For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொசு எப்படி சில ரத்த வகைகளை மட்டும் கண்டுபிடித்து கடிக்கிறது என்று தெரியுமா? இப்படித்தான்...

By Mahi Bala
|

வீடு, தெருக்கள் என எங்கெல்லாம் தண்ணீர் தேங்கியிருக்கிறதோ அதெல்லாம் கொசுக்களுக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் சாலையோரங்களில் சாக்கடைகளில் தான் அது முட்டையிட்டு பல ஆயுிரக்கணக்கான கொசுக்களை உற்பத்தி செய்கிறது. அதுதான் அவைகளின் ஹாங்கவுட் இடமாக மாறியிருக்கும்.

how musquito likely to bite some blood group people

முடிவு? கொசு கடி மற்றும் அரிப்பு. கொசுக்கள் மிகவும் கொடிய தொற்று நோய்களில் சிலவற்றுக்கு மிக முக்கியக் காரணமாக இருக்கிறது. ஒரே இடத்தில் இருக்கும் எல்லோரையும் கொசு கடிக்காது. சிலரை மட்டும் கடிக்கும். சிலரை கடிக்காது. காரணம் அவர்களுடைய ரத்த வகைதான். சில குறிப்பிட்ட ரத்த வகைகளை மட்டும் கொசு எளிதில் கண்டுபிடித்து கடிக்கும். அது எப்படி கண்டுபிடிக்கிறது என்பதைப் பற்றி பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரத்த வகைகளும் கொசுக்களும்

ரத்த வகைகளும் கொசுக்களும்

உலக மக்கள் தொகையில் சுமார் 20% கொசு கடியால் பாதிக்கப்படுவதாக நம்பப்படுகிறது. இது ஏன் என்று யோசித்தீர்களா? இங்கே சில உண்மைகள் உள்ளன. மனிதர்களில் 85% பேர் அவர்களது ரத்த வகையை அறியக்கூடிய ஹார்மோன் சுரப்பு கொண்டுள்ளனர். மீதி 15% அவ்வாறு இல்லை. கொசுக்கள், அச்சுரப்பிகளினால் அதிகம் கவரும் விதத்திலேயே காணப்படுகின்றன. மேலும், ஒரு ஆய்வு, கொசுக்கள் A வகை ரத்தம் உடையவரை விட O வகை இரத்தம் கொண்டவர்களை அதிகமாகக் கடிக்கக்கூடியதாக இருப்பதாகக் கண்டறிந்துள்ளது. வகை B இரத்தம் உள்ளவர்கள் நடுவில் எங்காவது வந்து விடுவார்கள்.

கார்பன் டை ஆக்சைடு

கார்பன் டை ஆக்சைடு

கார்பன் டை ஆக்சைடு மற்றொரு வழி. கொசுக்கள் தங்கள் இலக்கை அடையாளம் காண, உங்களால் வெளியேற்றப்பட்ட கார்பன் டை ஆக்சைடை நுண்ணுயிர் பால்ப் என்றழைக்கப்படும் ஒரு உறுப்பைப் பயன்படுத்தி எளிதில் கண்டறிய முடியும்.

அதிக உடற்பயிற்சி

அதிக உடற்பயிற்சி

உடற்பயிற்சி மற்றும் பல்வேறு உடல் வளர்சிதை மாற்றங்கள் கூட கொசு கடி பாதிப்புக்குள்ளாகும். அதனால் உடலுக்கு நன்மை தருகின்ற உடற்பயிற்சியாக இருந்தாலும் அளவோடு செய்யுங்கள்.

MOST READ: சருமத்தில் இப்படி இருக்கா? அப்போ இதுல ஏதாவது ஒன்ன அப்ளை பண்ணுங்க...

