For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீபாவளி வேற வருது... தீக்காயம் ஏதாவது பட்டா உடனே என்ன செய்யணும்? தெரிஞ்சிக்கோங்க...

By Mahi Bala
|

நம்முடைய உடலில் எங்காவது தீக்காயம் பட்டுவிட்டால், அது உண்மையிலேயே மிக அதிகமான வலியைத் தரக்கூடியது. ஆனால் அது பெரிதாகாமல், அந்த இடமும் சிவந்து போகாமல் சில நிமிடங்களிலேயே தீக்காயம் பட்ட இடத்தை சரிசெய்ய நிறைய வீட்டு வைத்திய முறைகள் இருக்கின்றன.

அவற்றை நாம் சரியாக தெரிந்து வைத்திருப்பதும் இல்லை. முறையாகப் பின்பற்றுவதும் இல்லை. அதிலும் தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கிற இந்த வேளையில் சின்ன குழந்தைகள் பட்டாசுகளை ஏமாகூடாமாக வெடித்து கையில் காயம் செய்து கொள்வார்கள். அதனால் அதைப்பற்றி தெரிநது வைத்திருப்பது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காரணிகள்

காரணிகள்

பொதுவாக தீக்காயங்கள் ஏற்படுவதற்கென்று சில அடிப்படையான விஷயங்கள் இருக்கின்றன. நம்முடைய உடல் பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு நிகழ்வு தான் அது. அதாவது மிக அதிகப்படியான குளிர்ச்சி, வெப்பம், மின்சாரம், சூரியவெப்பம், சில வேதிப்பொருள்கள் ஆகியவற்றை ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் நம்முடைய உடல் ஏற்றுக்கொள்வதில்லை. புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், மனித உடலானது 40 டிகிரி செல்சியல் வரை வெப்பத்தைப் பொறுத்துக் கொள்ளும். அதற்குமேல், நம்மால் தாங்கிக் கொள்ள முடியாது.

MOST READ: உங்க நகங்களில் இப்படி வெண்புள்ளிகள் இருக்கா? அதுனால பிரச்சினை வருமா? எப்படி சரிசெய்யலாம்?

தீக்காயத்தின் வகைகள்

தீக்காயத்தின் வகைகள்

தீக்காயத்தின் அளவும் காயமும் அதன் வலியும் அதனுடைய வெப்பநிலையைப் பொருத்துதான் மாறுகிறது. அதன் அடிப்படையில் தான் தீக்காயத்தை மருத்துவர்கள் வகைப்படுத்துகின்றனர்.

முதல் டிகிரி தீக்காயம்

முதல் டிகிரி தீக்காயம்

தீக்காயங்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றன. அவற்றில் முதல் வகை என்பது நம்முடைய வெளிப்புற மென்மையான தோலில் தீ லேசாகப் பரவினால் ஏற்படும் வலியையும் தோல் சிவப்பாவதையும் குறிக்கிறது. குறிப்பாக, அதிக நேரம் சூரிய ஒளி வெயிலில் நின்று கொண்டிருந்தால் இந்த வகையான சன் பர்ன் என்று சொல்லப்படும் தீக்காயம் ஏற்படும்.

இரண்டாம் டிகிரி தீக்காயம்

இரண்டாம் டிகிரி தீக்காயம்

இந்த இரண்டாம் டிகிரி தீக்காயம் என்பது முதல்நிலையை விட சற்று ஆழமானது. இதுவும் வெளிப்புற சருமத்தில் தான் ஏற்படும். வலியும் சருமச் சிவப்பும் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். சிவந்த சருமத்தின் மேல் சின்ன சின்னதாக கொப்புளங்களும் அதனுள்ளே நீர் போன்று திரவமும் இருக்கும். அந்த கொப்புளங்கள் ஒருவேளை உடைந்துவிட்டால் வலி அதிகமாகும்..

மூன்றாம் டிகிரி தீக்காயம்

மூன்றாம் டிகிரி தீக்காயம்

சருமத்தின் மெல்லிய மேல் தோலைத் தாண்டி, தீ நம்முடைய சதைப்பகுதி திசுக்களுக்குப் பரவிவிட்டால், அவை எல்லாமே மூன்றாம் டிகிரி தீக்காயத்திற்குள் அடங்கிவிடும். இந்த வகை தீக்காயங்கள் உள்ளிருக்கும் நரம்புகள் வரை கூட பரவும்.

MOST READ: தொங்கின சருமத்தையும் இப்படி சிக்குனு மாத்தணுமா? தேங்காய் எண்ணெயை இதோட அப்ளை பண்ணுங்க

காரணங்கள்

காரணங்கள்

ஆவி பிடிப்பது, சூடான திரவங்கள் படுதல்

சூடான உலோகங்களைத் தொடுதல், சூடான கண்ணாடி மற்றும் சூடான பொருள்கள், பாத்திரங்களைத் தொடுவதன் மூலம் ஏற்படும்.

