இப்படி வந்தா அதுவும் ஒருவகை புற்றுநோய்தானாம்... ஆனா உயிருக்கு பயப்படத் தேவையில்லை...

Subscribe to Boldsky

சருமப் புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை முன்னரை விட இப்போழுது அதிகரித்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதாவது சமீபத்திய ஆய்வுகள் , ஒவ்வொரு 5 அமெரிக்கர்களில் 1-வர் சருமப் புற்றுநோயாளியாகிறார் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.

health

இந்தத் தகவலைக் கேட்டவுடன் உங்களுக்குள் ஒரு பயம்கலந்த உணர்வு தோன்றும் என்பதை நாங்கள் அறிவோம்.ஆனால், ஒரு நல்ல செய்தி இருக்கிறது. பெரும்பாலான தோல் புற்றுநோய்களை சிகிச்சையின் மூலம் குணப்படுத்தமுடியும் என்பதே அந்த நல்ல செய்தி.அதுவும் ஆரம்ப நிலையில் கண்டறியப்படும் நோய் குணமடைய வாய்ப்பு அதிகம்.சில வகை தோல் புற்றுநோய்களை சில இயற்கை சிகிச்சையின் உதவியுடன் குணமடையச் செய்யலாம். எப்படி? வாருங்கள் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தோல் புற்றுநோய் என்றால் என்ன?:

தோல் புற்றுநோய் என்றால் என்ன?:

தோல் புற்றுநோயானது தோல் செல்களை அழிக்கும் வீரியம் மிக்க வளர்ச்சி ஆகும். தோலின் மேற்பரப்பு அடுக்குகளை உருவாக்கும் எபிடெர்மல் செல்கள் மூலமாக பொதுவாக இது உருவாகிறது. பெரும்பாலான தோல்ப் புற்றுநோய்கள் உடலின் மற்ற பாகங்களுக்கு பரவுவதில்லை அல்லது உயிருக்கு அச்சுறுத்தலாக அமைவதில்லை. தோல் புற்றுநோயானது பல்வேறு வகைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

தோல் புற்றுநோயின் வகைகள்:

தோல் புற்றுநோயின் வகைகள்:

• செதிள்(ஸ்க்யூமவ்ஸ்) செல் கார்சினோமா:

இந்தத் தோல் புற்றுநோயானது அனைத்து தோல் புற்றுநோய்களுள் சுமார் 20% நோய்களுக்குக் காரணமாகிறது.நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நபர்களில் இது மிகவும் பொதுவானது. இந்த செல்கள் உங்கள் சருமத்தின் மேற்பரப்புக்குக் கீழே அமைந்துள்ளன. இவை கீழ்ப்புற லேயராக செயல்படுகின்றன.

• அடித்தள(பசல்) செல் கார்சினோமா:

உலகில் மிகவும் அதிகம் தோன்றும் பொதுவான தோல்ப் புற்றுநோயானது பசல் செல் புற்றுநோயாகும். செதிள் செல்களுக்குக் கிழே அமைந்துள்ளன இந்த பசல் செல்கள். புது செல்கள் உருவாக இவைகளே காரணம்.

• குறைந்த எண்ணிக்கை பொது தோல் புற்றுநோய்:

மெலனோமா, மெர்கல் செல் கார்சினோமா, வித்தியாசமான ஃபைப்ராக்ஸான்தோமா, கியூட்டினேஸ் லிம்போமா , மற்றும் டெர்மடோபைபோரோஸர்கோமா ஆகியவை குறைவாகத் தோன்றும் தோல்ப் புற்றுநோய்களின் பொதுவான வகைகள் ஆகும்.

அறிகுறிகள்:

அறிகுறிகள்:

தோல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளில் கவனிக்கத்தக்க சில: தோல் புற்றுநோயானது பொதுவாக பின்வரும் அறிகுறிகளால் வகைப்படுத்தப்படும்.

• ஒரு ஆறாத புண்

• தோலுக்கு மோல் மச்சம் போன்ற நிறமி பரவுதல்

• கரும்புள்ளிகள் அல்லது மச்சத்தைச் சுற்றி சிவப்பு வட்டம் அல்லது வீக்கம்

• அரிப்பு , மென்மை அல்லது வலி

• இரத்தப்போக்கு, மெலிவு, அல்லது மெலிந்த மச்சங்கள் .

