உங்க குடல்ல ஓட்டை விழுந்திருக்கா இல்லையான்னு எப்படி தெரிந்து கொள்வது?

Posted By: suganthi rajalingam
Subscribe to Boldsky

நமது குடல் தான் ஒரு சீரண உறுப்பாக செயல்பட்டு நாம் உண்ணும் உணவிலுள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி உடலுக்கு சத்துக்களை அளிக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக அமைவது குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் தான். இவை தான் சீரண சக்திக்கும், குடல் சுவரின் பாதுகாப்பிற்கும் உதவுகிறது.

how to cure leaky gut

எனவே இவற்றின் சமநிலை மாறும் போது நமது குடலின் சுவர்கள் மற்றும் சீரண சக்தி பாதிக்கப்பட்டு நாம் ஏராளமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது. சரியான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை இவற்றால் மட்டுமே இதை சரி செய்ய இயலாது. இயற்கையான முறையில் குடலில் ஏற்பட்டுள்ள பாதிப்பையும் முதலில் குணப்படுத்த வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாக்டீரியா

பாக்டீரியா

நமது குடலின் சுவரை பாதுகாக்க எண்ணற்ற பாக்டீரியாக்கள் வேலை செய்து கொண்டு இருக்கின்றனர். இவை தான் குடலின் உட்புற செல்களிலுள்ள மேல் புற தோலை புதிப்பித்தல், உண்ணும் உணவில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுதல் மற்றும் ஊட்டச்சத்துக்களை இரத்தத்தில் கலத்தல் போன்ற எண்ணற்ற வேலைகளை செய்து வருகிறது. சுருக்கமாக சொல்லப் போனால் ஒரு தடுப்புச் சுவர் மாதிரி இயங்கி வருகிறது.

விளைவுகள்

விளைவுகள்

இந்த பாக்டீரியாவின் எண்ணிக்கை சமநிலையின்மை ஆகும் போது குடல் சுவர்கள் பாதிப்படைகிறது. இதனால் குடல் சுவரில் ஓட்டை ஏற்படுகிறது. இதனால் குறைவான ஆற்றல், உணவு அழற்சி, தைராய்டு பிரச்சினைகள், மூட்டு வலி, மெதுவான மெட்டா பாலிசம், எக்ஸிமா, ஆட்டிசம், டயாபெட்டீஸ், சோரியாஸிஸ், ஆர்த்ரிட்டீஸ், ஆஸ்துமா, போன்ற விளைவுகளை ஏற்படுத்துகிறது. இந்த பாதிப்பின் முதல் அறிகுறி சீரணமின்மை மற்றும் வயிறு வீக்கம் ஆகியவை ஆகும்.

தீர்வுகள்

தீர்வுகள்

எனவே இந்த குடல் சுவர் பாதிப்பை சரி செய்ய கீழ்க்காணும் வீட்டு முறைகளை கையில் எடுங்கள். தேவையில்லாத மருந்துகளை வாங்கி விழுங்கி, மேலும் குடலை புண்ணாக்கிக் கொள்ளாமல் இருப்பதே சிறந்தது. அதனால் கீழ்வரும் சில வழிமுறைகளைப் பின்பற்றினால், குடல் புண் ஆறி, அதில் உண்டான நீர்கசிவுகள் தடுக்கப்படும்.

பசை தன்மை இல்லாத உணவு

பசை தன்மை இல்லாத உணவு

முதலில் உங்கள் உணவுப் பழக்கத்திலிருந்து பசை போன்ற உணவை தவிருங்கள். ஏனெனில் இதை சீரணிப்பது மிகவும் கடினம். இதனால் குடல் சுவரில் ஓட்டை ஏற்படலாம். இவை ஷோனலின் ஹார்மோன் சுரப்பை அதிகரிப்பதால் குடல் சந்திப்புகளையும் திறந்து விடுகிறது. இதனால் இவை குடலிற்குள் செல்லும் போது அழற்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியின் செயல்பாட்டை அதிகரித்தல் போன்ற வேலையை செய்கிறது. இந்த நச்சுக்கள் நமது குடல் சுவர் பாதிக்கப்பட்ட சமயத்தில் இரத்தத்தில் கலந்து தீவிர பாதிப்புகளை உண்டாக்குகிறது. கோதுமை, பார்லி, அரிசி இவற்றால் ஆன பீட்சா, செரல், பிரட், டிசர்ட், பீர், ரவை, கேசுஸ், ரம் போன்றவற்றை தவிர்த்து விடுவது நல்லது.

