For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  பாம்பு கடித்துவிட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்?... என்னவெல்லாம் செய்யக்கூடாது?...

  |

  கொஞ்சம் மிதமான பருவ நிலை வர ஆரம்பித்து விட்டாலே மக்கள் வெளியே சென்று தங்கள் நேரத்தை கழிக்க ஆரம்பித்து விடுவார்கள். அதிலும் கோடை வெப்பமும் இல்லாமல் மழையும் இல்லாமல் இருந்தால் வெளியே காலார நடப்பது, தோட்டத்தில் உலாவது, காடுகளுக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்வது போன்ற எண்ணற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.

  first aid tips for snakebite in tamil

  ஆனால் இந்த பருவநிலை மாற்றம் கொசுக்கள் உற்பத்தி, ஒட்டுண்ணிகள் போன்றவைகளும் பெருக சாதகமாக அமைகிறது. ஏன் சில இடங்களில் இந்த பருவநிலை பாம்புகள் நடமாட்டத்தையும் அதிகரிக்கவே செய்கிறது என்று அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  விஷக் கடி

  விஷக் கடி

  அமெரிக்காவில் வருடத்திற்கு சுமார் 7000-8000 மக்கள் பாம்பு விஷக் கடியால் பாதிப்படைகின்றனர் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவிக்கின்றன. இதில் 5 பேர்கள் வரை இறக்கும் அபாயமும் ஏற்படுகின்றன என்று அவர்கள் கூறுகிறார்கள். எனவே இந்த விஷக் கடி இறப்பிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்றால் அதற்கான தகுந்த முதலுதவியை முன்னரே செய்வதன் மூலம் அவர்களை காப்பாற்றலாம். எனவே பாம்பு கடிப்பிற்கான முதலுதவி சிகிச்சையை பற்றி முன்னரே அறிந்து விழிப்புணர்வுடன் செயல்படுவது அனைவருக்கும் நன்மை அளிக்கும் என்றும் வீணாக உயிர் போவதை தடுக்க முடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

  விஷத்தை உறிஞ்சுதல்

  விஷத்தை உறிஞ்சுதல்

  பொதுவாக பாம்பு கடித்ததும் நாம் ரெம்ப காலமாக பார்த்து வரும் பழக்கம் என்னவென்றால் கடித்த இடத்தை வெட்டி அதிலிருந்து இரத்தத்தை உறிஞ்சி எடுப்பது இந்த முதலுதவியை தான் நாம் வெகு காலமாக திரைப்படங்களிலும் அறிந்து வருகிறோம். ஆனால் உண்மையை சொல்லப் போனால் இது நிலைமையை மோசமாக்குமே தவிர எந்த பயனையும் தராது. எனவே உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். உடனே முறையான முதலுதவியை செய்தால் மட்டுமே பாம்பு கடித்த நபரை காப்பாற்ற முடியும்.

  விஷப் பாம்புகள்

  விஷப் பாம்புகள்

  அமெரிக்காவை பொறுத்த வரை மற்ற நாடுகளை விட குறைவான விஷத் தன்மை கொண்ட பாம்புகளையே கொண்டுள்ளது. ஆனால் இருப்பினும் குழி விரியன் மற்றும் பவளப் பாம்புகள் போன்றவை ஓரே கடியில் உயிருக்கே ஆபத்தான நச்சுக்களை பாய்ச்ச கூடியது என்று எச்சரிக்கை விடுக்கிறார். எனவே சீக்கிரமாக மருத்துவ உதவியை நாடுவது நல்லது. இல்லையென்றால் உங்கள் உயிருக்கே உலையாகி விடும் என்கிறார்.

  இங்கே பாம்பு கடிக்கு எந்த மாதிரியான முதலுதவியை செய்ய வேண்டும் மற்றும் செய்யக் கூடாத விஷயங்கள் போன்றவற்றை இங்கே அறிந்து கொள்ளலாம்.

