இதுமாதிரி உங்க வீட்ல யாருக்காவது இருக்கா?... இது எதோட அறிகுறினு தெரியுமா உங்களுக்கு?

கம்பார்ட்மென்ட் சிண்ட்ரோம் என்று அழைக்கப்படும் நோய் பற்றிய முழுமையான விவரங்கள் இங்கு உங்களுக்காக பகிர்ந்து கொள்ளப்படுகிறது. அது பற்றிய காரணங்கள் மற்றும் அறிகுறிகளைப் பற்றி விளக்கமாகத் தெரிந்து கொள்ளுங

தசைகளில் அபாயகரமான அளவிற்கு அழுத்தம் ஏற்படும்போது, பாதிக்கபட்ட இடத்தில் இரத்த ஓட்டம் குறைகிறது. இதனால் இரத்தம் மூலம் கொண்டு செல்லப்படும் ஊட்டச்சத்துகள் மற்றும் ஆக்சிஜன் போன்றவை நரம்புகள் மற்றும் தசை அணுக்களுக்கு செல்ல முடியாத நிலை உருவாகிறது. இதனை கம்பார்ட்மென்ட் சிண்ட்ரோம் என்று குறிப்பிடுகிறோம். இது மிகுந்த வலியைக் கொடுக்கும் நிலையாகும். பொதுவாக கைகள் மற்றும் கால்களில் இந்த பாதிப்பு ஏற்படும்.

 Compartment syndrome

இந்த கம்பார்ட்மென்ட் சிண்ட்ரோம் இரண்டு வகைப்படும். கடுமையான கம்பார்ட்மென்ட் சிண்ட்ரோம் மிகத் தீவிர காயங்களால் உண்டாகும் ஒரு வகையாகும். இந்த வகை பாதிப்பிற்கு அவசர மருத்துவ சிகிச்சை அவசியம் தேவை. சிகிச்சை அளிக்கப்படாத நிலையில் தசைகள் நிரந்தர சேதம் அடையும் வாய்ப்பு உண்டாகிறது.

மற்றொரு வகை நாட்பட்ட கம்பார்ட்மென்ட் சிண்ட்ரோம். இதற்கு அவசர மருத்துவ சிகிச்சை அவசியமில்லை. இதனை கடினமான கம்பார்ட்மென்ட் சிண்ட்ரோம் என்றும் குறிப்பிடுவர். தீவிர தடகள பயிற்சியால் இந்த நிலை உண்டாகலாம். பொதுவாக இந்த நோய்க்குறி கெண்டைக்காலின் முன்புறம் ஏற்படுகிறது. மேலும் காலின் இதர பகுதிகள், கைகள், புஜங்கள், பாதம், பிட்டம் போன்ற இடங்களிலும் ஏற்படலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 கம்பர்த்மென்ட் சிண்ட்ரோம் பற்றிய சிறு குறிப்பு

கம்பர்த்மென்ட் சிண்ட்ரோம் பற்றிய சிறு குறிப்பு

கம்பார்ட்மென்ட் சிண்ட்ரோம் இரண்டு வகைப்படும் - கடுமையானது, நாட்பட்டது. தீவிர காயம் அல்லது தடகள பயிற்சியால் உண்டாகும் சோர்வு போன்றவை இந்த பாதிப்பு ஏற்பட முக்கிய காரணங்களாகும்.

வலி, கூச்ச உணர்வு மரத்துப் போன உணர்வு போன்றவை இதன் அறிகுறிகளாகும். இந்த பாதிப்பின் வகையைப் பொறுத்து அறுவை சிகிச்சை, பிசியோதெரபி போன்ற சிகிச்சைகள் தரப்படும்.

கம்பார்ட்மென்ட் சிண்ட்ரோம் என்றால் என்ன?

கம்பார்ட்மென்ட் சிண்ட்ரோம் என்றால் என்ன?

