For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 6 விஷயத்தை ஃபாலோ பண்ணாலே 80 வயசு வரைக்கும் பல் விழாதாம்...

ஒவ்வொரு நபரின் பற்கள் வடிவத்திலும் மற்றும் அளவுகளிலும் வேறுபடுகின்றன. பற்கள் உணவை மெல்லவும் செரிமத்திற்கும் உதவுகின்றன.

|

ஒவ்வொரு நபரின் பற்கள் வடிவத்திலும் மற்றும் அளவுகளிலும் வேறுபடுகின்றன. பற்கள் உணவை மெல்லவும் செரிமத்திற்கும் உதவுகின்றன.

health

ஆரோக்கியமான புன்னகை என்பது ஒரு பெரிய சொத்து மற்றும் ஒரு ஆரோக்கியமான புன்னகையை பராமரிக்கும் பொருட்டு, வாய்வழி சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இந்த கட்டுரையில், சிறந்த வாய்வழி சுகாதாரத்தை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பல் பராமரிப்பு

பல் பராமரிப்பு

உங்கள் வாய்வழி ஆரோக்கியத்தை பராமரிகாமலிருப்பது பற்சிதைவு மற்றும் பல்லீறு வியாதிகளுக்கு வழிவகுக்கலாம். இது வலிமிகுந்ததாக இருக்கலாம். உங்கள் ஈறுகளையும் பற்களையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம். பல்லீறு நோய் ஒரு பொதுவான பிரச்சனையாகும் மற்றும் தேசிய வாய்வழி சுகாதார திட்டத்தில் இந்தியாவில் 95 சதவிகிதம் பல்லீறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதும், இந்திய குடிமக்களில் 50 சதவிகிதம் பல் துலக்குதல் இல்லை என்று குறிப்பிடுகிறது. இது 15 வயதிற்கு உட்பட்ட 70 சதவீத குழந்தைகளில் பற்சொத்தை இருப்பதை காட்டுகிறது.

குழந்தைகளுக்கு பராமரிப்பு குறிப்புகள்:

குழந்தைகளுக்கு பராமரிப்பு குறிப்புகள்:

• உங்கள் குழந்தையை அறிமுகமில்லாத உணவை உட்கொள்வதையும், இனிப்பு மற்றும் பழ சாறுகள் ஆகியவற்றை அதிகமாக உட்கொள்வதையும் தவிர்க்கவும்.

• உங்கள் பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான உணவு மற்றும் ஆரோக்கியமான சிற்றுண்டிகளுக்கு வசதியாக உதவுங்கள்.

• சாப்பாடு சாப்பிடும் நேரத்தில் சர்க்கரை மற்றும் சர்க்கரைச் சத்துள்ள உணவுகளை சாப்பிடாமல் இருந்தால் குழந்தைகளுக்கு பற்புழைகள்(cavities) ஏற்படுவதை தடுக்கலாம்.

இந்த 6 குறிப்புகள் உங்கள் வாய்வழி சுகாதாரத்தை பராமரிக்க உதவும்.

காலை உணவுக்கு முன் பல் துலக்குதல்

காலை உணவுக்கு முன் பல் துலக்குதல்

காலை உணவுக்குப் பிறகு துலக்குவது ஒரு மோசமான வாய்வழி பராமரிப்பு என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். சாப்பிட்ட பின் அமிலமானது வாயில் சுரக்கிறது அதன்பின் பல் துலக்குதல் என்பது அமிலத்தை பல்லீறுகளில் படவைக்கும். ஆரஞ்சு பழச்சாறு போன்ற சர்க்கரைப் பானங்களை அருந்தியிருந்தால், அது மேலும் மோசமானதாக இருக்கிறது. எனவே, நிபுணர்கள் காலை உணவுக்கு முன்பாக பல் துலக்குதலை ஆலோசனை செய்வது, இரவில் ஏற்பட்டுள்ள பாக்டீரியா கட்டமைப்பை குறைப்பதற்கு உதவுகிறது.

நாக்கை சுத்தமாக பராமரித்தல்

நாக்கை சுத்தமாக பராமரித்தல்

உங்கள் வாய் சில நேரங்களில் மோசமான நாற்றத்தை உண்டாக்குகிறதா? ஆம் என்றால், உங்கள் நாக்கு சுத்தமாக இல்லை எண்டு பொருள். நாக்கு என்பது பாக்டீரியா மற்றும் உணவு குப்பைகள் வாழக்கூடிய இடத்தில் உள்ளது, எனவே உங்கள் நாக்கை சுத்தமாக வைத்திருப்பது கெட்ட வாடையை குறைக்க உதவும். பாக்டீரியாவைக் கொல்ல ஒரு நாக்கு ஸ்கரப்பர் உபயோகிக்கவும் அல்லது உங்கள் நாக்கை துலக்கவும். உங்கள் நாக்கில் பாக்டீரியாவைக் கொல்வதற்கு உதவும் ஒரு பேக்கிங் சோடா பற்பசையைப் பயன்படுத்தலாம், ஏனெனில் இது உங்கள் வாயில் pH அதிகரிக்கிறது.