பசல் செல் புற்றுநோயுடன் தொடர்புடைய சில பொதுவான அறிகுறிகள்:

• சிவப்பு, இளஞ்சிவப்பு, முத்து, அல்லது தோல் மேல் தோன்றும் வெளிர்ந்த புடைப்புகள்

• இளஞ்சிவப்பு தோல் புண்கள் மையத்தில் உரிக்கப்பட்டு, எல்லையோரத்தில் வளர்ந்து காணப்படுதல்.

• வெள்ளை அல்லது மஞ்சள் மெழுகு போன்ற ஒரு வரையறுக்கப்பட்ட எல்லையுடன் கூடிய வடு போன்ற தோற்றம்.

ஸ்குவாமவுஸ் செல் கார்சினோமாவுடன் தொடர்புடைய அறிகுறிகள் :

• தோல் மீது தோன்றும் சுலபமாக இரத்தம் கசியும் நிலையிலுள்ள சிவப்புத் திட்டுகள்

• வாரக்கணக்கில் குணமாகாத புண்கள் அல்லது காயங்கள்.

• சருமத்தின் மேற்பரப்பில் தோன்றும் உள்தள்ளப்பட்ட கடினமான வளர்ச்சி.

• ஒரு விந்தையான கரணை போன்ற வளர்ச்சி.

மெலனோமாவின் பொதுவான அறிகுறிகளை நீங்கள் புரிந்துகொள்ள உதவும் ABCDE விதிகள் உள்ளன .

உங்கள் தோலில் உள்ள மச்சங்கள் அல்லது கரும்புள்ளிகளில் பின்வரும் அம்சங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கவனித்தால் உங்கள் மருத்துவரிடம் உடனே தெரிவிக்க வேண்டும்:

• சமச்சீரற்ற (Asymmetry (A)) - பாதி மச்சமானது மற்ற பாதியுடன் பொருந்தவில்லை.

• எல்லை (Border (B)) - ஒழுங்கற்ற, துண்டிக்கப்பட்ட அல்லது மங்கலான மச்சத்தின் விளிம்புகள்.

• கலர் (Color (C)) - மச்சத்தின் நிற வேறுபாடு அல்லது ஒரு மச்சத்தின் அனைத்து நிறமும் ஒரே மாதிரியானவை அல்ல.

• விட்டம் (Diameter (D) ) - இந்தப் புள்ளியின் அகலம் 6 மிமீ விட பெரியதாக உள்ளது.

• பரிணாம வளர்ச்சி (Evolving (E)) - அளவு, வடிவம், அல்லது மச்சத்தின் நிறம் மாற்றம்.

சில மெலனோமாக்கள் மேலே கூறப்பட்ட நிலைகளுக்குப் பொருந்தாமல் போகலாம் என்பதால் , உங்கள் மச்சத்தின் மேலே சில வித்தியாசமான மாற்றங்களை நீங்கள் கவனித்தால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டியது அவசியம்.

அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு தோல் புற்றுநோயைத் தீர்க்க அதன் காரணங்கள் ,அறிகுறிகள்,விளைவுகளைப் பற்றி நீங்கள் சரியான விழிப்புணர்வு கொண்டால் மட்டுமே சாத்தியம்.

காரணங்களும் விளைவுகளும்

காரணங்களும் விளைவுகளும்

தோல்களின் டிஎன்ஏவிலுள்ள பிறழ்வுகள் (பிழைகள்) காரணமாக தோல்ப் புற்றுநோய் ஏற்படுகிறது, இதனால் கட்டுப்பாடற்ற உயிரணு பெருக்கம் ஏற்படுகிறது.

இந்தப் பிறழ்வுகள் அல்லது பிழைகள் ஏற்படக் காரணம் :

• சூரிய ஒளியில் காணப்படும் புற ஊதாக் கதிர்வீச்சு

• நச்சுப் பொருட்கள் அல்லது வாயுக்களில் அகப்படுத்தல்.

• நோயெதிர்ப்புத் தன்மை தடுமாற்றம்.

மேலும் சில ஆபத்துக் காரணிகள் உங்களில் புற்றுநோயை ஏற்படுத்தும் ஆபத்தை அதிகரிக்கலாம். அவை:

• வெண்ணிறத் தோல், இவை குறைந்த நிறமி அல்லது மெலனின் கொண்டிருக்கும். இவை சூரியனின் தீங்கு விளைவிக்கும் புறஊதாக் கதிர்களின் தாக்கத்திற்கு குறைவான பாதுகாப்பையே அளிக்கிறது.

• குழந்தைப் பருவத்தில் தோன்றிய வேனிற் கட்டி(வெங்குரு)

• மிகவும் அதிகமான சூரிய ஒளியில் இருத்தல்.