பால் பொருட்கள்

பால் பொருட்கள்

மாட்டுப் பாலில் உள்ள ஏ1 புரோட்டீன் கேசின் நமது குடலிற்கு நல்லது அல்ல. மேலும் இவற்றை எளிதில் சீரணிக்க முடியாது.ஏனெனில் குடலின் சீரண சக்திக்கு தேவையான பால் என்சைம்களை பதப்படுத்துதல் என்ற பெயரில் நீக்கி விடுகின்றனர். எருமை மாஸ்ரெல்லோ பால், ஆட்டின் பாலாடை, ஆட்டுப்பால், புரோபயோடிக் எருமை யோகார்ட் போன்றவற்றை சாப்பிடலாம். குடலியக்கத்திற்கும் நல்லது.

ஹெர்பல் டீ

ஹெர்பல் டீ

நீங்கள் தினசரி பருகும் காபிக்கு பதிலாக ஹெர்பல் டீ யை பயன்படுத்தலாம். ஏனெனில் ஹெர்பல் டீ சீரண சக்திக்கு உதவுகிறது. நாம் தினசரி காபி அருந்தும் போது அது குடல் சுவரில் எரிச்சல், அழற்சி போன்றவற்றை ஏற்படுத்தலாம். ஆனால் தீடீரென்று காபி பருகுவதை நிறுத்தி விட்டீர்கள் என்றால் தலைவலி, சோர்வு, கவனச் சிதறல் போன்றவை ஏற்படலாம். எனவே தினசரி இரண்டு முறை மட்டும் காபியும் ஒரு முறை ஹெர்பல் டீயும் அருந்தி வந்தாலே போதும் குடல் சுவர் ஒட்டையிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.

ஆர்கானிக் இறைச்சிகள்

ஆர்கானிக் இறைச்சிகள்

இறைச்சிகள் மற்றும் மீனில் அதிகமான ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் உணவு அழற்சி, மைக்ரோபஸ், நச்சுக்களை வெளியேற்றுகிறது. ஆனால் நீங்கள் சுத்தமான ஆர்கானிக் முறையிலான இறைச்சியை எடுத்துக் கொள்வது நல்லது. ஆன்டி பயாடிக் மற்றும் ஸ்டெராய்டு போன்ற ஊசிகள் போடப்பட்ட இறைச்சியை தவிர்த்து விடுங்கள். மேலும் இந்த இறைச்சிகள் நமது உடலில் ஓமேகா சமநிலையையும், குடலியக்கத்திற்கும் உதவுகிறது.

மூச்சுப்பயிற்சி

மூச்சுப்பயிற்சி

சாப்பிடுவதற்கு முன் சாதாரணமாக மூச்சுப்பயிற்சி செய்வதன் மூலம் சீரண சக்தியை துரிதப்படுத்தலாம். மூச்சை மெதுவாக உள்ளே இழுத்து வெளியே விடும் பயிற்சி குடலியக்கத்திற்கு மிகவும் நல்லது. இதனால் மன அழுத்தம் குறைந்து உடம்பு ரிலாக்ஸாக தன் வேலைகளை செய்யும். மேலும் சாப்பிடும் போது உணவை நன்றாக மென்று சுவைப்பதால் எளிதில் சீரண மாகும். எனவே அவசரஅவசரமாக சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள்.

வெஜிடபிள் ஆயில்

வெஜிடபிள் ஆயில்

சுத்திகரிக்கப்பட்ட வெஜிடபிள் ஆயிலை சமையலில் சேர்க்கும் போது நாள்பட்ட அலற்சி நம்மை தாக்கலாம். இவையும் குடலில் ஓட்டை விழுவதற்கு காரணமாக அமையலாம். எனவே காய்கறி எண்ணெய், சோயா எண்ணெய், பருத்தி எண்ணெய் போன்றவற்றை சமையலில் சேர்ப்பதை தவிர்த்து விடுங்கள். இது குடலிறக்கத்தையும் உண்டு பண்ணி விடும். இதற்கு பதிலாக அவகேடா ஆயில் ஆலிவ் ஆயில் போன்றவற்றை பயன்படுத்துங்கள்.

