மார்பக புற்று நோயை தடுக்கும் ஒரு அற்புத உணவு இதுதாங்க!! ஆராய்ச்சியாளர்களெ சொல்லிட்டாங்க!!

By: R. SUGANTHI Rajalingam
Subscribe to Boldsky

மார்பக புற்று நோய் எல்லாரையும் அச்சுறுத்தும் ஒரு வகை கேன்சர் நோயாகும். இதனால் ஒவ்வொரு வருடமும் மில்லியன் கணக்கிலான பெண்கள் பாதிப்படைகின்றனர். இதில் ஒரு சில பேர்கள் மட்டுமே சரியான நேரத்தில் கண்டுபிடித்து சரியான சிகச்சை மேற்கொண்டு வெற்றி கரமாக அதிலிருந்து மீள்கின்றனர்.

 மார்பக புற்று நோயை எதிர்க்கும் பொருள் எவை எனத் தெரியுமா

சரியாக இதைப் பற்றிய முன்னெச்சரிக்கை இல்லாமல் இருப்பதாலும் சரியான சிகச்சையை சரியான நேரத்தில் பெற முடியாமல் போவதால் இதன் பாதிப்பு மோசமாகிவிடுகிறது. உங்கள் நெருக்கமானவர்கள் அல்லது உறவினர்கள் இப்படி யாராவது மார்பக புற்று நோயால் அவதிப்பட்டால் அவர்களுக்கு ஒரு நற்செய்தி உள்ளது.

புதிய ஆராய்ச்சி தகவல் படி பார்த்தால் சோயா உணவில் உள்ள கூட்டுப் பொருட்கள் மார்பக புற்றுநோயை ஒடுக்கும் தன்மை கொண்டு உள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சோயா உணவு :

சோயா உணவு :

அமெரிக்காவில் உள்ள அரிசோனா யுனிவர்சிட்டியில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜெனிஸ்டீன் என்ற கூட்டுப் பொருள் சோயா உணவுகளில் உள்ள அவை பிஆர்சிஏ1( BRCA1) என்ற மனித புற்றுநோய் கட்டிகளை கட்டுப்படுத்தும் ஜீனை பாதுகாக்கிறது. இந்த ஜீன் தான் மார்பக புற்று நோயிலிருந்து நம்மை காக்க பெரிதும் பயன்படுகிறது.

மார்பக கட்டி :

மார்பக கட்டி :

பிஆர்சிஏ1 என்பது புற்று நோய் கட்டிகளை ஒடுக்கும் ஜீன் ஆகும். இது சாதாரணமாக செயல்பட்டு நமது உடலில் உள்ள டிஎன்ஏ மூலக்கூறுகளை நிலையாக்கி மரபணு நோயான புற்று நோய்க்கு எதிராக பாதுகாக்கிறது. இந்த பிஆர்சிஏ1 ஜீன் மார்பக புற்று நோய்க்கு எதிராக செயல்பட்டு அதன் செல்களை தாக்கி அழிக்கிறது என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆராய்ச்சி :

ஆராய்ச்சி :

குறைந்த சதவீத மார்பக புற்று நோய் பிஆர்சிஏ1 ஜீனில் பிறழ்வுகளை உண்டாக்கிறது. மற்ற மார்பக புற்று நோய் நோயாளிகள் சாதாரண நகல் ஆனால் மெத்திலேட்டப்பட்ட கார்பன் மூலக்கூறுகளை கொண்ட ஜீனின் அமைப்பை கொண்டுள்ளனர். இதில் பிஆர்சிஏ1 அமைதியான நிலையில் இருப்பதால் புற்று நோய் கட்டிகளுக்கு எதிராக செயல்பட முடியாமல் இருக்கிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

எனவே இதற்கு ஒரு ஏற்பி அரோமேட்டிக் ஹைட்ரோ கார்பன் ஏற்பி (AHR) அமைதியான பிஆர்சிஏ1 என்ற ஜீனை தூண்ட தேவைப்படுகிறது. இந்த பிஆர்சிஏ1 ஜீன் புற்று நோய் கட்டிகளை ஒடுக்கும் தன்னுடைய வேலையை செய்யா விட்டால் அந்த செல்கள் அப்படியே தன்னுடைய எண்ணிக்கையை பெருக்கிக் கொண்டே போக ஆரம்பித்து விடும்.

