For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க பெருவிரல்கிட்ட இப்படி இருக்கா? வெறும் இஞ்சிய வெச்சே இத எப்படி சரி பண்ணலாம்?

|

முடக்கு வாதம், கீல்வாதம், லுபஸ் அல்லது பைப்ரோம்யல்கியா என்னும் தோல் அழி நோய் போன்றவை வாத நோயின் ஒரு சில வகையாகும். 2013-2015ம் ஆண்டிற்குள் அமெரிக்கர்களில் 54.4 மில்லியன் பேர்கள் தாங்கள் இந்த வாத நோயின் எதோ ஒரு வகையால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர் என்று நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறுகிறது.

Big Toe Arthritis

மூட்டுகள் இருக்கும் உடலின் எந்த ஒரு பகுதியையும் வாத நோய் தாக்கக்கூடும். இதற்கு உங்கள் விரல்கள் விதிவிலக்கல்ல. உண்மையில் விரல்களில் வாதம் உண்டாவது பொதுவான வாத நோய் பாதிப்பாக உள்ளது. இன்றைய நாட்களில் பலரும் இந்த வலி மிகுந்த நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முடக்கு வாதம்

முடக்கு வாதம்

விரல்களில் உண்டாகும் வாத நோயில் பல வழக்குகளில் அதிகம் பாதிக்கப்படுவது பெருவிரல். மற்ற விரல்களும் இந்த பாதிப்பை ஏற்றுக் கொள்கின்றன. ஹாலக்ஸ் லிமிடஸ் அல்லது ஹாலக்ஸ் ரிஜிடஸ் என்று அழைக்கப்படும் இந்த பெருவிரல் வாதம், பெருவிரல் எலும்புகள் மேல் நோக்கி நகர்வதால் அல்லது அதன் எலும்பு துருத்திக் கொண்டு இருப்பதால் உண்டாகிறது. இதனால் கால் விரலின் செயல்பாடு தடுக்கப்படுகிறது.

பெருவிரல் வாதத்திற்கான அபாயம் வயது அதிகரிக்கும்போது மேலும் அதிகரிக்கிறது. இதற்குக் காரணம் அதிக உடல் செயல்பாடு மட்டுமே. மேலும், உங்கள் குடும்ப வரலாறு காரணமாகவும் இந்த நிலை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. அல்லது உங்கள் உடல் பருமனும் இதற்கு ஒரு காரணமாக இருக்க முடியும்.

MOST READ: இப்படி உருளைக்கிழங்குலயே ரோஜா செடி வளர்க்கலாம் தெரியுமா? ரொம்ப ஈஸி... ட்ரை பண்ணிப்பாருங்க

தீராத வலி

தீராத வலி

மூட்டுகளில் இறுக்கம் என்பது பெருவிரல் வாதத்தின் முதல் நிலையாகும். இதனோடு வீக்கம் மற்றும் சிவந்த போகும் நிலை ஒருங்கிணைகிறது. மூட்டுகள் விரிவடைவது, வலி, குறிப்பிட்ட ஷூ அணிவதில் சிரமம் ஏற்படுவது, நடப்பதில் கடினம்(குறிப்பாக காலையில் எழுந்தவுடன் முதன்முறை நடப்பதில் கடினம்) , இவற்றுடன் கூடிய உருக்குலைவு, மென் தசைகள் எரிச்சல் அல்லது அழற்சி ஆகிவையவை இதன் மற்ற அறிகுறிகளாகும்.

கால் விரல் முடக்குவாதம்

கால் விரல் முடக்குவாதம்

கால் பெருவிரல் வீக்கம் மற்றும் பெருவிரல் வாதம் ஆகிய இரண்டு நிலைகளையும் மக்கள் குழப்பிக் கொள்கின்றனர். காரணம் இரண்டிற்கும் விரல்களில் வலி, பெருவிரலில் வீக்கம் மற்றும் விரல்கள் பெரிதாக தோற்றமளிப்பது போன்ற ஒத்த அறிகுறிகள் இருப்பது தான். ஆனால் இவை இரண்டு வெவ்வேறானவை ஆகும்.