ஓய்வு

ஓய்வு

நன்றாக உறங்குவது உங்கள் குடலியக்கத்திற்கு நல்லது. தினமும் சரியான நேரத்தில் தூங்க சென்று சரியான நேரத்தில் எழுந்திருப்பது உங்கள் தூக்கபழக்கத்தை ஒழுங்குபடுத்தும். ஒரு மனிதனின் சராசரி உறக்க நேரம் 6 மணி நேரம் இருக்க வேண்டும். நீங்கள் 8-9 மணி நேரம் வரை உறங்கினால் உங்கள் குடல் பாக்டீரியா சமநிலையின்மை அடையும் இதனால் குடலில் ஓட்டை, குடல் சுவர் பாதிப்பு போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

குடல் பாக்டீரியா உங்கள் நரம்பு மண்டலத்திற்கும் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கும் உதவு புரிகிறது. இவை இரத்தத்தில் நியூரோ ஆக்டிவ் பொருட்களை கலக்கிறது. எனவே நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால் இந்த செயல்கள் எல்லாம் ஒழுங்காக நடைபெறாது. மேலும் ஏற்கனவே குடலில் ஏற்பட்டுள்ள ஓட்டையும் குணப்படுத்த இயலாமல் போகும். எனவே மன அழுத்தத்தை தவிர்த்து ரிலாக்ஸாக இருப்பது நல்லது.

உணவு

உணவு

ஆரோக்கியமான உணவு உங்கள் குடல் இயக்கத்தை சமநிலை படுத்தும். மேலும் பாதிக்கப்பட்ட குடல் சுவர்களை குணப்படுத்துகிறது. இதிலுள்ள கொலஜன், கிளிசரின், அமினோ அமிலங்கள் மற்றும் புரோலைன் போன்றவை குடல் பிரச்சினைகள் அனைத்தையும் சரி செய்கிறது. கிமிச்சி, க்வாஷ் போன்ற உணவுகளில் உள்ள அமிலத் தன்மை குடலின் pH அளவை சமமாக வைக்கிறது. புரோபயோடிக் உணவுகள் குடலின் வலிமைக்கும் குடலின் துரிதமான செயலுக்கும் உதவுகிறது. யோகார்ட், சீஸ், பட்டர் போன்ற பால் பொருட்களும் நல்லது. நிச்சயமாக பதப்படுத்தப்பட்ட இறைச்சி, ஜங்க் ஃபுட், ஆரோக்கியமற்ற உணவுகள், வேதிப்பொருள்கள் கொண்ட காய்கறிகள், பால் பொருள்கள்,பாஸ்தா, நூடுல்ஸ் போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை

சர்க்கரை

பிரக்டோஸ் என்று அழைக்கப்படும் சர்க்கரை நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படுகிறது. இவை குடல் சுவர்கள் நன்றாக இருக்கும் சமயத்தில் என்சைம்களால் சீரணிக்கப்படுகிறது. குடல் சுவரில் பாதிப்பு ஏற்படும் போது சரியாக சீரணம் ஆகாமல் வயிறு வீக்கம், மலச்சிக்கல், தலைவலி மற்றும் சோர்வு போன்றவை ஏற்படுகின்றன. எனவே உங்கள் குடல் சுவரில் ஓட்டை இருந்தால் சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

நீர்ச்சத்து

நீர்ச்சத்து

நமது உடலில் எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் அதை குணப்படுத்த தண்ணீர் என்பது முக்கியமானது. எனவே ஒரு நாளைக்கு 8 கிளாஸ் தண்ணீர் வரையாவது குடிக்கும் போது உங்கள் சீரண சக்தி மேம்பட்டு காணப்படும். மேலும் நீங்கள் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கும் போது இந்த நல்ல செயலுக்கு உங்கள் உடம்பே உங்களுக்கு நன்றி சொல்லும். அந்த அளவுக்கு அதன் நன்மை எண்ணிலடங்காது.

என்ன செய்யலாம்?

என்ன செய்யலாம்?

குடல் சுவர் பாதிப்படைந்துள்ளதா என்பதை பரிசோதித்து கொள்ளுங்கள்

புரோபயோடிக் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள். தேங்காய் மற்றும் தேங்காய் பொருட்கள் போன்ற எளிதில் சீரணமாகும் உணவுகளை சாப்பிடுங்கள். என்சைம் மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள வேண்டாம். மது அருந்துதல் நல்லது அல்ல. புகைப்பழக்கத்தையும் முற்றிலும் நிறுத்தியே ஆக வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: சீரண சக்தி
English summary

11 Natural Remedies to Heal a Leaky Gut

The gut bacteria interact with the lining of the gut wall and influence how the wall regenerates.Due to the role gut bacteria play in maintaining the gut wall, a leaky gut is often closely associated with an imbalance of intestinal gut bacteria. Avoid gluten free food, avoid unhealthy food, avoid dairy products these are steps to follow.