For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மூக்கு ஒழுகாமல் தடுப்பது எப்படி? செலவில்லாமல் எப்படி விரட்டலாம்?

மூக்கு ஒழுகுதல் மற்றும் சைனஸ் பிரச்சினைக்கு தீர்வு தரும் சில வீட்டு வைத்திய முறைகள் பற்றி இங்கே கூறப்பட்டுள்ளது.

|

மூக்கு ஒழுகுதல் என்பது நம் அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒன்று. இதனை எளிதில் விரட்டி அடிக்க முடியும். மூக்கு ஒழுகுவது என்பது ஒருவருக்கு சளி பிடிக்கும்போது உண்டாகும் ஒரு நிலை ஆகும்.

How to Stop a Runny Nose at Home

இது ஏற்பட சில காரணங்கள் உண்டு. இதற்கான பொதுவான காரணம் கிருமி பாதிப்பு மற்றும் சளி. சில நேரங்களில் ஒவ்வாமை, ஹே காய்ச்சல் என்னும் தூசியால் உண்டாகும் சளிக் காய்ச்சல் மற்றும் இதர காரணங்களாலும் மூக்கு ஒழுகலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூக்கு ஒழுகுதல்

மூக்கு ஒழுகுதல்

மூக்கு ஒழுகுதலைப் போக்க பல எளிய தீர்வுகள் இயற்கை முறையில் உள்ளன. அதனைப் பற்றி இப்போது நாம் பார்க்கலாம். நீங்களும் இவற்றில் ஏதேனும் ஒன்றை முயற்சித்து உங்கள் பிரச்சனையை போக்கிக் கொள்ளலாம்.

அதிக தண்ணீர் பருகுங்கள்

அதிக தண்ணீர் பருகுங்கள்

தண்ணீர் அல்லது திரவ உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் உடல் நீர்ச்சத்தோடு இருக்கிறது. இதனால் மூக்கடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு மூக்கு ஒழுகுதல் தடுக்கப்படுகிறது. இதனால் மூக்கில் உள்ள சளி மெலிந்து வாய் வழியாக வெளியேறுகிறது. திரவ உணவுகளை எடுக்காமல் விடும்போது, சளி கெட்டியாகி, மூக்கடைப்பு ஏற்பட்டு இன்னும் நிலைமை மோசமாகிறது.

நீர்சத்தை இழக்கைச் செய்யும் பானங்களை பருக வேண்டாம். அதாவது காபி, மது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. இதனால் உடல் நீர்சத்தை இழக்கிறது.

MOST READ: நெஞ்சு சளி, வறட்டு இருமலை அடியோடு வெளியேற்றும் கடலை மாவு... எப்படி சாப்பிட வேண்டும்?

சூடான தேநீர்

சூடான தேநீர்

சில நேரங்களில் சூடான தேநீர் சளியின் தொல்லையில் இருந்து விடுபட உதவியாக இருக்கும். இதற்குக் காரணம், இதில் இருக்கும் வெப்பம் மற்றும் ஆவி, மூக்கடைப்பைப் போக்கி மூக்கை திறக்க உதவுகிறது.

மூலிகை தேநீரில் சில மூலிகை மற்றும் மூக்கடைப்பைப் போக்கும் பண்புகள் உண்டு. அழற்சி எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை நீக்க பண்புகள் நிறைந்த தேநீர் பருகலாம். செவ்வந்தி, இஞ்சி, புதினா போன்றவை சேர்க்கப்பட்ட தேநீர் உடலுக்கு நன்மைத் தரும்.

ஒரு கப் மூலிகை தேநீர் குறிப்பாக காபின் சேர்க்கப்படாததாக தயாரித்து அதனைப் பருகுவதற்கு முன் அதில் இருந்து வெளிவரும் ஆவியை நுகருங்கள். வறண்ட தொண்டை மற்றும் மூக்கு ஒழுகுதல் ஆகியவை பெரும்பாலும் இணைந்தே வரும். ஆகையால் மூலிகை தேநீர் பருகுவதால் வறண்ட தொண்டைக்கும் சிறந்த நிவாரணம் கிடைக்கும்.

