For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  வயிறு கடமுடனு கத்துதா? தண்ணியா போகுதா? இந்த வீட்டு வைத்தியத்த ட்ரை பண்ணுங்க

  |

  லூஸ் மோஷன் அல்லது வயிற்றுப்போக்கு சில சமயங்களில் உங்கள் வாழ்க்கையை மிகவும் மோசமடையச் செய்யலாம்.அச்சமயங்களில் உங்கள் வயிறு மோசமாக வலிக்கிறது மற்றும் நீங்கள் கழிவறைக்கு அடிக்கடி ஓட வேண்டியிருக்கிறது. இது உங்கள் சக்தியை இழக்க வைக்கிறது, சோர்வு மற்றும் உடலின் நீர் அளவுக் குறைதல் ஆகியவற்றை உருவாக்குகிறது.

  15 Home Remedies To Stop Loose Motions

  இந்த செரிமானப் பிரச்சனை பெரும்பாலும் தவறான உணவுப் பழக்கங்களின் விளைவேயாகும். ஆனால் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. சில சிறந்த வீட்டு வைத்தியங்களின் உதவியுடன் உங்கள் குடல்களின் செயல்பாட்டை நீங்கள் மீட்டெடுக்கலாம். லூஸ் மோஷனை எவ்வாறு கையாள்வது என்பது பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  காரணங்கள்

  காரணங்கள்

  வயிற்றுப்போக்கு என்பது ஒரு நாளில் மூன்றுக்கும் மேற்பட்ட திரவ நிலை மல வெளியேற்றத்தை உருவாக்கும் குடல் இயக்கங்களின் ஒரு மருத்துவ நிலை. உங்கள் உடலில் உள்ள திரவங்களின் இழப்பு, உடலில் உள்ள நீரிழப்பு மற்றும் எலக்ட்ரோலைட் அன்-பாலன்ஸ்க்கு வழிவகுக்கும்.

  வைரஸ் தொற்றுக்கள் வயது வந்தோருக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கிற்கு முன்னணி காரணங்களில் ஒன்றாகும் என்றாலும், கீழ்க்காணும் வேறு சில காரணங்களும் உள்ளன

  • பாக்டீரியா தொற்றுகள்

  • குரோன் நோய் போன்ற குடல் நோய்கள்

  • உணவு ஒவ்வாமை

  • அதிக மது அருந்துதல்

  • நீரிழிவு அல்லது உயர் இரத்த அழுத்தம் போன்ற மருத்துவ நிலைகள்

  • செரிமான அமைப்பை எரிச்சலூட்டும் சில உணவுகள் உட்கொள்வது

  • மலச்சிக்கல் விளைவுகள் கொண்ட சில மருந்துகள்

  • கதிர்வீச்சு சிகிச்சைகள்

  • சிறுகுடலின் முறையற்ற உணவு உறிஞ்சும் தன்மை.

  குழந்தைக்கு வயிற்றுப்போக்கு

  குழந்தைக்கு வயிற்றுப்போக்கு

  கைக்குழந்தைகள் வழக்கமாக தளர்வான மலத்தையே வெளியேற்றும் . ஆனால் மலம் தண்ணீர் மிகுந்தோ, காய்ச்சல் அல்லது நெரிசலாக இருந்தால் அது வயிற்றுப்போக்கின் ஒரு அடையாளமாக இருக்கலாம்.

  தொடர்ந்து வயிற்றுப்போக்கு உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும், எனவே, உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இந்த நிலையில் இருந்து நிவாரணம் பெற உங்கள் வீட்டிலுள்ள சில பொருட்களின் மூலமாகவே நீங்கள் முயற்சி செய்யலாம்.

  வீட்டு வைத்தியம்

  வீட்டு வைத்தியம்

  1. தேங்காய் நீர்

  தேவையான பொருட்கள்

  1-2 குவளை தேங்காய் நீர்

  ஒன்று அல்லது இரண்டு குவளை தேங்காய் நீரை உட்கொள்ளவும். ஒரு சில தினங்களுக்கு தினமும் 1 முதல் 2 முறை இதைச் செய்யுங்கள்.