பெருவிரல் வாதம் ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால், இதற்கு சிகிச்சை அளிப்பது மிகவும் சுலபம். இதற்கு எளிய , இயற்கையான தீர்வுகள் உள்ளது. இவற்றை மேற்கொள்வதால், இதனால் உண்டாகும் அசௌகரியம் குறைக்கப்படும்.

நீர் சிகிச்சை

நீர் சிகிச்சை

முரண் நீர்சிகிச்சை என்னும் கான்ஸ்ட்ராஸ்ட் ஹைட்ரோரோதெரபி:

குளிர்ந்த மற்றும் வெதுவெதுப்பான நீர் கொண்டு தரப்படும் சிகிச்சை பரவலாக ஹைட்ரோ தெரபி என்று அழைக்கப்படுகிறது. இதனால் பெரு விரல் வாத அசௌகரியம் குறைகிறது. வெதுவெதுப்பான நீர், பாதிக்கப்பட்ட இடத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் மற்றொரு புறம், குளிர்ந்த நீர் வீக்கம் மற்றும் அழற்சியைக் குறைக்க உதவுகின்றது.

1. இரண்டு சின்ன டப்பில், ஒன்றில் குளிர்ந்த நீரும், மற்றொன்றில் வெதுவெதுப்பான நீரும் எடுத்துக் கொள்ளவும்.

2. முதலில் 3-4 நிமிடம், பாதிக்கப்பட்ட விரலை வெதுவெதுப்பான நீரில் விடவும்.

3. பிறகு அந்த விரலை எடுத்து குளிர்ந்த நீரில் ஒரு நிமிடம் விடவும்.

4. இதே முறையை மாற்றி மாற்றி அடுத்த 15-20 நிமிடங்கள் தொடரவும்.

5. உங்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும் வரை ஒரு நாளில் மூன்று அல்லது நான்கு முறை இதனைப் பின்பற்றவும்.

குறிப்பு

நீரின் வெப் நிலை குறித்து கவனமாக இருக்கவும். அதிக வெப்பம் அல்லது அதிக குளிர்ச்சி இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.

MOST READ: இந்த பேப்பரை காலில் இப்படி சுற்றி வைத்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா

ஆப்பிள் சிடர் வினிகர்

ஆப்பிள் சிடர் வினிகர்

முடக்குவாதம் காரணமாக பெருவிரல் மூட்டுகளில் பாதிப்பு உண்டானால், ஆப்பிள் சிடர் வினிகர் நல்ல சிகிச்சை அளிக்க உதவுகிறது. மூட்டுகளில் மற்றும் இணைப்பு திசுக்களில் படிந்திருக்கும் நச்சுகளை நீக்க உதவுகிறது . இதனால் எந்த வகை முடக்கு வாதத்திலும் வலி குறைகிறது. மேலும் ஆப்பிள் சிடர் வினிகரில் அழற்சி எதிர்ப்பு மற்றும் அமில உற்பத்தி செய்யும் பண்புகள் இருப்பதால் மூட்டுகளில் வலி மற்றும் இறுக்கம் குறைய உதவுகிறது.

வெதுவெதுப்பான நீர் மற்றும் பதனிடப்படாத, வடிகட்டாத ஆப்பிள் சிட வினிகர் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக் கொள்ளவும். இந்த நீரை ஒரு டப்பில் நிரப்பி அந்த நீரில் அரை மணி நேரம் உங்கள் கால்களை ஊற விடவும். பின்பு கால் பாதங்களை நன்றாக துடைத்து விடவும். இந்த முறையை ஒரு நாளில் இரண்டு முறை பின்பற்றுவதால், வீக்கம் மற்றும் வலி குறையலாம்.

ஒரு டம்பளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் பதனிடப்படாத, வடிகட்டாத ஆப்பிள் சிடர் வினிகர் மற்றும் சிறிதளவு தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த நீரை தினமும் இரண்டு முறை பருகி வரவும்.

வெதுவெதுப்பான எண்ணெய் மசாஜ்

வெதுவெதுப்பான எண்ணெய் மசாஜ்

கீல்வாதத்தால் பாதிக்கப்பட்ட பெருவிரலில் வெதுவெதுப்பான எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதால் வலியும் அழற்சியும் குறைகிறது என்று அறியப்படுகிறது. மசாஜ் செய்வதன் மூலம் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் , மற்றும் வீக்கம் குறைந்து நச்சுகள் வெளியேறும்.

1. ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யை லேசாக சூடாக்கிக் கொள்ளவும்.

2. வெதுவெதுப்பான எண்ணெய்யை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும்.

3. உங்கள் விரல்களால் பாதிக்கப்பட்ட இடத்தில மென்மையாக மசாஜ் செய்யவும்.

4. 10 நிமிடங்கள் தொடர்ந்து மசாஜ் செய்யவும்.

5. ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை இதனை பின்பற்றலாம்.

குறிப்பு

மசாஜ் செய்வதால் வலி அதிகரித்தால் மசாஜ் செய்வதை நிறுத்திவிட்டு, மருத்துவரை அணுகவும்.

மிளகாய்

மிளகாய்

எந்த ஒரு வகை கீல்வாத வலிக்கும், மிளகாய் ஒரு சிறந்த தீர்வைத் தருகிறது. மிளகாயில் காப்சசின் என்னும் கூறு இருக்கிறது. அது, வலி நிவாரணப் பண்புகளும், அழற்சி எதிர்ப்பு பண்புகளும் கொண்டிருப்பதால் வாதத்தினால் உண்டாகும் வலியைப் போக்கி பெரு விரல் வாதத்திற்கு சிறந்த சிகிச்சையைத் தருகிறது. தொடக்கத்தில், மிளகாய் பயன்படுத்துவதால் ஒரு வித எரிச்சல் உணர்வு ஏற்பட்டாலும், விரைவில் அது மறைந்து விடும்.

1/2 ஸ்பூன் மிளகாய் தூளுடன் ஒரு ஸ்பூன் அளவு வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய்யை கலக்கவும். இரண்டையும் நன்றாகக் கலந்து பாதிக்கப்பட்ட விரலில் தடவவும். அடுத்த 20 நிமிடங்கள் அப்படியே விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரால் விரலைக் கழுவவும். இதனை ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை செய்யலாம். அல்லது, காப்சசின் க்ரீம் வாங்கி அதனை பாதிக்கப்பட்ட இடத்தில் தினமும் தடவலாம்.

MOST READ: எப்படி இருந்த ஊர்லாம் இப்ப எப்படி மாறியிருக்குனு நீங்களே பாருங்க... புகைப்படங்கள் உள்ளே...

இஞ்சி

இஞ்சி

உங்கள் பெருவிரலில் உண்டான கீல்வாதத்தைப் போக்க மற்றொரு பொதுவான மூலப்பொருள், இஞ்சி. இஞ்சிக்கு இயற்கையாகவே அழற்சி எதிர்ப்பு பண்புகள் உண்டு. மேலும் உடலில் வலியை உண்டாக்கும் ரசாயனத்தைத் தடுக்கும் தன்மை இஞ்சிக்கு உண்டு.

தினமும் இரண்டு அல்லது மூன்று முறை இஞ்சி தேநீர் பருகலாம். ஒரு சிறு துண்டு இஞ்சியை எடுத்து துருவி, ஒரு கப் நீரில் போட்டு 10 நிமிடம் நன்றாக கொதிக்க விடுங்கள். பிறகு அந்த நீரை வடிகட்டி அதில் சிறிதளவு தேன் சேர்த்து பருகலாம்.

கூடுதலாக, தினமும் இஞ்சி எண்ணெய் கொண்டு பாதிக்கப்பட்ட இடத்தில் மசாஜ் செய்யலாம். இதனால் வலி, வீக்கம் மற்றும் இறுக்கம் குறையலாம். ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை இதனைச் செய்யலாம்.

மஞ்சள்

மஞ்சள்

பெருவிரல் வாதத்திற்கு சிறந்த சிகிச்சை அளிக்கும் மற்றொரு பொருள் மஞ்சள். மஞ்சளில் குர்குமின் என்னும் கூறு உள்ளது. இதற்கு அழற்சி எதிர்ப்பு பண்பு இருப்பதால், அழற்சி மற்றும் வலி குறைய உதவுகிறது.

ஆலிவ் எண்ணெயுடன் 1/2 ஸ்பூன் மஞ்சள் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். இதனை உங்கள் பெருவிரலில் தடவி, பாண்டேஜ் மூலம் மூடி விடலாம். அடுத்த இரண்டு மணிநேரம் கழித்து பாண்டேஜை பிரித்து விடலாம். தொடர்ந்து சில நாட்கள் ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை இதனை செய்யலாம்.

உட்புற சிகிச்சைக்கு, ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும். ஒரு நாளில் இரண்டு முறை இந்த நீரைப் பருகுவதால் அழற்சி விரைவாகக் குறையும்.

இதற்கு மாற்றாக, மருத்துவரிடம் ஆலோசித்து குர்குமின் மாத்திரைகள் சரியான அளவு வாங்கி பயன்படுத்தலாம்.

குறிப்பு

இரத்தத்தை மெலிதாக்கும் மாத்திரைகள் அல்லது ஸ்டீராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்கள் அதிக மஞ்சள் சேர்த்து கொள்வது தவிர்க்கப் பட வேண்டும்.

அக்குபஞ்சர்

அக்குபஞ்சர்

பெருவிரல் வாதத்துடன் தொடர்புடைய வலி மற்றும் இதர அசௌகரியங்களை குறைப்பதில் அக்குபஞ்சர் சிறந்த தீர்வைத் தருகிறது. அக்குபஞ்சர் முறையில், கால் பெருவிரலை சுற்றியும் விரலுக்குள்ளும் ஊசிகள் நுழைக்கப்படுகின்றன.

இதனால் வலி குறைகிறது. இந்த சிகிச்சை மூலம் காலில் செயல்பாடுகள் சாத்தியமாகிறது. அக்குபஞ்சர் மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவரிடம் சிகிச்சை பெறுவது நல்லது தீர்வைப் பெற்றுத் தரும். சில கட்ட சிகிச்சைக்கு பிறகு, வலி குறைந்து, பெருவிரலில் செயல்பாடுகள் அதிகரிக்கும் .

ஆரோக்கியமான எடை

ஆரோக்கியமான எடை

உடலில் அதிகரித்த எடை, பாதங்களில் உள்ள எலும்பிற்கு அழுத்தத்தைக் கொடுக்கின்றன. இதனால் அதிக வலி மற்றும் பெருவிரல் கீல்வாதத்துடன் தொடர்புடைய அழற்சி ஆகியவை உண்டாகும் வாய்ப்பும் வருகிறது. சரியான உடல் எடையை நிர்வகிப்பதன் மூலம், மூட்டுகளில் அதிக அழுத்தம் உண்டாவது தடுக்கப்பட்டு, வலி குறைகிறது. மேலும் மூட்டுகளில் செயல்பாடுகள் அதிகரிக்கிறது, மற்றும் உடலில் அழற்சி குறைகிறது. அதிகரித்த கொழுப்பு என்பது ஒரு அழற்சி திசு ஆகும். இது அழற்சி ரசாயனங்களை உருவாக்கி வெளியிடுகிறது.

உங்களுக்கு உடல் பருமன் இருந்தால், உங்கள் எடை குறையும் நடவடிக்கையை நீங்கள் எடுக்க வேண்டும். எடை குறைப்பது என்பது ஒரு போட்டி அல்ல, என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதிரடியான உணவுக் குறைப்பை கைவிடுங்கள். ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் வழக்கமான தொடர்ச்சியான உடற் பயிற்சி மூலம் சீரான எடைக் குறைப்பை மேற்கொள்ளுங்கள்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

வழக்கமான உடற்பயிற்சி மூலம் உங்கள் எலும்புகள் மற்றும் மூட்டுகள் வலிமை அடைகின்றன. உங்கள் பெருவிரலும் இந்த வலிமையைப் பெறுகின்றன. உங்கள் மூட்டுகளில் வலிமையைத் தந்து வீக்கத்தைக் குறைக்க உடற்பயிற்சி உதவுகிறது. மேலும், உடற்பயிற்சியினால் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது, இதனால் அழற்சி குறைகிறது. மேலும் பெருவிரல் வாதத்துடன் தொடர்புடைய வலியும் குறைகிறது. பெருவிரல் செயல்பாடுகள் இதன்மூலம் அதிகரிக்கிறது.

ஏரோபிக் உடற்ப்யிற்சிகளான நடைபயிற்சி, பைக்கிங், நீச்சல் ஆகியவற்றை ஒரு நாளில் அரை மணிநேரம் செய்யலாம்.

தசை வலிமையை அதிகரிக்க எடை பயிற்சி எடுக்கலாம்.

இயக்க உடற்பயிற்சிகளை அதிகம் மேற்கொள்ளலாம். ஒரு நாளில் அரை மணி நேரம் இந்த பயிற்சியை செய்யலாம்.

MOST READ: குளவி கடிச்சிட்டடா விஷம் ஏறாம வீங்காம இருக்கணுமா? இத மட்டும் தடவுங்க போதும்...

சரியான காலணி

சரியான காலணி

பெருவிரல் வாதத்திற்கு சரியான விதத்தில் சிகிச்சை அளிக்க சரியான காலணிகளை தேர்ந்தெடுப்பது அவசியம். பொருந்தாத காலணிகள் பயன்படுத்துவதால் வீக்கம் மற்றும் வலியும் பாதிக்கப்பட்ட இடத்தில் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு.

சரியான காலணியை தேர்ந்தெடுப்பது மூலம் ஒரு பெரிய வித்தியாசத்தை உணர முடியும். பெருவிரலுக்கு அதிக இடம் இருக்கும் வகையில் சரியாக பொருந்தும் காலணியை தேர்ந்தெடுக்கவும்.

விரல்களில் அழுத்தம் குறைவதற்கு ஏற்ற விதத்தில் விரல்களுக்கு அதிக இடம் இருக்கும் காலணியை தேர்வு செய்யலாம். ரோலர் அடிப்பகுதி அல்லது இறுக்கமான அடிப்பகுதி வடிவம் கொண்ட காலணிகளை வாங்குவதால் விரல்கள் அதிகம் வளையாமல் இருக்கும்படி உதவும்.

ஹை ஹீல்ஸ், இறுக்கமான காலணி, பாயிண்டடு காலணி ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. இறுக்கமாக இருக்கும் சாக்ஸ் அலல்து ஸ்டாக்கிங்ஸ் அணிவதும் தவிர்க்கப்பட வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies for Big Toe Arthritis

Arthritis is a group of painful and degenerative conditions marked by inflammation in the joints that causes stiffness and pain. Osteoarthritis, the most common type of arthritis, gets worse with age and is caused by wear and tear over the years. Rheumatoid arthritis is caused by the immune system attacking the joints as if they were foreign tissues.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more