For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மார்பகங்களில் ஏற்படுகின்ற நோய் தொற்றுக்களை குணப்படுத்துவது எப்படி..?

|

பலரின் இச்சை பார்வைக்கு உள்ளான உறுப்புதான் இந்த மார்பகம். ஆனால், இதுவும் மற்ற உறுப்புகளை போன்று சாதாரணமானது தான், என்பதை ஏன் நாம் ஏற்க மறுத்தோம்..?! பொதுவாக இது போன்ற அந்தரங்க உறுப்புகளில் ஏதேனும் பாதிப்பு வந்தால் மிகவும் அவஸ்தையாக இருக்க கூடும். இது ஆண்களை காட்டிலும் பெண்களுக்கே அதிக அளவில் பாதிப்பை தரும்.

மார்பகங்களில் ஏற்படுகின்ற நோய் தொற்றுக்களை குணப்படுத்துவது எப்படி..?

மார்பகத்தில் ஏதேனும் நோய் தொற்றுகள் ஏற்பட்டால் அதை சரி செய்ய பலவித முயற்சிகளை நாம் செய்வோம். ஆனால், நமது வீட்டில் இருக்க கூடிய பொருட்களை வைத்தே நம்மால் எளிதில் இந்த பிரச்சினைக்கு தீர்வை தர இயலும். வாங்க, மார்பகங்களில் வர கூடிய நோய்களுக்கு முற்றுபுள்ளி வைப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாதிப்பு ஏன்..?

பாதிப்பு ஏன்..?

பலருக்கு மார்பகங்களில் ஏற்பட கூடிய நோய்களுக்கு காரணம் தெரிவதில்லை. சிலர் நோய்கள் முன்னரே வந்தாலும் அது நோய் என்று கூட தெரிவதில்லை. இது போன்ற நிலை பலருக்கு வந்துள்ளது. பெண்கள் பாலூட்டும் போதோ, மார்பக திசுக்கள் இறுகி வலி ஏற்படுவதாலோ, வீக்கம் உண்டாவதாலோ இந்த மார்பக தொற்றுகளின் அறிகுறிகள் வெளிப்படும். சிலருக்கு இது புற்றுநோயாக கூட இருக்கலாம்.

கற்றாழை வைத்தியம்...

கற்றாழை வைத்தியம்...

மார்பக நோய் தொற்றுக்களை விரட்டி அடிக்க ஒரு எளிய வழி உள்ளது. கற்றாழை ஜெல்லை எடுத்து கொண்டு அதனை மார்பக பகுதியில் தடவி மசாஜ் போல செய்யலாம். இது சிறந்த தீர்வை உங்களுக்கு தரவல்லது. வீங்கிய, வலி கொண்ட மார்புகளுக்கு கற்றாழை வைத்தியம் நல்ல பலனை தரும்.

முட்டைகோஸ் வைத்தியம் எப்படி..?

முட்டைகோஸ் வைத்தியம் எப்படி..?

பல பெண்களின் மார்பக பிரச்சினைகளை தீர்ப்பதில் இந்த முட்டைகோஸ் இலைகள் அற்புதமான தீர்வை தரும். முட்டைகோஸ் இலைகளை நன்றாக கழுவி, அதனை மார்பக பகுதியில் வைத்து கொள்ள வேண்டும். இந்த இலைகளை 2 மணி நேரத்திற்கு பிறகு எடுத்து விடலாம். இவ்வாறு செய்வதால் மார்பகத்தில் ஏற்பட்டுள்ள வலி, கிருமிகளின் தொற்றுகள் போன்றவற்றிற்கு தீர்வை தந்து விடலாம்.

துணி போதுமே..!

துணி போதுமே..!

பொதுவாக இந்த மார்பக தொற்றுகள் உங்களுக்கு வந்தால் இந்த முறையை முதல் கட்டமாக கடைபிடிப்பது நல்லது. முதலில் ஒரு காட்டன் துணியை எடுத்து கொண்டு அதனை வெது வெதுப்பான நீரில் ஊற வைத்து கொள்ளவும். அடுத்து, இந்த துணியை பிழிந்து அதில் ஐஸ்கட்டியை நிரப்பி மார்பக பகுதியில் ஒத்தடம் போல கொடுக்கலாம்.

MOST READ: வெள்ளை அணுக்களை அதிகரிக்க நம்ம வீட்டிலேயே இருக்க கூடிய இந்த மூலிகைகள் போதும்...!

வேப்பிலை

வேப்பிலை

சிறந்த கிருமி நாசினி என்கிற பெருமை இந்த வேப்பிலைக்கு தான் உள்ளது. வேப்பிலை நமது உடலில் ஏற்படுகின்ற பலவகையான நோய்களை நடுங்க செய்து விடும். மார்பக தொற்றுக்களை அழிக்க வேப்பங்கொழுந்தை அரைத்து மார்பாக அதன் சாற்றை மார்பக பகுதியில் தடவி வரலாம்.

இந்த மசாஜ் போதுமே..!

இந்த மசாஜ் போதுமே..!

மார்பகத்தில் வலி அல்லது ஏதேனும் அரிப்பு போன்று ஏற்பட்டால் இந்த மசாஜ் உங்களுக்கு உதவும். மார்பக காம்புகளை சுற்றி உள்ள பகுதியில் சற்று மசாஜ் போன்று கொடுக்கலாம். அல்லது ஆமணக்கு எண்ணெயை மார்பக பகுதியில் தடவியும் இந்த மசாஜ் செய்யலாம்.

மிக சிறந்த முறை..!

மிக சிறந்த முறை..!

மிக பழமை வாய்ந்த மருத்துவ முறை என்றால் அது மஞ்சள் மூலம் செய்யப்படுகின்ற முறைதான். மஞ்சளில் குர்குமின் என்கிற மூல பொருள் இருப்பதால் மார்பக பகுதியில் உருவாகின்ற பாதிப்பை முற்றிலுமாக குணப்படுத்தி விடும். மஞ்சளை நீருடன் கலந்து மார்பக பகுதியில் தடவி 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரினால் கழுவினால் இதற்கு தீர்வு கிடைக்கும்.

பூண்டு வைத்தியம்

பூண்டு வைத்தியம்

நமது எல்லா விதமான உடல் பிரச்சினைக்கும் இந்த பூண்டு அருமையான பலனை தரும். அதே போன்று மார்பக பிரச்சினைகளுக்கும் இது அதே அற்புதத்தை தருகிறது. இதற்கு பூண்டை அப்படியே வெறும் வயிற்றில் சாப்பிடலாம். அல்லது இதன் சாற்றை மார்பக பகுதியில் தடவினாலும் சரியாக கூடும்.

MOST READ: 2.0 படத்தில் வருவது போல உங்கள் மூளையையும் படு வேகமாக செயல்பட வைக்கணுமா..?

துளசி முறை

துளசி முறை

வீட்டின் முற்றத்தில் இருக்க கூடிய செடி உங்கள் உடலில் ஏற்படுகின்ற நோய் தொற்றுகளுக்கு நல்ல தீர்வை தருகின்றது. 10 துளசி இலைகளை எடுத்து கொண்டு அதனை அரைத்து மார்பக பகுதியில் தடவினால் இந்த பிரச்சினை தீர்வுக்கு வரும்.

தேனும் எலுமிச்சையும்

தேனும் எலுமிச்சையும்

மார்பகத்தில் ஏற்பட்டுள்ள இது போன்று தொற்றுகளுக்கு தேனும் எலுமிச்சையும் நல்ல தீர்வை தரும். 1 ஸ்பூன் தேனுடன் சிறிது எலுமிச்சை சாற்றை சேர்த்து மார்பக பகுதியில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies To Get Rid Of Breast Infections

Here we listed some home remedies to get rid of breast infections
Story first published: Friday, December 28, 2018, 12:06 [IST]
Desktop Bottom Promotion