  தேங்காய் நீர், உடலின் நீர்ப்போக்கு சிகிச்சைக்கு உதவுகிறது. இதுவே வயிற்றுப் போக்கின் முக்கிய பக்க விளைவுகளில் ஒன்றாகும். இது உங்கள் உடலில் உள்ள இழந்த திரவங்களை நிரப்புகிறது மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலையை மீட்டெடுக்க உதவுகிறது. இது வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படுகையில் பொதுவாக உடல் இழக்கும் குறிப்பிடத்தக்க ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள ஒரு இயற்கையின் வரப்பிரசாதம்.

  தயிர்

  தயிர்

  தேவையான பொருட்கள்:

  தயிர் ஒரு கப்

  உங்கள் உணவிற்குப் பிறகு ஒரு கப் தயிர் சாப்பிட வேண்டும். ஒரு வார காலம் தினமும் இரண்டு முறை இதைச் செய்ய வேண்டும்.

  வயிற்றுப்போக்கு எபிசோடுக்குப் பிறகு பால் பொருட்கள் சாப்பிடத் தொடங்கும் போது, ​​தயிர் மட்டுமே விதிவிலக்கு. இது புரோபயாடிக்குகள், நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்தவை. இவை உங்கள் குடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன மற்றும் லூஸ் மோஷனை ஏற்படுத்தும் கெட்ட பாக்டீரியாவை எதிர்த்து போராடுகின்றன.

  சீரக (ஜீரா) நீர்:

  சீரக (ஜீரா) நீர்:

  தேவையான பொருட்கள்:

  • 1 டீஸ்பூன் சீரக விதைகள்

  • ஒரு குவளைத் தண்ணீர்

  1. ஒரு டீஸ்பூன் சீரக விதைகளை ஒரு கிளாஸ் தண்ணீருடன் சேர்க்கவும்.

  2. இந்த கலவையை ஒரு கடாயில் இட்டு கொதிக்க விடவும்.

  3. இதை எடுத்துக்கொள்வதற்கு முன் சிறிது குளிர்வியுங்கள். ஒவ்வொரு உணவிற்கும் பின் தினசரி 3 முதல் 4 முறை இந்த தீர்வை எடுத்துக்கொள்ளுங்கள்.

  இந்தியாவில் பொதுவாக ஜீரா என்று அழைக்கப்படும் இந்த சீரக விதைகளின் இயற்கை ஆண்டிசெப்டிக் பண்புகள் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை தாக்கும் பாக்டீரியாவைக் கொல்ல உதவும். சீரகம் செரிமானத்திற்கு உதவுவதற்கும் எரிச்சலடைந்த குடல்களுக்கு இதமளிக்கவும் உதவுகிறது.

  எலுமிச்சை சாறு

  எலுமிச்சை சாறு

  தேவையான பொருட்கள்:

  • 1/2 எலுமிச்சை

  • ஒரு குவளை தண்ணீர்

  • 1-2 டீஸ்பூன் சர்க்கரை

  1. அரை எலுமிச்சை பழத்திலிருந்து சாறு பிழிந்து ஒரு குவளைத் தண்ணீரில் கலந்து கொள்ளவும்.

  2. இந்தக் கலவையில் தேவையான அளவு சர்க்கரையை சேர்த்து உடனடியாக எடுத்துக்கொள்ளுங்கள்.

  ஒரு நாளைக்கு, ஒவ்வொரு 1 முதல் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை இதைக் குடிக்கவும். எலுமிச்சை சாறு, அதன் சிறந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் அமில பண்புகளுடன் உங்கள் அழற்சியடைந்த குடலின் பி ஹெச் அளவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உதவுகிறது. இது உங்கள் குடலின் செயல்பாடுகளை இயல்பாக்க உதவுகிறது. அவை பெரும்பாலும் வயிற்றுப்போக்கால் அவதிப்படுகையில் நமது உடல் இழக்கும் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற கனிமங்களை அதிக அளவில் கொண்டிருக்கும்,

  கெமோமில் தேயிலை:

  கெமோமில் தேயிலை:

  தேவையான பொருட்கள்

  • 1-2 தேக்கரண்டி கெமோமில் தேயிலை

  • 1 கப் தண்ணீர்

  • தேன்

  1. ஒரு கப் தண்ணீரில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி கெமோமில் தேயிலையை கலந்து கொதிக்க விடவும்.

  2. 5 நிமிடங்கள் மற்றும் சிம்மில் வைத்து வடிகட்டவும்.

  3. சூடு தணிந்த பின் சிறிது தேனைச் சேர்த்துக்கொள்ளவும்.

  4. உடனடியாக உட்கொள்ளுங்கள்.

  ஒரு சில நாட்களுக்கு தினமும் மூன்று முறை கெமோமில் தேயிலை தேநீர் குடியுங்கள். கெமோமில் தேயிலை சக்தி வாய்ந்த ஆன்டி ஸ்பாஸ்மோடிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை வெளிப்படுத்துகிறது, இது வயிற்றுப் போக்கை நிவர்த்தி செய்ய உதவுகிறது. குடல் தசைகளை தளர்த்தி மற்றும் அதன் எரிச்சலை குறைத்து சிறந்த நிவாரணமளிக்கிறது.

  மோர்

  மோர்

  தேவையான பொருட்கள்:

  * ஒரு கப் மோர்

  * ஒரு குவளை குளிர்ந்த மோரைப் பருகவும். ஒரு சில நாட்களுக்கு தினசரி மூன்று முறை இதைச் செய்யவும். மோர், புரோபயாடிக்குகள் நிறைந்த ஒரு வளமான ஆதாரமாக உள்ளது. இதிலுள்ள நல்ல பாக்டீரியாக்கள் உங்கள் குடலிலுள்ள கெட்ட பாக்டீரியாக்களை எதிர்த்தல் மற்றும் செரிமானத்திற்கு உதவுதல் போன்ற சிறந்த பண்புகளைக் கொண்டுள்ளது.

  புளுபெர்ரி டீ

  புளுபெர்ரி டீ

  தேவையான பொருட்கள்

  • 1-2 தேக்கரண்டி புளுபெர்ரி வேர்கள்

  • 1 கப் சூடான நீர்

  • தேன்

  1. ஒரு கப் சூடான நீரில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி புளுபெர்ரி ரூட்டைச் சேர்க்கவும்.

  2. அதை 5 முதல் 10 நிமிடங்களுக்கு கொதிக்கவைத்து பின் வடிகட்டவும்.

  3. கொஞ்சம் தேன் சேர்த்து, சூடாக இருக்கும் போதே அதைச் சாப்பிடுங்கள்.

  இரண்டு நாட்களுக்கு தினமும் மூன்று முறை இதைச் செய்யுங்கள்.

  ப்ளூபெர்ரிகள் உங்கள் வயிற்றுப்போக்குக்குக் காரணமான நோய்க் கிருமிகளுடன் அதிலுள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பி பண்புகளால் போராடுகின்றன. உங்கள் வயிற்றை தளர்த்த உதவும் மற்றும் வயிற்றுப் போக்கின் அறிகுறிகளை நிவர்த்தி செய்ய உதவும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றப் பண்புகளையும் கொண்டுள்ளன.

  வெந்தயம்

  வெந்தயம்

  தேவையான பொருட்கள்:

  • 1-2 டீஸ்பூன் வெந்தய விதைகள்

  • ஒரு குவளைத் தண்ணீர்

  1. 1 அல்லது 2 தேக்கரண்டி வெந்தய விதைகளை நீரில் 15 நிமிடம் ஊறவைக்கவும்.

  2. ஊறிய வெந்தயத்தை அரைத்து ஒரு கிளாஸ் தண்ணீரில் கலக்கவும்.

  3. இந்தக் கலவையை உடனடியாக உட்கொள்ளுங்கள்.

  மூன்று நாட்களுக்கு தினமும் 2 முதல் 3 முறை இதை செய்ய வேண்டும்.

  வெந்தய விதைகள் mucilage நிறைந்தவை, இது மல அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது. வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த உதவுகிறது இவை செரிமானத்திற்கு உதவுதல் மற்றும் வயிற்றில் தொற்று விளைவிக்கும் நோய்க் கிருமிகளை எதிர்த்து போராட உதவுதல் போன்ற சிறந்த குணங்களைக் கொண்டிருக்கின்றன.

