For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாய் துர்நாற்றம் வீசாமல் இருக்க நாக்கை எப்படி சுத்தம் செய்ய வேண்டும்?

வாயின் ஆரோக்கியம் பற்களையும், நாக்கையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்ககொள்வதை குறிக்கிறது.

By Brinda Jeeva
|

உடலின் ஆரோக்கியம் எப்படி உள்ளது என்பதை நம் உள்ளுறுப்புகள் காட்டிக்கொடுக்கும். இந்த வரிசையில் வாயின் துர்நாற்றத்திற்கு மிகவும் முக்கிய பங்கு நாக்கிற்கு உள்ளது. வாயின் ஆரோக்கியம் பற்களையும், நாக்கையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்ககொள்வதை குறிக்கிறது. தூய்மையான நாக்கு நம் வாயின் சுகாதாரத்தில் முக்கிய அம்சமாகும்.

ஒரு ஆரோக்கியமான நாக்கு இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் மற்றும் வாயைப் புத்துணர்வூட்டும். உங்கள் நாகின்மீது ஒரு வன்மையான படிவம் படிந்திருந்தால் அது வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் .

health

நம் நாக்கை சுத்தம் மற்றும் சுகாதாரத்துடன் வைத்துக்கொள்ள 10 குறிப்புக்கள் :

1. நாம் நாக்கில் நாம் உண்ணும் உணவின் சிறுதுகள்கள் நாக்கில் படிந்துவிடும் அந்தபடிவத்தை சுத்தம்செய்வது மிகவும் முக்கியம் .இந்த சிறு துகல்களை சாப்பிட்டவுடன் வாயை கொப்பளித்து ஓவ்வொருமுறையும் சுத்தம்செய்யாமல் இருந்தால் அது பேக்டீரியா நம் நாக்கில் வளர்வதை ஊக்குவித்து துர்நாற்றத்ததை ஏற்படுத்தும்.

2. நாம் பல் துலக்கிய பின் அந்த பிரஷ்ஷின் பின்புறம் உள்ளநாக்கு சுத்தம் செய்யும் பகுதியால் நாக்கை காலையும் இரவும் சுத்தம் செய்யவேண்டும் .

3. நாக்கை சுத்தம் செய்யும் நாக்கு சீவுளி (tongue scrapper) பயன்படுத்துவது நன்மை அளிக்கும் .

4. ஒரு நாளில் இரண்டு அள்ளது மூன்று முறையாவது உப்பு கலந்த நீரில் வாயை கொப்பளித்தால் அவசியம்,

5. கிரீன் டீ ( Green Tea) அறுந்துவது பாக்டீரியா வளற்சியை தடுக்கும்.

6. நாக்கிற்கு, பற்களை சுத்தம் செய்யும் பற்பசையை பயன்படுத்துவது புத்துணர்சியை உண்டாகும் .

7. நாக்கு சீவுளி (tongue scrapper) பயன்படுத்தும் பொழுது வாயை நன்கு கொப்பளித்து சுத்தம் செய்வது மிகவும் அவசியம் .

8. பச்சை காய்கறிகளும் இயற்கையான சத்தான உணவை உண்ணும் பொழுது அது ஆரோக்கியமான இளஞ்சிவப்பு நாக்கு உணர்த்தும் .

9. நாக்கு சுத்தம்செய்யும் பொழுது எப்பொழுதும் கீழ்நோக்கிய நாக்கு சீவுளி பயன்படுத்தி கவனமாக செய்யவேண்டும்.

10. தேவைக்கு அதிகமான தண்ணீர் குடிப்பது வாயையும் அணைத்து உறுப்புகளையும் உர்ச்சகத்துடன் ஆரோக்கியத்துடன் செயல்பட உதவும்.

English summary

10 Tips for Tongue Cleaning & to Avoid Bad Breath

A healthy tongue is pink and makes the mouth smell fresh
Story first published: Thursday, May 17, 2018, 18:05 [IST]
Desktop Bottom Promotion