• சூரிய வெப்பம் உள்ள அல்லது அதிகமான வெப்ப நிலை

• அசாதாரணமான தோற்றமளிக்கும் மச்சங்கள்.

• ஆக்ட்னிக் கெராடோஸ்சஸ் போன்ற தோல் புண்கள்

• தோல்ப் புற்றுநோய் வரலாறுள்ள குடும்பம்

• கதிர்வீச்சு போன்ற மருத்துவ சிகிச்சைகளுக்கு உட்படுதல்

• ஆர்செனிக் போன்ற சில சேர்மங்களுக்கு உட்படுதல் உங்கள் புற்றுநோயை அதிகரிக்கிறது.

புற்றுநோய்க்கான வழக்கமான சிகிச்சைகளை நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். இந்த சிகிச்சைகள் மூலமாக உங்களின் தோல் புற்றுநோயை குணப்படுத்தும் போது, ​​அவை பெரும்பாலும் மிதமான பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும். அதனால்தான் இயற்கையான சிகிச்சைகள் வரவேற்கப்படுகின்றன. தோல் புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்கு உதவும் சில வீட்டு வைத்தியங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வைத்தியங்களை மட்டுமே செய்வது கூட தோல் புற்றுநோய்க்கு எதிராக கணிசமான முடிவுகளை கொடுக்கும்.

குணப்படுத்துவது எப்படி??

குணப்படுத்துவது எப்படி??

1. அத்தியாவசிய எண்ணெய்கள்

2. தேங்காய் எண்ணெய்

3. ஆப்பிள் சிடர் வினிகர்

4. கத்திரிக்காய் சாறு

5. மஞ்சள்

6. வைட்டமின் சி

7. பேக்கிங் சோடா

8. ஆளி விதை

அத்தியாவசிய எண்ணெய்கள்:

அத்தியாவசிய எண்ணெய்கள்:

A) சாம்பிராணி (குங்கிலியம்) எண்ணெய்:

சில துளிகள் சாம்பிராணி எண்ணெய் தேவைப்படும்

செய்ய வேண்டியது

1. சுத்திகரிக்கப்பட்ட விரல்களில் ஒரு சில துளிகள் சாம்பிராணி அத்தியாவசிய எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள்.

2. காயங்களின் மீது இதை மெதுவாகத் தடவுங்கள்

3. அதை இயற்கையாக உலர அனுமதிக்கவும்.

இதை, தினமும் 2 முதல் 3 முறை செய்ய வேண்டும்.

இது எவ்வாறு வேலை செய்கிறது:

பிரான்கின்சென்ஸ் எண்ணெய் என்பது குங்கிலியம் என்றழைக்கப்படும் ஒரு நறுமணப் பிசினிலிருந்து பெறப்பட்டது. 2009 ஆம் ஆண்டில் Biomed Central இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு ,புற்று நோய் செல்களைத் தூண்டும் வேலையை இந்த எண்ணெய் சிறப்பாகச் செய்வதை நிரூபித்தது. எனவே, இந்த எண்ணெயும் தோல் புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு சிறந்த ஒன்றாகும்.

தேங்காய் எண்ணெய்:

தேங்காய் எண்ணெய்:

• 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்

செய்ய வேண்டியது

1. ஒவ்வொரு நாளும் காலையில் வெறும் வயிற்றில் சுத்தமான , புதிய தேங்காய் எண்ணெயை ஒரு தேக்கரண்டி சாப்பிடுங்கள்.

2. பாதிக்கப்பட்ட மச்சங்கள் , காயங்கள் அல்லது பிற பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேங்காய் எண்ணையைத் தடவலாம்.

புற்று நோய் அறிகுறிகளில் முன்னேற்றத்தைக் காணும் வரை தினமும் ஒரு முறை இதைச் செய்யுங்கள்.

எவ்வாறு வேலை செய்கிறது?

தேங்காய் எண்ணெய் ஒரு சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மை கொண்டது மற்றும் லாரிக் அமிலம் போன்ற நடுத்தர-சங்கிலி கொழுப்பு அமிலங்களின் ஒரு பெரிய மூலமாகும். ஜார்ஜ் டெத் செல் டிஸ்கவரி இதழில் வெளியான ஒரு ஆய்வின் படி, லாரிக் அமிலம் புற்றுநோய் உயிரணுக்களின் அபோப்டோஸைத் தூண்டும் வேலையைச் செய்கின்றது. இதனால், தேங்காய் எண்ணெயையும் தோல் புற்றுநோயைக் குணப்படுத்த பயன்படுத்தப்படலாம்.