  ஆப்பிள் சிடர் வினிகர்

  ஆப்பிள் சிடர் வினிகர்

  தேவையான பொருட்கள்:

  • 2 தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகர்

  • ஒரு குவளை சூடான நீர்

  • தேன்

  1. இரண்டு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் சாரை ஒரு குவளை வெதுவெதுப்பான தண்ணீரில் சேர்த்து நன்கு கலக்கவும்.

  2. சிறிதளவு தேனை சுவைக்கு சேர்த்து உடனடியாக எடுத்துக்கொள்ளுங்கள்.

  இரண்டு நாட்களுக்கு தினமும் இரண்டு முறை இந்த தீர்வை எடுத்துக்கொள்ளுங்கள். ஆப்பிள் சைடர் வினிகரிலுள்ள நோய்த்தொற்று எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உங்கள் செரிமான அமைப்பைப் பாதுகாக்க மற்றும் குடல் அழற்சியைப் போக்க உதவுகின்றன. இதிலுள்ள பெக்டின் செரிமானத்தை அதிகரிக்க மற்றும் மலச்சிக்கலை நீக்க உதவுகிறது.

  இஞ்சி

  இஞ்சி

  தேவையான பொருட்கள்

  • புதிதாக பிரித்தெடுக்கப்பட்ட 1-2 தேக்கரண்டி இஞ்சி சாறு.

  • தேன்

  1. புதிதாக பிரித்தெடுக்கப்பட்ட இரண்டு தேக்கரண்டி இஞ்சி சாற்றை எடுத்து அதில் தேன் சேர்க்கவும்.

  2. இந்த கலவையை நேரடியாக உட்கொள்ளவும்.

  3. சுவை உங்களுக்கு மிகவும் வலுவானதாக இருந்தால், இஞ்சி சாறை சிறிது வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கவும்.

  உங்கள் நிலையில் முன்னேற்றம் காணும் வரை தினமும் குறைந்தபட்சம் 2 முதல் 3 முறை தினமும் எடுத்துக்கொள்ளுங்கள்.

  இஞ்சி செரிமானத்திற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், உங்கள் குடலிற்கு இதமளித்து உங்கள் உடம்பின் நோய்த்தொற்றை தன்னுலுள்ள பாக்டீரியா மற்றும் அழற்சி எதிர்ப்பு குணங்களைக் கொண்டு எதிர்த்து நோயாளிகளுக்குப் பயன் தருகிறது.

  புதினா மற்றும் தேன்

  புதினா மற்றும் தேன்

  தேவையான பொருட்கள்:

  • புதிதாக பிரித்தெடுக்கப்பட்ட புதினா சாறு 1 டீஸ்பூன்

  • புதிதாக பிரித்தெடுக்கப்பட்ட எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன்

  • 1 டீஸ்பூன் தேன்

  • 1 கப் சூடான நீர்

  1. ஒரு டீஸ்பூன் புதிதாக பிரித்தெடுக்கப்பட்ட புதினா சாறு , எலுமிச்சை சாறு, மற்றும் தேன் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.

  2. இந்த கலவையை ஒரு கப் சூடான நீரில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

  3. உடனடியாக உட்கொள்ளவும். தினமும் இரண்டு முறை செய்யுங்கள்.

  வயிற்றுப் போக்கு சிகிச்சை என்று வரும் போது புதினா மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அது எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலக்கும் போது, ​மிகவும் விதிவிலக்கான முடிவுகளைத் தரும். புதினா உங்கள் குடலுக்கு இதமளிக்கிறது மற்றும் உங்கள் வயிற்றை அமைதியாக்குகிறது. அஜீரணத்தின் அறிகுறிகளை நீக்குகிறது. தேன் மற்றும் எலுமிச்சை சாறு குடல் எரிச்சலைக் குறைப்பதில் மற்றும் நோய்க்கிருமிகளை எதிர்க்க உதவுகின்றன.

  இலவங்கப்பட்டை மற்றும் தேன்

  இலவங்கப்பட்டை மற்றும் தேன்

  தேவையான பொருட்கள்

  • 1/2 தேக்கரண்டி இலவங்கப்பட்டை தூள்

  • 1 தேக்கரண்டி தேன்

  • ஒரு க்ளாஸ் சூடான நீர்

  1. ஒரு தேக்கரண்டி இலவங்கப்பட்டை தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி தேனை வெதுவெதுப்பான தண்ணீரில் கலக்கவும்.

  2. சூடாக இருக்கும் போதே இதை உட்கொள்ளுங்கள்.

  ஒரு சில நாட்களுக்கு தினமும் இதை 2 முதல் 3 முறை செய்யுங்கள்.

  இலவங்கப்பட்டை அழற்சியெதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்றதடுப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது .இது கெட்டுப்போன வயிற்றுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. தேன் இணையும்போது, அது வயிற்றுப்போக்கினால் உருவாகும் வலியின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.

  ஓட் பிரான்

  ஓட் பிரான்

  தேவையான பொருட்கள்

  1.1 கிண்ணம் சமைத்த ஓட் பிரான்

  சமைத்த 1 கிண்ணம் ஓட் பிரானைச் சாப்பிடவும். தினமும் இரண்டு முறை இதைச் சாப்பிட வேண்டும். ஓட் பிரான் நார்ச்சத்து நிறைந்த ஆதாரமாக உள்ளது மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், மற்றும் மெக்னீசியம் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்களும் உள்ளன. இது வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்படுவதால் நமது உடல் இழக்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் மின்னாற்றலைகளை மீட்டெடுக்க உதவுகிறது.

   முருங்கை இலைகள்

  முருங்கை இலைகள்

  தேவையான பொருட்கள்:

  • 1 டீஸ்பூன் முருங்கை சாறு

  • தேன்

  1. முருங்கை இலைகளில் இருந்து ஒரு டீஸ்பூன் புதிய சாறு பிரித்தெடுக்கவும்.

  2. அதில் சிறிது தேன் சேர்த்து உடனடியாக சாப்பிடுங்கள்.

  3. உலர்ந்த முருங்கை இலைகளை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இரண்டு நாட்களுக்கு தினமும் ஒரு முறை இதை செய்ய வேண்டும்.

  பல காலங்களாக வயிற்றுப் போக்கிற்கு சிகிச்சையளிக்க டிரம்ஸ்டிக் இலைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை நம்பமுடியாத ஊட்டச்சத்து மட்டுமல்லாது, வயிற்றுப் போக்கை எதிர்த்துப் போராடும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டிருக்கின்றன.

  எலுமிச்சை & ப்ளாக் டீ

  எலுமிச்சை & ப்ளாக் டீ

  தேவையான பொருட்கள்:

  • தேநீர் பவுடர் 1 டீஸ்பூன்

  • எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன்

  • 1 கப் தண்ணீர்

  • தேன்

  1. டீஸ்பூன் தேநீர் பொடியை ஒரு கப் தண்ணீரில் போட்டு அதைக் கொதிக்க விடவும்.

  2. 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டவும்.

  3. தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கும் முன் வடிகட்டிய தேநீர் சிறிது குளிர காத்திருங்கள்.

  4. உடனடியாக உட்கொள்ளுங்கள்.

  இந்தத் தேநீரை ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முறை உட்கொள்ளுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

  எலுமிச்சை கொண்ட பிளாக் தேநீர் வயிற்றுப்போக்கை குணப்படுத்த மற்றொரு பெரிய தீர்வு. டானின்களின் இருப்பு தேயிலைக்கு ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகளை அளிக்கிறது. இது வயிற்றுப்போக்கை ஒழிப்பதில் மிகச் சிறந்தது. பிளாக் தேநீர் கூட ஆன்டி அழற்சி மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் கொண்டிருக்கிறது, இது வீக்கம் ஆற்றவும் மற்றும் நோய்க்காரணிகளை எதிர்த்து போராடவும் உதவுகிறது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  15 Home Remedies To Stop Loose Motions

  here we suggest fifteen types of home remedies for curing and stoping loose motions. try these home remedies.
  Story first published: Tuesday, September 11, 2018, 13:32 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more