விந்து நிறம் வைத்து, ஒரு ஆணின் ஆரோக்கியம் பற்றி அறிவது எப்படி?

Posted By:
Subscribe to Boldsky

விந்து என்பது ஆண்களின் உச்சநிலையின் போது வெளிவரும் திரவம். பெண்களின் கரு முட்டையுடன் இது இணைவதன் மூலமாக தான் கருவுறுதல் உருவாகிறது. விந்து ஆண்களின் சிறுநீர் வழி குழாய் வழியாக வெளிப்படும்.

பொதுவாக ஒருமுறை விந்து வெளியேறும் போது ஐந்து மில்லி அளவு வெளிப்படும். இதில் நூறு முதல் முன்னூறு மில்லியன் விந்தணுக்கள் இருக்கலாம்.

What Your Semen Colour Change Tells About Your Health? Semen Colour Warning!

வெளிப்படும் விந்தின் நிறத்தை வைத்தும் ஒரு ஆணின் ஆரோக்கியம் பற்றி அறிய முடியும் என இங்கிலாந்தின் தேசிய ஆரோக்கிய சேவை மையம் எனப்படும் என்.எச்.எஸ் நிறுவனம் கூறியுள்ளது.

ஆண்களுக்கு உண்டாகும் சில ஆரோக்கிய கோளாறுகளின் அறிகுறிகளை, வெளிப்படும் விந்தின் நிறத்தில் ஏற்படும் மாற்றத்தை வைத்து அறியலாமாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிவப்பு!

சிவப்பு!

துருப்பிடித்த அல்லது பிங்க் நிறம் போன்று விந்தின் நிறத்தில் மாற்றம் காணப்படுவது சரியானது அல்ல என க்நாக்ஸ் எனும் மருத்துவர் தெரிவிக்கிறார்.தொடர்ந்து சில நாட்களுக்கு இப்படி சிவப்பு நிறத்தில் விந்து வெளிப்பட்டால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

பால்வினை நோய்கள்!

பால்வினை நோய்கள்!

இது விந்தில் இரத்தம் கலக்கும் நிகழ்வாக கூட இருக்கலாம். அல்லது சில பால்வினை நோய் தொற்று, புரோஸ்டேட் சுரப்பி பிரச்சனை அல்லது வேறு மருத்துவ நிலை கோளாறுகள் ஏற்பட்டிருந்தால் கூட இப்படி விந்தில் சிவப்பு நிறம் காணப்படலாம்.

அதிக இரத்த அழுத்தம், இரத்தத்தில் கட்டி அல்லது சில புற்றுநோய் காரணத்தால் விந்தில் இரத்தம் கலந்திருந்தாலும் விந்தில் சிவப்பு நிறம் காணப்படலாம்.

மஞ்சள்!

மஞ்சள்!

சிறுநீர் வழி குழாயில் சிறுநீர் தேங்கியிருந்தால் கூட, அதனுடன் கலந்து விந்து வெளிப்படும் போது விந்தின் நிறத்தில் மஞ்சள் நிற மாற்றம் தென்படலாம்.

மஞ்சள் காமாலை!

மஞ்சள் காமாலை!

மஞ்சள் காமாலை, அதிக வெள்ளை இரத்த அணுக்கள் அல்லது பால்வினை நோய் தொற்றும் கூட இதற்கு காரணிகளாக அமையலாம்.

மேலும், நீங்கள் உண்ணும் உணவில் செயற்கை வண்ண கலப்பு காரணமாகவும் இப்படி விந்தின் நிறத்தின் மஞ்சள் நிற கலப்பு காணப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

சில சமயம் நீங்கள் உடல்நல கோளாறுகளுக்கு உட்கொண்டு வரும் மருந்தின் பக்க விளைவாக கூட விந்தின் நிறம் மஞ்சளாக மாற வாய்ப்புகள் உண்டு.

பச்சை!

பச்சை!

புரோஸ்டேட் சுரப்பியில் ஏதேனும் தொற்று, கோளாறுகள், அதை சுத்தி இருக்கும் திசுக்களில் தாக்கம் போன்றவை உண்டாகி இருந்தால் விந்தின் நிறத்தின் பச்சை நிற கலப்பு காணப்படலாம்.

இன்பெக்ஷன்!

இன்பெக்ஷன்!

சிறுநீரில் இருக்கும் பாக்டீரியாக்கள், ஏதேனும் காரணத்தால் கசிந்து, அது புரோஸ்டேட்சுரப்பியுடன் கலந்திருந்தால் விந்தின் நிறம் பச்சையாக மாற வாய்ப்புகள் உண்டு என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

கிரே ஒயிட்!

கிரே ஒயிட்!

வெள்ளை அல்லது கிரே ஒயிட் நிறம் தான் ஒரு ஆணின் விந்து ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை வெளிகாட்டும் இயல்பு நிறமாகும்.

சில சமயங்களில் செக்ஸ் வைத்துக் கொள்வதற்கு முன்னர் ஆண் சிறுநீர் கழிக்காமல் வந்திருந்தால் கூட பழுப்பு மஞ்சள் நிறத்தில் விந்து வெளிப்படலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What Your Semen Colour Change Tells About Your Health? Semen Colour Warning!

What Your Semen Colour Change Tells About Your Health? Semen Colour Warning!
Subscribe Newsletter