பெண்களுக்கு சர்க்கரை வியாதி வரும்னு எப்படி ஆரம்பத்திலேயே தெரிஞ்சுக்கலாம்?

Posted By: R. SUGANTHI Rajalingam
Subscribe to Boldsky

டயாபெட்டீஸ் பற்றிய விழிப்புணர்வு எல்லாருக்கும் வேண்டும்.நமது உடலில் உள்ள இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது அதற்கான இன்சுலின் சுரக்க முடிவதில்லை. இன்சுலின் என்ற ஹார்மோன் தான் நமது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

உங்கள் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் போதெல்லாம் இந்த நுட்பமான அறிகுறிகளை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 45 வயதுள்ள நபர்கள், இளைமையானவர்கள் இப்படி அதிகமான உடல் எடை, பரம்பரை போன்ற காரணங்களால் டயாபெட்டீஸ் நோய்க்கு ஆளாகின்றனர். கருவுற்ற பெண்களும் கருவுற்ற காலங்களில் இந்த சர்க்கரை நோய்க்கு ஆளாகின்றனர் என்று ரிப்போர்ட் சொல்லுகிறது.

Subtle Symptoms Of Diabetes That Women Surely Miss

எல்லாருக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்ட பிறகு தான் அதன் அறிகுறிகளையே கவனிப்பர். ஆனால் ஆரம்ப காலத்தில் ஏற்படும் சின்ன சின்ன நுட்பமான அறிகுறிகளை கண்டு கொண்டு அதற்கான சிகிச்சையை எடுப்பது நல்லது. எனவே பெண்களே உஷார்.

இங்கே பெண்களுக்கு ஏற்படும் டயாபெட்டீஸின் சில நுட்பமான அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன., இந்த அறிகுறிகளை அறிந்து கொண்டால் ஆரம்ப கால நிலையிலேயே டயாபெட்டீஸ்யை சரி பண்ணலா

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அடிக்கடி சிறுநீர் கழித்தல்

அடிக்கடி சிறுநீர் கழித்தல்

இந்த அறிகுறி உங்கள் உடலில் அதிகமான சர்க்கரை இரத்தத்தில் இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுகிறது. உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் உங்கள் உடற்செயல்கள் செயலற்றுவிடும். எனவே அதிகமான தண்ணீர் சர்க்கரையுடன் சேர்ந்து வெளியேறும். எனவே அதிகமாக சிறுநீர் இழப்பு ஏற்படும்.

எப்போதும் தாகம் எடுத்தல்

எப்போதும் தாகம் எடுத்தல்

ஒவ்வொரு தடவை சிறுநீர் கழிக்கும் போது உடலில் நீர்ச்சத்து குறையும். சில பேர்களுக்கு இந்த டயாபெட்டீஸ் அறிகுறிகள் தெரியாமல் சர்க்கரை நிறைந்த சோடா, செயற்கை பானங்கள், போன்றவற்றை எடுத்து கொள்ளவதால் இன்னும் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து நிலைமை மோசமாகி விடும்.

வாய் துர்நாற்றம்

வாய் துர்நாற்றம்

டயாபெட்டீஸின் மற்றொரு அறிகுறி இந்த வாய் துர்நாற்றம். உங்கள் வாய் போதிய நீர்ச்சத்து இல்லாமல் வறண்டு போவதால் உங்கள் சுவாசம் கெட்ட வாடையை அடைகிறது. உங்களது இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும் போது நமது உடல் உணவில் உள்ள குளுக்கோஸை எடுத்து ஆற்றலுக்கு செலவிடுகிறது.

இதனால் கீட்டோன்ஸ் உருவாகிறது. அதாவது உங்கள் வாயில் சர்க்கரை மணம் அல்லது பழங்களின் மணம் போன்ற துர்நாற்றம் வீசுகிறது.

கண் பார்வை மங்குதல்

கண் பார்வை மங்குதல்

உங்கள் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும் போது இந்த இரத்தம் தான் உடல் முழுவதற்கும் செல்கிறது. நமது கண்களுக்கும் கூட. எனவே இந்த சர்க்கரை கண்ணில் உள்ள லென்ஸ்க்கு செல்லும் போது பாதிப்பு ஏற்பட்டு இதனால் கண் பார்வை மங்கி காணப்படும்.

கை மற்றும் கால் உணர்வின்மை

கை மற்றும் கால் உணர்வின்மை

கொஞ்சம் வருடங்கள் கழித்து டயாபெட்டீஸ் உங்கள் நரம்பு மற்றும் இரத்த குழாய்களை பாதிப்படைய செய்யும். நெருப்பு, பின், ஊசி இவற்றை வைத்து குத்தினால் கூட உணர்வில்லாத தன்மை ஏற்படும்.

காயங்கள் ஆறாது :

காயங்கள் ஆறாது :

நரம்புகளில் உணர்வின்மை ஏற்படுவதால் காயங்கள் ஆறுவதற்கு அதிக நாட்கள் ஆகத் தொடங்கும். சின்ன காயங்களாக இருந்தாலும் கவனிக்க வேண்டும். இல்லையென்றால் நோய் தொற்று ஏற்பட்டு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

அதிகமாக சாப்பிட்டாலும் உடல் எடை குறையும்

அதிகமாக சாப்பிட்டாலும் உடல் எடை குறையும்

டயாபெட்டீஸ் பொருத்த வரை நாம் எதிர்பார்க்காத வகையில் எடை குறைப்பு ஏற்படும். இன்சுலின் நமது உடலில் உள்ள அனைத்து ஆற்றலையும் உடல் செல்களுக்கு வழங்கி விடும். இன்சுலின் பற்றாக்குறை இருந்தால் ஆற்றல் இல்லாமல் உடம்பு களைப்படையும். மேலும் வேகமாக உடல் எடை குறையும்.

எல்லா நேரமும் சோர்வாக இருத்தல்

எல்லா நேரமும் சோர்வாக இருத்தல்

கார்போஹைட்ரேட் என்ற சத்து குளுக்கோஸாக உடைந்து நமக்கு ஆற்றலை கொடுக்கிறது. ஆனால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்காமல் உடல் தீடீரென்று சோர்வாகி விடும்.

தொடர்ந்து ஈஸ்ட் தொற்று

தொடர்ந்து ஈஸ்ட் தொற்று

அதிக சர்க்கரை இரத்தத்தில் இருப்பதால் தொடர்ந்து வெஜினா பகுதியில் ஈஸ்ட் தொற்று ஏற்படும். இந்த தொடர்ச்சியான பாதிப்புகள் டயாபெட்டீஸ் நோயால் வருகிறது.

கழுத்து மற்றும் அக்குளை சுற்றி கருப்பு புள்ளிகள்

கழுத்து மற்றும் அக்குளை சுற்றி கருப்பு புள்ளிகள்

அதிகமான குளுக்கோஸ் சருமத்தில் தங்குவதால் இந்த கருப்பு புள்ளிகள் தோன்றுகின்றன. இதனால் கமுத்து மற்றும் அக்குளை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த கருப்பு புள்ளிகள் தோன்றுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Subtle Symptoms Of Diabetes That Women Surely Miss

Subtle Symptoms Of Diabetes That Women Surely Miss
Story first published: Friday, November 24, 2017, 19:30 [IST]