சிறுநீர்

சிறுநீர்

கொசுக்கள் உங்கள் உடலிலிருந்து வெளியேற்றப்படும் அம்மோனியா, யூரிக் அமிலம், மற்றும் லாக்டிக் அமிலம் போன்ற பொருட்களையும் உணர முடியும். அதிக உடல் வெப்பநிலை கொண்டவர்களால் கொசுக்கள் கவரப்படுகிறது. குறிப்பாக சிறுநீர் வெளியேற்றுகிற சமயத்தில் கொசு உங்களை மிக எளிதில் கணடுபிடித்துவிடுகிறது.

பாக்டீரியாக்கள்

பாக்டீரியாக்கள்

மற்றொரு ஆராய்ச்சியானது, சில வகை பாக்டீரியா அதிக அளவில் கொண்ட ஒருவரின் தோல், கொசுக்களுக்கு அதிக கவர்ச்சிகரமானதாக இருக்கும் என கூறுகிறது. அதனால் எளிதில் கண்டுபிடித்துவிடும்.

MOST READ: இந்த ஆறு அறிகுறி இருந்தா பெண்கள் கருப்பையில் கட்டி இருக்குனு அர்த்தம்... ஆண்களும் தெரிஞ்சிக்கலாமே

பீர்

பீர்

ஒரு மர்மமான கண்டுபிடிப்பு, ஒரு பாட்டில் பீர் எடுத்துக் கொள்ளும் ஒரு நபர் கொசுக்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமாக கருதப்படுகிறார். என்ன பீர் குடித்து மட்டையாகிவிட்டால், கொசு கடிப்பது உங்களுக்குத் தெரிவதில்லை.

கர்ப்பிணிப் பெண்கள்

கர்ப்பிணிப் பெண்கள்

கர்ப்பிணி பெண்கள் மற்றவர்களை விட கொசு கடியால் பாதிக்கப்படுகின்றனர். ஏனென்றால் அவர்கள் அதிக கார்பன் டை ஆக்சைடுகளை வெளியேற்றுவதோடு மற்றவர்களை விட வெப்பமானவர்களாகவும் உள்ளனர்.

MOST READ: மஞ்சளை வைத்தே நம் பற்களை எப்படி வெள்ளையாக்குவது வாங்க பார்க்கலாம்

ஆடைகளின் கலர்

ஆடைகளின் கலர்

உங்கள் ஆடைகளின் வண்ணம் கொசுக்களுக்கு கவர்ச்சிகரமானதா இல்லையா என்பதை முடிவு செய்யும் மற்றொரு காரணியாகும். கறுப்பு அல்லது சிவப்பு நிறத்தில் மிக முக்கியமான நிறங்களை அணிந்து வரும் நபர்கள் ஒரு கொசுக்களால் கடிக்கப்பட வாய்ப்புள்ளது.

மரபணு

மரபணு

உங்கள் மரபணுக்கள் கொசுக்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமானவையா இல்லையா என்பதை முடிவு செய்யும் காரணிகளில் ஒன்றாகும். துரதிருஷ்டவசமாக, இன்னும் அந்த மரபணுக்களை மாற்றியமைக்கும் ஒரு வழி இல்லை.

MOST READ: சிகரெட் பிடிப்பதை கைவிடுவதற்கு நீங்கள் சாப்பிட வேண்டிய மூன்று பழங்கள்...

என்ன செய்ய வேண்டும்?

என்ன செய்ய வேண்டும்?

உங்கள் சூழல்களை சுத்தமாக வைத்திருங்கள். கொசுக்கள் தண்ணீரில் முட்டைகள் இடுகின்றன

வெளிர் நிற ஆடைகளை அணியுங்கள்

தூக்கத்தில் கொசு வலை பயன்படுத்தவும்

கொசு விலக்கிகள் பயன்படுத்தவும்

மேலும் கொசு கடித்த பகுதியில் எரிச்சல் இல்லாமல் இருக்க வேண்டுமென்றால், அரிப்பு எடுக்கும் நேரத்திலும் கூட, சொரியக் கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

how musquito likely to bite some blood group people

you realize that your streets are flooded, and the stagnant water has become the most adored hangout spot for mosquitoes.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more