கடினமான தசைநார்கள் என்று விவரிக்கப்படும் திசுப்படலத்தால் மூடப்பட்ட தசைகள், நரம்புகள் மற்றும் இரத்தக் குழாய்களின் ஓர் குழுவை கம்பார்ட்மென்ட் என்று அழைக்கிறோம். இதில் திசுப்படலம் எளிதில் நீட்டிக்கவோ விரிக்கவோ முடியாமல் எல்லாத் திசுக்களையும் அந்தந்த இடத்தில் வைக்கும் பணியைச் செய்கிறது.

இந்த கடினமான தசைநார்கள் என்று அறியப்படும் திசுப்படலம் எளிதில் நீட்டிக்க முடியாத தன்மையில் இருப்பதால், இந்த கம்பார்ட்மெண்டில் ஏற்படும் வீக்கம், இரத்தக்கசிவு போன்றவை கம்பார்ட்மெண்டில் இருக்கும் நுண்குழாய்களில், நரம்புகளில், மற்றும் தசைகளில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக அணுக்கள் மற்றும் நரம்புகளுக்குச் செல்லும் ஊட்டச்சத்து மற்றும் ஆக்சிஜன் நிறைந்த இரத்தத்தின் அளவு குறைகிறது. சீரான இரத்த ஓட்டம் தடைபடும்போது, அணுக்கள் சேதமடைகிறது.

 கடுமையான கம்பார்ட்மென்ட் சிண்ட்ரோம்

கடுமையான கம்பார்ட்மென்ட் சிண்ட்ரோம்

வாகன விபத்து அல்லது எலும்பு உடைவது போன்ற கடுமையான காயங்களால் இந்த கடுமையான கம்பார்ட்மென்ட் சிண்ட்ரோம் ஏற்படலாம். ஒரு சிறு காயத்திற்கு பின்னும் சில நேரங்களில் இந்த பாதிப்பு வளர்ச்சி அடையலாம். ஆனால் அது மிகவும் அரிது.

தடை செய்யப்பட்ட இரத்த ஓட்ட சுழற்சி மீண்டும் மீட்டெடுக்கப்படும்போது இந்த நிலை உண்டாகலாம். நீண்ட நேரம் தடை செய்யப்பட்டிருந்த ஒரு சேதமடைந்த இரத்தக் குழாய் ஒரு அறுவை சிகிச்சையின்போது சரி செய்யப்படும்போது இந்த நிலை உண்டாகலாம். சிலர் தூங்கும்போது கூட ஒரே நிலையில் தூங்குவர் . ஒரே நிலையில் நீண்ட நேரம் படுத்திருந்தால் கூட இரத்தக் குழாய்கள் தடைபடலாம்

இதர காரணங்கள்

இதர காரணங்கள்

. எலும்பு முறிவு

. மோசமாக காயப்பட்ட தசைகள்

. நொறுங்கிய காயங்கள்

. அனபோலிக் ஸ்டீராய்டு பயன்பாடு

. இறுக்கமான பேன்டேஜ் அணிவது

. தீக்காயம்

நாட்பட்ட கம்பார்ட்மென்ட் சிண்ட்ரோம்

நாட்பட்ட கம்பார்ட்மென்ட் சிண்ட்ரோம்

உடற்பயிற்சியின் காரணமாக உண்டாகும் வலி மற்றும் வீக்கத்தை நாட்பட்ட கம்பார்ட்மென்ட் சிண்ட்ரோம் என்று வகைப்படுத்தப்படுகிறது.

தொடர்ச்சியான உடல் செயல்பாடுகள் இந்த வகை நாட்பட்ட கம்பார்ட்மென்ட் சிண்ட்ரோம் ஏற்பட காரணமாக உள்ளன. அவற்றுள் சில,

. ஓட்டப்பயிற்சி

. சைக்கிள் பயிற்சி

. நீச்சல் பயிற்சி

. நீள்வட்டவடிவ பயிற்சி

இந்த வகை பாதிப்பு பொதுவாக உடற்பயிற்சி செய்யும்போது அல்லது உடற்பயிற்சிக்கு பின்னர் ஏற்படுகிறது.

கடுமையான கம்பார்ட்மென்ட் சிண்ட்ரோம்

கடுமையான கம்பார்ட்மென்ட் சிண்ட்ரோம்

கடுமையான கம்பார்ட்மென்ட் சிண்ட்ரோம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் இதோ..