நீராவி பேஷியல்

நீராவி பேஷியல்

சூடான ஆவியை நுகர்வதால் மூக்கு ஒழுகுதல் தடுக்கப்படுகிறது. 2015ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் பொதுவாக உண்டாகும் சளி தொந்தரவிற்கு ஆவியை நுகர்வதால் சிறந்த நிவாரணம் கிடைப்பதாக அறியப்படுகிறது. ஆவியை நுகர்வதால் ஒரு வாரத்தில் நிவாரணம் கிடைப்பதாகவும், அதனை செய்யாமல் விடும்போது ஒரு வாரத்திற்கு மேல் சளி தொந்தரவு இருப்பதாகவும் அறியப்படுகிறது.

தேநீர் கப்பில் வெளிவரும் ஆவியை நுகர்வதை விட நீராவி பேஷியலை முயற்ச்சிக்கலாம் அது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.

1. ஒரு அகலமான கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். ஆவி வரும் வரை அந்த நீரை சூடாக்கவும். கொதிக்க வேண்டிய அவசியமில்லை.

2. அந்த ஆவி வெளிவரும்போது அதில் உங்கள் முகத்தை 20-30 நிமிடம் காட்டவும். உங்கள் மூக்கு வழியாக மூச்சை இழுத்து விடவும். தண்ணீர் மிகவும் சூடாக இருந்தால் ஒரு இடைவெளி விட்டு பின்பு இந்த செயலைத் தொடரவும்.

3. அதன் பின்னர், மூக்கில் உள்ள சளியை வெளியில் எடுக்கவும்.

தேவைப்பட்டால் மூக்கடைப்பை போக்கும் அத்தியாவசிய எண்ணெய் பயன்படுத்தியும் ஆவி பிடிக்கலாம். சூடான நீரில் ஓரிரு துளிகள் எண்ணெய் சேர்ப்பது போதுமானது.

தைல எண்ணெய், புதினா எண்ணெய், ரோஸ்மேரி எண்ணெய், டீ ட்ரீ எண்ணெய், தீம் எண்ணெய், ஜாதிபத்திரி போன்றவை சிறந்த தீர்வுகளைத் தரும். இந்த தாவரங்களில் இருக்கும் மென்தால் மற்றும் தைமால் போன்ற கூறுகள் மூக்கடைப்பை போக்க உதவுகின்றன/

இந்த மூலிகைகள் அடங்கிய எண்ணெய் இல்லாவிட்டால் இந்த மூலிகைகளைக் காய வைத்தும் பயன்படுத்தலாம். மூலிகை தேநீர் தயாரிப்பில் இதனை சேர்த்து இதன் ஆவியை நுகரலாம். இதனால் நல்ல நன்மை கிடைக்கும்.

MOST READ: உங்க நகங்களில் இப்படி வெண்புள்ளிகள் இருக்கா? அதுனால பிரச்சினை வருமா? எப்படி சரிசெய்யலாம்?

சூடான குளியல்

சூடான குளியல்

மூக்கு ஒழுகுதலில் இருந்து உடனடி நிவாரணம் பெற வேண்டுமா? சூடான குளியலை முயற்சியுங்கள். சூடான தேநீர் மற்றும் நீராவி பேஷியல் போல் சூடான குளியலும் மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கடைப்பை உடனடியாக போக்கும். உங்கள் முகம் மற்றும் மூக்கு பகுதி நேரடியாக ஷவரில் இருந்து வெளிவரும் தண்ணீரில் படுமாறு குளிப்பதால் சிறந்த தீர்வுகள் கிடைக்கும்.

கெண்டி (Neti pot)

கெண்டி (Neti pot)

சைனஸ் தொந்தரவுகளுக்கு இந்த முறையை பெரும்பாலும் பயன்படுத்துவர். இதனால் மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்றவை நீங்கும்.

நெட்டி பாட் என்னும் கெண்டி ஒரு பக்கம் கைப்பிடி மற்றும் மற்றொரு பக்கம் நீளமான வாய் அமைத்திருக்கும் ஒரு குடுவை போல் இருக்கும். இந்த குடுவையில் வெதுவெதுப்பான உப்பு நீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். மூக்கின் ஒரு ஓட்டை வழியாக அந்த நீரை ஊற்றி இன்னொரு ஓட்டை வழியாக வெளியில் அந்த நீரை எடுக்க வேண்டும். இதனால் உங்கள் மூக்கு பகுதி முற்றிலும் சுத்தமாகிறது.

இந்த குடுவை அருகில் உள்ள மருந்தகத்தில் கிடைக்கும். அதில் குறிபிட்டுள்ள வழிமுறைப்படி அதனைப் பயன்படுத்தவும். இதன் ஒழுங்கற்ற பயன்பாடு, சில நேரம் மூக்கு ஒழுகுதலை இன்னும் மோசமாக மாற்றலாம். அல்லது சைனஸ் பாதிப்பை உண்டாக்கலாம்.

டிஸ்டில்டு தண்ணீர் அல்லது சூடாக்கப்பட்ட தண்ணீரை இதற்கு பயன்படுத்துவது நல்லது. குழாயில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரைத் தவிர்ப்பது நல்லது.

உப்பு நீருடன் ஓரிரு துளிகள் அத்தியாவசிய எண்ணெய்யை சேர்த்துக் கொள்ளலாம்.

MOST READ: பக்கவிளைவுகள் இல்லாம எடைய குறைக்கணுமா? பூசணிக்காய இப்படி சாப்பிடுங்க...

காரசாரமான உணவு உட்கொள்வது

காரசாரமான உணவு உட்கொள்வது

காரமான உணவுகள் மூக்கு ஒழுகுதலை இன்னும் மோசமடையச் செய்யும். இருப்பினும், மூக்கடைப்பு அறிகுறிகள் தென்படும்போது காரமான உணவுகள் சில நேரம் நல்ல பலனைத் தரும். உங்கள் உணவு சூடாக இருப்பதால் மேலும் நல்ல பலன் கிடைக்கும். முயற்சித்து பாருங்கள். காரமாக சாப்பிடும் பழக்ல்கம் இல்லாதவர்கள், முதலில் ஒரு சிறிய அளவு காரம் சேர்த்து சாப்பிட்டு பார்த்து அதன் பலனைக் கண்டு கொள்ளுங்கள்.

காரமான மசாலா பொருட்களான பெரிய மிளகு, இஞ்சி, குதிரை முள்ளங்கி போன்றவை சிறந்த தேர்வுகள் ஆகும். இந்த உணவுகளில் வெப்பம் மற்றும் சூடு அதிகமாக இருப்பதால் இவை தொண்டைப் பகுதியை விரியச் செய்து சைனஸ் தொந்தரவைப் போக்க உதவுகிறது.

கேப்சாய்சின்

கேப்சாய்சின்

மிளகின் காரத் தன்மைக்கு உதவும் ரசாயனம் இந்த கேப்சாய்சின். சொரியாசிஸ் மற்றும் நரம்பு வலிக்கான சிகிச்சையில் இது பயன்படுகிறது. ஆனால் இதனை மூக்கில் தடவுவதால், மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு நீங்குகிறது. மூக்கு ஒழுகுதலுக்கான மற்ற மருந்துகளை விட கேப்சாய்சின் சிறந்த தீர்வைத் தருவதாக பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

MOST READ: தொங்கின சருமத்தையும் இப்படி சிக்குனு மாத்தணுமா? தேங்காய் எண்ணெயை இதோட அப்ளை பண்ணுங்க

முடிவுரை

முடிவுரை

மருந்துகள் இல்லாமல் மூக்கு ஒழுகுதலைத் தீர்க்கும் முறை பல நம்மிடையே உள்ளது. ஆனால் மூக்கு ஒழுகுதலுக்கான அடிப்படைக் காரணங்களான கிருமிதொற்று, அல்லது சளி அல்லது ஒவ்வாமை ஆகியவற்றை இவை முற்றிலும் போக்குவதாக அறியப்படவில்லை. இந்த தீர்வுகள் மூலம் இவற்றில் இருந்து நிவாரணம் பெற முடியும். சளி , கிருமி பாதிப்பு அல்லது ஒவ்வாமை பாதிப்பிற்கான நேரடி சிகிச்சைகளை எடுத்துக் கொள்வது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to Stop a Runny Nose at Home

we explore here some home treatments for runny nose and sinus problems.
Story first published: Friday, September 28, 2018, 12:14 [IST]
Desktop Bottom Promotion