For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாப்பிட்டதும் எதுக்கலிக்குதா? இத பண்ணுங்க உடனே சரியாகும்?

சிலருக்கு சாப்பிட்டு முடித்ததும் நெஞ்செரிச்சல் ஏற்படும். அதை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இங்கே கூறப்பட்டுள்ளது.

|

உங்கள் உடல் சீராக இயங்குவதற்கு நல்ல உணவைத் தேர்ந்தெடுத்து உண்ணுவது ஒரு சிறந்த வழியாகும். ஆரோக்கியமற்ற அல்லது உடல் ஏற்றுக் கொள்ளாத உணவுகளை எடுத்துக் கொள்வதால் நெஞ்செரிச்சல், எதுக்கலித்தல் போன்றவை ஏற்பட்டு அசௌகரியத்தை உண்டாக்கும். இதனைத் தடுக்க சில எளிய தீர்வுகள் உள்ளன. அதனை நாம் இந்த பதிவில் காணலாம்.

Four Homemade Antacids to Soothe Reflux

எதுக்கலித்தல் என்பது அனைவருக்கும் எரிச்சலூட்டும் ஒரு நிலையாகும். உணவுக் குழாயில் உள்ள கடைசி தசை சரியாக இயங்காத நிலையில் இந்த பாதிப்பு ஏற்படும். உணவுக் குழாய் என்பது வாய் மற்றும் வயிறை இணைக்கும் ஒரு குழாய் ஆகும். வயிற்றில் அமிலம் உள்ள இடம் வரை உணவு செல்வதற்கு இந்த குழாய் உதவுகிறது. இந்த குழாய் முடியும் இந்த இடத்தில தான் செரிமானம் தொடங்கும். இதர உடல் உறுப்புகளுக்கு ஊட்டச்சத்துகள் செயல்முறைப்படுத்துவதும் இந்த இடத்தில் தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வயிற்றுப்பகுதி

வயிற்றுப்பகுதி

வயிற்றுப் பகுதியில் இந்த குழாய் சரியாக மூடப்படாத நேரத்தில் இந்த அமிலம் மீண்டும் உணவு குழாய் வழியாக திரும்பி செல்ல நேரலாம். இதனால் ஒரு வித எரிச்சல் மற்றும் வலி உண்டாகும். இதனை நாம் எதுக்கலித்தல் என்று கூறுவோம்.

இந்த நிலை உண்டாகும்போது அதனைப் போக்க சில எளிய வீட்டுத் தீர்வுகள் உண்டு. அதனை நாம் இந்த பதிவில் காணலாம்.

MOST READ: உடம்பை வேகமாக இளைக்க வைக்கும் இந்த புதினா டீ... தயாரிப்பது எப்படி?

அறிகுறிகள்

அறிகுறிகள்

எதுக்கலிப்பதற்கான சில பொதுவான மற்றும் நாம் ஏற்கனவே அறிந்த சில அறிகுறிகள் உண்டு. அவற்றை இப்போது காணலாம்.

நெஞ்செரிச்சல்

வாந்தி

தூக்கமின்மை

பசியின்மை

நெஞ்சு வலி

மூச்சுத் திணறல்

பேசுவதில் கடினம்

தொண்டை வலி

மூச்சு விடுவதில் சிரமம்

எதுக்கலித்தல் உண்டாவதற்கான காரணம்

எதுக்கலித்தல் உண்டாவதற்கான காரணம்

உணவுக் குழாயின் கடைசி தசை சரியாக இயங்காமல் இருப்பதால் இந்த பாதிப்பு உண்டாகலாம். மேலும் சில உணவுகள் கூட எதுக்கலிப்பிற்கு காரணமாக இருக்கலாம்.

உதாரணமாக,

காரமான மசாலா உணவுகள்

காரமான மசாலா உணவுகள்

நெஞ்செரிச்சல் மற்றும் எதுக்கலித்தலை ஊக்குவிக்கும் உணவாக மசாலா சேர்க்கப்பட்ட காரமான உணவுகள் காரணமாக உள்ளன. இத்தகைய உணவுகளில் கவனம் செலுத்தாமல் தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் நாள்பட்ட இரைப்பை சவ்வு அழற்சி உண்டாகலாம்.

MOST READ: கர்ப்பிணிகளுக்கு ரத்தசோகை வராமல் இருக்க என்ன சாப்பிட வேண்டும்?

காபி

காபி

காபியில் உள்ள காபின் இந்த பாதிப்பிற்கு காரணமாக உள்ளது. எதுக்கலித்தலை அதிகரித்து, வயிற்றில் அமில உற்பத்தியை அதிகரிக்கிறது காபின்.

மதுபானங்கள்

மதுபானங்கள்

மதுபானங்கள் உணவுக்குழாயின் உயர்வான மற்றும் தாழ்வான சுருங்கு தசைகளை நெகிழ்த்துவதால் , வயிற்றில் உள்ள அமிலம் மேலே எழும்பி இதனால் எதுக்கலித்தல் ஏற்படுகிறது.

சாக்லேட்

சாக்லேட்

சாக்லேட்டில் கொழுப்பு, காபின், தியோப்ரோமின் போன்றவை இருப்பதால், வயிற்றில் அமில உற்பத்தியை ஊக்குவிக்கிறது.

MOST READ: உங்க முடி இப்படி ரொம்ப வறண்டு போயிடுதா? அப்போ ஆலிவ் ஆயிலை இப்படி தேய்ங்க...

கொழுப்பு உணவுகள்

கொழுப்பு உணவுகள்

இத்தகைய கொழுப்பு உணவுகள் இரைப்பையை எரிச்சல் அடையச் செய்து, தாழ்வான உணவுக்குழாய் சுருங்கு தசையை பாதிக்கிறது. இதனால் நெஞ்செரிச்சல் உண்டாகிறது.

அமில உணவுகள்

அமில உணவுகள்

இத்தகைய உணவுகள், வயிற்றில் pH அளவை குறைக்கிறது. இதனால் நெஞ்செரிச்சல் மற்றும் எதுக்கலித்தல் பாதிப்பு அதிகரிக்கிறது.

நல்ல உணவு முறையால் உடலின் எந்த ஒரு பாதிப்பும் சரி செய்யப்படலாம். பழங்கள், காய்கறிகள், பருப்பு, தானியம் மற்றும் நார்ச்சத்து கொண்ட உணவு வகைகள் ஒரு ஆரோக்கிய உடலுக்கு சிறந்த தேர்வாக உள்ளன.

அமில எதிர்ப்பு உணவுகள்

அமில எதிர்ப்பு உணவுகள்

உடனடியாக எதுக்கலித்தலைப் போக்க உதவும் சில இயற்கை உணவுகளைப் பற்றி நாம் இப்போது காணலாம்.

உருளைக் கிழங்கு ஜூஸ்

ஒரு கிளாஸ் உருளைக்கிழங்கு சாறு எதுக்கலிப்பதை எளிதில் நிறுத்த உதவுகிறது.

பச்சை உருளைக்கிழங்கு ஜூஸ் ஒரு சிறந்த தீர்வாகும். இதன் சுவை மற்றும் நிறம் காண்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும், இதன் நன்மைகள் ஏராளமாக இருந்து உடனடியாக எதுக்கலிப்பை நீக்குகிறது.

தேவையான பொருட்கள்

துருவிய உருளைக்கிழங்கு 3 ஸ்பூன்

ஒரு கப் தண்ணீர்

செய்முறை

ஒரு கப் தண்ணீரில், துருவிய உருளைக் கிழங்கை போட்டு வேக விடவும்.

பிறகு 10 நிமிடம் அதனை ஆற வைக்கவும்.

பிறகு அந்த கலவையை மிக்சியில் அரைக்கவும்.

ஒவ்வொரு முறை எதுக்களிக்கும்போதும் இந்த நீரை பருகவும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

எலுமிச்சை அமில தன்மைக் கொண்ட பழமாக இருப்பினும், அது வயிற்றை அடையும்போது அதன் அதிகரித்த அமிலத்தன்மை சமன் செய்யப்படுகிறது.

தேவையான பொருட்கள்

ஒரு கப் தண்ணீர் (250 மிலி )

6 ஸ்பூன் எலுமிச்சை சாறு (90 மிலி)

செய்முறை

தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்கவும்.

பிறகு அதனை அடுப்பில் இருந்து இறக்கி, அதில் எலுமிச்சை சாற்றை சேர்க்கவும்.

வெதுவெதுப்பான நிலையில் அந்த நீரை பருகவும்.

MOST READ: 'அந்த' இடத்தில் அரிப்பும் தொற்றும் அடிக்கடி வருதா? நீங்க செய்ய வேண்டிய கை வைத்தியம் இதுதான்...

ஆப்பிள் சிடர் வினிகர்

ஆப்பிள் சிடர் வினிகர்

நெஞ்செரிச்சல், ப்ரெஷர், தொண்டை எரிச்சல் போன்ற இரைப்பை பிரச்சனைகளுக்கு ஒரு இயற்கை தீர்வாக கருதப்படுவது ஆப்பிள் சிடர் வினிகர்.

தேவையான பொருட்கள்

ஒரு கப் தண்ணீர் (250மிலி)

2 ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் (30 மிலி)

செய்முறை

தண்ணீர் சார்ந்த எந்த ஒரு தயாரிப்பையும் செய்வதற்கு முன்னர், அந்த நீரை கொதிக்க வைத்து வடிகட்டி கொள்வது நல்லது.

தண்ணீர் நன்றாக கொதித்தவுடன், சிறிது ஆறிய பிறகு, அதில் ஆப்பிள் சிடர் வினிகரை சேர்க்கவும்.

உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நரம் முன்னதாக இந்த நீரை பருகவும்.

வாழைப்பழ ஜூஸ்

வாழைப்பழ ஜூஸ்

வாழைப்பழம், சளி சுரப்பதை தூண்டி, வயிற்று பகுதியை இரைப்பை அமிலத்திடமிருந்து பாதுகாக்கிறது. மேலும், இந்த பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இந்த கனிமம், வயிற்றின் pH அளவை பராமரிக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள்

4 கப் தண்ணீர் (1 லிட்டர்)

4 வாழைப்பழம்

செய்முறை

வாழைப்பழத்தின் தோலை உரித்து, தண்ணீருடன் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

ஒரு நாள் முழுவதும் இந்த நீரை குடித்துக் கொண்டே வரவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Four Homemade Antacids to Soothe Reflux

here we are giving some simple Homemade Antacids to Soothe Reflux.
Story first published: Tuesday, November 13, 2018, 16:18 [IST]
Desktop Bottom Promotion