1. வலி - ஒரு காயத்தால் ஏற்படும் அதி தீவிர வலி ஒரு முக்கிய அறிகுறியாக அறியப்படுகிறது. இந்த வலி நிற்காமல், தொடர்ந்து , அதிகரித்துக் கொண்டே இருக்கும். இந்த வலி தொடுவதால், அழுத்த அதிகரிப்பால், உயரம் மற்றும் நீட்டிப்பால் மோசமடைகிறது.

2. அதிக நீட்சி - இரத்த ஓட்டம் குறைவாக இருக்கும் தசைகளை நீட்டிப்பது கடினமான செயலாகும். ஆகவே பாதிக்கப்பட்ட மூட்டுகளை நீட்டிப்பது அதிக வலியை ஏற்படுத்தும்.

3. மரத்துப் போன உணர்வு - பாதிக்கப்பட்ட இடத்தில் ஒரு வித கூச்ச உணர்வு, ஊசி அல்லது பின் போன்றவற்றால் குத்தும் ஒரு வித வலி போன்றவை உண்டாகின்றன. இது ஒரு மோசமான உணர்வாகும்.

4. நிறமிழப்பு - இரத்த ஓட்டம் குறைபாடு காரணமாக அந்த இடம் சற்று வெளிறி நிறம் மாறி காணப்படும்.

5. நாடித்துடிப்பு - பாதிக்கப்பட்ட இடத்தில் பலவீனமான நாடித்துடிப்பு இருக்கும். சில நேரங்களில் நாடித்துடிப்பு இல்லாமலும் இருக்கும்.

நாட்பட்ட கம்பார்ட்மென்ட் சிண்ட்ரோம்

நாட்பட்ட கம்பார்ட்மென்ட் சிண்ட்ரோம்

உடற்பயிற்சியின்போது ஒரு வித வலி உண்டாகலாம். ஆனால் உடற்பயிற்சி முடிந்தவுடன் இந்த வழியும் நின்று விடும். குறிப்பாக கால்களில் இந்த பாதிப்பு ஏற்படும். உணர்வின்மை, பாதங்களை அசைப்பதில் கடினத்தன்மை, தசைகள் வீக்கம் போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.

நோய்க்கண்டறிதல் முறை

நோய்க்கண்டறிதல் முறை

கம்பார்ட்மென்ட் சிண்ட்ரோம் பாதிப்பு இருக்கும் என்று நம்புகிறவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

கடுமையான கம்பார்ட்மென்ட் சிண்ட்ரோம் பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தால் அந்த அழுத்தத்தின் அளவைக் கணக்கிட்டு அதற்கான சிகிச்சையை மருத்துவர் வழங்குவார்.

நாட்பட்ட கம்பார்ட்மென்ட் சிண்ட்ரோம் பாதிப்பைக் கண்டறிய மருத்துவர் அந்த நபருக்கு தசைநாண் அழற்சி குறித்த சோதனை அல்லது எக்ஸ்ரே செய்து பார்த்து முழங்காலில் எலும்பு முறிவு உள்ளதா என்பதை ஆராய்ந்து பார்ப்பார். உடற்பயிற்சிக்கு முன்னும் பின்னும் கம்பார்ட்மென்ட்டின் அழுத்த அளவு அளவிடப்பட்டு ஒப்பிடப்படுகிறது.

நாட்பட்ட கம்பார்ட்மென்ட் சிண்ட்ரோம் பாதிப்பு உள்ள தடகள வீரர்கள் பொதுவாக பயிற்சிக்கு 20-30 நிமிடத்திற்கு பின் ஒரு வித வலி மற்றும் இறுக்கத்தை உணர்வார்கள். சில முதல் கட்ட அறிகுறிகள் பற்றி மருத்துவரிடம் கூற வேண்டும்.

. கால் அல்லது பாதத்தில் வலி, வீக்கம், உணர்வின்மை மற்றும் கூச்ச உணர்வு

. பாதம், கால் மணிக்கட்டு, காலின் கீழ் பகுதி போன்றவற்றில் பலவீனம்

. பாதிக்கப்பட்ட இடத்தில் வெப்பம் அதிகரிப்பது

. கால் விரல்களை உயர்த்துவதில் கடினத்தன்மை

. பெருவிரலை தரையில் பதிப்பதில் சிரமம்

இந்த பாதிப்பிற்கான சிகிச்சை முறைகள்

இந்த பாதிப்பிற்கான சிகிச்சை முறைகள்

கடுமையான கம்பார்ட்மென்ட் சிண்ட்ரோம் பாதிப்பை சரிசெய்ய அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வாகும். பாசியோடமி என்ற ஒரு வகை அறுவை சிகிச்சையில் அறுவை சிகிச்சை நிபுணர், தோல் பகுதி மற்றும் திசுப்படலத்தைத் திறந்து அழுத்தத்தை விடுவிப்பார்.

நாட்பட்ட கம்பார்ட்மென்ட் சிண்ட்ரோம் பாதிப்பில், அழற்சி எதிர்ப்பு மருந்துகள், பிசியோதெரபி , ஷூ இன்சர்ட் போன்ற சிகிச்சை முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. தொந்தரவு ஏற்படுத்தும் செயல்பாடுகளை செய்யாமலிருக்க மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள்,

இந்த அனைத்து சிகிச்சைகளும் பலனளிக்காமல் இருந்தால் அறுவை சிகிச்சை ஒரு தீர்வாக இருக்கும். இந்த வகை சிகிச்சையில் திசுப்படலத்தை மருத்துவர்கள் வெட்டி எடுத்து சிகிச்சை புரிவார்கள்.

அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டால், ஒரு சில நோயாளிகளுக்கு சில கட்ட பிசியோதெரபி சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. இதன் மூலம் குணமடைதல் விரைவாகிறது. இந்த முறை, சிறந்த தசை வலிமை மற்றும் செயல்பாடுகளை மீட்டெடுக்க உதவுகிறது.

 உருவாகக் கூடிய சிக்கல்கள்

உருவாகக் கூடிய சிக்கல்கள்

சில வழக்குகளில், கடுமையான கம்பார்ட்மென்ட் சிண்ட்ரோம் பாதிப்பு மற்றும் அதன் சிகிச்சை சிலவற்றிற்கு வழி வகுக்கலாம். அவை,

. நரம்புகளில் நிரந்தர சேதம்

. பாதிக்கப்பட்ட இடத்தில் நரம்புகளில் நிரந்தர சேதம் மற்றும் குறைந்த செயல்பாடு

. பாசியோடமி சிகிச்சையைல் ஏற்படும் நிரந்தர தழும்பு

. அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இடத்தில் தொற்று பாதிப்பு ஏற்படலாம்.

. அணுக்கள் இறப்பதால், தசைகள் பல்வேறு ரசாயனங்களை வெளியிட்டு இதனால் சிறுநீரகம் சேதம் அடையலாம்.

முடிவுரை

முடிவுரை

கடுமையான கம்பார்ட்மென்ட் சிண்ட்ரோம் பாதிப்பில் அழுத்தம் விரைவாக நீக்கப்பட வேண்டும். அப்படி நீக்கப்படவில்லை என்றால், அணுக்கள் நிரந்தரமாக சேதமடையலாம் அல்லது அணுக்கள் இறக்க நேரலாம்.

நீண்ட நாள் செயல்பாட்டு இயலாமையைத் தடுக்க முன்கூட்டிய நோய்க்கண்டறிதல் அவசியமாகிறது. விரைவாக சிகிச்சை அளிப்பதால் இரத்த ஓட்டம் சரி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட இடத்தில் நீண்ட கால சேதம் தவிர்க்கப்படுகிறது.

இந்த வகை பாதிப்பு நாட்பட்ட கம்பார்ட்மென்ட் சிண்ட்ரோம் பாதிப்பில் ஏற்படுவதில்லை. உடற்பயிற்சி செய்வதை நிறுத்திக் கொள்வதால் இந்த பாதிப்பு உடனடியாக தடுக்கப்படுகிறது. இது மிகவும் அபாயகரமான விளைவுகளை உண்டாக்குவதில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion