கஞ்சா புகையை பிட்டம் வழியே ஊதி மருத்துவம் - என்ன கன்றாவி சார் இது!

Posted By:
Subscribe to Boldsky

"Oh, you're just blowing smoke up my ass," இப்படி ஒரு வாக்கியம் ஆங்கிலத்தில் செம்ம கோபமடைந்தால், வெறுப்படைந்தால் கூறுவார்கள்.

ஆனால், இந்த வாக்கியத்தின் பொருளுக்கு ஏற்ப ஒரு மருத்துவ முறை 18 நூற்றாண்டில் இருந்தது என்று கூறினால், கொஞ்சம் அதிர்ச்சியும், ஆச்சரியமும், திகைப்பும் சேர்ந்த ஒரு கலவையான் உணர்வு, முக பாவம் உங்கள் மத்தியில் உண்டாகலாம்.

அதுவும் வெறும் புகை அல்ல, கஞ்சா புகையை பிட்டம் வழியே ஊதி மருத்துவம் செய்துள்ளனர். இதற்கான சான்று கிஸ்மாடோ எனும் ஆங்கில இணைய தளத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எப்படி? எங்கே?

எப்படி? எங்கே?

1746-ல் முதன் முதலாக இங்கிலாந்தில் இந்த சம்பவம் நடந்தது. மனைவி நீரில் மூழ்கியதை அடுத்து, அவரது உடலில் ஏறிய நீரை வெளியேற்ற அந்த பெண்மணியின் கணவர் புகையிலை புகையை மல துவாரத்தின் வலியாக எனிமா போல கொடுத்துள்ளார். இது அந்த காலத்தில் பிறகு பிரபலமடைந்த மருத்துவ முறையாக மாறியது வேறு விஷயம்.

Image Credit:Today I Found Out/YouTube

நீரில் மூழ்குதல்!

நீரில் மூழ்குதல்!

நீரில் யாரனும் விபத்தாக மூழ்கிவிட்டால், புகை பிடிக்கும் பைப்பில் ஒரு குழாய் சேர்த்து, மூழ்கிய நபரின் பிட்டத்தின் துவாரம் வழியாக அந்த புகையை மல குடலில் செலுத்தியுள்ளனர்.

இன்று இது மிகவும் விசித்திரமாக இருந்தாலும், அன்று இது பலர் பின்பற்றிய மருத்துவ முறையாக இருந்துள்ளது. இது மயங்கிய நிலையில் இருந்த அவர்களை மீண்டும் சுய நினைவிற்கு கொண்டு வர பலனளித்தது என்று தகவல்கள் பதிவாகியிருக்கின்றன.

Image Credit:Today I Found Out/YouTube

இப்படி ஒரு யோசனை?

இப்படி ஒரு யோசனை?

எல்லாம் ஓகே.. ஆனால் புகையிலை புகையை பயன்படுத்த யாருக்கு? எப்படி யோசனை துளிர்விட்டது என்பது தான் தெரியவில்லை.

அமெரிக்க உள்நாட்டு பகுதிகளில் புகையிலையை பல வகையில் அவர்கள் மருத்துவத்தில் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அதன் மூலமாகவே இந்த புகையிலை எனிமாவும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

Image Credit: Wiki Commons

தாவரவியலாளர்!

தாவரவியலாளர்!

ஆங்கில தாவரவியலாளர், மருத்துவர் மற்றும் ஜோதிடராக திகழ்ந்த நிக்கோலஸ் இந்த மருத்துவ முறையை பின்பற்றி வந்து, இங்கிலாந்தில் எனிமா மருத்துவ சிகிச்சையாக அளித்து வந்தார் என்றும் கூறப்படுகிறது.

சில வருடங்கள் கழித்து ஆங்கில மருத்துவர் ரிச்சர்ட் மீட் என்பவர் இந்த மூலிகை எனிமா பயிற்சியை அங்கீகாரப் படுத்தி பயன்படுத்தி வந்துள்ளார்.

Image Credit: Wiki Commons

18ம் நூற்றாண்டு!

18ம் நூற்றாண்டு!

18ம் நூற்றாண்டில் இந்த சிகிச்சை மெல்ல, மெல்ல அதிகரித்து மக்கள் மத்தியில் நீரில் மூழ்கிய நபர்களுக்கு அளிக்கும் சிகிச்சையாக மாறி இருக்கிறது. இது ஒரு அவசர சிகிச்சையாக பின்பற்றி வந்துள்ளனர்.

இந்த புகையிலை புகையை செலுத்துதல் இதயத்துடிப்பை அதிகரிக்க செய்து, சுவாச மண்டலத்தை மீண்டும் ஆக்டிவாக செயல்பட வைத்து மயக்கத்தில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்ப வைத்துள்ளது என அவர்கள் கூறி இருக்கிறார்கள்.

இது வாய் வழியாக காற்றை அனுப்பும் முறையை விட நல்ல பலன் அளித்ததாக தகவல்கள் பதிவாகி இருக்கின்றன.

கருவி!

கருவி!

இதற்கான தகுந்த கருவி கண்டுபிடிக்கும் வரை, புகைப்பிடிக்கும் பைப் மூலமாக தான் இவர்கள் இந்த சிகிச்சை முறையை செயற்படுத்தி வந்திருக்கிறார்கள். பைப் சிறியதாக இருந்ததால், அதனுடன் ஒரு குழாயை இணைத்து சிகிச்சை அளித்திருக்கிறார்கள்.

விருது!

விருது!

இந்த மருத்துவ முறைக்கு உயர் காக்கும் முறை என கூறி விருதுகள் எல்லாம் அளித்துள்ளனர்.

ஆனால், பின்னாட்களில் இந்த மருத்துவ முறையால், டைப்பாயிடு, தலைவலி, வயிற்று பிடிப்பு போன்றவை ஏற்பட்டதாலும், 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே புகையிலை இதயத்திற்கு தீமை விளைவிக்கும் பொருள் என அறியப்பட்டதாலும் இந்த முறையை கைவிட துவங்கினர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

People Blow Smoke Up Through Ass. And It is not a Joke!

People Blow Smoke Up Through Ass. And It is not a Joke!
Subscribe Newsletter