வாய்புண் அடிக்கடி ஏற்படுதா? இந்த ஒரு பொருளை மென்று சாப்பிடுங்க!!

By: Gnaana
Subscribe to Boldsky

நவீன வளர்ச்சிகளின் முன்னேற்றத்தில், காலம் வேகமாக ஓடிக் கொண்டிருப்பதை, நமது உபயோகத்தில் இருந்து மறைந்த சில பொருட்களின் மூலம், அறிய முடிகிறது. இன்றைய விஞ்ஞான வளர்ச்சிகள், மனிதர்களுக்கு வேகமான வாழ்க்கை முறைகளில், ஆர்வத்தைத் தூண்டுகின்றன. இதன் காரணமாக, அவர்கள் சில ஆண்டுகள் அல்ல, சில நாட்கள் கூட, கடந்த கால வாழ்க்கையை, பின்னோக்கிப் பார்க்க, விருப்பமில்லாமல் இருக்கிறார்கள்.

இத்தகைய மனநிலைகளின் காரணமாக, வீடுகளில் உபயோகத்தில் இருந்த சில பாரம்பரிய பொருட்கள், இன்று புழக்கத்தில் இல்லை. கிரைண்டர் மற்றும் மிக்சி வந்த சமயங்களில், ஆட்டுக் கல்லும், அம்மியும் நீண்ட நாட்கள், வீடுகளில் தான் இருந்தன. மின்சாரம் இல்லாத சமயங்களில் அவசரத் தேவைக்கு, இல்லத்தரசிகளுக்கு, ஆபத்பாந்தவர்களாக கைகொடுத்தவை, அவை தான்.

 Uncaria Gambier to treat mouth ulcer

ஆயினும், இன்றைக்கு, அம்மியையும், ஆட்டுக் கல்லையும் கண்களால் பார்ப்பதே, பெரிய விசயம் என்ற நிலைதான், இருக்கிறது.

இது போன்ற, நவீன மாற்றங்களால், சிறிது காலங்கள் முன்பு வரை, நமது அன்றாடப் பயன்பாட்டில் இருந்த, உடலுக்கு சீரணத்தை அளிக்கக் கூடிய ஒரு இயற்கைப் பொருளை, வெற்றிலைக்கு சுவை சேர்த்து, அதோடு, மனிதர்களுக்கும் பல வழிகளில் நன்மைகள் தந்த, ஒரு மூலிகையும், நமது பயன்பாட்டில் தற்போது இல்லை, என்பதுதான், வருத்தம்.

கத்த காம்பு, என்றால், இன்றைய இளைஞர், இளைஞிகள் எல்லாம், என்ன அது என்பார்கள், ஏன், அவர்களில் சிலரின் பெற்றோருக்கே, அதைப் பற்றித் தெரியுமா, என்பது கேள்விக் குறியே!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தாம்பூலத்தில் கத்த காம்பு:

தாம்பூலத்தில் கத்த காம்பு:

மதியம் சாப்பிட்டதும், களைப்பு தீர்ந்து, உணவு செரிமானமாக, வெற்றிலை பாக்கு தாம்பூலம் போடுவது, வீடுகளில் உள்ள பெரியோரின் வழக்கம். பொதுவாக, அந்த வெற்றிலை, பாக்கில், சீவல் இருக்கும், சிலர் புகையிலையும் சேர்த்துக்கொள்வார்கள்.

ஆயினும், வீடுகளில் உள்ள வயதான பாட்டிகள் மற்றும் தாத்தாக்கள் வெற்றிலை போட, அதில் தவறாமல் சேர்ப்பது, கத்தகாம்பு. அவர்களுக்கு, பாக்கைக் கடித்து மெல்ல பற்கள் இல்லை ஆதலால், கத்தக் காம்பை இட்டு தாம்பூலம் தரித்துக் கொள்வார்கள்.

இதனால், இயற்கையான சிவப்பு நிறமும், சுவையும் கிடைக்கும். ஆயினும், பொதுவாக, அக்காலங்களில் சிலர், வெற்றிலை பாக்கோடு, கத்த காம்பும் சேர்த்தே, தாம்பூலம் தரித்து வருவார்கள்.

