ஞாபக சக்தியை அதிகரிக்க இந்த மந்திரப் பொடியை தினமும் ஒரு தடவை சாப்பிடுங்க!!

Posted By: Gnaana
Subscribe to Boldsky

மனிதர்களுக்கு பொதுவான ஒரு பழக்கமாக, ஞாபக மறதி ஆகிவிட்டது. இதன் பலன், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை, நமக்குத் தெரிய வருகிறதே!

பொதுநலப் பிரச்னைகளில், மனம் வெறுத்து, வாய்ப்பு கொடுத்து, நாம் பாதிக்கப்பட்டது போதும், இனி மாற்று ஏற்பாடுகள் செய்வோம், என்று முடிவு செய்துவிட்டு, மீண்டும் அதே, தவறைத் திரும்ப செய்வதற்குக் காரணம், ஞாபக மறதியே!

மனதில் எதை முக்கியமாக பதிய வைக்கவேண்டும், எதைச் சாதாரணமாகக் கடந்து செல்ல வேண்டும், என்று முடிவு செய்திருந்தாலும், இந்த ஞாபக மறதியின் காரணமாகவே, நாம் நினைத்ததை அடைய முடியாமல், குப்பையில் இட வேண்டியதைத் தலையில் சுமந்து கொண்டு, தலையில் இருக்க வேண்டியதை, காலில் இட்டு, கடந்து போகிறோம்.

ஞாபக மறதிதான், வாழ்க்கையில் நாம் அடையும் துயரங்களுக்குப் பெரும் காரணமாக அமைந்துவிடுகிறது.

நாளை கணக்குப் பரீட்சை நடக்க இருக்கிறது, இன்று நாம் வரலாறு பாடத்தைப் படித்துக்கொண்டிருந்து விட்டு, மாலையில் நண்பனிடம் உரையாடும்போது, நான் நன்கு படித்து விட்டேன், உலகின் பெரிய கடற்படை, சோழர்களிடம் தான் இருந்ததாம், கடற்போரில் சிறந்து விளங்கியவன், இராஜரஜசோழனும் அவன் மகன் இராஜேந்திர சோழனும் தானே" என நாம் கேட்டால்...

அவன், மேலும் கீழும் பார்த்துவிட்டு, ஒருவேளை, நாம் தான் தவறு செய்துவிட்டோமோ என்று எண்ணி, மீண்டும் ஒரு முறை தேர்வு அட்டவணையைப் பார்த்து உறுதி செய்துகொண்டு, கணக்கு பரீட்சைக்கு, வரலாறு படிக்கிறாயே, வரலாற்றுப் பரீட்சைக்கு, என்ன படிப்பாய்? என்று கேட்கும்போது தான், ஞாபக மறதியின், கோர முகம், நம்மை அச்சுறுத்தும். இதுபோல, நாம் ஞாபக மறதிக்குக் கொடுக்கும் விலை நிறைய.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஞாபகமறதியால் வரும் பிரச்சனைகள் :

ஞாபகமறதியால் வரும் பிரச்சனைகள் :

இரயில் மற்றும் விமானப் பயணங்களில், நேரத்தை, இருபத்து நான்கு மணி நேர அளவிலேயே குறிப்பார்கள், பயணிகளுக்கு, நேரக் குழப்பம் வராமல் இருக்க. அதிலும் நம் ஞாபக மறதித் திலகங்கள், தான் கெட்டது மட்டுமன்றி, அனைவரையும் துன்பத்தில் ஆழ்த்தி விடுவர்.

நள்ளிரவு பனிரெண்டு முப்பது நிமிடத்தை, மறுநாள் தேதியிட்டு, 00.30 குறித்திருப்பார்கள், இவர்கள் அதை மறந்துவிட்டு, மறுநாள் நள்ளிரவில் இரயிலுக்காகக் காத்திருப்பார்கள், அதைவிடக் கொடுமை, இரயிலில், முன்பதிவு செய்யப்பட்ட இருக்கையில் வேறொருவர் இருப்பது கண்டு, அவரிடம் சண்டையிட்டு, பின்னர் பரிசோதகர் வந்து விளக்கம் தந்த பின்னும், சமாதானம் ஆகாமல், இரயில்வே தவறு செய்துவிட்டது, என்று பழி போடுவார்கள்.

இது போன்ற மன நிலை ஏன் ஏற்படுகிறது?

இது போன்ற மன நிலை ஏன் ஏற்படுகிறது?

தான் செய்தது தவறு என உணர முடியாமல், மற்றவர்கள் தான், தவறு செய்து விட்டார்கள் என்ற மனநிலை, மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும் தன்மை மிக்கது.

இப்படி நிறைய பேர், நாட்டில் இருக்கிறார்கள். இவர்கள், தமது ஞாபக மறதியால் தாமும் பாதித்து, எந்தத் தவறும் செய்யாத பிறரிடமும், தகராறு செய்து, அவர்கள் அமைதியையும் கெடுக்கிறார்கள்.

ஞாபக மறதியால் ஏற்படும் பாதிப்புகள்!!

ஞாபக மறதியால் ஏற்படும் பாதிப்புகள்!!

ஞாபக மறதிகளால், சமுதாயத்தில் நிறைய பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த பாதிப்பால், மற்றவர்களிடம் உரையாடும்போது, பேச்சில் சிரத்தையில்லாமல், மேலோட்டமாக பேசி விட்டு, பின்னர், நான்தான் அன்று பேசும்போது உங்களிடம் சொன்னேனே, என்று பேசியவர் சொல்லும் போது,

இல்லை, நீங்கள் சொல்லவே இல்லை, சொல்லி இருந்தால், நான் எப்படி இப்போது மீண்டும் உங்களிடம் கேட்கப் போகிறேன் எனும் போது, அங்கே, பேச்சு வார்த்தை, தடித்து, மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் சூழ்நிலையை உண்டாக்கி விடுகிறது.

இந்த நிலையே வீடுகளிலும் தொடர்ந்து, அதுவே, குடும்பத்தார் மன நிலையிலும் பெரும் பாதிப்பை உண்டாக்கி விடுகிறது.

ஞாபக மறதியின் பாதிப்புகளைப் பார்த்தோம் என்றால், அது முழுக்க முழுக்க மனம் சார்ந்த பாதிப்பாகவே, மேலும் அலட்சிய மன நிலையின் வெளிப்பாடாகவே, இருக்கும்.

நமது மேலதிகாரி, நாளை பகலுக்குள் முடிக்கச் சொன்ன வேலையை மறந்து போய், நாளை மறுநாள் என்றுதானே, நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

எங்காவது, நாளை முடிக்க வேண்டிய வேலையை, இன்றல்லவா, முடிக்க வேண்டும், என்று, எந்த ஞாபக மறதி உள்ள ஒருவராவது, பணியை ஒரு நாள் முன்னதாக முடித்திருக்கிறார்களா,? இல்லையே! ஏன் ?

அலட்சியம்!

அலட்சியம்!

நாளை குறிப்பிட்ட பணியை முடிக்காவிட்டால், நீ டிஸ்மிஸ், பணியில் இருந்து நீக்கப்படுவாய், என்று மேலதிகாரி சொல்லி விட்டார் என்றால், ஞாபக மறதிக் காரர்கள், நாளை தானே, முடிக்க வேண்டும், இன்று என்ன அவசரம் என்றா, இருக்கிறார்கள்?

நாளை என்ன சார், நான் இன்றே முடித்து விட்டேன், என்று அந்த வேலையை, விரைவில் செய்து முடித்த தகவலை, அவரிடம் சொல்கிறார்களே, அது எப்படி?

ஞாபக மறதி என்பது, குறிப்பிட்ட செயல்களில் அல்லது மனிதர்களிடத்தில் கொண்ட அலட்சியத்தாலும், அதனால், சமூக, பொருளாதார பாதுகாப்புக்கு, எந்த அச்சுறுத்தலும் இல்லை எனும் போது மட்டுமே, தோன்றுகிறது.

இதனால் வரும் பாதிப்பு :

இதனால் வரும் பாதிப்பு :

வேலை போய்விட்டால், வருமானம் இல்லாமல், பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுவிடுமே, என்ற சுய அக்கறைதான், இதற்கு காரணம்.

இவை எல்லாம், பணியில் உள்ளவர்களுக்கு, சமூகத்தில் மற்ற நிலையில், உள்ளவர்களுக்கு என்ன தீர்வு?

மேலும் சிலருக்கு, ஞாபக மறதியே பெரும் வியாதியாக மாறி, அவர்களின் படிப்பை, வாழ்க்கையைக் கடுமையாக பாதித்து விடுகிறதே, இதற்கு என்னதான் தீர்வு?

மற்றவர் சொல்லி, அதைச் செய்தால், ஞாபக மறதிக்கு தீர்வுகள் என்பது, எப்போதும் இருக்காது.

பாதிக்கப்பட்டவர்களும் உணர்ந்த பின்னரே, அவர்கள் முழு மனதுடன் இந்த பாதிப்பில் இருந்து விலக வேண்டும் என்ற சிந்தனையுடன் இருந்தால் மட்டுமே, ஞாபக மறதி எனும் மோசமான பாதிப்பில் இருந்து, அவர்கள் மீண்டு வர முடியும்.

எப்படி குணமாக்க முடியும் ஞாபக மறதியை?

எப்படி குணமாக்க முடியும் ஞாபக மறதியை?

நாம் எல்லாவற்றுக்கும் மருந்துகள் சாப்பிட்டு தான், பாதிப்பில் இருந்து விடுபட முடியும் என்பது இல்லை, சிலவற்றுக்கு உணவுப் பழக்கத்தை மாற்றுவதன் மூலம் கூட, தீர்வு காணலாம், சில பாதிப்புகளுக்கு, சுவாசத்தை சற்று, சீராக்கினாலே, தீர்வுகள் விரைவில் கிடைத்துவிடும்.

அது போல, ஞாபக மறதி பாதிப்புக்கு, மனதை ஒரு நிலைப்படுத்துவதன் மூலம், தீர்வுகள் காண முடியும்.

ஞாபக மறதியின் முதல் பாதிப்பு, நினைவாற்றல் இழப்பு. நினைவாற்றலை படிப்படியாக, அதிகரித்துக் கொள்வதன் மூலம், நாம் ஞாபக சக்தியை விரைவில், கைவரப் பெறலாம்.

மனப்பயிற்சி :

மனப்பயிற்சி :

சில எளிய மனப் பயிற்சிகளின் மூலம், நாம் நினைவாற்றலை மேம்படுத்த முடியும் என்றாலும் கூட, உடல் வலுவாக, இருக்க வேண்டும். அதற்கு உடற்பயிற்சிகள் அவசியம். முறையான உடற்பயிற்சிகளை, தினமும் சிறிது நேரம் செய்து வர வேண்டும். இது, உடலுக்கும் மனதுக்கும், புத்துணர்ச்சியை ஏற்படுத்தி, உற்சாக மனநிலையை உருவாக்கும்.

இதற்கு தேவை, ஈடுபாடு, கூர்ந்த பார்வை மற்றும் புதிதாக சிந்திக்கும் மன நிலை. இது போன்ற நிலையை நாம் முழுமையாக அடைந்து விட்டோமா என்பதை, எளிய முறைகளில், சோதித்து அறிந்து கொள்ளலாம்.

நினைவாற்றல் அதிகரிக்க :

நினைவாற்றல் அதிகரிக்க :

வீட்டின் திண்ணையிலோ அல்லது, வாசலிலோ சற்று நேரம் அமர்ந்துகொண்டு, சாலையை அல்லது தெருவை சில நிமிடங்கள் கவனித்து வாருங்கள்.

பிறகு உள்ளே வந்து அமர்ந்து, ஒரு தாளில் எழுதுங்கள். சாலையில் எத்தனை சைக்கிள்கள் சென்றன? எத்தனை பேர் நடந்து சென்றார்கள்? எத்தனை டூ வீலர்கள் சென்றன? பெண்கள் ஓட்டிச் சென்ற டூ வீலர்கள் எத்தனை? கார்கள் எத்தனை, பஸ் மற்றும் ஆட்டோ. பிறகு சற்று கூர்மையாக, சிந்தியுங்கள். சாலையில் கண்ணாடி அணிந்து கொண்டு சென்றவர்கள் எத்தனை பேர்? வேட்டி கட்டிக் கொண்டு சாலையில் சென்றவர்கள் எத்தனை பேர்?, இப்படி யோசித்து, எழுதி வாருங்கள்.

இது ஆரம்பத்தில் சற்று குழப்பமாகவும், நினைவில் வரக் கடினமாகவும் இருக்கும். ஆயினும் விடாத பயிற்சிகளின் மூலம், இதை இலகுவாக அடையலாம். இதனால், மூளையின் சேமிப்பு திறன் மேம்பட்டு, காணும் காட்சிகளில், செயல்களில், மனதின் ஈடுபாடு ஒன்றி, ஒரு சிறிய செயல் கூட, நினைவில் இருக்கும் நிலை ஏற்படும்.

இதுபோல, சில பயிற்சிகள் செய்து வந்தாலே, நினைவாற்றல் மேம்பட்டு, உங்களிடம் சொல்லும் தகவலை, சிலர், சொல்ல வில்லை என்று மறுத்தால் கூட, நீங்கள், நினைவில் வைத்திருந்து, சொன்ன நேரம், காலம் சூழ்நிலை முதற்கொண்டு சொல்லி, அவர்கள் சொன்னதை நிரூபிக்க முடியும்.

இதுபோன்ற உங்கள் நுண்ணிய நினைவாற்றல் திறனைக் கண்டு, மற்றவர்கள் உங்களிடம், எந்த ஒரு தவறான தகவலையும் சொல்ல அஞ்சுவர்.

பயிற்சிகளும் செய்கிறேன், ஆயினும், சித்த மூலிகைகளில் தீர்வு கிடைத்தால், இன்னும் நலமாக இருக்குமே, என்று சிலர் எண்ணக்கூடும்.

அதற்கிணங்க, இந்த எளிய தீர்வு, ஞாபக மறதி பாதிப்பை சரிசெய்து, நினைவாற்றலை மேம்படச் செய்யும்.

மூலிகைப் பொடி :

மூலிகைப் பொடி :

வல்லாரை பொடி, துளசி பொடி, சுக்குப்பொடி, வசம்பு பொடி, மஞ்சள் தூள், அதிமதுரம், கோஷ்டம், ஓமம், திப்பிலி, மரமஞ்சள், ஜீரகம் மற்றும் இந்துப்பு.

மேற்கண்ட இவை, பொடியாக இருந்தாலும், சரி, இல்லாவிட்டால், அவற்றை சேகரித்து உலர்த்தி, பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்.

நினைவில் இருக்கட்டும், இந்த மருந்துகளில், வல்லாரையும், துளசியும் மற்ற மூலிகைகளைவிட, இரு மடங்கு அதிக அளவில், இருக்க வேண்டும்.

நினைவாற்றல் இல்லை என்றுதானே, மருந்தைக் கேட்கிறோம், இதற்கே, ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டுமா, என்று யாராவது கேட்பார்களா, என்ன? கேட்க மாட்டார்கள், இதுவும் ஒரு பயிற்சி, என்று எடுத்துக் கொள்வார்கள்.

எப்படி சாப்பிட வேண்டும்?

எப்படி சாப்பிட வேண்டும்?

பின்னர் இவை அனைத்தையும் சேர்த்து, அரைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இந்தத் தூளில் சிறிதளவு எடுத்து, தினமும் இருவேளை சாப்பிட வேண்டும், நெய் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடலாம்.

தொடர்ந்து தினமும் இருவேளை, இந்த மருந்தை நாற்பத்தெட்டு நாட்கள் விடாமல் சாப்பிட்டு வர, ஞாபக சக்தியின் வடிவமாகவே, மாறி விடலாம். நேற்று வரை ட்யூப் லைட் என்று கேலி செய்தவர்கள் எல்லாம், இன்று கிடைக்கும் ஷார்ப்பான பதில்களில், பேச முடியாமல் வாயடைத்து நிற்பார்கள்.

உடல் சுறுசுறுப்பாகும் :

உடல் சுறுசுறுப்பாகும் :

உடலில் தோன்றும் சுறுசுறுப்பு, மற்றவர்களையும் உற்சாகம் கொள்ள வைக்கும். ஆற்றல்மிக்க இந்த மருந்து, நினைவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தி, மூளையை வளமாக்கும் தன்மை மிக்கது.

பழங்கள் :

பழங்கள் :

ஆப்பிள், திராட்சை, பேரிட்சை மற்றும் வெண்டை, நெல்லிக்காய், புதினா, பூண்டு மற்றும் கேரட், பீட்ரூட் போன்ற பழ, காய்கறி வகைகளை அடிக்கடி, உணவில் சேர்த்து வரலாம். மேலும், பாதாம் பருப்பு மற்றும் பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சாப்பிட்டு வர, மூளையின் ஆற்றல் அதிகரித்து, நினைவாற்றல் சக்தி கூடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to Improve your memory power

How to Improve your memory power
Story first published: Friday, December 1, 2017, 13:20 [IST]