வெயில் காலத்தில் ஏன் ஆண்கள் கட்டாயம் விபூதி, சந்தனம் நெற்றியில் பூச வேண்டும்?

Posted By:
Subscribe to Boldsky

முக்கியமாக நெற்றிப்பொட்டில் அதிகரிக்கும் சூடு உடலின் நாடி, நரம்புகளில் தாக்கத்தை அதிகரிக்க கூடியவை. இதனால், தலைவலி, உடல் சூடு, தூக்கமின்மை போன்றவை வெயில் காலத்தில் அதிகரிக்க கூடும்.

Why Applying Sandal and Viboothi in Forehead is Compulsory on Summer?

பொதுவாக, வெயில் காலத்தில் உடல் சூடு தாறுமாறாக அதிகரிக்கும். இதில் இருந்து தப்பிக்க நீங்கள் அதிகம் நீர் குடிக்கலாம், கூல் ட்ரிங்க்ஸ் பருகலாம். பழங்கள் நிறைய பருகலாம். ஆனால், நெற்றிப்பொட்டில் அதிகரிக்கும் சூட்டை எப்படி தணிப்பது?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விபூதி!

விபூதி!

தலையில் வியர்வை மற்றும் தண்ணீர் அதிகம் சேரும் போது அதன் சிருபக்தி கெட்டிப்பட்டு தலையில் தங்கிவிடும். இதனால், தலைவலி, தூக்கமின்மை போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் வெகுவாக இருக்கின்றன.

பலன்!

பலன்!

விபூதியை நெற்றிப் பொட்டில் பூசுவதால் அது நீரை உறிஞ்சி வெளியேற்ற உதவும். இதன் பயனால் வெயில் காலத்தில் அதிகம் தலைவலி அல்லது தலையில் நீர் தங்காமல் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும்.

சந்தனம்!

சந்தனம்!

உடலின் பெரும்பாலான நாடி, நரம்புகள் மூளையுடன் இணைக்கப்பட்டுள்ளன. அஅவை யாவும் நெற்றிப் பொட்டின் வழியாக தான் செல்கின்றன. இதனால் நெற்றிப் பொட்டு சூடாகும் வாய்ப்புகள் இருக்கின்றன. ஆகவே, நெற்றிப் பொட்டை சூடாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

அடிவயிறு!

அடிவயிறு!

பொதுவாக நமது வயிறு பகுதியில் நெருப்பு சக்தி இருக்கிறது. இந்த சூட்டின் தாக்கம் நமது நெற்றிப் பொட்டில் தான் உணர முடியும். அதனால் தான் காய்ச்சல் அறியவும், அதிக காய்ச்சலின் போது தலையில் நெற்றியில் குளிர்ந்த நீரில் நனைத்த துணியை நெற்றியில் பரப்பி சூட்டை தனிக்கிறோம்.

பலன்!

பலன்!

சந்தனமானது இயற்கையாகவே குளுமை தன்மை கொண்ட பொருளாகும். எனவே, உடலின் சூட்டையும், நரம்புகளை குளிர வைக்கவும் நெற்றியில் சந்தனம் பூசினால் நல்ல பயனளிக்கும்.

மஞ்சள், குங்குமம்!

மஞ்சள், குங்குமம்!

விபூதி, சந்தனம், மஞ்சள், குங்குமம் ஆகிய அனைத்தும் சிறந்த கிருமி நாசினியாகும். ஆகையால் தான் இவற்றை நமது நெற்றிப்பொட்டில் பூசுவதால் நோய்த்தொற்று அண்டாமல் இருக்கவும், உடல் சூட்டை குறைத்து குளுமையாக உணரவும் பயன்படுத்த கூறுகின்றனர்.

இரசாயன கலப்பு கூடாது!

இரசாயன கலப்பு கூடாது!

ஆனால் இன்று உண்மையான விபூதி, சந்தனம், மஞ்சள், குங்குமத்தை கண்டறிந்து வாங்குவதே மிகவும் சிரமம். இவற்றில் எல்லாம் கலர் போடி மற்றும் இரசாயன கலப்பு சேர்ந்து தான் விற்று வருகின்றனர்.

மேலும், பெண்கள் குங்குமத்தில் இருந்து ஸ்டிக்கர் பொட்டுக்கு மாறி பலகாலமாகிவிட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why Applying Sandal and Viboothi in Forehead is Compulsory on Summer?

Why Applying Sandal and Viboothi in Forehead is Compulsory on Summer?
Story first published: Wednesday, March 22, 2017, 10:44 [IST]
Subscribe Newsletter