பின் பக்க இடுப்புத் தசையை குறைக்க எளிய வழிமுறைகள்!

Posted By:
Subscribe to Boldsky

உடல் எடை குறித்து விழிப்புணர்வு அடைந்திருக்கும் இந்த நேரத்தில் தான் அவை குறித்த புரளிகளும் வேகமாக பரவுகிறது. எதை நம்புவது, எதை தவிர்ப்பது என்று தெரியாமல் பார்ப்பதையெல்லாம் கேட்பதையெல்லாம் சரியானதென நினைத்து பின்பற்ற ஆரம்பித்து விடுகிறார்கள்.

இதனாலேயே பலருக்கும் உடல் நல பாதிப்பு ஏற்படுகிறது. ஆம், உடலில் அதிக கொழுப்பு சேர்ந்திருப்பது உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது தான். ரத்தக் கொதிப்பு,மாரடைப்பு, பக்கவாதம் உட்பட பல்வேறு நோய்களை உண்டாக்கிடும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதோடு அதீத உடல் எடை சில நேரங்களில் தாழ்வு மனப்பான்மையையும் கொடுக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

Tips to get rid of back fat

கொழுப்பு என்றதுமே பலரும் முக்கியமாக கவனிப்பது தொப்பையைத் தான். தொப்பையைத் தாண்டி உங்களுக்கு அதிகம் கொழுப்பு சேருகிற இடம் இடுப்பின் பின் பகுதி. இடுப்பு பகுதி பெரிதாகிக் கொண்டே செல்கிறது என்றோ தொப்பையினால் அப்படித் தெரிகிறது என்றோ நினைக்காதீர்கள். உங்களுக்கு பின்பக்க இடுப்புப் பகுதியில் அதிகப்படியான கொழுப்பு சேருகிறது என்று அர்த்தம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உள்ளாடை :

உள்ளாடை :

பெண்களுக்கு தான் பின்னால் அதிகம் சதை சேரும் வாய்ப்பு அதிகம். நீங்கள் அணிகிற உள்ளாடை கூட அதற்கு ஓர் காரணியாக அமைந்திடும். நீங்கள் உங்களுக்கு பொருந்தாத ப்ரா அணிவது இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

உங்கள் அளவை விட சிறிதான ப்ரா அணிந்தால் அது தருகிற அழுத்தத்தினால் உங்களுக்கு இடுப்பின் பின்பக்க தசை கூடுவதற்கு வாய்ப்புண்டு.

பெண்கள் :

பெண்கள் :

பெண்கள் உள்ளாடை தேர்ந்தெடுக்கும் போது அது மார்பகத்திற்கு மட்டுமே பயன்படுவதாக நினைக்கிறார்கள்.ஆனால் அது உண்மை கிடையாது உங்களது தோல்பட்டையில் பதிகிற ஸ்ட்ராப் முதற்கொண்டு நீங்கள் கவனம் செலுத்துங்கள். சிலர் அதனை அட்ஜெஸ்ட் செய்வதே கிடையாது.

இறுக்கமான ப்ரா :

இறுக்கமான ப்ரா :

மேல் பகுதியில் அதிக இறுக்கமானதாக இருப்பதால் தசைகள் தளர்ந்து இடுப்புப் பகுதியில் தசை கூட ஆரம்பிக்கும். ஆரம்பத்தில் எந்த வித்யாசமும் தெரியாது.ஆனால் காலம் செல்லச்செல்ல அந்த மாற்றத்தை உணர ஆரம்பிப்பீர்கள்.

அதோடு நீங்கள் உள்ளாடையை தேர்ந்தெடுக்கும் போதும், முன்பக்கம் மட்டுமல்லாது பின் பக்கம் எப்படியிருக்கிறது என்பதையும் சரி பார்த்து வாங்குங்கள்.

ஒரேயிடத்தில் :

ஒரேயிடத்தில் :

இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தினால் பலருக்கும் நீண்ட நேரம் ஒரேயிடத்தில் உட்கார்ந்து வேலை பார்க்கிற மாதிரியான சூழல் கிடைத்திருக்கிறது. இதனால் காலையிலிருந்து மாலை வரை ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

நீண்ட நேரத்திற்கு ஒரே பொசிசனில் இருப்பதால் தசைகள் அதற்கேற்ப செட் ஆக ஆரம்பித்துவிடும்.

உடற்பயிற்சி :

உடற்பயிற்சி :

பொதுவாக உங்கள் உடலுக்கு உடற்பயிற்சி என்பது மிகவும் அவசியமானது. உணவு மூலமாக உடலுக்குள் சேருகிற எனர்ஜியை முறையாக செலவழிக்க வேண்டும். அப்படி செலவழிக்கவில்லை என்றால் அவை கொழுப்பாக சேர்ந்திடுகிறது.

எனர்ஜியை செலவழிக்க வேண்டுமெனில் உங்களுக்கு உடல் உழைப்பு மிகவும் அவசியம்.

