இரு புருவங்களுக்கு மத்தியில் அழுத்தம் கொடுப்பதால் வரும் பலவித நன்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

அக்குப்ரஷர் எனப்படும் உடலில் கொடுக்கப்படும் அழுத்தம் சீன மருத்துவமுறை. அவர்களின் பழங்கால மருத்துவ சிகிச்சைகளில் மிகவும் முக்கியமானது இந்த அக்குபிரஷர் சிகிச்சை.

உடலில் இருக்கும் குறிப்பிட்ட புள்ளியில் அழுத்தம் தரப்பட்டு தூண்டப்படுவதால் நமது உடல், தம்மை தாமே குணப்படுத்தும். உடலில் ஒவ்வொரு இடத்திலும் ஒரு மர்பப் புள்ளிகள் உண்டு. அவ்ற்றை கண்டுபிடித்து அழுத்தம் தருவதால் பலவித நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. அந்த மாதிரியான அழுத்தப் புள்ளிகளைப் பற்றி இங்கு காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 அக்குப்பிரஷரின் நன்மைகள் :

அக்குப்பிரஷரின் நன்மைகள் :

அக்குபிரஷர் செய்வதால் ரத்த ஓட்டம் அதிகரிக்கின்றது. வலிகள் குறைகின்றது. மன அழுத்தம் மற்றும் உடல் வலிகளிலிருந்து நிவாரணம் தருகிறது. அக்குபிரஷரினால் எல்லா வியாதியை முற்றிலும் குணப்படுத்த முடியாது.

ஆனால் அதன் தீவிரத்தை குறைக்கும்போது நோய்கள் விரைவில் குணமாகும். நமது தலையில் இருக்கும் மிக முக்கியமான புள்ளிகளும், அங்கு தரப்படும் அழுத்தத்தால் வரும் நன்மைகளையும் பார்க்கலாம்.

 மூன்றாவது கண் :

மூன்றாவது கண் :

இரு புருவங்களுக்கு மத்தியில் இருக்கும் இடத்தை மூன்றாவது கண் என்று சொல்வார்கள். அந்த இடத்தில் இருக்கும் புள்ளியை கண், மூக்கு, புருவம் போன்றவற்றிற்காக மையப் புள்ளியாக விளங்குகிறது.

செய்யும் முறை :

1 முதல் முறையில் ஆள்காட்டி விரலால் மூன்றாவது கண் இடத்தை 60 நொடிகளுக்கு அழுத்த வேண்டும்.

2. இரண்டாவது முறையில் ஆள்காட்டி விரலால் இரு புருவங்களுக்கு மத்தியில்அழுத்தி வட்ட வடிவில் (விரலை எடுக்காமல்) அழுத்தம் கொடுங்கள்.

நன்மைகள் :

நன்மைகள் :

உங்களுக்கு மைக்ரைன் இருந்தால் குணமாகும். தினமும் செய்யும்போது நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். இது ரத்த நாளங்களை தூண்டுகிறது. சரும நோய்களுக்கு நல்ல பலனைத் தருகிறது.

மூக்கின் தண்டு :

மூக்கின் தண்டு :

இரு கண்களின் ஓரத்தில், அதாவது மூக்கின் தண்டு ஆரம்பிக்கும் பகுதியில் அழுத்தம் தர வேண்டும். இதற்கு பேம்பூ ப்ரஷர் என்று பெயர். உங்களின் ஆட்காட்டி விரலால் கண் மற்றும் மூக்கு ஆரம்பிக்கும் இடத்தில் அழுத்தம் கொடுங்கள். ஒரு நிமிடம் வரை தர வேண்டும். அல்லது லேசாக வட்ட வடிவில் அங்கு மசாஜ் செய்ய வேண்டும்

நன்மைகள் :

நன்மைகள் :

குளிர்காலத்தில் மூக்கடைப்பால் அவதிப்பட்டிருந்தால் அதிலிருந்து விடுதலை தரும். சைனஸ் பிரச்சனையை சரி செய்யும். தொடர்ச்சியாக மொபைல் அல்லது கணினி பார்ப்பதால் கண்களுக்கு உண்டாகும் பிரஷர் குறையும். இதனால் கண்களுக்கு புத்துணர்வு தரும்.

தலையின் பின்பகுதியில் :

தலையின் பின்பகுதியில் :

தலையில் அடிப்பாகத்தில் இருக்கும் இந்த இரு புள்ளிகளுக்கு நினைவுத்திறனின் வாசல் என்று பெயர். ஞாபக சக்தியை அதிகப்படுத்துகிறது. முதலில் பின்னந்தலையின் அடிப்பகுதியிலுள்ள இந்த இரு புள்ளிகளையும் விரல் நுனிகளால் அழுத்தம் தர வேண்டும். பின்னர் விரல் முட்டிகளால் அந்த புள்ளிகளில் மசாஜ் செய்ய வேண்டும்.

நன்மைகள் :

நன்மைகள் :

தீராத தலைவலி குணமாகும். தலையில் நீர் கோர்த்திருந்தால் அதற்கு நல்ல பலன் தரும். தலை சுற்றல், கழுத்தி விறைப்புத் தன்மை, கழுத்து வலி போன்ரவை குணமாகும்.

கன்னம் :

கன்னம் :

மூக்கின் ஒரத்தில் இருக்கும் கன்னப்பகுதியில் அழுத்தம் தர வேண்டும், ஆல்காட்டி விரலால் இரு பக்கமும் படத்தில் இருப்பது போல் அழுத்தம் 60 நொடிகளுக்கு கொடுங்கள். பின்னர் லேசாக அந்த புள்ளியில் மசாஜ் செய்ய வேண்டும்.

நன்மைகள் :

நன்மைகள் :

மைக்ரைன் , சைனஸ், நீர் கோர்ப்பு போன்றவை குணமாகும். உங்களுக்கு நுகர்வுத் திறன் பாதிப்பிருந்தால் நல்ல முன்னேற்றம் தரும். குணமாகும் வரை தினமும் செய்ய வேண்டும்.

பிடரி :

பிடரி :

பிடரி கழுத்து மற்றும் தலை இரண்டும் இணையுமிடம். அது மட்டுமில்லாமல் பல பெரிய பாகங்களின் நரம்புகள் இணையும் இடமும் அதுதான். அதனை மேஜிக்கல் ஏரியா என ஆக்குபிரஷர் வல்லுனர்கள் கூறுகின்றனர். ஒரு ஐஸ் கட்டியை எடுத்து பிடரிப் பகுதியில் உள்ள புள்ளியில் 3 நொடிகள் இடைவெளியில் அழுத்தம் தர வேண்டும். அவ்வாறு ஒரு நிமிடம் வரை தர வேண்டும்.

Image source

நன்மைகள் :

நன்மைகள் :

நன்றாக தூக்கம் வரும். ஜீரண சக்தி அதிகரிக்கும். தலைவலி, பல்வலி, ஆர்த்ரைடிஸ் குணமாகும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இந்த பலவித நன்மைகள் எல்லா உறுப்புகளுக்கும் அளிப்பதால் இது முக்கியமான ப்ரெஷராக கருதப்படுகிறது.

காது :

காது :

காது மடலின் ஓரத்தில் 5 புள்ளிகள் வரை தொடர்ச்சியாக காணபப்டுகின்றன. உங்களின் ஐந்து விரல்களின் நுனியை பயன்படுத்தி காது மடலுக்கு ஓரத்தில் படத்தில் குறிப்பிட்டது போல் அழுத்தம் தர வேண்டும். மேலிருந்து கீழ் நோக்கி வர வேண்டும்.

நன்மைகள் :

நன்மைகள் :

இப்படி செய்யும்போது காது நரம்புகள் தூண்டப்படுகின்றன. ரத்த ஓட்டம் தலைப் பகுதிக்கு அதிகரிக்கின்றது. நினைவுத் திறன் அதிகரிக்கும். மன அழுத்தம் குறையும். தலைவலி குணமாகும்.

தொண்டை

தொண்டை

ஆழ்ந்து சுவாசித்துக்கொண்டே, தொண்டைக்குழியில் உள்ள புள்ளியில் மிதமாக 12 முறை ஆள்காட்டி விரலால் அழுத்தம் கொடுக்க வேண்டும். தினமும், இப்படி மூன்று முறை செய்தாலே போதும்.

Image source

நன்மைகள் :

நன்மைகள் :

தொண்டை வலி, தொண்டைப்புண்கள், இருமல், ஆஸ்துமா, விக்கல் ஆகியவை விரைவில் குணமாகும்.

மேல் உதட்டிற்கு மேல் :

மேல் உதட்டிற்கு மேல் :

இப்புள்ளி மூக்கின் கீழ், மேல் உதட்டிற்கு மத்தியில் உள்ளது. இந்த இடத்தில் அழுத்தம் 14-21 தடவை அழுத்த தர வேண்டும்.

நன்மைகள் :

நன்மைகள் :

காரணம் அறியாமல் திடீரென மயக்கம் அடைந்தவர்கள், சரியான தூக்கமில்லாமல் தலை சுற்றி விழுந்தவர்கள் என மயக்கம் வருபவர்களுக்கு இந்த சிகிச்சை செய்தால் பலன் தரும்.

தூக்கமின்மை, மனச்சோர்வு :

தூக்கமின்மை, மனச்சோர்வு :

செய்முறை:

நடுவிரலின் நுனிப்பகுதியில், ஒரு நிமிடம் வரை ஆள்காட்டி விரலால் மிதமாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.

Image source

 நன்மைகள் :

நன்மைகள் :

தூக்கமின்மைக்கு முக்கியக் காரணமே கவலைதான். இந்தப் புள்ளி பெரிகார்டியத்துடன் தொடர்புடையதால், இதயத்துக்குச் சீராக ரத்தம் செல்ல உதவுகிறது. அதனால், மனச்சோர்வு நீங்கி ஆழ்ந்த தூக்கம் வர உதவும். இதயம் தொடர்பான வலி, நெஞ்செரிச்சல், எரிச்சல் உணர்வு, நாக்கு வீக்கமடைதல் ஆகிய பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையும்.

 அஜீரணம் மற்றும் மலச்சிக்கலுக்கு :

அஜீரணம் மற்றும் மலச்சிக்கலுக்கு :

காலின் இரண்டாவது மற்றும் மூன்றாவது விரல்களின் இடையில் உள்ள புள்ளியை , 20 முறை ஆழ்ந்து சுவாசித்துக்கொண்டே மிதமாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.

Image Source

 நன்மைகள்

நன்மைகள்

இந்தப் புள்ளி வயிற்றுப் பகுதியுடன் தொடர்புடையதால், வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு, வயிற்றில் வீக்கம், வயிற்று வலி, மலச்சிக்கல் மற்றும் செரிமானக் கோளாறுகளைச் சரியாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Import ant acupressure points that give amazing health benefits

Important acupressure points that give amazing health benefits