For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிரித்தாலும் கோபப்பட்டாலும் உடனே தூங்கிவிடும் விசித்திர பெண்!

உணர்ச்சி வசப்படும் போது எல்லாம் தூங்கிவிடும் பெண்

By Lakshmi
|

இளம் தாய் ஒருவர் மிகவும் அரிதான ஒரு ஆரோக்கிய பிரச்சனையில் மாட்டிக்கொண்டுள்ளார். இவர் சோகமாகவோ, சிரிக்கும் போதோ அல்லது உச்சமடைந்தாலோ உடனடியாக தூங்கிவிடுவார். ஆழமான உணர்ச்சிகளின் போது இவருக்கு உடனடியாக தூக்கம் வந்துவிடுகிறது. இவரது வயது 20. இவர் தனது பிரசவ காலத்திலும் கூட இந்த பிரச்சனையை அனுபவத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
13 மணிநேர தூக்கம்

13 மணிநேர தூக்கம்

இவர் டிவியில் ஏதேனும் நகைச்சுவைகளை கண்டு சிரித்தால், இவரது தலை தூக்குவதற்காக சாய்ந்துவிடுகிறது. இவர் சராசரியாக ஒரு நாளைக்கு 13 மணிநேரம் தூங்குகிறாராம். இவர் நகைச்சுவைகளை கேட்டாலோ, சோகமாக இருந்தாலோ அல்லது உடலுறவின் போதும் கூட தூங்கிவிடுகிறார்.

மூளை மட்டும் வேலை செய்யும்

மூளை மட்டும் வேலை செய்யும்

நான் சாதாரணமாக ஏதேனும் நகைச்சுவையை கேட்டு சிரித்தாலும் கூட, என் தலை மார்பை நோக்கி சாய்ந்து விடும். அடுத்த நிமிடம் என்னால் தாக்குப்பிடிக்க முடியாது. நான் தரையில் விழுந்துவிடுவேன். நான் தூங்குவது போல் தோன்றினாலும் கூட,பிறர் பேசுவது எனக்கு கேட்கும். ஆனால் என்னால் அசையவோ அல்லது நகரவோ முடியாது.

உணர்ச்சி அடங்கும் வரை தூக்கம்

உணர்ச்சி அடங்கும் வரை தூக்கம்

எனது உணர்ச்சி அடங்கும் வரை என்னால் பிறருக்கு பதிலளிக்கவும், அசையும் முடியாது. மற்றவர்களது பார்வைக்கு நான் தூங்கிக்கொண்டிருப்பது போல தெரியும். உடலுறவின் போதும் கூட நான் தூங்கிவிடுவேன். ஆனால் என் கணவர் என் நிலையை புரிந்து கொண்டு என்னை ஏற்றுக்கொண்டார், அனைவரும் இது போன்று இருக்கமாட்டார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பள்ளிப்பருவம்

பள்ளிப்பருவம்

நான் பள்ளிக்கு சென்று கொண்டிருக்கும் போது, பாடம் நடத்தும் போது, பேருந்தில் சென்று கொண்டிருக்கும் போது, வீடு திரும்பும் போது கூட வழியிலேயே தூங்கிவிடுவேன். சாப்பிடும் போது கூட இடையிலேயே தூங்கிவிடுவேன் என்கிறார்.

மாலை மூன்றுமணி வரை தூக்கம்!

மாலை மூன்றுமணி வரை தூக்கம்!

விடுமுறை நாட்களில் இவர் மாலை மூன்று வரை தூங்கிவிடுவாராம். இவரது கையில் அவரது அத்தை 2 கப் காபியை கொடுத்துள்ளார். அப்போது இவர் சிரித்துவிட்டார். இதனால் உடனடியாக காபியை கீழே போட்டுவிட்டு தூங்கிவிட்டாராம்.

நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை

நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை

இவருக்கு நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளது. இது மூளையை தாக்கியுள்ளதால், இவர் எந்த நேரத்தில் தூங்க வேண்டும் என்று மூளை கட்டளையிடும் பாதிப்புள்ளாகியுள்ளது. இதனால் தான் இவர் இந்த பிரச்சனையை சந்தித்து வருகிறார்.

தூக்கி வந்த சகோதரி

தூக்கி வந்த சகோதரி

இவர் பிட்சா சாப்பிட அவரது சகோதாரியுடன் ஒரு முறை வெளியில் சென்றுள்ளார். அந்த இடத்தில் இவருக்கு சிரிப்பு வந்ததால், டைனின் டேபிள் மீதே படுத்து உறங்கிவிட்டாராம். இதனால் அவரது சகோதாரி அந்த இடத்திலிருந்து வீடு வரை இவரை தூக்கிக்கொண்டே வந்துள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Young lady goes to sleep every time she laugh

Young lady goes to sleep every time she laugh
Story first published: Monday, September 18, 2017, 14:41 [IST]
Desktop Bottom Promotion