உணவுப் பழக்கம் :

உணவுப் பழக்கம் :

உடல் எடையை குறைக்க மட்டுமல்ல, ஆரோக்கியமான வாழ்க்கையை பின்பற்றவும் அது தொடருவும் இந்தப் பழக்கம் உங்களுக்கு கை கொடுக்கும். முதலாவதாக நீங்கள் பார்க்க வேண்டியது, எந்த துரித உணவுகளும் உங்கள் உணவுகள் பட்டியலில் இடம் பிடிக்கவில்லை என்பது தான். துரித உணவுகள் என்றால் பாக்கெட் உணவுகள் மட்டுமல்ல அதிக கொழுப்புள்ள உணவு, சர்க்கரை உணவு, எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவு ஆகியவையும் அடக்கம்.

இவற்றை தவிர்த்து விட வேண்டியது அவசியம்.

 தண்ணீர் :

தண்ணீர் :

உணவிற்கு கொடுக்கிற அதே முக்கியத்துவத்தை தண்ணீருக்கும் கொடுக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் அவை தான் உங்கள் உடலில் சேருகிற நியூட்ரிசன்களை எல்லாம் முறையாக செரிக்க உதவுகிறது.

அதோடு நம் உடலுக்கு தண்ணீர் சத்து மிகவும் அவசியமாகும். தண்ணீருக்கு பதிலாக என்று சொல்லி புட்டிகளில் அடைக்கப்பட்டு விற்கக்கூடிய ரசாயனம் கலந்த குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்த்திடுங்கள்.

வயது :

வயது :

இவற்றைத் தவிர வயதும் ஓர் காரணமாய் இருக்கிறது. வயது கூட கூட.... தசைகள் தளர்ந்து போகும். அதோடு கூடுதலாக உங்களின் உடலில் கொழுப்பும் அதிகமாக இருந்தால் அவை தொப்பையாகவோ அல்லது பின் பக்க தசையாகவோ உடலில் சேர்ந்திடும்.

குறைக்கலாம் :

குறைக்கலாம் :

பின் பக்க தசை பிரச்சனையோ அல்லது தொப்பையோ எதுவாக இருந்தாலும் அவர்களுக்கு உடனடியாக குறைந்து விட வேணும், என்று நினைக்கிறார்கள். இது முற்றிலும் தவறான போக்கு. தொடர்ந்து அதற்கான முன்னெடுப்புகளை விடாமுயற்சியுடன் எடுக்க வேண்டியது அவசியம்.

நீங்கள் அவசியம் செய்ய வேண்டிய சில பயிற்சிகள் குறித்து விரிவாக தரப்பட்டுள்ளது.

புல் அப் :

புல் அப் :

இந்த பயிற்சி செய்வதினால் உங்களது தசை டோண்ட் ஆகும். நார்மலாக தரையில் படுத்து புல் அப் செய்வதற்கே அத்தனை நன்மைகள் உண்டு. ஆரம்பத்தில் செய்கிறவர்களுக்கு தசை பிடிப்பு ஏற்பட்ட மாதிரியான வலி இருக்கும். அவை தொடர்ந்தாலோ அல்லது அதிகமானாலோ பயிற்சியை தொடராதீர்கள். தீவிரமாக உடல் எடையை குறைக்கிறேன் என்று ஒரே நாளில் அதிக நேரம் பயிற்சி செய்வதும் ஆபத்து.

புஷ் அப் :

புஷ் அப் :

இந்த உடற்பயிற்சி குறிப்பாக உங்களது மார்பக பகுதிக்கு அதிக வேலையை கொடுக்கும். அதோடு இவை உங்களின் பின் பக்க தசையை குறைக்கவும் சிறந்த பயிற்சியாக விளங்குகிறது. முதலில் ஸ்டாண்டர்ட் புஷ் அப் போஸில் ஆரம்பியுங்கள். ஒரு நாளைக்கு பத்து முறை செய்தாலே போதுமானது.

தம்பில் பாடி ரோ :

தம்பில் பாடி ரோ :

உங்களின் கால் முட்டியை சற்று உயரமான டேபிளில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் உங்களின் ஒரு கையை ஊன்றிக் கொள்ளுங்கள் இன்னொரு கையில் மூன்று முதல் ஐந்து பவுண்ட் எடையுள்ள தம்பிள்ஸ் தூக்குங்கள்.

இப்போது கையில் தூக்கப்பட்ட எடையுடன் சற்று முன்னோக்கி சாயுங்கள். முன்னோக்கி வந்தவாரே கையில் தூக்கப்பட்டிருக்கும் வெயிட்டை கீழே வைக்க வேண்டும். பின்னர் அதனை மீண்டும் எடுக்க வேண்டும்.

இந்த பயிற்சியை தொடர்ந்து செய்திடுங்கள். இதனால் உங்களது இடுப்பு பகுதிக்கும் முதுகு பகுதிக்கு அதிக வேலை கிடைக்கும்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tips to get rid of back fat

Tips to get rid of back fat
Story first published: Tuesday, January 9, 2018, 11:00 [IST]