Latest Updates
-
கேரட்டும், ஜவ்வரிசியும் இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் செய்யுங்க.. பிள்ளைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
Nag Panchami 2026: நாக பஞ்சமியில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
காரசாரமான சிக்கன் ஈரல் வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்த 7 அறிகுறிகள் அடிக்கடி தெரியுதா? அப்ப அது குடல்வால் புற்றுநோயின் அறிகுறியா இருக்கலாம்.. உஷார்.. -
ஆகஸ்ட் 19-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..! -
கவுண்டம்பாளையம் சிக்கன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 16 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மனச்சுமை அதிகரிக்கப்போகுதாம் -
புதன்-குருபகவான் இணைப்பால் சூப்பர் ஸ்டாரா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கோவா ஸ்டைல் சிக்கன் மசாலா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
வார ராசிபலன் (16 August 2026 - 22 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா
எழுதும்போது உங்களுக்கு கை நடுங்குதா? அது ஏன்? எப்படி ஈஸியா சரி பண்ணலாம்னு தெரியுமா?
எழுதும்போது கை நடுங்குவதை சரிசெய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் அறிகுறிகள் பற்றியும் இங்கு விளக்கப்பட்டுள்ளது.
நீங்கள் எப்பொழுது எழுத ஆரம்பித்தாலும் உங்கள் கைகள் கட்டுப்பாடின்றி போகிறதா? அப்போ உங்களுக்கு எழுதுவதால் ஏற்படும் பிடிப்பு பிரச்சினை உள்ளது. இந்த எழுத்து பிடிப்பு என்பது ஒருவிதமான நரம்பியல் பிரச்சினை என்று கூறுகின்றனர்.
இதனால் தான் கைகள் கட்டுப்பாடின்றி இயங்குகிறது. இதனால் நீங்கள் சரியாக எழுத முடியாமல் தவிக்க நேரிடும். இந்த நரம்பியல் பாதிப்பு உங்கள் கைகள், விரல்கள் என்று எல்லா இடங்களிலும் பரவுகிறது.

கை நடுக்கம்
இந்த தவறான செயலால் நமது மூளையானது தசைகளுக்கு தவறான சிக்னல்களை கொடுத்து விடுகிறது. இதனால் தான் உங்கள் கைகள் ஏதோ ஒரு பக்கமாக திருப்பி கொள்கிறது. இந்த அறிகுறிகள் பொதுவாக கை சம்பந்தமான வேலைகளை செய்யும் போது மட்டும் ஏற்படுகிறது. அதாவது கைகளால் எழுதுதல், விளையாடுதல், தட்டச்சு செய்தல், கம்பியூட்டர் கீ போர்டு டைப்பிங் போன்ற வேலைகளை செய்யும் போது ஏற்படுகிறது.

அறிகுறிகள்
இந்த எழுத்து பிடிப்பு உங்களில் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இதன் அறிகுறி கைகளால் செய்யப்படும் வேலைகளை செய்யும் போது வருகிறது.
பேனா அல்லது பென்சிலை பிடிக்க சிரமப்படுதல்.

மணிக்கட்டில் வலி
எழுதும் போது விரல்கள் விரிந்து கொண்டு செல்லுதல்
மணிக்கட்டு மற்றும் முழங்கைகள் அசாதாரணமாக விளங்குதல்
கைகள் மற்றும் விரல்கள் கட்டளைக்கு பதிலளிக்காமல் இருத்தல்
ஆர்த்ரிட்டீஸ் வலியை போக்கும் 8 உடற்பயிற்சிகள்

விளைவுகள்
தொடர்ச்சியான கை அசைவுகள் மூளையில் ஒரு மறுபதிப்பை ஏற்படுத்தி விடும். இதனால் தான் வலி ஏற்படுகிறது. இந்த சிக்னல் மூளைக்கும் கைகளுக்கான தொடர்பில் இடையூறை ஏற்படுத்துகிறது. இதன் அறிகுறிகள் சில கை செயல்களை செய்த பிறகே தெரிய வரும். அடிக்கடி தொடர்ச்சியான கை வேலைகள் செய்தல் மற்றும் எழுதும் போது சரியான நிலையில் கைகளை வைத்து எழுதாமல் இருத்தல் போன்றவை எழுத்து பிடிப்புக்கு காரணமாக அமைகிறது.

கண்டறிதல்
உங்களுக்கு எதாவது எழுத்து பிடிப்பின் அறிகுறிகள் தென்பட்டால் உடனே ஒரு நரம்பியல் மருத்துவரை சந்தித்து விடுங்கள். அவர் உங்களுக்கு இந்த எழுத்து பிடிப்பு எப்படி ஏற்படுகிறது, தசைகள் இதில் கலந்து கொள்கிறதா போன்ற விஷயங்களை ஆராய்ந்து சொல்வார்.

சிகிச்சைகள்
உடற் சார்ந்த தெரபி
எழுத்து பிடிப்பு அறிகுறிகளை குறைக்க மருத்துவர்கள் முதலில் நீங்கள் பேனாவை சரியான நிலையில் பிடிக்க வேண்டும் என்கிறார்கள். உங்களுடைய கை மற்றும் தோள்பட்டை. நிலை அல்லது பேனா பிடிக்கும் விதத்தை மாற்ற வேண்டும்.

போட்டாக்ஸ் ஊசி
இந்த போட்டாக்ஸ் ஊசியை பாதிக்கப்பட்ட தசைகளின் மீது செலுத்தி எழுத்து பிடிப்பை தவிர்க்கலாம்.

திசை திருப்புதல்
உங்கள் மன அழுத்தத்தை குறைத்தாலே போதும் இந்த எழுத்து பிடிப்பு பாதிப்பை குறைக்கலாம். மூச்சுப்பயிற்சி, தியானம் போன்றவை இதற்கு நல்ல பலன் தரும். அதே மாதிரி இதைப் பற்றியே நோயாளிகள் நினைக்காமல் இருக்க திசைதிருப்புதல் பயிற்சி கொடுக்கப்படுகிறது.
போட்டாக்ஸ் ஊசி நரம்புகளுக்கு பலனை அளிக்கும். நீங்கள் எழுதும் போது இருக்கும் செளகரியமான நிலை இந்த பாதிப்பை போக்கி விடும். சில நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகளும் பரிந்துரைக்கப்படுகிறது. உடற் சார்ந்த தெரபி, மனம் சார்ந்த தெரபி மற்றும் மருந்துகள் மூன்றும் சேர்ந்து இந்த எழுத்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.



Click it and Unblock the Notifications
