வெறும் 2 வாரத்திலே தொப்பையை குறைக்க, எலுமிச்சை தோலை இப்படி பயன்படுத்துங்க...!

"எங்கு சென்றாலும் நம்மை முந்தி கொண்டு முதல் ஆளாக இருப்பான்; எல்லோரின் கேலி கிண்டலுக்கும் செவி சாய்ப்பான்; எதை சாப்பிட்டாலும் பெருசாகி கொண்டே போவான்... அவன் யார்..? இந்த கேள்வியை கேட்டதும் உங்களுக்கு சரியான விடை கிடைத்திருக்குமே! ஆமாங்க, இதற்கான விடை தொப்பை தான். நாம்ம வேண்டாம்...வேண்டான்னு எவ்ளோ சொன்னாலும் நம்மை மீறி கொண்டு இது முன்னே போகும்.

தொப்பையை 2 வாரத்தில் குறைக்க எலுமிச்சை தோலை இப்படி பயன்படுத்துங்க..!

நம்மை பாடாய்படுத்தும் இந்த தொப்பையை குறைக்க வழியே இல்லையா..? என்கிற வேதனையில் இருக்கும் பலருக்கும் தீர்வை தருகிறது எலுமிச்சை தோல். நாம் தேவை இல்லை என தூக்கி போடும் பல பொருட்களில் தான் அதிக மருத்துவ குணம் உள்ளது. அந்த வகையில் எலுமிச்சை தோல் பல்வேறு பயன்களை தரவல்லது.

உடல் எடை குறைப்பு முதல் புற்றுநோய் வரை இது உதவுகிறது. எலுமிச்சை தோலை டீ போன்று தயாரித்து குடித்தால் ஏராளமான நலன்கள் கிட்டும். இந்த பதிவில் தொப்பை மற்றும் உடல் எடையை குறைக்க எலுமிச்சை தோலை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதையும், இது தருகின்ற பிற நன்மைகளையும் தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மருத்துவ குணம்

மருத்துவ குணம்

ஒரு சில பழங்கள் மட்டுமே எல்லாவித பயன்களையும் கொண்டிருக்கும். அந்த வரிசையில் எலுமிச்சையும் அடங்கும். இதன் முழு பாகமும் பல்வேறு மருத்துவ பயன்பாட்டிற்கு உதவுகிறது.

இதற்கு காரணம் இதிலுள்ள வைட்டமின் சி, ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், வைட்டமின் எ, பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் தான்.

புற்றுநோய் அபாயம்

புற்றுநோய் அபாயம்

எதை சாப்பிட்டாலும் புற்றுநோய் வந்து விடுமா என்கிற பயம் நம்மில் பலருக்கு உள்ளது. ஆனால், புற்றுநோயின் அபாயத்தில் இருந்து உங்களை காக்க எலுமிச்சை தோல் போதும்.

உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடை செயய் இது பயன்படும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

இதய நோய்களுக்கு

இதய நோய்களுக்கு

எலுமிச்சை தோலில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளதால் இதய பிரச்சினைகள் உண்டாகாமல் பார்த்து கொள்ளும். இரத்தத்தை சரியான அளவு உற்பத்தி செய்து, மாரைடப்பு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவற்றில் இருந்து காக்கும்.

உடலை சுத்தம் செய்ய

உடலை சுத்தம் செய்ய

கல்லீரல், பெருங்குடல், இரத்த தந்துகிகள் முதலியவற்றில் தேங்கி உள்ள அழுக்குகளை முழுவதுமாக வெளியேற்றும் தன்மை எலுமிச்சை தோலிற்கு உண்டு. இந்த பலனை அடைய தேவையானவை...

1 கண்ணாடி ஜாடி

10 எலுமிச்சை தோல்

வெள்ளை வினிகர்

தயாரிப்பு முறை

தயாரிப்பு முறை

முதலில் எலுமிச்சையை நன்றாக அலசி கொள்ளவும். அடுத்து இதை அரிந்து இதன் சாற்றை மட்டும் தனியாக எடுத்து தோலை ஒரு ஜாடிக்குள் போடவும். பின்னர் இவை மூழ்கும் அளவிற்கு வெள்ளை வினிகரை( white vinegar) இவற்றில் சேர்க்கவும்.

2 வாரம் கழித்து இதன் நீரை மட்டும் வடிகட்டி கொள்ள வேண்டும். பிறகு தினமும் சமமான அளவு இந்த சாற்றையும் நீரையும் கலந்து குடித்து வந்தால் கழிவுகள் வெளியேறி உடல் முழுக்க சுத்தமாகி விடும்.

கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ரால் தான் உடல் எடைக்கு முக்கிய காரணமே. இதை குறைத்து விட்டால் முக்கால் வாசி பிரச்சினை தீர்ந்து விடும். எலுமிச்சை தோல் இரத்தத்தில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றும் தன்மை கொண்டதாம். இதனை தினமும் டீ போன்று தயாரித்து குடித்தால் பலன் நிச்சயம்.

தொப்பையும், உடல் எடையும்

தொப்பையும், உடல் எடையும்

நம்மில் பலர் அவதிப்படும் தொப்பை மற்றும் உடல் எடை குறைப்பிற்கான தீர்வு எலுமிச்சை தோலின் மூலம் கிடைத்து விடும். இதற்கு தேவையான பொருட்கள்..

எலுமிச்சை 1

தேன் 1 ஸ்பூன்

புதினா 3 இலைகள்

தயாரிப்பு முறை

தயாரிப்பு முறை

முதலில் எலுமிச்சை தோலை நன்கு அலசி கொண்டு, தோலை மட்டும் பீலரை வைத்து தனியாக எடுத்து கொள்ளவும். அடுத்து இதன் சாற்றையும் தனியாக எடுத்து கொள்ளவும்.

பிறகு 2 கப் நீரை கொதிக்க விட்டு இதன் தோலை சேர்க்க வேண்டும். 15 நிமிடத்திற்கு பின் அடுப்பை அணைத்து விட்டு இறக்கி கொள்ளவும்.

அடுத்து என்ன..?

அடுத்து என்ன..?

மிதமான சூட்டிற்கு வந்ததும், எலுமிச்சை சாறு 1 ஸ்பூன், தேன் 1 ஸ்பூப் சேர்த்து கொண்டு கலக்கி கொள்ளவும். இந்த நீரை வெறும் வயிற்றிலும், ஒவ்வொரு உணவு வேளையில் சாப்பாட்டிற்கு 1 மணி நேரத்திற்கு முன்பும் சிறிது சிறிதாக குடித்து வந்தால் உடல் எடை மற்றும் தொப்பை விரைவிலே குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion