For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எப்ப பார்த்தாலும் எதாவது சாப்பிடணும்னு தோணுதா? அப்போ உங்களுக்கு இந்த மாதிரி இருக்குமே...

|

நீங்கள் கட்டுப்பாடில்லாம் சாப்பிடும் நபரா? அப்போ இந்த நோயாக் கூட இருக்கலாம்.

புலுமியா நெர்வோஷா இது புலுமியா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் இந்த நோய் உணவு உண்பதில் பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

இளவரசி டயானா, பிரிட்னி ஸ்பியர்ஸ், லேடி காகா, லிண்ட்சே லோகன், மற்றும் டெமி லோவாடோ போன்ற பிரபல நபர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு எழுந்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புலுமியா என்றால் என்ன?

புலுமியா என்றால் என்ன?

புலுமியா என்பது அதிகளவு கலோரி கொண்ட உணவுகளை மிகக் குறைந்த நேரத்தில் எடுத்துக் கொள்வது. ஒரு மனிதர் 3,000 கலோரிகள் வரக் கூட எடுத்துக் கொள்வார்களாம். பிறகு வயிறு வீக்கம், குற்ற உணர்வு, வெட்கம் போன்றவற்றால் அவதிப்படுவார்களாம். பிறகு உடல் எடை அதிகரித்து விட்டது என்று மாங்கு மாங்குனு உடற்பயிற்சி, டயட் இவற்றை ஃபாலோ பண்ணுவார்களாம்.

இந்த நோய் குழந்தை பருவத்தின் பிற்பகுதியில் அல்லது முதிர்வயதில் நிகழ்கிறது. இது பெரும்பாலும் ஆண்களை விட பெண்களையே பாதிக்கிறது.

MOST READ: உடலுறவுக்குப் பின் நிறைய ஆண்கள் ஏன் தம் அடிக்கிறார்கள் தெரியுமா? இதுதான் மேட்டரு...

புலுமியாவின் விளைவுகள்

புலுமியாவின் விளைவுகள்

இந்த புலுமியா என்ற நோய் எதனால் வருகிறது என்றே தெரியவில்லை. இருப்பினும், மரபணுக்கள், உணர்ச்சி, ஆரோக்கியம், உயிரியல், சமூக எதிர்பார்ப்புகள் மற்றும் பிற பிரச்சினைகள் புலுமியாவை ஏற்படுத்தக் காரணமாக அமையலாம்.

அறிகுறிகள்

அறிகுறிகள்

கட்டுப்பாடு இல்லாமல் சாப்பிட்டுக் கொண்டே இருப்பது.

அதீதமாக உடற்பயிற்சி செய்வது

அதிகமாக சாப்பிட்டு உடனே பாத்ரூம்க்கு ஓடுதல்

மனச் சோர்வு அல்லது மனநிலை மாற்றம்

உடல் வடிவம் மற்றும் எடையுடன் ஆர்வமாக இருப்பது

உண்ணாவிரதம், கலோரிகளை கட்டுப்படுத்துதல், சில உணவுகளை தவிர்ப்பது

உடல் எடை அதிகரிக்குமோ என்ற பயம், வேணும் என்றே வாந்தி எடுக்க முற்படுதல், சாப்பிட்டு சாப்பிட்டு உடற்பயிற்சி செய்ய முற்படுதல்.

ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி

கண்கள் பலவீனம் அடைதல், உடைந்த இரத்த நாளங்கள் இருத்தல்

எதுக்களித்தல் பிரச்சனை.

விளைவுகள்

விளைவுகள்

உடல் சார்ந்த பிரச்சனைகள்

உளவியல் மற்றும் உணர்ச்சி சிக்கல்கள்

டயட்டிங்

பற்கள் சொத்தை ஆகுதல், பல் சிதைவு

சீரண பிரச்சனைகள்

நீர்ச்சத்து பற்றாக்குறை

சுய மரியாதை குறைந்து போகுதல்

இதய பிரச்சனைகள்

அனிஸிட்டி, மனச் சோர்வு, பெர்சனாலிட்டி டிஸ் ஆர்டர் மற்றும் பைபோலார் டிஸ்ஆர்டர்

தற்கொலை எண்ணம்

உமிழ்நீர் சுரப்புகளில் வீக்கம் மற்றும் புண் ஏற்படுதல்

செக்ஸில் ஈடுபாடுமின்மை

மோசமான சருமம், மோசமான தலைமுடி மற்றும் நகங்கள் உடைந்து போதல்.

MOST READ: கிரகண சமயத்தில் கோயிலை ஏன் மூடுகிறார்கள்?... கிரகணம் கடவுளையே பாதிக்குமா?

நோயைக் கண்டறிதல்

நோயைக் கண்டறிதல்

முதலில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவரின் மனநிலை, உடல் ஆரோக்கியம், வாழ்க்கை முறை, மருத்துவ வரலாறு மற்றும் உடல் சார்ந்த பரிசோதனைகள் போன்ற விளக்கங்கள் பெறப்படுகிறது.

பிறகு இரத்த பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, எலக்ட்ரோகார்டியோகிராம் போன்றவைகள் மேற்கொள்ளப்படும்.

புலுமியா நோயைக் கண்டறிய அமெரிக்க மனநல சங்கத்தால் வெளியிடப்பட்ட மனநல கோளாறுகளின் நோயறிதல் மற்றும் புள்ளிவிவரப் படி, நோயாளி பின்வரும் விவரங்களை தெரியப்படுத்த வேண்டும்.

நோயாளி கட்டுப்படுத்த இயலாது என்று உணரும் அதிகப்படியான உணவுகள்

கடந்த 3 மாதங்களில் வாரத்திற்கு ஒருமுறையாவது சாப்பாடு சாப்பிட்டு உடனே மலம் கழித்தல் ஏற்பட்டதா

அதிகமாக மலம் கழித்தல், வாந்தி, உண்ணாவிரதம், அதிக உடற்பயிற்சி, தவறான மருந்துகள் போன்றவற்றை எடுத்தீர்களா

உடல் வடிவம் மற்றும் எடையை குறித்து அதீத கவலை கொள்ளுகிறீர்களா

சிகிச்சை முறைகள்

உளவியல் சிகிச்சை

உளவியல் சிகிச்சை

புலுமியா நோயாளிகளின் மனநிலையை மாற்ற உளவியல் சார்ந்த சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது. அவர்களுடன் மருத்துவர்கள் பேசி புரிய வைக்கிறார்கள். பிரச்சனையை அறிவுப் பூர்வமாக அணுகுதல் , ஒருவருக்கொருவர் சிகிச்சை மற்றும் குடும்ப அடிப்படையிலான சிகிச்சை ஆகியவற்றை மருத்துவர்கள் மேற்கொள்கிறார்கள்.

ஊட்டச்சத்துக்கள் சிகிச்சை

ஊட்டச்சத்துக்கள் சிகிச்சை

இந்த சிகிச்சையில் டயட்டீஷியன் கருத்துப் படி ஆரோக்கியமான உணவுகள் எடுத்துக் கொள்ள வலியுறுத்தப்படுகிறது. அதிகப்படியான பசி, நொறுக்கு தீனிகள் சாப்பிடுவதை கண்டிப்பாக கட்டுப்படுத்த வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை போதுமான அளவு நீங்கள் எடுத்துக் கொண்டு வந்தாலே புலுமியாவை விரட்டி விடலாம்.

மருந்து சிகிச்சை

மருந்து சிகிச்சை

மனச் சோர்வை குறைக்க ஆன்டி டிப்ரசன் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகிறது. பசியை தூண்டும் செரோடோனின் மறுபயன்பாட்டு தடுப்பானான (எஸ்.எஸ்.ஆர்.ஐ) ஃப்ளூக்ஸெடின் போன்ற ஒரு ஆண்டிப்ரஷன் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.

MOST READ: இந்த நாய் 19 பால் ரப்பரை முழுங்கிட்டு என்ன பண்ணுச்சுனு தெரியுமா? நீங்களே பாருங்க அந்த கொடுமைய

மருத்துவமனையில் சிகிச்சை

மருத்துவமனையில் சிகிச்சை

புலுமியா அறிகுறிகள் மிகவும் தீவிரமாக இருந்தால் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Bulimia: Causes, Symptoms, Diagnosis and Treatment

Bulimia nervosa, also called bulimia, is a serious, life-threatening eating disorder characterized by episodes of binge eating. Eminent personalities like Princess Diana, Britney Spears, Lady Gaga, Lindsay Lohan, and Demi Lovato have battled bulimia.
Story first published: Thursday, July 4, 2019, 15:15 [IST]