For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொஞ்சம் சாப்பிடறவங்க குண்டாவும் நிறைய சாப்பிடறவங்க ஒல்லியா இருக்கறது ஏன் தெரியுமா?

யு.ஜி.ஆர் தலைமையிலான முதல் ஆராய்ச்சி, உடல் பருமன் மற்றும் உணவு சீர்குலைவு ஆகிய இரண்டிற்கும் இடையில் உள்ள ஆபத்துப் பழக்கவழக்கங்களின் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டிருக்கும் இனிப்பு உணவுக் குறிப்புகளுக்கு

|

ஒல்லியாக இருப்பவர்களை விட குண்டாக இருப்பவர்களுக்கு உணவில் அதிக ஆர்வம் இருப்பதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? யு.ஜி.ஆர் தலைமையிலான முதல் ஆராய்ச்சி, உடல் பருமன் மற்றும் உணவு சீர்குலைவு ஆகிய இரண்டிற்கும் இடையில் உள்ள ஆபத்துப் பழக்கவழக்கங்களின் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டிருக்கும் இனிப்பு உணவுக் குறிப்புகளுக்கு இளம் பருவத்தின் உணர்ச்சிகளை பற்றி ஆராய்ச்சியில் இறங்கியது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆராய்ச்சி

ஆராய்ச்சி

உணவு குறித்த ஆர்வம் குறைபாடு, உடல் பருமன் மற்றும் உணவுக் கட்டுபாடுடன் தொடர்புடையது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிரானடா பல்கலைக்கழகம் (யு.ஜி.ஆர்.) தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் அறிக்கை புட் க்வாலிட்டி அன்ட் ப்ரிபரன்ஸ் (Food Quality and Preference) என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு, கிரானடாவிலுள்ள பல உயர்நிலைப் பள்ளிகளில் 11 முதல் 17 வயதிற்குட்பட்ட 552 இளம் பருவத்தினர், இனிப்பு உணவுகளின் சித்திரங்களைப் பார்க்கும் போது அவர்களின் உணர்ச்சி நிலைகளை ஆய்வு செய்தனர். .

MOST READ: 4 மாத கர்ப்பமாக இருந்த ஆட்டை கதறக் கதற பாலியல் வன்புணர்வு செய்த காமக்கொடூரன்...

டயட்

டயட்

அவர்களின் ஆய்வின் மூலம் அறியப்பட்ட செய்தி என்னவென்றால், பல்வேறு வகையான உணவுக் கட்டுபாடுகள் (பல்வேறு வகையான டயட், அடிக்கடி டயட் இருப்பது, காலை உணவை தவிர்ப்பது, அடிக்கடி குறைவாக உணவு உட்கொள்வது) போன்ற பழக்கம் உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், ஆரோக்கியமற்ற பழக்கவழக்கம் அதாவது புகைப் பிடிப்பது, போதுமான தூக்கம் இல்லாதது போன்றவை உள்ளவர்கள், ஆகியோர் உணவின் மீது அதிக ஆர்வம், ஈர்ப்பு, விருப்பம் ஆகியவை இல்லாமல் இருக்கின்றனர். அதுவும் நாவுக்கினிய உணவுகளாகிய இனிப்புகள், டோநட், ஐஸ் க்ரீம், சாக்லேட் போன்ற உணவுகளின் படங்களைப் பார்க்கும்போது கூட மேலே கூறியவர்களுக்கு அந்த உணவில் அதிக ஈர்ப்பு இல்லை என்பது இந்த ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உடல் பருமன்

உடல் பருமன்

தங்கள் உடலின் மீது அதிருப்தி உள்ள இளம் பருவத்தினருக்கு ஆபத்தான உணவு பழக்கம் வளரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆய்வின் முக்கிய ஆசிரியரான லாரா மிக்கோலி விளக்கியபடி, உடலின் மீது அதீத அதிருப்தி கொண்ட இளம் பருவத்தினருக்கு ஆபத்தான உணவு பழக்கம் வளர்ச்சி அடையும் முக்கிய நிலை இருப்பதாக அறியப்படும் வேளையில், கட்டுப்படுத்த முடியாத உணவுக் கட்டுப்பாடுகள் கொண்டவர்களுக்கு உணவு சீர்குலைவு பாதிப்பு உண்டாவதாகவும், அவர்களுக்கு நிரந்தரமாக அதிக எடை மற்றும் உடல் பருமன் உண்டாவதாகவும் கூறுகிறார்.

உணவின் மீது விருப்பம்

உணவின் மீது விருப்பம்

கிரானாடா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு, இளம் பருவத்தினர் மத்தியில், உடல் பருமன் மற்றும் உணவு சீர்குலைவு தொடர்பான அபாயங்களின் அடிப்படையில் உணவு தொடர்பான அவர்களின் உணர்ச்சி நிலைகள் பற்றி நடத்திய முதல் ஆய்வாகும்.

சாப்பிடும் வேளையில் உணவை விரும்பி ஆர்வத்தோடு உட்கொள்ளும் இளம் பருவத்தினருக்கு உணவுடன் ஒரு ஆரோக்கிய உறவு இருப்பதாகவும், இந்த மகிழ்ச்சி ஒரு பாதுகாப்பு வளையமாக செயல்பட்டு, எடை தொடர்பான சீர்குலைவு ஏற்படாமல் தடுப்பதாகவும் இந்த ஆராய்ச்சி மூலம் நமக்கு ஒரு புரிதல் உண்டாகிறது.

MOST READ: 12 ராசிகளும் உங்க ஜாதகப்படி இந்த வருஷம் செய்ய வேண்டிய பரிகாரம் ஒன்று இருக்கு... மறக்காம செய்ங்க

உணவு மாற்றம்

உணவு மாற்றம்

உடல் பருமனைத் தடுக்கும் பொருட்டு நாம் உணவை உண்பதில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர முயற்சிக்க வேண்டும். உண்ணும் உணவை அனுபவித்து உண்ண வேண்டும் என்ற எண்ணம் வருவதால் உடல் பருமன் பாதிப்பு குறைகிறது. மெதுவான உணவு இயக்கம் - ஒரு ஆரோக்கியமான உணவுப் பழக்கத்திற்கு கருவியாக உள்ளது என்று மிக்கோலி கூறுகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Did You Know Obese People Enjoy Less Food Than Lean People?

Global obesity rates have risen sharply over the past three decades, leading to spikes in diabetes, arthritis and heart disease. The more we understand the causes of obesity and how to prevent it, the better.
Story first published: Monday, February 4, 2019, 12:28 [IST]
Desktop Bottom Promotion