ப்ளாஸ் உபயோகப்படுத்துதல்

ப்ளாஸ் உபயோகப்படுத்துதல்

உங்கள் பற்களை துலக்குவதால் 60 % பரப்பில் உள்ள கிருமிகள் நீங்கிவிடும். ஆனால் பாக்டீரியா தகடு உங்கள் பற்கள் இடையே தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கும், இது ஒரு பல் துலக்குவதனால் மட்டும் சுத்தம் செய்ய இயலாது. இந்த தகடு நீக்க மற்றும் பல்லீறு வீக்கத்தை தடுக்க, தினமும் பல் ப்ளாஸ் பயன்படுத்த வேண்டும். இது உங்கள் பல்களுக்கு இடையே இறுக்கமான இடைவெளிகளை சுத்தம் செய்கிறது.

ஸ்மூத்திஸ்-யை தவிர்த்தல்

ஸ்மூத்திஸ்-யை தவிர்த்தல்

உங்கள் உணவில் உள்ள சர்க்கரைகள் வாயில் பாக்டீரியா தகடு மூலம் அமிலமாக மாறும் போது பல் சிதைவு ஏற்படுகிறது. உங்கள் சாப்பாடுகளுக்கு இடையில் ஸ்மூத்திஸ்(பழத்தின் சாறு மற்றும் ஐஸ்கிரீம் அல்லது தயிர் அல்லது பால் கொண்டு செய்யப்படும் ஒரு மென்மையான பானம்) உண்பது பல் பிரச்சனைகளை ஏற்படுத்தும். தினசரி மிருதுவானது ஆரோக்கியமான தேர்வு என்று கருதப்படுகிறது, ஆனால் சர்க்கரையை சேர்ப்பதன் மூலம் பற்களை பாதுகாக்கும் பற்சிப்பிக்கு சேதம் ஏற்படுத்துகிறது.

பற்கூச்சத்தை தவிர்க்காமை

பற்கூச்சத்தை தவிர்க்காமை

உணர்திறன் பற்கள் பிரச்சனை மிகவும் பொதுவானதாகி வருகின்றன. அது விலகிச்சென்ற பற்சிப்பி ஒரு அறிகுறியாகும. பல்திசு வெளியே தெரிதல், காற்று அடைக்கப்பட்ட(Fizzy) பானங்கள், சில மருந்துகள், மற்றும் வெண்மை நிறத்துக்கான சிகிச்சைகள் போன்றவை முக்கியமாக பற்களில் கூச்சத்தை ஏற்படுத்தக்கூடும். நீங்கள் வலியைக் கவனித்தால், ஒரு சிலிகான் டூத்பிரஷ் பயன்படுத்துவது சிறந்தது.

ஆரோக்கிய வாழ்வு

ஆரோக்கிய வாழ்வு

பல்லீறு கிருமிகள் நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆரோக்கியமான ஈறுகளைக் காட்டிலும் கரோனரி இதய நோய்களை உருவாக்க இரண்டு மடங்கு வாய்ப்புள்ளது என வல்லுனர்கள் கூறுகின்றனர். வாயிலிருந்து ரத்த ஓட்டத்திற்கு பாக்டீரியாவைக் கொண்டு செல்வதே இந்த பல்லீறு நோய்தான். ரத்தத்தில் இந்த பாக்டீரியா ஒரு வித பப்ரோடீன் உற்பத்திசெய்கிறது.இது ரத்த தட்டணுக்களை ஒன்றுடன் ஒன்று சேர்த்து இதயத்திற்கு செல்லும் ரத்தத்தை குழாயில் அடைப்பை ஏற்ப்படுத்தும். இந்த கட்டுரையை படித்து பிடித்திருந்தால், உங்கள் அன்பானவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இந்த மேலே குறிப்பிட்ட சில பல் பராமரிப்பு மற்றும் சுகாதார வழிகளை வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பின்பற்ற ஆரம்பித்தால் ஒரு ஒழுக்க முறையும் மேம்படும். 80 வயது ஆன பிறகும் கூட பற்கள் விழுந்து பொக்கை வாய் ஏற்படாமல் தவிர்க்க முடியும். பற்களும் உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். என்ன நண்பர்களே! இன்றிலிருந்தே இதை பின்பற்ற ஆரம்பித்து விடலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Maintain Oral Hygiene With These 6 Tips

Not maintaining your oral health can lead to tooth decay and gum disease, which can be painful.
Story first published: Thursday, May 31, 2018, 13:21 [IST]
Desktop Bottom Promotion