உடம்பு சரியில்லாதப்போ இந்த உணவுகளையெல்லாம் சாப்பிடக் கூடாது!!

Written By:
Subscribe to Boldsky

காய்ச்சல் இருமல் என எது இருந்தாலும் நாம் சாப்பிடும் உணவுகளும் பாதி நோயை தீர்க்கும். ஆகவே சாப்பிடும் உணவுகளை கவனமுடன் தேந்தெடுப்பது முக்கியம்.

எப்படி உணவுகள் தேடி சாப்பிட வேண்டுமோ அது போல் சில உணவுப் பொருட்களை தவிர்ப்பதும் முக்கியம்.

These foods you should never eat when you are sick

எந்த வகையான உணவுகள் உடல் நலம் சரியில்லாமல் இருக்கும்போது சாப்பிடக் கூடாது என பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காஃபி :

காஃபி :

வயிறு சம்பந்தமான கோளாறுகள் இருந்தால் அந்த சமயங்களில் காஃபி அறவே தவிர்க்க வேண்டும். காஃபின் வாந்தியை தூண்டும்.

அதே சமயங்களில் காய்ச்சல் இருக்கும்போதும் காஃபி குடிப்பதால் உடலில் அதிக வெப்பம் உருவாகி காய்ச்சலை அதிகரிக்கச் செய்து விடும்.

ஆரஞ்சு பழச் சாறு :

ஆரஞ்சு பழச் சாறு :

உங்களுக்கு இருமல், தொண்டையில் தொற்று உண்டானால் அந்த சமயங்களில் ஆரஞ்சு சாறு குடிப்பதை நிறுத்த வேண்டும். இதிலுள்ள சிட்ரிக் அமிலம் தொண்டையில் இன்னும் எரிச்சலை உண்டாக்கும். இதனால் இருமல் இன்னும் அதிகமாகும்.

இனிப்பு :

இனிப்பு :

எளிதில் இனிப்பு ஜீரணிப்பதில்லை. வயிறு சம்பந்தபட்ட பிரச்சனையை அதிகப்படுத்திவிடும். அதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைத்துவிடும். காய்ச்சல், வயிற்றுக் கோளாறு அல்லது எந்த நோயானாலும் அந்த சமயங்களில் இனிப்பை தவிர்க்க வேண்டும்.

நொறுக்கு தீனிகள் :

நொறுக்கு தீனிகள் :

எந்த வகையான உடல் பாதிப்பு இருந்தாலும் ஜீரண உறுப்புகள் மந்தமாகிவிடும். எனவே அப்போது நொறுக்கு தீனிகளை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் அவை உடலில் செரிமான பிரச்சனையை உண்டாக்கிவிடும்.

பால் :

பால் :

காய்ச்சல், சளி அல்லது வயிற்றுகோளாறு இருக்கும்போது பாலை தவிர்க்க வேண்டும். பால் சளியை பெருக்கி விடும். செரிமானம் ஆகாமல் வாந்தியை உண்டாக்கும்.

கொழுப்பு உணவுகள் :

கொழுப்பு உணவுகள் :

கொழுப்பு மிக்க்க உணவுகள் குடலிலேயே அதிக நேரம் தங்கும். செரிமானம் ஆவதற்கு தாமதமாவதால் அதனை அவ்வளவு எளிதில் சாப்பிட முடியாது. ஆகவே கொழுப்பு மிக்க உணவுகளை தவிர்ப்பது முக்கியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

These foods you should never eat when you are sick

These foods you should never eat when you are sick
Story first published: Saturday, January 7, 2017, 14:48 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter