For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  மலச்சிக்கலை குணப்படுத்தும் பவள மல்லி பூக்களின் அற்புத நன்மைகள்!!

  By Gnaana
  |

  அழகிய நறுமணம் கமழும் மலர்களைக் காண்பது, களைத்த கண்களுக்கு விருந்து மட்டுமல்ல, வாசனை மறந்த நாசிகளுக்கு, நல்ல நறுமணமும் கூட.

  முன்னோர்கள் பெரும்பான்மை மலர்களை எல்லாம், தெய்வீகத்துடன் தொடர்பு படுத்தியே, வைத்திருக்கிறார்கள். மேலும், இருக்கும் இடமெல்லாம் நறுமணத்தைப் பொழியும் அந்த அழகு மலர்களை அளிக்கும் மரங்களையே, தல மரங்கள் என்று திருக்கோவில்களில் வைத்து வளர்த்து, பாதுகாத்தும் வந்திருக்கிறார்கள்.

  அத்தகைய பெருமை பெற்று, ஞானக்குழந்தை திருஞானசம்பந்தருக்கு, உமையன்னை ஞானப்பால் ஊட்டிய திருத்தலமான, சீர்காழியில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில், குடந்தை அருகேயுள்ள திருநறையூர் சித்தநாதீஸ்வரர் திருக்கோவில் போன்ற பழம்பெரும் சிவத்தலங்களில், தல மரமாகத் திகழ்கிறது, அற்புத நறுமணமும், கண்களைக் கவரும் தோற்றப் பொலிவும் மிக்க, பவள மல்லி மரம்! பவள மல்லி மரம், பாரிஜாதம், பிரம்ம புஷ்பம் எனும் பெயரிலும், அழைக்கப் படுகின்றன.

  How to use coral jasmine to treat constipation

  சங்ககால மகளிரின் வாழ்வில், சேடல் எனும் அழகிய மலருக்கு, முக்கிய இடமுண்டு என்று பழந்தமிழ் இலக்கியங்கள் உரைக்கின்றன, அந்த சேடல் மலர்களே, இன்று நாம் காணும் பவள மல்லி என்கின்றனர், ஆய்வாளர்கள்.

  மனதை ஈர்க்கும் வகையில் உள்ள பவள மல்லி மலரின் வண்ணங்கள், அற்புத நறுமணம் போன்றவை, இந்த பவள மல்லி மலர்களின் சிறப்பாகும்.

  இரவில் பூத்து, அதிகாலையில் உதிர்ந்து, காலையில் மரத்தின் அடியில் போர்த்திய, வண்ணப் போர்வைகள் போல, பவள மலர்கள் எங்கும், பரவிக் கிடப்பதைக் காண்பதே, கண்களுக்கு அற்புத விருந்தாகவும், மனதிற்கு புத்துணர்வை ஊட்டுவதாகவும், அமையும். மேலும், பவள மல்லி மலர்களின் அற்புத நறுமணம், சுற்றுப் பகுதிகள் எங்கும் பரவி, சுவாசத்தில் கலந்து, மனதில் மகிழ்வை உண்டு பண்ணும்.

  நமது தேசத்தில், பரவலாக எல்லா இடங்களிலும் வளரக்கூடிய இயல்புடைய பவள மல்லி மரங்கள், செழிப்பான இடங்களில் அதிக அளவு உயரம் வரை, வளரும் தன்மை மிக்கவை. கூரான முனைகளுடன் சற்றே நீண்ட இலைகளையுடைய பவள மல்லி மரங்கள், உருண்டையான தட்டை வடிவில் காய்கள் காய்க்கும். பொதுவாக, பவள மல்லி மலர்கள் டிசம்பர் மாதம் வரை, பூத்துக் குலுங்கும்.

  இளஞ்சிவப்பு வண்ணக் காம்புகளுடன் வெண்ணிறத்தில் பூக்கும் இதன் மலர்கள், தினமும் நள்ளிரவில் மலர்ந்து, அதிகாலையில், மரத்திலிருந்து தானே உதிர்ந்து விடுகின்றன. நிறைய புராணக் கதைகளுடன் தொடர்புடையவை, பவள மல்லி மரங்கள்.

  பவள மல்லி மரத்தின் இலைகள், காய்கள், மலர்கள் போன்றவை, வயிற்றுக் கோளாறுகள், கைகால் மூட்டு வலி, சிறுநீரகம், பித்த பாதிப்புகள், ஜுரம், தலைவலி மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றை, நீக்கும் மருத்துவப் பலன்களைத் தர வல்லவை. பவள மல்லி மரத்தின் பட்டைகள் சளியைக் கரைத்து, உடல் சூட்டைத் தணிக்கும்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  காய்ச்சலுக்கு :

  காய்ச்சலுக்கு :

  விட்டு விட்டு வரும் ஜூரத்துக்கு, பவள மல்லி இலைக் கொழுந்துகளை, இஞ்சிச் சாற்றில் சேர்த்து, தினமும் இரு முறை பருகி வரச் செய்ய, ஜுர பாதிப்புகள் விலகும்.

  முதுகு வலி மற்றும் ஜூரத்துக்கு, பவள மல்லி இலைகளை, தண்ணீரில் இட்டு நன்கு கொதிக்க வைத்து, அந்த நீரைப் பருகி வர, அவை யாவும் குணமாகும்.

  வயிற்றுப் புழுக்களை அழிக்க :

  வயிற்றுப் புழுக்களை அழிக்க :

  பவள மல்லி இலைகளை அரைத்துச் சாறெடுத்து, சிறிது இந்துப்பு மற்றும் தேன் கலந்து பருகி வந்தால், பசியின்மையை ஏற்படுத்தி, உடலை பலகீனமடையச் செய்த, வயிற்றுப் புழுக்களை அழித்து, வெளியேற்றி விடும்.

  பவள மல்லி தேநீர் :

  பவள மல்லி தேநீர் :

  இலேசாக வறுத்த பவள மல்லி இலைகளை, இரு கைகள் அளவு எடுத்து, ஒரு மண் சட்டி அல்லது மட்பாண்டத்தில் இட்டு, இரு லிட்டர் தண்ணீர் சேர்த்து, நன்கு கொதித்து வரும் வரை காய்ச்சி, ஆற வைத்து தினமும் இரு வேளை பருகி வர, இதயத்தில் பாதிப்புகள் உள்ள பிள்ளைகளுக்கு, பாதிப்புகள் விரைவில் சரியாகும்.

  இந்த தேநீரே, இரத்தம் வற்றி, உடல் பலகீனமாக இருப்பவர்களுக்கும் நன்மை அளித்து, அவர்கள் உடலில் இரத்தத்தை ஊறச் செய்து, இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலை வலுவாக்கும்.

  மலச்சிக்கலை தடுக்க :

  மலச்சிக்கலை தடுக்க :

  பவள மல்லி இலைகளின் சாறெடுத்து, அதைக் குழந்தைகளுக்கு தினமும் ஒரு வேளை கொடுத்து வர, குழந்தைகளின் மலச்சிக்கல் பாதிப்புகள் விலகி, குழந்தைகள் நன்கு பசி எடுத்துச் சாப்பிடுவார்கள்.

  பவள மல்லி சூரணம் :

  பவள மல்லி சூரணம் :

  பவள மல்லி மரத்தின் இலைகள், விதைகள் மற்றும் பட்டைகள் இவற்றை நன்கு உலர்த்தி, அவற்றைப் பொடியாக்கி வைத்துக் கொண்டு, தினமும் இருவேளை, சாப்பிட்டு வர, சிறுநீரில் இரத்தம் வருவது, சிறுநீரக அடைப்பு போன்ற சிறுநீரக பாதிப்புகள், இடுப்பு மற்றும் மூட்டு வலி போன்ற உடல் வலிகளின் பாதிப்புகள் தீரும்.

  பவள மல்லி காய்கள்:

  பவள மல்லி காய்கள்:

  பவள மல்லி காய்களில் உள்ள விதைகளை சேகரித்து, அதை நன்கு காய வைத்துப் பொடியாக்கி, தினமும், அந்தப் பொடியை சற்று எடுத்து, சாப்பிட்டு வர, உடலில் சருமத்தில் ஏற்பட்ட அரிப்பு, தடிப்பு, தேமல் மற்றும் இதர தோல் வியாதிகள் விலகி விடும்.

  பவள மல்லி வேரின் பலன்கள்:

  பவள மல்லி வேரின் பலன்கள்:

  சிலருக்கு பல் ஈறுகளில் வீக்கம் மற்றும் வலிகள் உண்டாகும். அவற்றைப் போக்க, பவள மல்லி மரத்தின் வேர்களை சேகரித்து, நன்கு சுத்தம் செய்து, அவற்றை சிறு துண்டுகளாக, வாயில் இட்டு நன்கு மென்று தின்று வர, பல் ஈறுகளில் ஏற்பட்ட வலிகள் விலகும்.

  வழுக்கைத் தலையில் முடி வளர:

  வழுக்கைத் தலையில் முடி வளர:

  பவள மல்லி விதைகளின் பொடியை தேங்காயெண்ணையில் கலந்து, ஊற வைத்து, அந்த எண்ணையை தினமும், தலையில் நன்கு தேய்த்து, முடிகள் இல்லாத இடத்தில் தொடர்ந்து தடவி வர, விரைவில், தலையில் முடி வளர ஆரம்பிக்கும்.

  அரோமா தெரபி :

  அரோமா தெரபி :

  அரோமா தெரபி எனும் வாசனை மருத்துவத்தில் சிறப்பிடம், பவள மல்லி மலர்களுக்கு உண்டு. மன அழுத்தம், மனக் கவலை போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு, அருமருந்தாக, கோரல் ஜாஸ்மின் எனும், பவள மல்லி மலர்களின் வாசனை திரவியம் பயன்பட்டு, அவர்களின் மன நிலை, சீரடைய உதவுகிறது.

  பவள மல்லி மரங்கள் இருக்கும் இடங்களில், விஷமுள்ள எந்த ஒரு ஜந்துக்களும், அந்த இடத்தின் அருகிலேயே வராது, என்கின்றனர்.

  மற்ற நன்மைகள்:

  மற்ற நன்மைகள்:

  பவள மல்லி மரத்தின் இலைகள், இரும்பினால் செய்யப்பட இயந்திரங்கள் மற்றும் கருவிகள் இவற்றை, துரு பிடிக்காமல் இருக்க, பாலீஷ் செய்து பொலிவேற்றப் பயன்படுகிறது.

  பவள மல்லி மலர்களின் இளஞ்சிவப்பு வண்ண காம்புகளில் இருந்து எடுக்கப்படும், சாயம், பட்டு போன்ற ஆடைகளுக்கு, இளஞ்சிவப்பு வண்ணத்தை ஏற்றுவதில் பயன் தருகிறது.சுற்றுச் சூழல் பாதுகாப்பில் பவள மல்லி மரங்களின் உயரிய பங்களிப்பு.

  மாசுப் படுவதை தடுக்க :

  மாசுப் படுவதை தடுக்க :

  இரவில் மலர்ந்து, அதிகாலையில் உலர்ந்து, மரத்தைச் சுற்றி பரவலாக விழும் பவள மல்லி மலர்கள், அதன் மூலம், காற்றில் உள்ள மாசுக்களை உள்வாங்கி, பிராண வாயுவை அதிக அளவில் வெளியிடுவதாக, ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

  மேலும், வீடுகளில் பவள மல்லி மரத்தை வளர்த்து வந்தால், இலட்சுமி கடாட்சம், ஐஸ்வர்யம் மற்றும் செல்வம் சேரும் என்று, இந்து சமய புராணங்கள் உரைக்கின்றன.

  பவள மல்லி மரங்களை வீடுகளில் வளர்த்து வந்தாலே, பவள மல்லி மலர்களின் அற்புத நறுமணத்தில், அவற்றின் பிராண வாயுவின் ஆற்றலில், உடலும் மனமும் வளமாகி, அதனால் ஏற்படும், உடல் ஆரோக்கியமும், மன அமைதியுமே, மாபெரும் செலவம்தானே!

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  How to use coral jasmine to treat constipation

  How to use coral jasmine to treat constipation
  Story first published: Wednesday, November 29, 2017, 13:30 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more