Just In
- 1 hr ago
உலர் திராட்சையை தயிரில் ஊற வைத்து சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!
- 2 hrs ago
இந்த 5 ராசிக்காரங்களுக்கு வயசுக்கு மீறின புத்திசாலித்தனம் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 2 hrs ago
நீங்க தினமும் குடிக்கிற இந்த பானங்களாலதான் உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனையே வருதாம் தெரியுமா?
- 5 hrs ago
Kumbh Mela 2021: மகா கும்பமேளா பற்றி தொிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
Don't Miss
- News
மனித உரிமைகளுக்கான தேர்தல் அறிக்கை... மக்கள் கண்காணிப்பு அமைப்பு இன்று வெளியீடு..!
- Sports
கீழ்த்தரமாக இறங்கிய ஆஸி.. நடராஜன் மீது பிக்ஸிங் புகார்.. கங்குலி என்ன செய்யப் போகிறார்?
- Finance
இரண்டே நாளில் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி.. இதே 10 முக்கிய காரணங்கள்..!
- Automobiles
எச்ஆர்-வி எஸ்யூவி காருக்கு மாற்றாக ஹோண்டாவின் புதிய வெஸில்!! பிப்ரவரியில் அறிமுகமாகுகிறது
- Movies
பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை !
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தொப்பையை உடனே குறைக்க, 14 நாட்கள் தொடர்ந்து இந்த மூலிகை டீயை குடித்து வந்தால் போதும்!
உடல் எடையை குறைக்க வேண்டும் என்று ஒரு கூட்டம் அவதிப்பட்டு கொண்டிருக்க, மறுபுறம் தொப்பையை குறைத்தே தீர வேண்டும் என இன்னொரு கூட்டம் படாதபாடு படுகிறது. தொப்பை வந்து விட்டால் பலவித கேலி கிண்டல்களுடன், மன வேதனையும் அதிகரித்து விடும். தொப்பையை குறைப்பது அவ்வளவு கஷ்டமான விஷயமா..? என தொப்பை இல்லாதவர்கள் கேட்டால், "ஆம்" என்பதே பதில்.
உண்மை என்னவெனில் தொப்பையை குறைப்பது மிக எளிமையான ஒன்று தான். ஆனால் இதற்கான சரியான வழிகளை பலர் தேர்ந்தெடுப்பது கிடையாது. இது தான் ஒருவரின் தொப்பையை குறைக்க விடாமல் பெருத்து போக செய்கிறது. இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து, வெறும் 14 நாட்களில் உங்களின் தொப்பை மற்றும் உடல் எடையை குறைக்க இந்த ஒரே ஒரு கீரை மட்டும் போதும்.
இதை டீ போன்று காலை வேளையில் குடித்து வந்தால் உடனடி தீர்வு கிடைக்கும். இதை நம் முன்னோர்களே குறிப்பாகவும் எழுதி வைத்துள்ளனர். தொப்பையை குறைக்கும் அந்த கீரை என்னவென்றும், எப்படி பயன்படுத்துவது என்பதையும் இந்த இப்பதிவில் அறிந்து கொள்ளலாம்.

மூலிகை தன்மை
இந்த பூமியில் பல்வேறு வகையான செடி கொடிகள் இருந்தாலும் அவற்றில் மிக சில மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக இருக்கும். இந்த வரிசையில் வெந்தயமும் அடங்கும். எண்ணற்ற மூலிகை குணம் இந்த செடியில் உள்ளது.வெந்தயத்தில் இருப்பது போலவே இதன் கீரையிலும் பலவித நன்மைகள் உள்ளது.

செரிமானம்
பொதுவாக உடல் எடையோ அல்லது தொப்பையோ கட்டுக்கடங்காமல் பெருகி கொண்டே போனால் அதற்கு மூல காரணம் உங்களின் செரிமான மண்டலம் சீராக வேலை செய்யவில்லை என்று அர்த்தம். எனவே, முதலில் நாம் இதை சரி செய்ய வேண்டும். இதற்கு தேவையான பொருட்கள்...
தேன் 1 ஸ்பூன்
வெந்தயம் 1 ஸ்பூன்
தண்ணீர் 1 கப்

தயாரிப்பு முறை
முதலில் நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொண்டு அதில் 1 ஸ்பூன் வெந்தயத்தை சேர்க்கவும். இதை 5 முதல் 8 நிமிடம் வரை கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும்.
பிறகு மிதமான வெப்பத்திற்கு வந்ததும் இதை வடிகட்டி அதில் தேன் கலந்து 14 நாட்கள் தொடர்ந்து காலையில் குடித்து வரலாம்.

கொலஸ்ட்ரால்
இந்த வெந்தய டீ செரிமான பிரச்சனைகளோடு உடலில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலையும் படிப்படியாக குறைத்து விடும்.
இதனால் இதய பாதிப்புகள் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம். மேலும், இரத்த நாளங்களில் உண்டாக கூடிய அடைப்புகளையும் இந்த டீ ஏற்படாமல் பார்த்து கொள்ளும்.

சீன மருத்துவம்
எப்படி இந்திய மருத்துவத்தில் வெந்தயத்தை பலவித மருத்துவ பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்துகிறமோ, அதே போன்று சீனா மருத்துவத்திலும் இதற்கென்று ஒரு தனியிடம் உள்ளதாம்.
ஆண்களின் ஹார்மோன் பிரச்சினை முதல் உடல் எடை குறைப்பு வரை, வெந்தயத்தை இவர்கள் பயன்படுத்துவர்களாம்.

தொப்பை
கொழுத்து போன தொப்பையை மிக எளிதாக குறைக்க வெந்தய கீரை போதும். இதை தயாரிக்க தேவையான பொருட்கள்
வெந்தய கீரை 1 கைப்பிடி
மஞ்சள் கால் ஸ்பூன்
தண்ணீர் 200 மி.லி

எடை குறைய
வெந்தய கீரை டீயை காலையில் குடித்து வந்தால் தொப்பையுடன் சேர்த்து உடல் எடையும் குறையும். இந்த டீயை தொடர்ந்து 1 மாத காலம் குடித்து வந்தால் உடல் எடை கிடுகிடுவென குறைந்து விடும். அத்துடன் உடலில் உள்ள கொழுப்புகளையும் இது நீக்கி விடும்.

ஆண்மை அதிகரிக்க
ஆண்மை குறைவால் அவதிப்படுவோருக்கு இந்த வெந்தய கீரை டீ அருமருந்தாக செயல்படும். டெஸ்டோஸ்டெரோன் ஹார்மோனை சீரான அளவில் உற்பத்தி செய்து ஆண்களுக்கான பல பிரச்சினைகளை இந்த டீ தீர்க்கும்.