 சோயாவின் நன்மை :

சோயாவின் நன்மை :

இந்த ஆராய்ச்சி படி பார்த்தால் AhR என்ற ஏற்பி ஜெனிஸ்டீனால் குறி வைக்கப்படுகிறது . இது எந்த வித விளைவையும் ஏற்படுத்தாத பாதுகாப்பு முறை என்று ஆராய்ச்சி குரூப் கூறுகிறது. இந்த AhR என்ற ஏற்பியை குறி வைக்க சோயா வகையில் உள்ள புரோட்டீனில் இருக்கும் கூட்டுப்பொருளான ஐஸோஃப்ளவன்ஸ் பயன்படுகிறது என்று கூறுகின்றனர்.

முடிவு :

முடிவு :

வாழ்நாளில் அதிகமாக சோயாவை எடுக்கும் ஆசிய பெண்கள் மார்பக புற்று நோய் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்கின்றனர்.

இந்த சோயாவில் காணப்படும் ஐஸோஃப்ளவன்ஸ் டிஎன்ஏ மெத்திலேசனை தடுத்து பிஆர்சிஏ1 என்ற ஜீன் புற்று நோய்க்கு எதிராக செயலிழந்து போவதை தடுக்கிறது என்று டோனாடோ எஃப் ரோமக்நோலோ என்ற புரபொசர் யுனிவர்சிட்டி ஆஃப் அரிசோனாவிலிருந்து கூறுகிறார்.

இந்த ஆராய்ச்சி பற்றிய தகவல் நாளிதழ் கரண்ட் டெவலப்மென்ட்ஸ் இன் நியூட்ரிஷன் என்பதில் வெளியிடப்பட்டுள்ளது. இங்கே சில வழிகளை கொண்டு எப்படி மார்பக புற்று நோயை தடுக்கலாம் என்பதை பார்க்கலாம்

 ஆரோக்கியமான உணவு முறை :

ஆரோக்கியமான உணவு முறை :

ஆரோக்கியமான உணவு முறை உங்களுக்கு மார்பக புற்று நோய் வருவதிலிருந்து பாதுகாக்கிறது. தினமும் நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் எடுத்து கொள்ள வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது.

தொடர்ச்சியான உடற்பயிற்சி :

தொடர்ச்சியான உடற்பயிற்சி :

உடற்பயிற்சி என்பது ஜிம்க்கு போய் செய்வது மட்டும் கிடையாது. தினமும் 30 நிமிடங்கள் நடப்பது, ஓடுவது போன்றவைகளும் மார்பக புற்று நோய் வராமல் தடுக்கிறது

 ஆல்கஹால் மற்றும் புகைபழக்கத்தை தவிர்த்தல்

ஆல்கஹால் மற்றும் புகைபழக்கத்தை தவிர்த்தல்

ஆரோக்கியமான உணவு முறை, உடற்பயிற்சி இவற்றுடன் கெட்ட பழக்கங்களான ஆல்கஹால் மற்றும் புகைபிடித்தலை அறவே விடுவது நல்லது.

புகைப்பிடித்தல் உங்கள் நுரையீரலை மட்டும் பாதிப்பதோடு மற்ற உறுப்புகளையும் பாதிக்கிறது என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் குறைந்த அளவு ஆல்கஹால் குடித்த கூட மார்பக புற்று நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

This Compound Can Help Fight Breast Cancer Effectively

This Compound Can Help Fight Breast Cancer Effectively
Story first published: Tuesday, November 7, 2017, 18:30 [IST]
Subscribe Newsletter