  உடனடியாக 9-1-1 அழைத்தல்

  உடனடியாக 9-1-1 அழைத்தல்

  உங்களை உடனடியாக பாம்பு கடித்து விட்டால் 9-1-1 என்ற விஷக் கட்டுப்பாட்டு அமைப்பிற்கு உடனே கால் செய்ய வேண்டும். விஷப் பாம்பு என்றால் உங்களுக்கு நேரம் மிகவும் குறைவாகவே இருக்கும். எனவே தாமதிக்காமல் உடனே செய்ய முற்பட வேண்டும் என்று டாக்டர். போயர் கூறுகிறார்.

  ஒரு குழி விரியன் உங்களை கடித்து விட்டால் அதன் விஷம் உங்கள் உடலினுள் நுழைந்து ஒரு உணவை போல செயல்படுகிறது. முதலில் அந்த விஷம் உங்கள் உடலில் உள்ள புரோட்டீன் மற்றும் கொழுப்புகளை பாதிப்படையச் செய்து விடும். நீங்கள் நீண்ட நேரம் காலம் கடத்தினால் பாதிப்பு இன்னும் மோசமாகிக் கொண்டே போகும். எனவே உடனடியாக நச்சை முறிக்கும் மருந்தை செலுத்த வேண்டும் இல்லையென்றால் எல்லை கைமீறிப் போகி விடும் என்கிறார் டாக்டர். போயர்.

  அபாய கட்டம்

  அபாய கட்டம்

  இரத்தத்தில் விஷம் கலக்க ஆரம்பித்து விட்டால் விஷக் கடி அபாயகரமான நிலைக்கு சென்று விட்டது என்று அர்த்தம். இது நடக்க சில மணி நேரம் ஆகும் என்கிறார். மேலும் 10-15 % விரியன் விஷக் கடிகள் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிப்பதற்குள் மரணம் ஏற்படுகிறது என்றும் அமெரிக்க மருத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

  முதலில் நீங்கள் விஷமுள்ள இரத்தத்தை வெளியேற்றி மாற்று இரத்தம் ஏற்றுப் வகையில் ஏற்பாடுகளை தயார்படுத்தி வைத்திருக்க வேண்டும், மற்றொன்று விஷத்தை முறிக்கும் மருந்தளிக்கப்பட வேண்டும் இப்படி இருந்தால் மட்டுமே மேற்கண்டு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கலாம்.

  பாம்பின் வடிவம் மற்றும் நிறம்

  பாம்பின் வடிவம் மற்றும் நிறம்

  கடித்த பாம்பின் வடிவம் மற்றும் நிறத்தை கவனித்து வைப்பது சிகச்சை அளிக்க ஏதுவாக அமையும். எக்காரணத்தை கொண்டும் பாம்பை பிடிக்க முயற்சிக்காதீர்கள். இது நல்லதுக்கே இல்லை.

  செப்புத் தலை நாகம் போன்றவை அமெரிக்காவில் அதிகமாக நடமாடும் பாம்பாக உள்ளது. இருப்பினும் சரியான சிகச்சை முறையை மேற்கொண்டால் இந்த பாம்பு கடித்தவரை உயிர் பிழைக்க செய்து விடலாம். இது பொதுவாக கிழக்கு வட அமெரிக்காவில் காணப்படுகிறது.

  முடிந்தளவு நகர்ந்து செல்லுங்கள்

  முடிந்தளவு நகர்ந்து செல்லுங்கள்

  நீங்கள் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பாம்பு கடிபட்டால் உடனே பாதுகாப்பான பகுதியை நோக்கி நகர்ந்து செல்லுங்கள். உடனடியாக அங்கே யாரையாவது உதவிக்கு அளிக்க முற்படுங்கள்.

  அதே நேரத்தில் நீங்கள் நகரும் பயணத்தை குறைத்து கொள்ளுங்கள். ஏனெனில் குறைவாக மெதுவாக நகரும் போது பாம்பின் விஷமும் மெதுவாக இரத்தத்தில் ஏறும் என்று டாக்டர். போயர் கூறுகிறார்.