ஆப்பிள் சிடர் வினிகர்

ஆப்பிள் சிடர் வினிகர்

உங்களுக்குத் தேவை ,

• 1 தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகர்

• ஒரு குவளைத் தண்ணீர்

• தேன்

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

1. சூடான ஒரு குவளை நீரில், ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகரைச் சேர்க்கவும்.

2. இந்தக் கலவையில் சிறிது தேனைச் சேர்த்து நன்கு கலக்கவும்.

3. இந்தக் கலவையை குடியுங்கள்.

4. கூடுதல் நலன்களுக்காக பாதிக்கப்பட்ட பகுதியின் மேல் இந்தக் கலவையை நீங்கள் தடவலாம். தினசரி 1 முதல் 2 தடவை இந்த சிகிச்சையைப் பின்பற்றவும்.

ஏன் வேலை செய்கிறது?

ஆப்பிள் சைடர் வினிகர் உள்ளிட்ட அனைத்து வகையான வினிகரும் அசிட்டிக் அமிலத்தைக் கொண்டிருக்கின்றன. அசிட்டிக் அமிலத்தின் டீ-ப்ரோடோனேட் தன்மை, வயிற்றில் அசிட்டேட் அயனிகளை உருவாக்குகிறது.அசிடேட் புற்றுநோய்த் தடுப்புத் தன்மை கொண்டது. ஏனெனில் , அசிட்டேட் புற்றுநோய் செல்கள் பெருக்கம் மற்றும் இயக்கத்தை தடுக்கும் தன்மை கொண்டுள்ளது.

கத்திரிக்காய் சாறு

கத்திரிக்காய் சாறு

• ஒரு நடுத்தர கத்திரிக்காய்

• 1-2 தேக்கரண்டி வினிகர்

• சுத்திகரிப்பு பருத்தித் துணி

செய்ய வேண்டியது?

1. ஒரு நடுத்தர கத்திரிக்காயை எடுத்து தடிமனான பேஸ்ட்டாக உருவாக்க அதை நறுக்குங்கள்.

2. அதில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி வினிகரைச் சேர்க்கவும்.

3. மூடிய ஜாடியில் மூன்று நாட்களுக்கு இந்தக் கலவையை குளிர்விக்கவும்.

4. மூன்று நாட்களுக்குப் பிறகு, பருத்தித் துணியில் கொஞ்சம் கத்தரிக்காய் கலவையை எடுத்துக் கொள்ளுங்கள்.

5. அதை காயங்களின் மீது நேரடியாகத் தடவுங்கள்.

6. அல்லது பாதிக்கப்பட்ட பகுதியின் மீது இந்தக் கலவையுடன் கூடிய பருத்தித் துணியை சுற்றிக்கட்டலாம். விரைவான முடிவுகளுக்காக தினசரி பலமுறை இதைச் செய்ய வேண்டும்.

எவ்வாறு இது செய்கிறது?

கத்திரிக்காயில் சோலாசோடைன் கிளைகோசைட்ஸ் என்றழைக்கப்படும் கலவை உள்ளது. இந்தக் கலவை எந்த பக்க விளைவுகள் இல்லாமல் வீரியமிக்க மற்றும் premalignant தோல் புண்களுக்கு நன்கு சிகிச்சை அளிக்க வல்ல திறன் கொண்டுள்ளது.

மஞ்சள்:

மஞ்சள்:

• 2 தேக்கரண்டி மஞ்சள் தூள்

• நீர் (தேவையான அளவு )

செய்ய வேண்டியது

1. ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி மஞ்சள் தூள் எடுத்து தடிமனான பேஸ்ட்டாக்க சிறிது தண்ணீர் சேர்க்கவும்.

2. பாதிக்கப்பட்ட பகுதியில் இந்த பசையைப் பயன்படுத்துங்கள்.

3. தண்ணீரால் அதை சுத்தம் செய்வதற்கு முன் 20 முதல் 30 நிமிடங்கள் வரை விட்டு விடுங்கள்.

4. ஒரு குவளைப் பாலுடன், ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து தினமும் அருந்தலாம்.

தினசரி 3 முதல் 4 தடவை மஞ்சள் பேஸ்ட்டைப் பயன்படுத்துங்கள்.

எவ்வாறு வேலை செய்கிறது?

மஞ்சளில் காணப்படும் மிகவும் குறிப்பிடத்தக்க கலவைகளில் ஒன்று குர்குமின் ( curcumin ). குர்குமினின் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மை கேன்சருக்கு சிறந்த எதிர்ப்பண்புகளை வெளிப்படுத்துகிறது. இது புற்றுநோய் உயிரணுக்களில் ஒரு நுண்ணுயிர் எதிர்ப்பி விளைவை ஏற்படுத்துகிறது மற்றும் தலை மற்றும் கழுத்து ஸ்குமாஸ் செல் கார்சினோமா ஆகியவற்றிற்கு எதிராக திறம்படச் செயல்படுகிறது.

வைட்டமின் சி:

வைட்டமின் சி:

தேவைப்படும் பொருட்கள் :

• 1 டீஸ்பூன் தூய வைட்டமின் சி படிகங்கள்

• 1 அவுன்ஸ் தண்ணீர்

• சுத்திகரிப்பு பருத்தித் துணி

செய்ய வேண்டியது என்ன?

1. ஒரு அவுன்ஸ் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தூய வைட்டமின் சி படிகங்களைச் சேர்க்கவும்.

2. தேவைப்பட்டால் இன்னும் சிறிது வைட்டமின் சி சேர்க்க வேண்டும்( அனைத்து நீரும் குறையும் வரை)

3. பருத்தித் துணியைப் பயன்படுத்தி, இந்த கலவையை நேரடியாகத் தோல் கட்டிகளின் மேல் தடவவும்.

4. பேண்ட் எய்டு மூலம் கட்டியை மூடி, 2 முதல் 3 மணி நேரத்திற்கு பிறகு அகற்றவும்.

கட்டி அகலும் வரை தினமும் 2 முதல் 3 முறை இதைச் செய்யுங்கள்.

எவ்வாறு இது வேலை செய்கிறது?

வைட்டமின் சி -யின் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள், உங்கள் தோலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது சூரியக் கதிர்களின் காரணமாக ஏற்படும் தீவிர பாதிப்பிற்கு எதிராகப் போராட உதவுகிறது மற்றும் photocarcinogenesis - க்கு எதிராக பாதுகாப்பு வழங்குகிறது.

பேக்கிங் சோடா:

பேக்கிங் சோடா:

தேவைப்படும் பொருட்கள்

• 1-2 தேக்கரண்டி பேக்கிங் சோடா

• நீர் (தேவையான அளவு )

செய்ய வேண்டியது என்ன?

1. ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டி பேக்கிங் சோடாவில் ஒரு சில துளிகள் தண்ணீரைச் சேர்க்கவும்.

2. தடிமனான பேஸ்ட் உருவானவுடன் , உடனடியாக அதை கட்டிகள் மேல் தடவுங்கள்.

3. 30 முதல் 60 நிமிடங்கள் வரை விட்டு, பிறகு கழுவவும்.

4. ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒரு குவளை தண்ணீரில் சேர்த்து தினமும் அதை அருந்தலாம். பாதிக்கப்பட்ட தோலில் பேக்கிங் சோடாவை தினசரி பல முறை உபயோகப்படுத்த வேண்டும்.

எவ்வாறு வேலை செய்கிறது?

சமையல் சோடாவின் காரத்தன்மை , உங்கள் தோல் கட்டியின் pH ஐ அதிகரிக்க உதவுகிறது. PH இன் இந்த மாற்றமானது மெட்டாஸ்டாசிஸைத் தடுக்கிறது மற்றும் பிற சைட்டோடாக்ஸிக் ஏஜென்ட்களுக்கு கட்டிகளின் ரெஸ்பான்ஸை மேம்படுத்த உதவுகிறது.

ஆளி விதைகள்

ஆளி விதைகள்

உங்களுக்குத் தேவை,

• 1 தேக்கரண்டித் தூள் ஆளி விதை

• ஒரு கிளாஸ் சூடான நீர்

• தேன்

செய்ய வேண்டியது என்ன?

1. ஒரு க்ளாஸ் நீரில் ஒரு தேக்கரண்டி ஆளி விதைத் தூளைச் சேர்க்கவும்.

2. இதை நன்கு கலந்து, அதனுடன் தேனைச் சேர்க்கவும்.

3. இந்தக் கலவையை குடிக்கவும்.

4. அல்லது, நீங்கள் உங்களுக்கு பிடித்த பிற உணவினில் ஆளிவிதையைச் சேர்த்துக்கொள்ளலாம்.

தினசரி 1 முதல் 2 முறை இவ்வாறு செய்ய வேண்டும்.

எவ்வாறு வேலை செய்கிறது?

ஆளி விதைகள் லிக்னைன்கள் என்று அழைக்கப்படும் வலுவான ஆன்டி ஆக்ஸிடண்ட்களின் ஆதாரங்கள். இந்த கலவைகள் புற்றுநோய் உயிரணுக்களின் மெட்டாஸ்டாசிஸைத் தடுப்பதில் உதவுகின்றன மற்றும் இரண்டாம் நிலைக் கட்டிகள் வளர்வதைத் தடுக்கின்றன.

சருமப் புற்றுநோய் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க மேலே உள்ள வைத்தியங்களை நீங்கள் நம்பிக்கையுடன் பயன்படுத்தலாம். இருப்பினும், உங்கள் உணவு முறையும் இந்த தோல் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் முக்கிய பாத்திரத்தை (சில பிற வாழ்க்கை முறை விருப்பங்களை தவிர்த்து) கூடுதலாக வகிக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

டயட் சார்ட்

டயட் சார்ட்

தோல் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் திறனுள்ள உணவுகளின் பட்டியல் இங்கே.

தோல் புற்றுநோய்க்கான சிறந்த உணவுகள்:

• டார்க் பச்சைக் காய்கறிகள் மற்றும் ஆரஞ்சு (சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்)

•ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மத்தி, சால்மன், மற்றும் கானாங்கெளுத்தி போன்ற மீன் வகைகள்

• ரோஸ்மேரி, முனிவர்(Sage), வோக்கோசு மற்றும் துளசி போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த மூலிகைகள்.

• வைட்டமின்கள் ஏ, சி, மற்றும் ஈ நிறைந்த கொட்டைகள், சிட்ரஸ் பழங்கள், பால், முட்டையின் மஞ்சள் கரு, மற்றும் மொஸெரெல்லா சீஸ்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

• ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த காய்கறி எண்ணெய்கள்

• கூடுதல் அளவிலான ஊட்டச்சத்து மருந்துகள்

• ஜங்க் உணவுகள்

• பதப்படுத்தப்பட்ட இறைச்சி

• மது

• கூடுதல் சேர்ப்பான்கள் மற்றும் சர்க்கரை

சரும புற்றுநோயின் மறுதோன்றலைத் தடுக்கவும், சிகிச்சையளிக்கவும் உங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது சிறந்தது. உங்களுக்கு இந்த நிலையில் என்ன சிகிச்சை? மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று இதன் மூலம் தெரிந்திருப்பதால் தோல் புற்றுநோயை நீங்கள் நிரந்தரமாக , தெளிவாக விலக்கிக் கொள்ள முடியும். சில வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலமாகவும் தோல் புற்றுநோயை முற்றிலும் தவிர்க்கலாம்,

தோல் புற்றுநோயை எவ்வாறு தடுப்பது ?

தோல் புற்றுநோயை எவ்வாறு தடுப்பது ?

• காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சூரிய ஒளியைத் தவிர்க்கவும்.

• வேனிற் கட்டிகளைத் தவிர்க்கவும்.

• தோல் பதனிடுதல் அல்லது தோல் பதனிடப்பட்ட படுக்கைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

• சூரியன் வெளிப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னர் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள். ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் அல்லது நீச்சல் அல்லது அதிகமான வியர்வைக்கு பின் மீண்டும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள்.

• சூரிய ஒளியில் வெளியே செல்லும் போது பாதுகாப்பு ஆடை, தொப்பிகள் மற்றும் சன்கிளாஸ்கள் அணியுங்கள்.

• பிறந்த குழந்தைகளை சூரிய ஒளியிலிருந்து ஒதுக்கி வையுங்கள்.

• தோல் புற்றுநோய்க்கான அறிகுறிகளை அறிய, ஒவ்வொரு மாதமும் தோலின் அனைத்துப் பகுதிகளையும் நன்றாகப் பரிசோதிக்கவும்.

• உங்கள் தோலை தொழில் ரீதியாக பரிசோதித்து முடிவுகளை அறிய வருடந்தோறும் சிறந்த தோல் நிபுணரை அணுகுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    skin cancer - Symptoms, Types, And Home Remedies, Diet Tips

    Skin cancer is the locally destructive malignant growth of the skin cells. It usually originates from the epidermal cells that make up the outer surface layer of the skin.
    Story first published: Thursday, June 14, 2018, 16:10 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more