்சியை போக்குகிறது.



Click it and Unblock the Notifications