For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எய்ட்ஸிற்கான மருந்து கண்டுபிடிப்பதில் ஏன் தோல்வி ஏற்படுகிறது?

எய்ட்ஸிற்கான மருந்தை கண்டுபிடிப்பதில் ஏன் தோல்வி ஏற்படுகிறது என இந்த ஆராய்ச்சி கட்டுரையை படித்து தெரிந்து கொள்ளலாம்.

By Ambika Saravanan
|

மரணத்தை பரிசாக கொடுக்கும் நோய்களுள் எல்லோராலும் அறியப்படுவது HIV . உலக மக்களை அச்சுறுத்தும் நோய்களில் இது முக்கியமானது. இந்த நோய்க்கு இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

2016ல் நடந்த கணக்கெடுப்பின்படி 36.7 மில்லியன் மக்கள் HIVயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1.8 மில்லியன் பேர் குழந்தைகள் ஆகும். இதில் 30% மக்களுக்கு அவர்களுக்கு இந்த வைரஸ் தாக்கப்பட்டதே தெரியாமல் இருக்கிறார்கள். 2016ல் மட்டும் HIVயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 1.96 லட்சம் ஆகும். 2015 வரை எடுத்த கணக்கெடுப்பில் 28.81 லட்சம் ஆகும்.

Reasons for why researches on HIV Gives negative results

இந்த வைரஸ் தேங்கியிருக்கும் இடத்தை ஆராய்ந்து முற்றிலும் ஒழிக்க ஆராய்ச்சியாளர்கள் கடும் முயற்சி செய்து வருகின்றனர். இதற்கான வழி ஒன்றையும் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த முறையில், ஒரு ஏஜெண்டை அனுப்பி, செயலற்று இருக்கும் வைரஸை தட்டி எழுப்பி அதனை பெறுக செய்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை கொண்டு அல்லது அந்த வைரஸை கொன்டே HIV தங்கியிருக்கும் அணுவை ஒழிப்பதே இவர்கள் நோக்கமாகும். இந்த தொழில்நுட்பத்திற்கு பெயர் கிக் அண்ட் கில்(Kick and Kill ) என்பதாகும்.

இந்த ஆய்வின் படி தேங்கியிருக்கும் வைரஸ்களை அழிப்பதால் HIV பாதிக்கப்பட்ட மக்களின் உடலில் இருக்கும் சில அல்லது எல்லா HIV வைரஸ்களையும் அழிக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சோதனை முயற்சி மனிதர்களிடம் இன்னும் நடத்தப்படவில்லை. விலங்குகளிடம் மட்டுமே நடத்தப்பட்டிருக்கிறது.

உடலில் மறைந்து இருக்கும் HIV வைரஸ்கள் மிகவும் ஸ்திரமாக இருக்கும். நோயாளிகள் இந்த நோயை குறைக்கும் அன்டிவைரல் மருந்துகளை எடுக்காமல் இருக்கும்போது அந்த வைரஸ் மேலும் உற்பத்தியை அதிகரிக்கிறது.

இந்த நேரத்தில் மறுபடியும் அன்டிவைரல் மருந்துகளை எடுப்பதன் மூலம் மறைந்திருக்கும் வைரஸ்களில் சில அழிக்கப்படுகின்றன. இந்த மருந்தால் மேலும் முன்னேற்றம் கிடைக்கும்போது, வைரஸ் தேக்கம் குறைந்து , மருந்துகளுக்கான அவசியம் குறைகிறது.

மறைந்திருக்கும் வைரஸ்களை போக்க வைக்கும் வழிமுறைகளில் இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளில் குறைந்த பட்ச வெற்றியே கிடைத்துள்ளது. இவைகள் விலங்குகளின் சோதனைகளில் கிடைத்த முடிவாகும்.

மனிதர்களுக்கு சோதனை செய்யும்போது முடிவுகள் மாறலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். முடிவுகள் நேர்மறையாக இருந்தால் HIV நோய்க்கு மருந்து கிடைத்த நற்செய்தி அனைவருக்கும் கிடைக்கும். அந்த நல்ல நாளை எதிர்நோக்கி அனைவரும் காத்திருப்போம்.

English summary

Reasons for why researches on HIV Gives negative results

Reasons for why research on HIV Gives negative results
Story first published: Tuesday, October 17, 2017, 17:28 [IST]
Desktop Bottom Promotion