என்ன இருக்கிறது கத்த காம்பில்?

என்ன இருக்கிறது கத்த காம்பில்?

தாம்பூலத்தில் பக்குவம் மாறி சுண்ணாம்பு கூடுதலாகும் போதோ, புகையிலை அதிகமாகும் போதோ அவை நாவில், வாயில் பாதிப்பை ஏற்படுத்தும். அந்த பாதிப்பை மட்டுப் படுத்தவும், வாயில் உள்ள புண்களை ஆற்றவும் உதவுகிறது, கத்த காம்பு. மேலும், இதை மெல்லும்போது, தாம்பூலத்திற்கு தனி சுவையையும் கொடுக்கும்.

இதோடு மட்டுமல்ல, மனிதருக்கு, நிறைய நற்பலன்கள் தரும், இந்த கத்த காம்பு. ஒவ்வொன்றாகக் காணலாம்.

துர் நாற்றம் நீங்க :

துர் நாற்றம் நீங்க :

சிலருக்கு வாயில் துர்நாற்றம் அடிக்கும், அந்த பாதிப்பை நீக்க, கத்தக் காம்பை அவ்வப்போது வாயில் இட்டு மென்று வர, பாதிப்புகள் விலகும்..நிறமூட்டி மற்றும் மணமூட்டிகள் நிறைந்திருக்கும், இளஞ்சிவப்பு வண்ண மலர்களைக் கொண்ட, ஒரு செடியான கத்த காம்பு இலைகளில் உள்ள, வேதித் தாதுக்கள், துணிகளில் சிவப்பு வண்ண சாயங்களை ஏற்றப் பயன்பட்டன.

உடைகளுக்கு நிறமியாக :

உடைகளுக்கு நிறமியாக :

மேலும், இதில் உள்ள டேனின் என்ற நிறமி, தோல் பொருட்களில் நிறம் ஏற்றவும், தோலைப் பதனிடும் செயல்பாடுகளிலும் பயன்பட்டது.

பொடிக் எனும் புடவைகள், சுடிதார்கள் இவற்றில் டிசைன்களை உருவாக்கும் பணியில், சிறந்த நிறமியாகப் பயன்படுகிறது. கத்தக்காம்பு, இலைகள் மற்றும் தண்டுகளின் மூலம், அவற்றைக் காயவைத்து, பதப்படுத்தி, அதன் பின்னர் சிறு துண்டுகள் போன்றோ அல்லது பொடியாகவோ உருவாக்கப்படுகிறது.

கத்தக்காம்பு பொதுவாக, பாக்கு போல மெல்லுவதற்குப் பயன்பட்டாலும், அவை மருத்துவ பலன்கள் மிக்கவை.

வயிற்றுப் போக்கை சரிசெய்யும் :

வயிற்றுப் போக்கை சரிசெய்யும் :

கத்தக்காம்பு இலைகள் மற்றும் அதன் தண்டு இவற்றை நன்கு உலர்த்திப் பொடியாக்கி, அவற்றை சிறிது தண்ணீரில் கலந்து, நன்கு கொதிக்க வைத்து, பருகி வர, வயிற்றுப் போக்கு விரைவில் நின்று, உடல் நலமாகும்.

கத்தக்காம்பில் உள்ள மனிதனுக்கு நன்மை அளிக்கும் பாக்டீரியாக்கள், இந்தக் குடிநீரின் மூலம், உடலில் கலந்து, வயிற்றுப் போக்கை உண்டாக்கும் நச்சு பாக்டீரியாக்களை அழித்து, பாதிப்புகளை சரிசெய்து, உடலை காக்கிறது.