  மருத்துவமனையில் அனுமதித்தல்

  மருத்துவமனையில் அனுமதித்தல்

  நீங்களாகவே இந்த நிலையில் மருத்துவமனையை நாடி விடலாம் என்பது தவறான செயல். உடனடியாக 9-1-1 க்கு கால் செய்து ஆம்புலன்ஸ் உதவியை நாடலாம்.

  கடித்த சருமத்தில் வரைதல்

  கடித்த சருமத்தில் வரைதல்

  உங்கள் முதலுதவி கிட்டை எப்பொழுதும் தயாராக வைத்து கொள்ளுங்கள். முதலில் கடிபட்ட இடத்தை சுற்றி ஒரு வட்டம் போடுங்கள். கொஞ்சம் நேரம் கழித்து அந்த பகுதியை சுற்றி சுற்றி மற்றொரு வட்டம் போடுங்கள். மறுபடியும் வீக்கம் ஏற்பட்ட இடத்தில் கொஞ்சம் நேரம் கழித்து வட்டமிடுங்கள்.

  ஒவ்வொரு வளையும் விஷத்தின் வளர்ச்சியை காட்டுப். விஷம் எவ்வளவு தூரம் பரவுகிறது என்பதை இதன் மூலம் உணர முடியும். இதன் மூலம் மருத்துவர்களுக்கு எவ்வளவு விஷத்தை முறிக்கும் மருந்து கொடுக்க வேண்டும் என்பது எளிதாக தெரியும்.

  நகைகளை கழட்டி விடுங்கள்

  நகைகளை கழட்டி விடுங்கள்

  கடிபட்ட காலில் இருக்கும் ஆபரணங்கள் மற்றும் ஆடைகளை வீக்கம் ஏற்படுவதற்குள் கழட்டி விடுங்கள். இல்லையென்றால் பிறகு இறுக்கமாக கழட்ட முடியாமல் சிரமம் ஏற்படும். இறுதியில் மோதிரங்கள் போன்றவற்றை வெட்டி எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று டாக்டர். போயர் கூறுகிறார்.

  தண்ணீர் பாம்புகள்

  தண்ணீர் பாம்புகள்

  தண்ணீர் பாம்புகள் போன்றவை உங்களுக்கு அருகில் உள்ள ஏரிகள், ஓடைகள் மற்றும் சதுப்பு நிலங்களில் இருக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே அந்த பகுதிகளில் செல்லும் போது கவனமாக செல்லவும்.

  உடனே காலை தூக்காதீர்கள்

  உடனே காலை தூக்காதீர்கள்

  உங்களுக்கு விஷத்தை முறிப்பதற்கான மருந்தை கொடுக்கும் வரை கடிபட்ட இடத்தை அசைக்கவோ உயர்த்தவோ செய்யாதீர்கள். இது விஷத்தை வேகமாக ஏறச் செய்து விடும். எனவே மருத்துவர்கள் இதை கவனமாக கையாள்வார்கள். எனவே கடிபட்ட இடத்தை கவனமாக வைத்தி இருங்கள்.

  ஐஸ் ஒத்தடம் வேண்டாம்

  ஐஸ் ஒத்தடம் வேண்டாம்

  சில முறையற்ற முதலுதவிகள் ஆபத்தை மேலும் வலிமையாக்கிவிடும். எனவே கடிபட்ட இடத்தில் ஐஸ்கட்டிகளைக் கொண்டு ஒத்தடம் கொடுப்பது போன்ற செயல்களை ஒரு போதும் செய்யாதீர்கள். இது நேரத்தை விரயடிப்பதோடு ஆபத்தையும் கூட்டி விடும். கடிபட்ட இடத்தில் ஐஸ்கட்டிகளை வைக்கும் போது பாம்பின் விஷமும் குளிர்ந்த தன்மையும் சேர்ந்து உறுப்புகளை துண்டிக்க வேண்டிய நிலைக்கு கூட கொண்டு சேர்த்திடும். பிறகு உங்கள் கைகளையோ கால்களையோ இழக்க நேரிடலாம் என்று டாக்டர். போயர் எச்சரிக்கை விடுக்கிறார்.

  இறுக்கி பேண்டேஜ் போட வேண்டாம்

  இறுக்கி பேண்டேஜ் போட வேண்டாம்

  பாம்பு கடிபட்ட இடத்தில் இறுக்கி கட்டுதல் அல்லது பேண்டேஜ் போடுதல் கூடாது என்று அமெரிக்க விஷக் கட்டுப்பாட்டு வாரியம் கூறுகிறது.

  நீங்கள் அப்படி செய்தால் அந்த பகுதியை துண்டாக வெட்ட வேண்டிய நிலை ஏற்படும் என்று டாக்டர். போயர் கூறுகிறார். இப்படி இறுக்கி கட்டுவது அந்த பகுதியில் நச்சுக்களை குறைக்காமல் இரத்த ஓட்டத்தை தடைபடுத்தி விடும்.

  சில பகுதி பாம்புகளுக்கு வேண்டும் என்றால் இந்த முறை ஒத்து வரலாம். ஆனால் வட அமெரிக்க பாம்புகளுக்கு இப்படி செய்வது சரியானது அல்ல.

  கடிபட்ட இடத்தை வெட்டாதீர்கள்

  கடிபட்ட இடத்தை வெட்டாதீர்கள்

  ஒரு நீண்ட காலத்திற்கு முன்பெல்லாம் பாம்பு கடித்த இடத்தில் X வடிவத்தில் வெட்ட அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இப்படி செய்யக் கூடாது என்று டாக்டர். போயர் கூறுகிறார். இந்த மாதிரி அந்த கடிபட்ட பகுதியை வெட்டும் போது இரத்த ஓட்டம் தடைபட்டு திசுக்கள் சேதமடைந்து காயம் ஆறுவது காலதாமதமாகும் என்று அவர் கூறுகிறார்.

  க்ரோடாலஸ் அட்ரோக்ஸ் அல்லது டைமண்ட் ராட்டில் பாம்புகள் போன்றவை தென்மேற்கு மற்றும் வடக்கு மெக்ஸிகோ பகுதிகளில் அதிகளவில் காணப்படுகிறது. மேலும் இதன் நீளம் 4 அடிக்கு மேல் இருக்கும்.

  விஷத்தை உறிஞ்சாதீர்கள்

  விஷத்தை உறிஞ்சாதீர்கள்

  பாம்பு கடித்ததும் அதன் விஷமானது சருமம் மற்றும் தசைகளுக்குள் ஊடுருவி ஒரு நிமிடத்திற்குள் பரவ ஆரம்பித்து விடும். எனவே இந்த மாதிரியான நேரத்தில் விஷத்தை உறிஞ்சுதல் தேவையற்ற வலி மற்றும் பாதிப்பை கொண்டு வந்து சேர்க்கும்.

  செல்லப் பிராணிகளை கவனியுங்கள்

  செல்லப் பிராணிகளை கவனியுங்கள்

  உங்கள் நண்பர்கள் உறவினர்கள் மட்டுமல்ல நீங்கள் ஆசையாக வளர்க்கும் செல்லப் பிராணிகள் கூட இந்த பாம்பு கடியால் அவஸ்தை படலாம். வீக்கம், இரத்த கசிவு அல்லது பாம்பு கடித்த தடயங்கள் போன்றவற்றை காண நேரிடலாம்.

  எனவே நிலைமை மோசாவதற்குள் மருத்துவ சிகச்சையை நாடுங்கள். விஷத்தை முறிக்கும் மருந்து அவ்வளவு சீக்கிரம் எளிதாக கிடைக்கக் கூடியது அல்ல. 1000 டாலர் வரை இதன் விலை இருக்கும். உங்கள் செல்லப் பிராணியை காப்பாற்ற 24 மணி நேர சிகச்சை பிரிவை நாடலாம். இந்த மருந்தை காப்பீடு பெற்றவர்கள் மட்டுமே பயன்படுத்த இயலும்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  12 Snakebite First Aid Tips You Need to Know This Summer

  If you or someone you know has been bitten by a snake, you should call 9-1-1 immediately after given these first aids.
  Story first published: Wednesday, July 18, 2018, 15:10 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more