மின்சாரம் தாக்குதல், மின்சாதனங்களின் சூடு

எக்ஸ்ரே, சிகிச்சைக்கு தரப்படும் ரேடியேசன் வெப்பங்கள்

சூரிய ஒளி, புறஊதா கதிர்கள் தாக்கம்

வலிமையான அமிலங்கள், கெமிக்கல்கள், பெயிண்ட் தின்னர்கள், கேஸ் சம்பந்தப்பட்டவை

எப்படி தடுப்பது

எப்படி தடுப்பது

எதையுமே வரும்முன்னர் காப்பது தானே சிறந்தது. அதேபோல் தான் இந்த தீக்காயங்களும். தீக்காயத்தை எப்படி வரும்முன் தடுப்பது என நீங்கள் கேட்கலாம். ஆனால் எதையுமே கொஞ்சம் முன்னெச்சரிக்கையுடன் கையாண்டால், தவிர்க்க முடியும். அதற்கு என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

அடுப்பிலிருந்து உணவுகளை இறக்கும்பொழுது கவனமாக இருக்க வேண்டும்.

அடுப்பு அணைக்கப்பட்டு இருக்கிறதா என்று சரிபார்க்க வேண்டும். இல்லையென்றால் குழந்தைகள் கைவைக்க நேரிடும்.

சூடான பானங்கள், நீர் ஏதேனும் இருந்தால் குழந்தைகள் கைக்கு எட்டாத நிலையில் வைக்க வேண்டும்.

தண்ணீர் இருக்கும் இடத்தில் இருந்து மின்சாதனப் பொருள்களைத் தள்ளி வைக்க வேண்டும்.

உணவைப் பரிமாறும் முன் ஆறிவிட்டதா என்று பார்த்துவிட்டு பரிமாறுங்கள். குழந்தைகளுக்கு பாட்டிலை மைக்ரோவேவ் அவனில் வைத்துவிட்டு அப்படியு எடுத்துக் கொடுத்துவிடாதீர்கள். சூடான உணவையும் ஊட்டாதீர்கள்.

எப்போதும் தொளதொள ஆடைகளை அணிந்து கொண்டு சமையல் செய்யாதீர்கள். அது காற்றில் பறந்து தீப்பிடிக்க வாய்ப்பிருக்கிறது.

வீட்டு வைத்தியங்கள்

வீட்டு வைத்தியங்கள்

எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் சில சமயங்கள் நமக்கே கட்டுப்பாடில்லாமல் சின்ன சின்ன காயங்கள் நேர்வதுண்டு. தீபாவளி சமயம் வீட்டில் பலகாரங்கள் செய்வீர்கள். குழந்தைகள் பட்டாசுகள் வெடிப்பார்கள். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அப்படி ஏதேனும் தீக்காயங்கள் பட்டுவிட்டால் உடனே என்ன செய்ய வேண்டும் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

லாவெண்டர் ஆயில்

லாவெண்டர் ஆயில்

லாவெண்டர் ஆயிலில் உள்ள ஆன்டி செப்டிக் மற்றும் அனலஜெஸிக் பிராப்பர்டீஸ் நிறைந்திருக்கிறது. இதை அப்படியே நேரடியாக பாதிக்கப்பட்ட இடத்தில் அப்ளை செய்யலாம்.

தேன்

தேன்

தீக்காயம் பட்ட இடத்தில் உடனடியாக தேனை அப்ளை செய்யுங்கள்.. அது எரிச்சலைப் போக்கும். தீயின் தீவிரம் சருமத் திசுக்களுக்குள் பரவாமல் பார்த்துக் கொள்ளும். அதேபோல் பாதிக்கப்பட்ட இடத்தை நல்ல மாய்ச்சரைஸ் செய்து பாதிப்பிலிருந்து காக்கும்.

வினிகர்

வினிகர்

சின்ன சின்ன தீக்காயங்களுக்கு வினிகரப் பயன்படுத்தலாம். வெறுமனே சுத்தமா துணியால் பாதிக்கப்பட்ட இடத்தை துடைத்துவிட்டு, வினிகரை அப்ளை செய்யுங்கள். இரண்டு மணிநேரம் கழித்து குளிர்ந்த நீரால் அலசுங்கள்.

MOST READ: பக்கவிளைவுகள் இல்லாம எடைய குறைக்கணுமா? பூசணிக்காய இப்படி சாப்பிடுங்க...

குளிர்ந்த நீர்

குளிர்ந்த நீர்

தீக்காயம் பட்டஇடத்தில் உடனடியாக தண்ணீர் ஊற்றினால் காயம் அதிகமாகும் என்று சொல்வார்கள். ஆனா்ல குளிர்ந்த நீர் மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். ஆனால் இது மிகச்சிறந்த தீர்வைத் தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to Treat Burns with Home Remedies

here we are giving some home remedies for Treat Burns with Home Remedies.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more