வாய்ப்புண் தொண்டைப்புண் போக்க:

வாய்ப்புண் தொண்டைப்புண் போக்க:

கத்தக்காம்பு, அதி மதுரம், காசு கட்டி மற்றும் மிளகு. இவற்றை தனித்தனியே, நன்கு பொடியாக அரைத்து, அவற்றில் சிறிது நீர் கலந்து மீண்டும் ஒன்றாக அரைத்து வைத்துக் கொண்டு, தொண்டைப் புண், வாய்ப்புண் மற்றும் கட்டி போன்றவை ஏற்பட்டு, வலியில் சாப்பிட முடியாமல்,

எச்சில் விழுங்க முடியாமல், தவித்து வரும் சமயங்களில், இந்த மருந்துக் கலவையை, சிறிது வாயில் இட்டு அதக்கி வைத்துக் கொள்ள, வலிகள் எல்லாம் விலகி, புண்கள் விரைவில் ஆறிவிடும்.

பல் ஈறு பலப்படுத்த:

பல் ஈறு பலப்படுத்த:

கத்தக்காம்பை சிறிது நீரில் இட்டு, கொதிக்க வைத்து, நன்கு சுண்டியவுடன், ஆற வைத்து, பருகி வர, தொண்டை கட்டிக் கொண்டு, குரல் கம்முவது மற்றும் வயிற்றுப் போக்கு போன்றவை விலகி விடும். இந்த நீரில் சிறிது இந்துப்பு இட்டு வாய் கொப்புளித்து வர, பல் வலி, ஈறுகளில் வீக்கம் போன்ற பாதிப்புகளை சரியாக்கி, பற்களை உறுதியாக்கும்.

காயங்களை ஆற்றும் கத்தக்காம்பு:

காயங்களை ஆற்றும் கத்தக்காம்பு:

அடிபடுவதால் ஏற்பட்ட காயங்கள் ஆறி வந்தாலும், சமயங்களில் அதன் தழும்புகளில் சிறிய கொப்புளம் போல தோன்றி, காயங்கள் மீண்டும் தோன்றும், இதனால் வலியும் ஏற்படும். இது போன்ற பாதிப்புகளை சரிசெய்ய, கத்தக்காம்பு இலைகளை நன்கு கசக்கி, அந்தச் சாற்றை காயங்களின் மேல் சில துளிகள் விட்டு, அதன் மேல், இலைகளை சற்று நேரம் வைத்திருக்க, காயங்களின் மேல்பகுதி, குளுமையாகி, காயங்கள் படிப்படியாக, குணமாகி விடும்.

முகப்பரு, தழும்புகள் போக்கும் :

முகப்பரு, தழும்புகள் போக்கும் :

கத்தக்காம்பு இலைகளை நன்கு கசக்கி, அதன் சாற்றை பருக்கள் மீது தடவி வர வேண்டும். இலைகளை நன்கு அரைத்து பேஸ்ட் போல உருவாக்கி, அதை, முகத்தில் நன்கு தடவி சற்று நேரம் ஊற வைத்து, அதன் பின் முகத்தைக் கழுவி வர, முகப்பரு, தழும்புகள் எல்லாம் விரைவில் மறைவதோடு, முகமும் பொலிவு பெற்று விளங்கும்.

இதன் மூலம், இள வயதிலேயே, முகச் சுருக்கம் தோன்றி, முதிர்ந்த தோற்றத்தில் காணப்பட்டவர்களின் மனக்குறைகள் நீங்கி, முகம் இளமையாக, சுருக்கமின்றி காணப்படும்.

நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண் போக்கும்:

நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண் போக்கும்:

நேரந்தவறிய உணவுகளால், சிலருக்கு சாப்பிட்டதும், நெஞ்சில் எரிச்சலும், வயிற்றில் வலியும் தோன்றும். இந்த பாதிப்புகள் விலக, கத்தக்காம்பு இலைகளை அவற்றின் தண்டுகளோடு சேர்த்து, நன்கு உலர வைத்து அரைத்து பொடியாக்கி, அந்தப் பொடியை, சிறிது தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வர, செரிமான பாதிப்புகள் நீங்கி, உடல் நலமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Uncaria Gambier to treat mouth ulcer

Uncaria Gambier to treat mouth ulcer
Story first published: Tuesday, November 28, 2017, 16:30 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter